சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு ஒன்றரை வருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்றது.
"யுத்தகளத்தில் இருந்து போராடிய முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைவாசமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கே.பி. போன்றவர்களுக்கு அரசாங்கத்தால் சுகபோகமும் வழங்கப்படுகின்றது. சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளமை ஜனநாயகம் சிறை வைக்கப்பட்டது போன்றதே. பொன்சேகா தொலைபேசியில் போர் செய்யவில்லை நேரடியாக யுத்தக்களத்தில் இருந்து போராடினார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.''
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அனோமா பொன்சேகா உட்பட ஜே.வி.பி, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





No comments:
Post a Comment