முன்பு இச்சம்பவம் நடைபெற்ற போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று மயானத்தை பார்வையிட்டு இவ்விடயமாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், ஏறாவூர் பொலிஸ் உதவி பொறுப்பாளரிடம் சென்று இவ்வியடமாக விசாரித்த போது இங்கு துப்பாக்கிகள் இருப்பதால் இதை தோண்டுவதாக குறிப்பிட்டனர்.
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்ற அனுமதியுடனே இச்செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அதன்பின் இரு தடவை இச்சம்பவம் நடைபெற்ற போது இதை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால் மீண்டும் 06.08.2011ம் திகதி அன்று இரவு வேளை பொலிஸ் சீரூடையின் வாகனம் மூலம் வந்து மயானத்தில் பல இடங்களில் தோண்டியுள்ளார்.
இவ்விடயமாக மட்டக்களப்பபு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கவனத்துக்கு கொண்டு வந்ததும் மக்கள் இவ்விடயம் இறந்த சடலங்களின் மண்டையோடு எடுக்கும் செயற்பாடு என சிலரும், பொலிஸ் பகுதியினர் புதையல் தேடுகின்றனர் என சிலரும், டுவுவுநு உறுப்பினர் முன்பு நகைகளை இங்கு மறைத்து வைத்துள்ளனர் என்ற சந்தேகத்தில் அவற்றை இரவு வேளைகளில் தோண்டுகின்றனர் என சிலரும் தெரிவித்தனர்.
இதனையறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இன்று நேரடியாக மீண்டும் மயானத்துக்கு சென்று தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டார்.
சென்ற தடவை அவர் பார்வையிடும் போது காய்ந்த வெற்றிலை, பாக்கு, பல தேங்காய்கள், பால் காய்ச்சிய மண் சட்டிகள் பல உட்பட அவற்றில் பூசைகள் புரிந்துள்ள அடையாளங்கள் காணப்பட்டன.
இம்முறை பார்க்கும் போது இரு அலுமினியப் பானைகள் பால் காய்ச்சப் பயன்படுத்திய அடையாளம் காணப்பட்டது.
இவ்வியடமாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மயான விடயமாக பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் உரையாடினார்.
அதற்கு அவர் தனது பணிப்பின் பேரில் குண்டு எடுப்பதற்காக பொலிஸ் குழு மயானத்துக்கு அனுப்பப்பட்டது என்றும் இதற்கான அனுமதி தன்னால் நீதிமன்றம் மூலம் பெறப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இவ்வேளை ஏன் இரவு வேளைகளில் இவர்கள் மயானத்துக்கு வரவேண்டும் இறந்த பின்பும் கூட தமிழரது சடலத்துக்கும் நிம்மதி இல்லையா? என மக்கள் கவலை அடைகின்றனர்.


No comments:
Post a Comment