நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை சில தமிழர்கள் சர்வேந்திர சில்வாவின் வாசல்ஸ்தலத்திற்கு நேரடியாகக் கொண்டுபோய்க் கொடுத்தனர். அதன் வீடியோவை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டும் இருந்தது.
அதனை அவர் பெற்றுக்கொண்டதால் 21 நாட்களுக்குள் அதற்கான பதிலை அவர் வழங்கவேண்டி நேர்ந்துள்ளது. தன் மீது பேடப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து தான் வாதாட இருப்பதாகும். தன் சார்பில் தான் வழக்கறிஞர் ஒருவரைப் போடவுள்ளதாகவும் முன்னர் வீர வசனம் பேசிய சர்வேந்திர சில்வா தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.
அமெரிக்க அரசிடம் தான் ஒரு ராஜதந்திரி என்றும் 1961ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட வியன்னா ஒப்பந்த அடிப்படையில் தன்னைப் பாதுகாக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாத பொல்லாத சட்டப் புத்தகங்களை அவர் வழக்கறிஞர் புரட்டி இறுதியில் வியன்னா ஒப்பந்தத்தின் 31 வது சரத்தில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிக்கும், மற்றும் ஐ.நா அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என எழுதப்பட்டிருப்பதை குறிப்பிட்டு நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் அவர் நீதிமன்றத்துக்கு செல்லாமல் இருந்தால் அவரைக் கைதுசெய்ய பொலிசார் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் தடுக்கப்படலாம்.
எனவே தற்போது சர்வேந்திர சில்வா அமெரிக்க அரசிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிந்துள்ளது. முதலில் தாம் குற்றமற்றவர் எனவும் போடப்பட்ட வழக்கை எதிர்த்து வாதிட்டு தாம் சுத்தமானவர் என நிரூபிப்பேன் என சவால் விட்டார். பின்னர் போடப்பட்ட வழக்கை வெல்வது கடினம் எனத் தெரிந்துகொண்ட அவர் அமெரிக்க அரசிடம் மண்டியிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு வியன்னாவில் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் கீழ் தற்போது சர்வேந்திர சில்வா பாதுகாக்கப்படுகிறார். இருப்பினும் அவரை எப்படி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது மற்றும் தற்போது அமெரிக்கா வழங்கிவரும் பாதுகாப்பில் இருந்து அவரை எவ்வாறு வெளியே கொண்டுவருவது என்பது போன்ற விடையங்களை அமெரிக்காவில் உள்ள வழக்கு தொடுனர்களும் தமிழர்களும் கலந்து ஆலோசித்து வருகின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது.
வெகுவிரைவில் இச் சட்ட சிக்கலை நீக்கும் வழியைக் கண்டு பிடிப்பது தொடர்பாக ஆராயப்படும் எனவும் அறியப்படுகிறது.
அதிர்வு


No comments:
Post a Comment