
அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்' பிற்போடப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா தொடர்பிலான விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான பரப்புரைகள் தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் கனடா mississauga நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உல்லாச பயணத்துறை வர்த்தக கண்காட்சி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புறக்கணிப்பு விழிப்புரை போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்...
கனடா (mississauga ) மிசுசாகா நகரில் சிறிலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உல்லாச பயணத்துறை வர்த்தக கண்காட்சி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக கணக்காட்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
mississauga நகரபிதாவையும் - நகரசபை உறுப்பினர்களையும் சந்தித்த நா.த.அரசாங்கத்தின் துணைப் பிரதமர் ராம் சிவலிங்கம் அவர்கள் தமிழர்கள் மீதான போரின் வடுக்களையும் - வலிகளையும் மறைத்து, இலங்கைத்தீவை ஒரு உல்லாசபுரியாக, சர்வதேசத்துக்கு காட்ட சிறிலங்கா அரசு முற்றபட்டு வருகின்றமை குறித்து விளக்கியிருந்தார்.
அத்தோடு, சிறிலங்கா தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை கனடிய அரசு எடுத்துள்ள இவ்வேளை, கனடிய மண்ணில் இரத்தக் கறைபடிந்த சிறிலங்காவுக்கு செங்கம்பளம் விரி;ப்பது கவலைதருகின்றதென்ற தமிழர்களின் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் கண்காட்சி நிறுத்தப்பட்ள்ளதாக LIVING ARTS நிர்வாகம் தெரவித்துள்ள நிலையில் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்' பிற்போடப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்கா தொடர்பிலான விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான பரப்புரைகள் தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும்.
தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை எனும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சனநாயகரீதியாக பிரதிபிலித்த நிற்கும் தமிழீழ தேசிய அரசாங்கமாகிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின்னால் சகல தமிழர் அமைப்புக்களும் தோழமையொடு அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உழைப்போம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை


No comments:
Post a Comment