
24ம் திகதி சுவிஸ் ஈழத்தமிழரின் வெற்றியை நாம் லுசேன் நகரில் கொண்டாடலாம், சுவிஸ் ஈழத்தமிழருக்கு ஒரு விடுதலைச்சூரியனாக இருக்கப்போகிறார் திரு.
லதன் சுந்தரலிங்கம் அவர்கள், நீங்கள் அந்த வெற்றியின் பங்காளராக திகழ உங்கள் வாக்குகளை ஈழத்தமிழருக்காய் அளித்திடுங்கள்.
தவறவேண்டாம், மறக்கவேண்டாம். உங்கள் கைகளில் வாக்கு அட்டை இருக்கிறது. சரியாக வாக்களியுங்கள் கனடாவில் ஒரு ஈழப்பெண்மணி பாராளுமன்றம் சென்றுள்ளார். சுவிசில் ஒரு ஈழத்தமிழ் மகன் பாராளுமன்றம் செல்வார் என்பது உறுதி.
அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே!
உங்களால் என்ன செய்யமுடியும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள், உங்களாலும் முடியும் என்பதற்கான ஒரு விடயம் இருக்கிறது. சுவிஸ் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழனின் குரல் ஒலிக்கவேண்டும் என நாம் கனவு கூட கண்டிருக்கவில்லை, இன்று ஒரு இத்தகைய சந்தற்பம் கிடைத்திருக்கிறது. எமது ஈழமக்கள் துயரை எடுத்துரைக்க ஒரு பெரிய வாய்ப்பு இது. லுசேனில் SP கட்சி சார்பில் போட்டியிடும் திரு. லதன் சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழனை வெல்லச் செய்வதில் நாம் பல வெற்றிகளை பெறமுடியும்.
சுவிசில் உள்ள அனைவரும், லுசோன் மாநிலத்திலுள்ள தமிழர்கள் உங்கள் உறவுகளா?, நண்பரா? அல்லது வெளிநாட்டுக்காரரா? அல்லது சுவிஸ் பிரசைகளா? தொடர்பு கொண்டு விடயத்தை கூறுங்கள்! 23ம் திகதி ஜப்பசி திங்கள் ஈழத்தமிழன் வெற்றி என கேட்டு மகிழ, அதனால் எம் இனம் விடுதலைபெற தேவையான அரசியல் வேலைகளை, ஏன் உங்கள் அகதி பிரச்சனை, வேறு பிரச்சனைகளையும் எமது ஈழ மகனிடமே கேட்க கூடிய வாய்ப்பு, சொல்லி அனுப்பக்கூடிய அற்புதமான சந்தற்பம் இருக்கிறது. தவறவிடாதீர்கள்! சிந்தியுங்கள், தவறாது செயல்படுங்கள்! எம் இனத்தைக்காக்க எமது இனம் தான் வேண்டும் என்பதை மறவாது, உங்கள் தொடர்பிலுள்ள லுசோன் வாசிகளுக்கு கூறி, 24ம் திகதி நாம் மகிழ உலகிலுள்ள தமிழர் அனைவரும் மகிழ வழிசெய்யுங்கள் தமிழ் மக்களே. இது தான் உங்கள் கடமை! ! உங்களால் என்ன செய்யமுடியும் என சொல்வீர்களே! உங்களால் இது முடியும் செய்யுங்கள்!. செய்வீர்கள் என நம்புகின்றேன்.!
கார்த்திகை 15ம் திகதியின் பின் தமிழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்!
இது சத்தியம்! நிற்சயம்! அதற்காய் உழைப்போம், ஒற்றுமையை காட்டுவோம்!
எமது மக்களுக்கு விடுதலையை பெற இதுவும் ஒரு வழி என்பதை மறவாதீர்கள்!
பேதம் வேண்டாம், வாதம் வேண்டாம், செயல்மட்டுமே வேண்டும்


No comments:
Post a Comment