
தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை முதலில் இயக்கயிருந்ததாகவும், தனுஷுக்கு பொல்லாதவன் பிடித்திருந்ததால் அப்படத்தை இயக்க முடியாமல் போனதாகவும் வெற்றிமாறன் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அதே பெயரில் இப்போது ஒரு படத்தை தயாரிக்கிறார் வெற்றிமாறன். இணை தயாரிப்பு தயாநிதி அழகிரி.
இந்தப் படத்தின் கதை, வசனத்தை வெற்றிமாறன் எழுத அவரது அசிஸ்டெண்ட் மணிகண்டன் படத்தை இயக்குகிறார், ஹீரோ சித்தார்த்.
இந்தப் படத்துக்கு பிரச்சனை பவர் ஸ்டார் சீனிவாசன் வடிவில் வந்துள்ளது. இவர் தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். முறைப்படி பதிவும் செய்திருப்பதால் படப் பெயரை விட்டுத் தரும்படி கேட்டிருக்கிறார்கள். இலவச விளம்பரத்துக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் அமையாது என்பதால் அதெல்லாம் முடியாது என்று இழுத்தடிக்கிறாராம் பவர் ஸ்டார். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் வெற்றிமாறனும், மணிகண்டனும்.


No comments:
Post a Comment