
யாழ்.மாநகர சபை ஆளுங்கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி மாநகரசபை நிர்வாகத்தைக் கைப்பற்ற இலங்கை சுதந்திரக்கட்சி பலத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக யாழ்.மாநகர சபை ஆளுங்கூட்டணிக்குள் குழப்பங்களும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளதைதயடுத்து அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சுதந்திரக்கட்சி உயர் பீடம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
அதன் அடுத்த கட்டமாக ஆளும் ஈ.பி.டி.பி மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆறு உறுப்பினர்கள் கட்சி தாவி சுதந்திரக்கட்சியுடன் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் ஏற்கனவே அதிருப்தி காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துச் செயற்பட்டு வரும் நிசாந்தனுடன் கட்சி தாவவுள்ள உறுப்பினர்களையும் இணைத்து தற்போதைய ஆளுங்கட்சியான ஈ.பி.டி.பிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சுதந்திரக்கட்சி, கொண்டு வரவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
கட்சி தாவவுள்ள அறுவரையும் நிசாந்தனையும் சேர்த்து யாழ்.மாநகர சபையில் சுதந்திரக்கட்சியின் பலம் ஏழாக அதிகரித்து மேலும் சிலரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியும் இடம்பெறுவதாக தெரியவருகிறது.
கட்சிதாவவுள்ள உறுப்பினர்களுள் யாழ்.மாநகர சபையின் ஆளும் ஈ.பி. டி.பி. கட்சியைச் சேர்ந்த மங்களநேசன் உட்பட நால்வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாகவும் இவ் விடயம் தொடர்பாக சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கயன் மாநகரசபை ஆளும் கூட்டணியலிருந்து ஏற்கனவே விலகிய நிசாந்தன் ஆகிய இருவரும் இரகசியப் பேச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகரசபை முதல்வர் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதுடன் அவரது நிர்வாகத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டி ஈ.பி.டி.பி உறுப்பினர் மங்களநேசன் ஆளுந்தரப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
தற்போது யாழ்.மாநகர சபையில் ஆளும் கூட்டணியில் ஈ.பி.டி.பி சார்பில் எட்டு உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்பது உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நால்வரும், கூட்டமைப்பு உறுப்பினர்களுள் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் நிசாந்தனுடன் சேர்த்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பலம் ஏழாக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
அத்துடன் மேலும் சிலரையும் இணைத்து அவர்கள் ஆளுங்கட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் தற்போது ஆளுஞகூட்டணி கவிழும் நிலை ஏற்படும். இதனால் யாழ். மாநகர சபையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது.












பிரபல இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்துடன் மம்பட்டியான் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார்.





















