Saturday 12 April 2014

மலேசிய விமானம் மாயமான போது துணை விமானி செல்போனில் அவசர அழைப்பு?

மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னாள் அதன் துனை  விமானி தனது செல்போனில் அழைப்பு விடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி அதிகாலையில் மாயமானது. இந்த விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்கும் நோக்கில், அதற்கான நவீன கருவிகளுடன் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

 இந்த நிலையில், மலேசியாவில் வெளிவரும் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் வேகமாக பறந்ததால் செல்போன் டவர் மாறியதால் இந்த இணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் பரிக் அப்துல் ஹமிது யாருக்கு தொடர்பு கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை.

இந்த பகுதியில் பறந்த போது தான், விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது என்பதால், அவர் யாரையோ தொடர்பு கொள்ள முயன்றது தெளிவாகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோத்தபாய படை குவிப்பிற்கு கூறும் நியாயம் ஏற்கமுடியாது! - சரவணபவன்

வடக்கின் இராணுவ மயத்தை நியாயப்படுத்தவே பாதுகாப்புச் செயலர் போர் ஒன்று உருவாகாமல் தடுக்கவே பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் போரை மக்கள் எப்போதும் தொடங்குவதில்லை என்பதும் இராணுவத்தினரின் ஆயுத ஒடுக்குமுறை மக்கள் மீது திணிக்கப்படும் போது மக்கள் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளே போராக வெடிக்கின்றன என்பதே உலகம் முழுவதிலும் உள்ள வரலாறு. 

உண்மையில் போர் விரிவதைத் தடுக்க வேண்டுமானால் வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட்டு இங்கு ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே ஒரே வழி என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவக் கெடுபிடிகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவுப் பகுதியில் படையினரால் கட்டி அமைக்கப்பட்ட வீடுகளை பொது மக்களுக்கு வழங்கும் வைபவத்தின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சச­ அவர்கள் வெளியிட்ட ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனத்துக்கு எடுக்காமல் விடமுடியாது.   அவர் மட்டுமன்றி பல்வேறு அரச தரப்பினருமே வடக்குக் கிழக்கில் பெருந்தொகையான படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் பல ஒன்றையொன்று சார்ந்தனவாகவும் இன்னும் சில ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாகவும் அமைந்திருந்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.   ஆனால் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்த காரணம் ஏற்கெனவே வெளிவந்தவைகளை விட தாக்கமானதாகவும் வடபகுதி மக்கள் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை பூடகமாக உணர்ந்து வருவதாகவும் அமைந்துள்ளது.   அது மட்டுமன்றி தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் இராணுவச் சுற்றி வளைப்புகள், சோதனை நடவடிக்கைகள், கைதுகள் என்பவற்றை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளமையை நாம் அவதானிக்க முடியும். 

அதாவது மீண்டும் ஒரு போர் வராமல் தடுப்பதற்காகவே வடக்கில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் மேலும் கெடுபிடிகள் தமிழ் மக்கள் மீது அதிகரிப்பதற்கான முன் அறிவித்தலாகவே தென்படுகின்றது.   மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க அணிதிரண்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டே இராணுவச் சுற்றிவளைப்புகளும் வீதிச் சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 50 இற்கும் மேற்பட்டோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.   பாதுகாப்புச் செயலரின் கருத்துப்படி இந்தக் கைதுகளும் போர் வராமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியே.

எனவே அதிகளவு இராணுவத்தினர்  வடக்கில் குவிக்கப்படுவது மீண்டும் சுற்றி வளைப்புகளும், கைதுகளும் நிறைந்த ஒரு அச்சமூட்டும் நிம்மதியற்ற ஒரு வாழ்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கே என்பதை மிகவும் தெளிவாகப் புரியும்படி பாதுகாப்புச் செயலாளர் கருத்துக்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.   ஆனால் இப்படியான நடவடிக்கைகள் மூலம் போர் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்பதும் இல்லாத போர்களையே உருவாக்கிவிடும் என்பதையும் உலக வரலாறு மீண்டும் மீண்டும் கற்பித்து வந்துள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரமும் அதிகாரப் பலமும் கொண்டவர்கள் எப்பொழுதுமே ஆயுத பலத்தால் போர் உருவாவதைத்  தடுத்து விட முடியும் என  நம்புகின்றனர்.   ஆனால் இந்த வழிமுறை மூலம் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியுமே ஒழிய போரை நிறுத்திவிட முடியாது.

போர் உருவாவதற்கான மூல காரணம் களையப்படுவதன் மூலமே போரை நிரந்தரமாக இல்லாமற் செய்யமுடியும். அதை உதாசீனம் செய்து ஆயுத பலத்தால் போரை இல்லாமல் செய்யும் முயற்சிகள் காலம் காலமாக தோல்விகளைச் சந்தித்து வந்துள்ளன.    1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சில வருடங்களில் வட பகுதியில் இராணுவம், பொலிஸ் என்பவற்றின் சுற்றி வளைப்புகள், தேடுதல் வேட்டைகள், கைதுகள் என ஒரு அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டது. எந்தவொரு இளைஞனும் எந்தவொரு காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறையிடப்படலாம் என்ற நிலை நிலவியது.    ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் தப்பமுடியும் என்ற நிலை உருவானது.  எனவே, ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்கு முறை தமிழ் மக்கள் மத்தியில் பல ஆயுதப் போராட்ட முறைகளை உருவாக்கின. ஆயுதப் போராட்டம் முனைப்புடன் வீறுகொண்டெழுந்தது.

காலப் போக்கில் ஏனைய அமைப்புக்கள் செயலிழந்து போக விடுதலைப் புலிகள் தனிப் பெரும் சக்தியாக எழுச்சி பெற்றனர். அவர்கள் பல பிரதேசங்களைத் தம்வசம் வைத்திருக்கும் அளவுக்கும் தனியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பலம் பெற்றனர்.    ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இராணுவ ஒடுக்குமுறை வழி முறை இலங்கைத்தீவே பெரும் பேரழிவுகளைச் சந்தித்த ஒரு பெரிய போரையே உருவாக்கியது. ஏற்கெனவே இலங்கை பெற்ற இந்தக் கொடிய கசப்பான அனுபவத்தை இன்றைய ஆட்சியாளர்கள் நன்றே புரிந்து வைத்துள்ளனர். எனினும் இவர்களும் கூடப் போரின் மூல காரணத்தை களைந்து ஒரு நிரந்தர சமாதானத்தை உருவாக்கத் தயாரில்லை. மாறாக போர் உருவாகுவதற்கு முன்பே ஒடுக்கு முறைகளை மேலும் மேலும் அதிகரிப்பதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களைச் செயலற்ற நிலைக்குத் தள்ளி அடிமைகளாக்கி அமைதியை நிலைநாட்ட விரும்புகின்றனர். 

இனத் தனித்துவத்தை அடக்கி பெரும்பான்மை இனத்துக்குள் கரைத்து விடும் ஒரு நீண்டகால நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.  இதை ஆயுத முனையில் நிறைவேற்றிவிட முடியும் என நம்பும் நபர்களில் பாதுகாப்புச் செயலரும் ஒருவர். எனவே தான் அவர் போர் உருவாகாமல் இருக்க இராணுவ ஒடுக்குமுறைகளை வலுப்படுத்துவது என்ற வழி முறையைத் தெரிவுசெய்துள்ளார்.   அதேவேளையில், சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அரச தரப்பினர் வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் தொகையைக் குறைத்து காட்டி வருகின்றனர். எனினும் ஒவ்வொருவரும் வெளியிடும் கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்று முரண்படுவதில் இருந்தே அவற்றின் உண்மைக்குப் புறம்பான தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.  

17.06.2012 இல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­  வடக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு  குறைக்கப்பட்டு விட்டதாகவும் தற்சமயம் 15, 600 படையினரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் 9.7.2012இல் யாழ். பாதுகாப்பு தலைமையகத்தின் இணையத்தளம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.    அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ ஆற்றிய உரை ஒன்றின் போதே 2009 இல் வடக்கில் 70 ஆயிரம் படையினர் இருந்ததாகவும் தற்சமயம் 12 ஆயிரம் பேரே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.   எப்படி இருப்பினும் வடக்கில் வாழும் 5 பொதுமக்களுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா மாநாட்டை அண்மித்த காலப் பகுதியில் சில சிறுபடை முகாம்கள் மூடப்பட்டது உண்மை. ஆனால், அவர்கள் பெரிய முகாம்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரேயொழிய வடக்கை விட்டு வெளியேற்றப்படவில்லை.   அதேவேளையில் சிவில் நிர்வாகமும் இராணுவத் தலையீடும் நிறுத்தப்படவில்லை. மேலும் மிருசுவில், இயக்கச்சி ஆகிய பகுதிகளில் முகாம்களை விஸ்தரிக்கும் நோக்குடன் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.   இப்படி இராணுவம் வடக்கில் குறைக்கப்பட்டு விட்டது எனக் கூறப்படும் ஏமாற்று வார்த்தைகள் பலவிதத்திலும் அம்பலப்படுத்தப்பட்டு, வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்திப் புதிய போர்ப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. அந்த நோக்கத்துக்காகவே புலி வேட்டை என்ற பெயரில் சுற்றி வளைப்புகளும் சோதனை நடவடிககைகளும் கைதுகளும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன.

பஷில் ராஜபக்ஷவுடனான சந்திப்பை சி.வி.விக்னேஸ்வரன் தவிர்த்துள்ளார்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனான சந்திப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவிர்த்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்கிற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டிருந்த போதும், அதனை முதலமைச்சர் நிராகரித்துள்ளதாக பஷில் ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், வடக்கு முதலமைச்சருடனான சந்திப்புக்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும், இந்திய வீட்டுத்திட்டம் விடயத்தில் சில தொடர்புகள் உள்ளன. எனவே, அவ்வாறான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடும் தேவை உள்ளது என்று பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தற்செயலாக தெரிவான பிரதமர் மன்மோகன் சிங் : செய்ததும் செய்யாததும் - வெளிவந்த புத்தகத்தால் புதிய சர்ச்சை

பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக 2004 முதல் 2008 வரை பணியாற்றிய சஞ்சயா பாரு, 'The Accidental Prime Minister : The Making and Unmaking of Manmohan Singh" எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

இப்புத்தகத்தில் மன்மோகன் சிங் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே ஊடகங்கள் எடுத்துக்கொண்டு இப்போது பேசிவருவதாகவும், இந்த புத்தகம் வேண்டுமென்றே தாமதமாக வெளியிடப்பட்டிருப்பதாகவும் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் புத்தகம் வெளிவரும் நேரத்தை வெளியீட்டாளர்களே தீர்மானிக்கிறார்கள். நான் அல்ல என விளக்கம் அளித்துள்ளார் சஞ்சயா பாரு.  இப்புத்தகத்தில், சோனியா காந்தியிடம் மன்மொகன் சிங் சரணாகதி அடைந்துவிட்டதாக ஒரு கட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் தனது இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் (2009-2014), காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லை பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இரண்டாவது தடவையாக பிரதமராகிய போது, தனது நாட்டு நலனுக்கான சேவைக்கும், முயற்சிகளுக்கும் கிடைத்த பலனே தமது வெற்றியென நம்பிவிட்டார்.

நிஜம் அதுவல்ல. பிரதமர் அலுவலக நியமனத்திலும், முக்கிய மத்திய அமைச்சர்கள் நியமனத்திலும் சோனியா காந்தியே முடிவுகளை எடுத்தார்.  குறிப்பாக நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜியை நியமித்தது, ஆ.ராசாவை அமைச்சரவையில் சேர்த்தது என அனைத்துமே சோனியா காந்தியின் தன்னிச்சையான முடிவுகள் தான். இதில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.

அமெரிக்காவுடனான சிவில் அணுச்சக்தி உடன்படிக்கையை இந்தியா செய்து கொண்ட போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கிவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங் மிரட்டியதுடன், பிரதமர் பதவிக்கு வேறு ஆளைப் பாருங்கள் என சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டார் எனவும் சஞ்சயா பாரு இப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுற்றுலா பஸ் பயங்கர விபத்து: 9 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹம்போல்ட் மாநிலப் பல்கலைக் கழகத்துக்கு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்துடன் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ஓர் கார் மீதும் அதன் பின்னர் பஸ் மீதும் மோதிப் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளாகியது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 மாணவர்கள் பலியானதுடன் மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடகலிபோர்னியாவின் ஓர்லன்ட் நகரில் ஏற்பட்ட இவ்விபத்தினால் பல மணி நேரங்களுக்கு சாலை மூடப் பட்டதுடன் தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்ட 3 பேருந்துக்களில் ஒன்றே இவ்விபத்தில் சிக்கியுள்ளதுடன் FedEx டிரக் ஒன்றும் பஸ்ஸுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் கொல்லப் பட்டவர்களாக இரு ஓட்டுனர்களும் 5 மாணவர்களும் 3 வழிகாட்டிகளும் இனம் காணப் பட்டுள்ளனர்.

இதேவேளை வியாழக்கிழமை அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவன் ஒருவன் ஏனைய மாணவர்கள் மீது சராமரியாகக் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தியதில் 19 பேருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இதில் 4 பேரின் நிலமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப் பட்ட இம்மாணவன் ஏன் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டான் என்ற விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

பட்டாசுத் தொழிலாளர்களுக்காக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

பட்டாசுத் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பட்டாசுக் கிடங்குகளுக்கான உரிமக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், சீனாவிலிருந்து  பட்டாசுகளை கடத்தி வருவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பட்டாசுத் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுக் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விரிவான கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார்.

பட்டாசுக் கிடங்கு  உரிமத்துக்கான கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு அதனைத் திரும்பப்  பெற வேண்டும் என்றும், சீன்வாலிருந்து இந்தியாவுக்குப் பட்டாசுக் கடத்தி வரப்படுவதால், இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்க நேருகின்றன என்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் அந்தக் கடிதத்தில் வைத்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி, பட்டாசுக் கிடங்குகளுக்கான உரிமத்தை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

Friday 11 April 2014

ஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015

மங்களகரமான ஜய வருஷப் பிறப்பின் பலன்களை வாசகர்களுக்காக....

பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.

மங்களகரமான ஜய வருஷம், உத்தராயனம் வருஷரிது சித்திரை மாதம் 1ம் தேதி(14-04-2014) திங்கட்கிழமையும், சுக்லபக்ஷ சதுர்த்தசியும், ஹஸ்தம் நக்ஷத்ரமும், வியாகாத நாம யோகமும் வணஜீ நாம கரணமும், கன்னியா இராசியும் சந்திர ஹோரையும் மேஷ அம்சையும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 6.05க்கு இராஜஸ மேஷ லக்னத்தில் ஜய வருஷம் ஜெனனம்.

ஜய வருஷ வெண்பா:

ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

ஜய வருஷ ராசிக்கட்டம்


இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:

கேது மேஷ ராசியிலும், குரு மிதுன ராசியில் வக்ரமாகவும், சனி - ராகு துலாமிலும் இருக்கிறார்கள்.

சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார்.

குருபகவான் 13-06-2014 அன்று கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

21-06-2014 அன்று ராகு பகவான் கன்னிக்கும், கேது மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

இதனால் ஏற்படும் லோக பலன்கள்:

நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குரு உச்சஸ்தானத்தில் அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் மிக அசுர வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.

பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். இவ்வாண்டு நடைபெறும் அலகாபாத் கும்பமேளா சிறப்பான முறையில் நடந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.

புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். புதன்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற  இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைந்தும் குரு கேந்திரமும் ஏற்படுவதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும்.

நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும். தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும்.

உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம்.  உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்...

பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள் பகுதிகளாகத் தொடர்ந்து இங்கு வெளியாகும். உரிய இராசிகளின் பெயர்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க...

மேடம்

மிதுனம்

கடகம்

ரிஷபம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

புலம்பெயர் தமிழரைக் குறி வைக்கும் இலங்கை: நடவடிக்கை எடுக்குமாறு கனடியத் தமிழர் பேரவை கோரிக்கை

இலங்கை அரசு அண்மையில் புலம்பெயர் தமிழரைக் குறி வைத்து செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பது தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை தனது கவலையையும் விசனத்தையும் தெரிவித்துள்ளதுடன் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் ஐ.நாவின் மனிதவுரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகக் கனடியத் தமிழர் பேரவையும் மற்றும் பல அமைப்புகளும் மும்முரமாகச் செயற்பட்டன.

இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாகப் புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டுச் சட்டங்களுக்கு அமையச் செயற்படும் தமிழர் அமைப்புகளையும், தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.

இலங்கை அரசின் இத் தன்னிச்சையான முடிவு மற்றும் அதன் ஜனநாயக விரோதப் போக்குத் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் தமிழரின் குரலை ஒடுக்கு முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுப் பன்னாட்டு விசாரணைக்குத் தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் பல சந்திப்புகளை நேற்று ஒட்டாவாவில் கனடாவின் முக்கிய கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டது.

ஒட்டாவாவில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகியவற்றுடன் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இராஜ் தவரட்ணசிங்கம், செயலாளர் செல்வி வாணி செல்வராசா, நிறைவேற்று இயக்குனர் திரு டன்ரன் துரைராசா மற்றும் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் இச் சந்திப்புகளிற் பங்கேற்றனர்.

இச் சந்திப்பின்போது, கனடாவில் ஜனநாயக ரீதியாகச் செயற்படும் பொது அமைப்புகளையும் தனிப்பட்டோரையும்  இலங்கை தடை செய்தமையைத் தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவ்விடயம் தொடர்பில் சகல கட்சிகளும் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தமது காத்திரமான முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கனடிய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கனடியத் தமிழர் பேரவையினர் இவ்விடயம் தொடர்பாக உரையாடினர்.

இது தொடர்பாக தாம் ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் கனடிய சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்டோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சனநாயக முறையிற் தமது பணிகளைத் தொடரலாம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கை அரசு விதித்த தடையானது அது அந்த நாட்டுக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். தாம் இதற்கு எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபூசிகாவையும் தாயாரையும் இணைத்து வைக்க கோரி விண்ணப்பம்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள விபூசிகா மற்றும் அவரது தாயான ஜெயக்குமாரி இருவரையும் ஒன்று சேர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனக் கோரி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   விபூசிகாவுக்காக ஒரு முறைப்பாடும், அவரது தாயுக்காக மற்றொரு முறைப்பாடும் ஆணைக்குழுவில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் ஜெயக்குமாரி இருவரும் ஒரு நாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.    விபூசிகாவின் எதிர்கால வாழ்க்கை கருதி அவரை, அவரது தாயாருடன் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விபூசிகா சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது தயாரான ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும் என்று கோரி மற்றொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  13 வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் போலியான காரணங்களை முன்வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

கைதான பெண்போராளிகள் பற்றி தகவலில்லை! அரசு அறிவித்த பட்டியலிலும் இல்லை!!

வன்னியினில் கைதுகள் தொடர்கின்ற நிலையினில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தகவல்கள் இல்லாதுள்ளதால் அவர்களது குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன.கைதான குறித்த பெண் போராளிகளுள் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பினில் மூத்த தளபதியாக இருந்தவரென தெரியவருகின்றது.

இலங்கை அரசு அறிவித்துள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பட்டியலில் அவர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இதனிடையே வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சசிகரன் தவமலர் (வயது42) சசிகரன் யதுர்சினி (வயது 16) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தவமலரின் கணவன் சசிகரன் மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியாவில் வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவருகின்றது.

இவர்களில் கோபி என இலங்கை அரசு கூறி வரும் நபரின் மனைவி சர்மிளா கஜீபன் (வயது 26) கோபியின் தாயார் மற்றும் ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா ஆகியோரென பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் தீக்குளிப்பு!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது.

சிட்னியில் பால்மெயின் என்ற இடத்தில் பணி புரியும் 20 வயதான இந்த தமிழர், பணிபுரியும் இடத்திற்கு வெளியில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டதுடன் பின்னர் கொன்கோர்ட் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் 98 வீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவர்கள் இரண்டு முறை தோல் சத்திரச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

தீக்காயங்களுக்கு உள்ளானவரின், 65 வயதான தாய் மற்றும் அவரது சகோதரரை உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவர்கள் அவரது நண்பர்களிடம் கூறியுள்ளதாக தமிழ் அகதிகள் சபை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் குறித்து தீ மூட்டிக்கொண்டவரின் நண்பரான பாலசிங்கம் பிரபாகரன் கூறுகையில்..

தீ மூட்டிக் கொண்டவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் பாதுகாப்பு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டு குடிவரவு திணைக்களம் அனுப்பியிருந்த கடிதம் அவருக்கு கிடைத்திருந்ததாகவும் கூறினார்.

நாட்டில் அதிகாரிகளிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவந்த அவர் குறைந்தது 18 மாதங்களாக இணைப்பு வீசாவில் வாசித்து வந்தார்.

இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பி வைக்கப்படலாம் என்ற உண்மையான அச்சம் இருப்பதாக அவர் என்னிடம் கூறியிருந்தார் எனவும் பிரபாகரன் குறிப்பிட்டார்.

கடிதம் கிடைத்ததில் இருந்து வெறுப்படைந்து காணப்பட்ட தீ மூட்டிக்கொண்ட நபர், தொழில் நிறுவனத்தில் இரவு 8.30 அளவில் பணி நிறைவடைந்த பின்னர், வெளியில் சென்றதுடன் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டதாக அவருடன் பணி புரியும் நண்பர்கள் குறிப்பிட்டனர்.

தீ மூட்டிக் கொண்டவரின் பையில் இருந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கடிதம், தற்கொலை செய்து கொள்வற்கான காரணத்தை தெரியப்படுத்தும் இரண்டு பக்களை கொண்ட கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரண் மயில்வாகனம், இந்த சோக சம்பவம் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான கொள்கையானது புகலிடம் கோரும் சமூகங்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளமையை காட்டுவதாக குறிபிட்டார்.

வவுனியா நெடுங்கேணியில் இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மூவர் வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்த கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீவன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்தினம் நவநீதன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினரான தேவியான் (வயது 36) ஆகியோரே இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவின் நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் சந்தேக நபர்கள் மூவரும் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு தரப்பிற்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசி பலன் - 09.04.2014 | Raasi Palan 11-04-2014

மேஷம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடரும் எண்ணம் மேலோங்கும். வழிபாட்டில் ஆர்வம் கூடும்.

ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

மிதுனம்
வாங்கல்=கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். நீண்டநாளைய வழக்குகள் பஞ்சாயத்துக்கள் மூலம் ஒழுங்காகும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். மருத்துவச் செலவு குறையும்.

கடகம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்
ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக அதிக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

கன்னி
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விரயங்கள் கூடும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் பங்குதாரர்களை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண்பீர்கள்.

துலாம்
வங்கிச் சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்த்த உதவி கிடைத்து இன்பம் காண்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சகம்
ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும் நாள். கொடுத்த பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

தனுசு
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காணும் நாள். தடைகள் விலகி தனலாபம் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பூர்வீக சொத்துக்களில் முறையான லாபம் கிட்டும்.

மகரம்
நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எந்தச் செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது.

கும்பம்
மதிநுட்பத்தோடு செயல்பட்டு மாபெரும் வெற்றி காணும் நாள். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மீனம்
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

ஜாதிக பல சேனாவை அச்சுறுத்திய விவகாரம்; பொது பல சேனாவின் செயலாளர் மீது பொலிஸ் விசாரணை!

கொழும்பிலுள்ள விடுதியொன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஊடகவியலாளர் அமர்வினை நடத்த முயன்ற ஜாதிக பல சேனாவிற்கு அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் தொடர்பில், விசாரணைகளுக்கு வருமாறு பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை பொலிஸார் அழைத்துள்ளனர்.

பொது பல சேனாவிற்கும், அதன் செயலாளருக்கும் எதிராக ஜாதிக பல சேனாவினால் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகவே, கலபொட அத்தே ஞானசார தேரரை நாளை சனிக்கிழமை வருகை தருமாறு கொம்பனித்தெரு பொலிஸார் அழைத்துள்ளனர்.

இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் ஒற்றுமையையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பினை அடிப்படைவாத பௌத்த அமைப்பான பொது பல சேனா அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தியது.

ஜாதிக பல சேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரர், முஸ்லிம் மதபோதகரான மௌலவி ஆர்.எம். நியாஸ் உள்ளிட்டவர்களே ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தவிருந்தனர். அந்த நிலையில், அங்கு வந்த பொது பல சேனாவின் பிக்குகளும், உறுப்பினர்களும் ஜாதிக பல சேனா ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும், ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்துவதற்கு தமக்கு உரிமையிருப்பதாக ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு உறுதியாகக் கூறியது. இதனால், வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தணித்தனர். அப்போதும் அது முடியாமல் போனது.

இந்த நிலையில், பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அங்கு வந்து அச்சுறுத்தல்களை விடுத்து ஊடகவியலாளர் மாநாட்டினை நிறுத்தினர். அத்தோடு, ஜாதிக பல சேனாவினைச் சேர்ந்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தல் விடுத்து “முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக் கொண்டே இந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வந்தேன். மற்றும் பௌத்த மதத்திற்கு எதிராக பேசினேன்” என்று தெரிவித்து மன்னிப்புக் கோருமாறு அச்சுறுத்தினார். இதனையடுத்து, விஜித்த தேரரும், அவ்வாறே ஊடகங்களிடம் மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து, அவர் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு உதவியதாக தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களில் 65 பேர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை மீளவும் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் உதவியமை தொடர்பில் கடந்த இரண்டு மாதங்களில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில், 5 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், ஏனையவர்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹன கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்கள் அடங்குகின்றனர். அவர்களில் 8 பேர் பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கும், சந்தேக நபர்களுக்கும் உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த 65 பேரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கிளிநொச்சியின் பளை பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே கோபி மற்றும் தேவியர் ஆகியோர் தொடர்பான தகவல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Thursday 10 April 2014

மாப்பிள்ளை தேடும் ஸ்டைலில் வேட்பாளர்களை தெரிவு செய்த ஜெயலலிதா: விந்தியா


பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போல, ஜெயலலிதா வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளதாக நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடிகை விந்தியா அதிமுகவுக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நீலகிரி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஊட்டியில் அவர் பேசுகையில், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போன்று ஜெயலலிதா தேடி தேடி வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளார்.

மற்ற கட்சியினரோ சிறை சென்றவர்கள், உறவினர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்துள்ளனர்.

மேலும், நாங்கள் கார், ஜீப்பில் வந்து வாக்கு சேகரிக்கிறோம் ஆனால் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவோ ஜாமீனில் வந்து வாக்கு கேட்கிறார் என்று கூறியுள்ளார்.

மனைவியின் பெயரை சொல்லிவிட்டார் மோடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி மக்களவைத் தேர்தல் வேட்புமனுவில் தனது மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிடும் மோடி, வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் மனைவியின் பெயர் ஜசோதா பென் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை எந்த தேர்தல் வேட்புமனுவிலும் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று குறிப்பிடாத மோடி, முதல்முறையாக வேட்பு மனுவில் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா தப்பிக்க வழியே இல்லை: கருணாநிதி அதிரடி!

ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் சரியாக ஆஜராகாமல் ஜெயலலிதா வாய்தா வாங்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துகுவிப்பு வழக்கை மூன்று வாரங்களுக்கு நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். இவ்வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிபதி சவுகான் விரைவில் ஓய்வு பெறப்போகிறார்.

மேலும் தலைமை நீதிபதியாக வரப்போகிற லோதா, ஒரு தீர்ப்பை வெளியிட்டிருந்தார். அந்த தீர்ப்பில், தற்போது பதவியில் இருக்கும் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணையை முடித்திட வேண்டும்.

இது போன்ற வழக்குகள், பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருப்பதால், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பலரும், தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று அந்த தீர்ப்பில் இடம் பெற்றிருந்தது.

தற்போது, அதற்கு நேர்மாறாக மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு தடை விதித்திருக்கிறது.

இப்படி வழக்கை தள்ளி போடுவதால் தீர்ப்புகளைத் தள்ளிப்போக செய்யலாமே தவிர தீர்ப்புகளை மாற்றி தப்பிக்க நிச்சயமாக முடியாது. விரைவில் நியாயமான தீர்ப்பு வந்தே தீரும். அப்போது உண்மை ஊருக்கும், உலகிற்கும் புரியும் என்று கூறியுள்ளார்.

கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா

நாட்டின் சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுவரும் பொதுபல சேனா அமைப்பினர், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி வைத்திருந்தது போல் பாதுகாப்பு படையணி ஒன்றை வைத்துள்ளனர்.

பொதுபல சேனா நேற்று முன்தினம் வில்பத்து பகுதிக்கு சென்றிருந்த போது இதனை காணக் கூடியதாக இருந்தது.

லிபியாவின் முன்னாள் தலைவரான கடாபி தனது  பாதுகாவலர்களாக அழகான சில பெண்களை வைத்திருந்தார்.

அப்படியான படையணிக்கு நிகரான பெண்களை கொண்ட படையணி ஒன்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது.

டென்மார்க்கில் நடைபெற்ற அணையாத் தீபம் அன்னை பூபதியின் நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும்

அணையாத் தீபம் அன்னை பூபதியின் இருபத்தியாறாம் ஆண்டு நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும் டென்மார்க்கில் வையின் நகரத்தில் நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் திரு. கணேசையா விமலேஸ்வரன் திரு.தம்பிஐயா மார்க்கண்டு திரு.செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் திரு.மதியழகன் கார்த்திகேசு அவர்களின் திருவுருவ படங்களிற்கு அவர்களின் குடும்பத்தினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் சுடர் வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி கானங்களோடு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கவிதைகள் எழுச்சி நடனங்கள் பேச்சுகள் காட்சியும் கானமும் சிறப்புபேச்சு என்பன சிறப்பாக நடைபெற்றது.

ஒரு விடுதலைப் போராட்டத்திலே பொதுமக்கள் எத்தனை உயர்ந்த தியாகத்தை புரிய முடியும் என்பதற்கு அன்னை பூபதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவரின் தியாகம் ஈடிணையற்றது. அது அன்னையர் குலத்துக்கு மட்டுமன்றி மொத்த தமிழ் இனத்திற்குமே பெருமை சேர்க்கின்றது.

இன் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும் ”தமிழர்களின் தாகம் தமழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிறைவுபெற்றது.

வவுனியாவில் பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் தாயும், மகளும் கைது!

வவுனியா ஆசிக்குளம், தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த தாயும், மகளும் பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிகுளம் தரணிகுளம் பகுதியில் உள்ள சசிகரன் தவமலர் (வயது 42) என்பரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணையும், அவரது 16 வயது மகளான யதுர்ஷினியையும் கைது செய்துள்ளனர்.

கணவன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வரும் நிலையிலேயே, தவமலரும், அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யதுர்ஷினி இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட தாயும், மகளும் விசாரணைக்காக பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல்!

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக  மீனவர்களை  இலங்கை கடற்படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வருகிற 15ம் திகதி முதல் 29ம் திகதி வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால், இன்று கடைசி முறையாக கச்சத்தீவு அருகே 200 விசைப்படகுகளில் 800 மீனவர்கள் மீன்பிடிக்கச் செனறனர். இவர்களை இலங்கை கடற்படையினர் துரத்தியடித்து, தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்பியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதுக் குறித்த அச்சத்தை வெளியிட்டுள்ளனர். இன்று மாலை மீனவளத்துறை அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் இதுக் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவ தேடுதல்களினால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: பெண் அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

வடக்கு, கிழக்கில் ‘சந்தேக நபர்களைத் தேடுகிறோம்’ என்கிற ரீதியில் இராணுவமும், பொலிஸாரும் மேற்கொண்டுவரும் தேடுதல்களினால் பெண்கள் தொடர்ந்தும் தொல்லைக்குள்ளாவதாகவும், கடந்த மாதத்தில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது, ஜெயக்குமாரி பாலேந்திரன் என்கிற குடும்பத்தலைவி கைது செய்யப்பட்டார். இதே காலப்பகுதியில், அதாவது மார்ச் மாதம் 11ஆம் திகதி சர்மிளா கஜீபன் என்ற 26 வயது, கர்ப்பிணிப் பெண்ணை இராணுவத்தினர் கைது செய்தனர். அடுத்த நாள் குறித்த பெண், ரயில் மூலமாகப் கொழும்பில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிற்கு (நாலாம் மாடி) கொண்டு செல்லப்பட்டதாக பெண்ணுரிமை அமைப்புக்களை மேற்கொள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இந்தத் திடீர் கைது மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதக் கர்ப்பமாக இருந்த சர்மிளாவின் கரு 14 ஆம் திகதியன்று காலை கலைந்து விட்டதாகவும், அந்த நிலைமையில் சாதாரணமாக ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளோ, மருத்துவ கவனிப்போ அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

மாறாக, அதே நிலைமையில் கொழும்பில் இருந்து மீண்டும் ரயில் மூலமாக, அவரை பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுள்னனர். பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு, எவ்விதமான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால், தொடர்ந்து அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்று அந்த அமைப்புக்கள் கூறுகின்றன.

இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையிலேயே சர்மிளா கஜீபனைக் கைது செய்துள்ளதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோபி என்ற நபரின் மனைவியே சர்மிளா என்றும், கோபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காகவே சர்மிளாவைத் தாங்கள் கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனது கணவனுடைய பெயர் கஜீபன் எனவும், அவர் கிளிநொச்சி இயக்கச்சியைச் சேர்ந்தவர் எனவும், சவூதி அரேபியாவில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் என்றும் சர்மிளா கூறுகின்றார்.

இவ்வாறே கஜீபனின் தாயாராகிய செல்வநாயகி இராசமலர் என்ற 63 வயது பெண்ணையும் கைது செய்து பூஸா முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். தனது மகனுடைய பெயர் கோபி அல்ல என்றும், கஜீபன் என்பவரே தனது மகன் என்றும் அவரும் கூறுகின்றார். செல்வநாயகி இராசமலர் மோதல் காலத்தில் ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார். இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெல் துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது புலிகள் மீள்எழுச்சி பெறுவதாகக் கூறி இராணுவம் மீண்டும் ஆங்காங்கே சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன.

இராணுவத்தின் இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது, ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள், சிறுவர்கள் என வயது, பால் வித்தியாசமின்றி பலரையும் இராணுவம் கைது செய்து வருகின்றது என பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதனிடையே, சுற்றி வளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் பி.பி.சி கேள்வியெழுப்பியுள்ளது. அதன்போது, இதுவரையில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதற்கும், இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு காரியங்களை மேற்கொள்பவர்களுக்கு, ஏழு பெண்களும் பாதுகாப்பும் உதவிகளும் வழங்கியிருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் எவருக்கும் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றும், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அத்தகைய சம்பவம் இடம்பெறவில்லை என்று தங்களுக்குக் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அனவைரும் அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய உறவினர்களோ, சட்டத்தரணிகளோ யார் வேண்டுமானாலும் அவர்களைச் சென்று பார்வையிடலாம். அவர்களை மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆணைக்குழுவினர் போன்றவர்கள் சென்று பார்வையிட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் என்பன செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது: பா.அரியநேந்திரன்

வடக்கு, கிழக்கில் இராணுவத் தேடுதல்கள், சுற்றி வளைப்புக்களினால் மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருவதாகவும், இவ்வாறான பதற்றமான சூழ்நிலையை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் என்கிற போர்வையில்தான் ஏற்கனவே ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது. உண்மையில் ஒரு ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைகளைக் கேட்கின்றபோது, அதை பயங்கரவாதம் என்கின்ற பூச்சாண்டிக்குள் கொண்டுவருவதுதான் நாட்டிலே மாறி மாறி நடக்கின்ற துன்பியல் நிலையாக இருந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

அத்தோடு, வடக்கு கிழக்கில் எங்கும் எந்த நேரத்திலும் எவரும் சென்று வரலாம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ இருக்கின்ற மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா, என்றால் இல்லை. சுற்றிவளைப்பு இடம்பெறுகின்றது. அங்கே இருக்கின்ற மக்களை அவர்கள் பலாத்காரமாக சோதனை செய்கின்றார்கள். துப்பாக்கிச் சத்தம் இல்லை. ஆனால், சத்தம் இல்லாத அரச பயங்கரவாதம் அங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நடந்தது? ஒரு தாயும் ஒரு மகளும் அங்கே கைது செய்யப்பட்டார்கள். கட்சியைப் பிரிக்கின்ற அரசாங்கம் இப்போது குடும்பத்தையும் பிரிக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த அவலங்களை கூறுகின்றபோது நாங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday 9 April 2014

பொய்யான புலித் தலைவர்களை உருவாக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு

உண்மையான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் மில்லியன் கணக்கில் பணத்தை பெற்று அவர்களை விடுதலை செய்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு, தற்போது பொய்யான விடுதலைப் புலிகளின் தலைவர்களை உருவாக்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

எந்த காரணங்களையும் வெளியிடாது ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலைப் புலிகள் என்ற கதை இட்டுக்கட்டி வெளிநாடுகளில் இயங்கம் தமிழ் சிவில் அமைப்புகளை தடை செய்துள்ளது.

நாட்டில் இருக்க முடியாது உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தமிழ் மக்கள், நாட்டில் இல்லாத விடுதலைப் புலிகளுக்கு உதவி வருவதாக அரசாங்கம் பாரிய கோஷங்களை எழுப்பி வருகிறது.

எனினும் போருக்கு பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலை செய்துள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இன்றைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா நிமால் வாகிஸ்ட மற்றும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் பணத்தை பெற்று அவர்களை விடுதலை செய்துள்ளதாக குறித்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

போரின் பின்னர் சல்லடை போட்டு அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு நான்கு விசாரணைப் பிரிவுகளை ஏற்படுத்தியது.

முதலாவது விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக ஹரிந்த ஜயகாந்தவும் இரண்டாம் பிரிவுக்கு ஆப்தீனும், மூன்றாவது பிரிவுக்கு சமன் கருணாரத்னவும் நான்காம் பிரிவுக்கு பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு பொலிஸ் பரிசோதகர்களுக்கு பொறுப்பாக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன டி அல்விஸ் செயற்பட்டு வந்தார். அவர் நீதவான் ஜயக்கி அல்விஸின் சகோதரர்.

பணத்தை பெற்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதற்காக வாகிஸ்ட மற்றும் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோருக்கு மூன்றாவது விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த சமன் கருணாரத்னவே உதவியுள்ளார்.

விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான பணப் பேரம் பேசல்களை முடிவடைந்த பின்னர், சந்தேக நபரை பார்வையிட வரும் உறவினர் ஊடாக பணத்தை இரகசியமான கணக்குகளில் வைப்புச் செய்த பின்னர், சந்தேக நபர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறி விடுதலை செய்துள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் தலா 10 முதல் 15 லட்சம் ரூபா வரை பெறப்பட்டுள்ளதுடன் வாகிஸ்ட, பிரசன்ன அல்விஸ் மற்றும் சமன் கருணாரத்ன ஆகியோர் இந்த பணத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஏனைய பொலிஸ் அதிகாரிகள் இதனை அறிந்திருந்த போதிலும் அதில் தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

சந்திரா வாகிஸ்ட பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை செலவிட்டு காலி பிரதேசத்தில் ட்ரகன் பழத் தோட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த பழத் தோட்டைத்திற்கு பொறுப்பாக பூஸா முகாமில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான லால் கமகே என்பவர் பணியாற்றி வருவதுடன் தோட்ட வேலைகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரசன்ன டி அல்விஸ் தற்போது உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் சமன் கருணாரத்ன பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

இந்த நிலையில், வாகிஸ்ட ஆலோசனையின் பேரில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி எனக் கூறும் கதை திரைக்கதையை எழுதியவர்கள் பிரசன்ன டி அல்விஸ் மற்றும் சமன் கருணாரத்ன ஆகியோர் என அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

பல மில்லியன் பணத்தை பெற்று விடுதலை செய்யப்பட்ட உண்மையான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று விட்ட நிலையில், லஞ்சம் வாங்கிய சந்திரா வாகிஸ்ட, பிரசன்ன டி அல்விஸ், சமன் கருணாரத்ன ஆகியோர் ராஜபக்ஷவினருக்கு தேவையான வகையில் பொய்யான புலித் தலைவர்களை நாட்டில் உருவாக்கி வருகின்றனர் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

புலிக்கதை கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கம் - சிங்கள ஊடகம்

ராஜபக்ஷ அரசாங்கம் இல்லாத விடுதலைப் புலிகளை இருப்பதாக உருவாக்கி மக்களை ஏமாற்றி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் ராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனை நிறைவேற்றப்பட்டது.

இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதும், ராஜபக்ஷ அரசாங்கம், புதிதாக விடுதலைப் புலிகள் என்ற கதையை உருவாக்கி ஜெனிவா மனித உரிமை பேரவை புலிகளுக்கு உதவி செய்வதாக பிரசாரம் செய்து நாட்டு மக்களை ஏமாற்றும் பாரிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனடிப்படையில் 16 தமிழ் அமைப்புகளும் 424 நபர்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக கூறி தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்காத நிலையில், வெளிநாட்டில் உள்ளவர்கள் யாருக்கு உதவி செய்வார்கள் என்ற கேள்வி எழும் என்பதால், ராஜபக்ஷவின் நாட்டில் விடுதலைப் புலிகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு அமைய விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் ஒருவர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கே.பி.என்ற குமரன் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும் அரசாங்கத்துடன், ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தின் அடிப்படையில் அவர் இலங்கை வந்ததாக பின்னர் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள புலிகளின் பிரதித் தலைவர் கூறியதாக தெரிவித்து, ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு சென்று தகவல் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நாடு திரும்பியதும் பயங்கரவாதத்திற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படவிருப்பதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

காணாமல் போன மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் கிடைக்கின்றன!?

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து   சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஆஸ்திரேலிய கப்பல் குழுவொன்று அறிவித்திருக்கிறது.

ஒரு பிரத்தியேக மின்சார சாதனம் ஒன்றிலிருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞைகள் போல் இவை இருக்கின்றன. இதையடுத்து தாம் சரியான இடத்திலேயே தேடுதலை மேற்கொள்கிறோம் என நினைப்பதாக் குறித்த தேடுதல் கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8ம் திகதி 239 பேருடன் மலேசியாவிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் காணாமல் போனது MH370 எனும் மலேசிய விமானம். நீண்ட நாட்களின் தேடுதலின் பின்னர் விமானம் தென் இந்து சமுத்திரத்தின் ஆழமான பகுதிக்குள் வீழ்ந்து வெடித்திருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போது கறுப்பு பெட்டியைக் கண்டுபிடிக்கும் முயற்சியை குறித்த ஆஸ்திரேலிய கப்பல் தீவிரப்படுத்தியுள்ளது.

சோனியா காந்தியை எதிர்த்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் திடீர் விலகல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து போட்டியிடவிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதொ பக்ருதீன் தனது வேட்பு மனுவைத் திரும்பி பெற்றுள்ளார்.

இதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. எனினும் இது கட்சியின்  முடிவல்ல என தெரிகிறது.

இதையடுத்து சமூக ஆர்வலர் அர்ச்சனா சிறீவஸ்தாவை ரேபரேலி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர் குமார் பிஸ்வாஸ் போட்டியிடுகிறார். இதனிடையே அமேதி தொகுதியில் பிஜேபி சார்பில் வழக்கறிஞர் அஜய் அகர்வால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நரேந்திர மோடி போட்டியிடும் வதோரா தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது: இரா.சம்பந்தன்

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவிற்கு செல்லவுள்ளமை, இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயத்திற்கும், இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்திருந்தார்.

அந்த அழைப்பின் பிரகாரம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவொன்றும் அண்மையில் தென்னாபிரிக்கா சென்று திருப்பியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடர் நடைபெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்கா சென்று பேச்சுக்களை நடத்துவதாகவும் முடிவாகியிருந்தது. அந்த முடிவுகளின் படியே இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்கா செல்லவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பில் சகல விதமான விடயங்கள் பற்றி இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படும் என்று கூறிய அவர், ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று (இலங்கை) அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தொடரும் கைதுகளைத் தடுப்பதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

வடக்கில் தொடரும் அவசரகால கைதுகள் மற்றும் அதன் பின்னரான சித்திரவதைகளைத் தடுப்பதற்கு சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள அபாயகரமானதும், அவலமானதும் ஆன சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கும், தமிழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவர் ஊடக அறிக்கையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.

வடக்கில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் அறிய முடியாமல் இருக்கும் பாதகமான நிலைமை தொடர்பிலும் அந்த ஊடக அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மோதல்கள் நிறைவு பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வடக்கில் எத்தகைய ஆயுத மோதல்களும் அசம்பாவிதங்களும் இடம்பெறாத சூழலில் அமைதியை குலைத்து மக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்சமும், பதற்றமும் நிறைந்த சூழலை சமகாலத்தில் மகிந்த ராஜபக்ஷ அரசு வலிந்து தோற்றுவித்துள்ளது. வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அரச படைகளின் தீவிர சோதனை கெடுபிடிகள், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அரச படைகளின் திடீர் சுற்றி வளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளினால் இதுவரையில் 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை அரசு கூறுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே சிறைகளில் இருந்து நீதிமன்ற தீர்ப்புகளுக்கமையவே விடுதலையாகியிருந்தனர் என்பதும், அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறியவர்கள் என்பதும் கவனத்துக்குரியவை. மீண்டும் இவர்களை கைது செய்தல் என்பது அரசின் மீள் இணைப்பு சமுக மயப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

தொடரும் கைது மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் பாரிய அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சிவில் சமுக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இத்தகைய இராணுவ பலோத்கார அழுத்தங்களால் தமது அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை முன்னெடுப்பதில் மக்கள் பல்வேறு தாக்கங்களை சந்தித்துள்ளனர்.

அரச பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வதற்காக இளைஞர்களும் யுவதிகளும் தமது உயிரை பணயம் வைத்து ஆபத்தான கடல் வழிப்பயணங்கள் ஊடாகவோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்கள் மூலமாகவோ நாட்டைவிட்டு பெயர்க்கப்படும் அல்லது நிரந்தரமாகவே துரத்தப்படும் தமிழர் இனப்பரம்பல் விகிதாசாரத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

வள்ளிபுனத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி தனது மன வருத்தத்தை கூறுகையில், 'எனது கணவர் ஏற்கனவே இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு பெற்றிருந்த நிலையிலேயே விடுதலையாகியிருந்தார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை எங்களுடைய குடும்பத்தினை மீண்டும் நெருக்கடி நிலைக்குள்ளேயே தள்ளியிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றே கருதுகின்றோம். துயரமும் அவலமும் நிறைந்த நாளாந்த வாழ்க்கையையே சுமக்க வேண்டிய நிலையில் நாம் அல்லல்படுகின்றோம்' என்று தெரிவித்தார்.

பொது அமைதி வாழ்வுக்கு எவர் ஊறு செய்விக்கிறார்களோ, இன்னல் விளைவிக்கிறார்களோ அவர்கள் குற்றவாளிகளே. அந்தவகையில் மகிந்த ராஜபக்ஸ அரசு மிகப்பெரிய குற்றவாளி அரசாகும். சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மீண்டும் விடுதலைப்புலிகள் என்பதொரு மாயையை ஏற்படுத்தி, அப்பாவி இளைஞர்களினதும், குடும்பஸ்தர்களினதும் இயல்பு வாழ்க்கையை சிதைத்து மிக மோசமான மனித உரிமை மீறல்களில் இந்த அரசு ஈடுபட்டுவருகின்றது.

இத்தகைய அவலமான சூழலில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கும், எமது மக்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கைது என்று பொலிஸ் அறிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் செயற்பட்டதாக கூறப்படும் சுப்ரமணியம் கபிலன் என்பவரைத் கைது செய்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது.

நந்தகோபன் என்று விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்ட சுப்ரமணியம் கபிலன், யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் 1990ஆம் ஆண்டில் இருந்து புலிகள் இயக்கத்தில் செயல்பட்டிருக்கிறார். பின்னர், 2009ஆம் ஆண்டில் போலிக் கடவுச் சீட்டின் மூலம் மலேசியாவுக்குச் சென்றார். அதன் பிறகு, 2013ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து போலி கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றபோது, அவர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாக, அவருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இலங்கைக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். அதன்படி தான் இவர் கடந்த மார்ச் 6 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள சுப்ரமணியம் கபிலன் விடுதலைப் புலிகள் அமைப்பில் எந்தளவுக்கு முக்கியமான உறுப்பினராகச் செயற்பட்டார் என்று பி.பி.சி எழுப்பிய கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் பேச்சாளர், அவர் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைக்கு பொறுப்பாக சில காலம் பணியாற்றியுள்ளார். 1991ஆம் ஆண்டில் ஆனையிறவு முகாம் தாக்குதலில் பங்கெடுத்துள்ளார். அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை ஒன்று இலங்கையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக இப்போது வழக்குத் தொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சுப்ரமணியம் கபிலனைப் போல இன்னும் எவரேனும் கைதுசெய்யப்பட்டு, ஊடகங்களுக்கு தகவல்கள் வராமல் இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதிலளித்த அஜித் ரோஹண, இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஏதாவது விதத்தில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்தவர்கள் தொடர்பில் பல்வேறு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி விசாரணைகள் நடக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்துதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை; இலங்கையை மீள்பரிசீலனை செய்யக் கோரிக்கை!

பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றஞ்சாட்டி சர்வதேச ரீதியில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் பெயரிட்டுள்ளமையானது, நாட்டிலுள்ள சிறுபான்மை தமிழர்களின் அமைதியான செயற்பாடுகளைப் கட்டுப்படுத்தும் முயற்சியாக கருத வேண்டியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கும் நபர்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒத்துழைத்து அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

அத்தோடு, சட்ட விதிகளுக்கு உட்படாத இந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாட்சியங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அந்த பெயர்ப்பட்டியலை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் இவ்வாறான தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் என்ற பட்டியலை வெளியிட்டதன் ஊடக, நாட்டிற்குள் வருகின்ற நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், எந்தவொரு காரணமும் இன்றி தடுத்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முற்று முழுதாக செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கை அரசாங்கம் தெளிவற்ற மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயற்பாடானது, சர்வதேச ரீதியில் தொடர்புகளை வைத்துள்ள உள்நாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தண்டனை விதிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய ராசி பலன் | 09.04.2014

மேஷம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். பெற்றோர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

ரிஷபம்
நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். கொடுக்கல் & வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். குடும்பச் சுமை கூடும் வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும்.

மிதுனம்
பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

கடகம்
வரவும்&செலவும் சமமாகும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிட்டும்.

சிம்மம்
அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். அதிக விலை கொடுத்து வாங்கியும் சில பொருட்களால் திருப்தி இல்லாமல் போகலாம். கொடுக்கல்&வாங்கல்கள் ஒழுங்காகும்.

கன்னி
ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளமிடும் நாள். வங்கிகளில் வைப்பு நிதி உயரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்
காரிய வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வரவு வரும் முன்னரே செலவு வந்து காத்திருக்கும்.

விருச்சகம்
இல்லத்தில் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க உதவியைச்செய்து கொடுப்பர். வழிபாட்டில் ஆர்வம் கூடும். வரவு திருப்தி தரும்.

தனுசு
இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். கொடுக்கல்& வாங்கல்களில் கொஞ்சம் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விரயங்கள் குறைய சுபவிரயங்களை மேற்கொள்ளலாம்.

மகரம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சுற்றத்தார்களின் வருகை உண்டு. தொழிலில் இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகும்.

கும்பம்
நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர் வருகை உண்டு உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வரலாம்.

மீனம்
பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும் நாள். தொலை பேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். வியாபார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

Tuesday 8 April 2014

அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை மனுத் தாக்கல்!

பிரித்தானியாவில் இருந்து அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் என்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.

இதன் மூலம் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான சர்வதேசத்தின் பார்வையை திசை திருப்ப முடியும் என்று அந்த அமைப்புகள் ஆலோசனை வழங்கி இருக்கின்றன.

அமெரிக்கப் பிரேரணையை நீர்த்துப்போக வைக்கும் முயற்சியே புலம்பெயர்ந்தோர் தடைப் பட்டியல் - கஜேந்திரகுமார்

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் போலியானவை என்று நிரூபிக்கும் பொருட்டே இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளையும், தமிழர்களையும் தடை செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து புலம்பெயர்ந்த அமைப்புகள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்
பெற்றிருந்தால், அதனை முன்னதாகவே வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது அதனை வெளியிட்டிருப்பதானது, அமெரிக்காவின் பிரேரணையை நீர்த்து போகச் செய்வதற்கான இலங்கையின் முயற்சியாகவே கருதப்பட வேண்டி இருக்கிறது.

இலங்கையின் யுத்தக்குற்றங்கள் குறித்து ஆதாரங்களை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளே வழங்கி இருந்தன.

இந்த அமைப்புகள் மீது பயங்கரவாத முத்திரையை குத்திவிட்டால், அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களும் போலியானவையாகவே இருக்கும் என்று நிரூபித்துவிடலாம் என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வெளியேற்றப்படுகிறார் சந்தோஷ்சிவன்

இனம் பிரச்சனை அவ்வளவு எளிதில் முடிவதாக இல்லை. அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ்சிவன் எங்களோடு ஒரு பொது விவாதத்திற்கு வந்து பேச வேண்டும்.

அப்படி பேசாதவரை அவர் ஒளிப்பதிவு செய்யும் எந்த படத்தையும் தமிழ்நாட்டில் நிம்மதியாக ரிலீஸ் செய்துவிட முடியாது என்று கூறியிருக்கிறது மே17 இயக்கம்.

ஒரு சதவீதம்தானே இவர்கள்? என் படத்தை என்ன செய்துவிட முடியும் என்று இனம் ரிலீசுக்கு முன்பு முணுமுணுத்த லிங்குசாமி, இந்த முறை முன்பு போல அலட்சியமாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதன் விளைவாக லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அஞ்சான் ’ படத்தில் ஒளிப்பதிவு செய்து வரும் சந்தோஷ்சிவன் அப்படத்திலிருந்து நீக்கப்படலாம் என்கிறார்கள்.

இது லிங்குசாமி மட்டுமல்ல, சூர்யாவும் சேர்ந்து எடுத்த முடிவுதானாம். அப்படியே இன்னொரு செய்தி. இந்த அஞ்சான் படத்தில் பாடல் எழுதுவதாக ஒப்புக் கொண்ட கவிஞர் அறிவுமதி, லிங்குசாமியின் போக்கு பிடிக்காமல் தனக்கு அவர் அனுப்பி வைத்த பாடலுக்கான மெட்டுகளை திருப்பி அனுப்பிவிட்டாராம். அதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட் இப்போது.

மலேசிய விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது!

மலேசியாவிலிருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் காணமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.

கடந்த மாதம் 8ம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களுக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையின் ரேடார் கருவியிலிருந்து மாயமானது. இன்று ஒருமாதம் நிறைவடைகிற நிலையில்,  ஒரு மாதமாகியும் காணாமல் போன விமானம் குறித்த நிலையானத்  தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இருப்பினும் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள பேட்டரிக்கு ஒரு மாத காலம்  மட்டுமே இயங்கும் அவகாசம் உள்ளது என்பதால், இப்போது அப்போது என்று எப்போது வேண்டுமானாலும் பேட்டரியின் இயக்கம் செயலிழக்கக் கூடும் என்றும் அச்சம் நிலவுகிறது. இதை அடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து என்.குமரகுருபரன் நீக்கம்!

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து என்.குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு, இதுவரை காலமும் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றி வந்த வேலனை வேணியன், புதிய பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்தமையை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாது, பொறுப்பு வாய்ந்த பிரதித் தலைவர் பதவியிலிருந்து கொண்டு என். குமரகுருபரன் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, அவரின் கட்சி அக்கத்துவத்தையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

என். குருபரனின் நீக்கம் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாது, பொறுப்புவாய்ந்த பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி கட்சியின் அரசியல்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்து, தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும், கட்சியில் தனக்கு இருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, கட்சி கட்டுபாட்டை மீறிய காரணங்களை முன்வைத்து ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து என். குமரகுருபரன் அகற்றப்பட்டுள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், காலியான பிரதி தலைவர் பதவிக்கு கட்சியின் அரசியல்குழுவினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமரகுருபரனின் கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியை, தேசிய ரீதியாகவும், சர்வதேசிய ரீதியாகவும், எந்த ஒரு ஊடக, சமூக, அரசியல் தளத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் தகைமை உடனடியாக என். குமரகுருபரனிடம் இருந்து அகற்றப்படுகிறது.

இந்த அறிவித்தல் இந்நாட்டின் சகல ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், இராஜதந்திர நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், கட்சியின் தொழிற்சங்க, இளைஞர், மகளிர் துணை அமைப்புகளை சார்ந்தவர்களும் அவருடன் எந்த ஒரு தொடர்புகளையும் பேண கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கட்சியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.

வேலணை வேணியன், எஸ். ராஜேந்திரன், ஜெயபாலன், சண். குகவரதன், வேலு குமார், எஸ். கணேசன், கே.ரீ. குருசாமி, எஸ். பாஸ்கரா, பிரியாணி குணரத்ன, லோரன்ஸ் பெர்னாண்டோ, எ. ராஜ்குமார், பிரதீப் ராஜகுமாரன், சண். பிரபாகரன், நந்தினி விஜேரத்தினம் உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் ஊடக செயலாளர் சின்னத்தம்பி பாஸ்கரா ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் நடத்தப்படும் தினகரன் வார இதழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான தனது நேர்முகத்தில், கட்சியின் அரசியல்குழு முடிவுகளை பகிரங்க விமர்சனத்துக்கு உள்ளாக்கி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு, கட்சியின் பொறுப்பு வாய்ந்த பிரதித்தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, அரசாங்கத்தை திருப்திபடுத்தும் நடவடிக்கையில் என். குமரகுருபரன் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

அதேபோல், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கட்சிக்கு எதிரான கருத்துகளை குமரகுருபரன் வெளியிட்டார். கட்சியின் வேட்பாளராக இருந்துகொண்டே இத்தகைய கருத்துகளை அவர் வெளியிட்டது, நமது கட்சியை தோல்வியடைய செய்ய முயன்ற அரசாங்கத்துக்கு சாதகமான நிலைப்பாடாகும்.

மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க அரசாங்கம் பல குழுக்களை களமிறக்கியது. இந்த அனைத்து குழுக்களையும் பின்தள்ளி நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் அதிகப்படியான மக்களாணையை பெற்றுள்ளது.

இதையடுத்து உருவாகியுள்ள மகிழ்சிகரமான சூழ்நிலையை பாழ் செய்து தமிழ் மக்களிடம் தோற்றுபோயுள்ள அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ஜனநாயக மக்கள் முன்னணியை அழிக்க திட்டமிடும் அரசாங்கத்தில் இருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளின் சதி முயற்சிகளுக்கு துணை போக வேண்டாம் எனவும், உண்மைக்கு புறம்பான பொய்யுரைகளை தொடர்ந்தும் ஊடகங்களில் வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் என். குமரகுருபரனிடம் அரசியல்குழு தெரிவித்து கொள்கிறது.

கடந்த சுமார் பத்து வருடங்களில், முதல் ஐந்து வருடங்களில் கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும், அதையடுத்து மேல் மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டதற்கான பதவி நியமனங்களை கட்சி வழங்கியதையும், கடந்த 2010ம் வருட பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி கொழும்பு மாவட்ட நியமனத்தையும் கட்சி வழங்கியதையும், உடல்நலக் குறைவு காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை உரிய முறையில் தன்னால் முன்னெடுக்க முடியாமையினால் தான் அத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனதையும் கவனத்தில் கொண்டு,

தற்போது நடைபெற்று முடிந்த மேல் மாகாணசபை தேர்தலில் தான் வெற்றிபெற முடியாமைக்கான காரணங்களை தனக்குள்ளே தேடும் படியும், மிக நீண்ட காலம் பதவி வகித்துவிட்டு, இன்று வெற்றிபெற முடியாமல் போன பிறகு அதை மனதில் கொண்டு, மேல் மாகாண மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும், அபாண்டமான சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளை சுமத்த வேண்டாம் என்றும், கட்சிக்குள்ளே புதிய இளைய தலைமுறையினர் உட்பிரவேசிப்பதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழிவிட்டு கனவானாக நாகரீகத்துடன் நடந்து கொள்ளும்படியும் என். குமரகுருபரனிடம் அரசியல்குழு மேலும் தெரிவித்து கொள்கிறது.

அரசியல்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையை அறிவிக்கும் கடிதம் என். குமரகுருபரனுக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதன்படி தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடுத்து வரும் இரண்டு வாரத்துக்குள் எழுத்து மூலமாக பதிலளிக்க அவருக்கு ஜனநாயக ரீதியாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிய பதில் உரிய காலகட்டத்துக்குள் வழங்கப்படாதவிடத்து அவரது கட்சி அங்கத்துவம் முழுமையாக நீக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்றுள்ளது.

ஐ.நா. தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியாவிற்கு, இலங்கை நன்றி தெரிவிப்பு!

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமைக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இந்தியாவில் உள்ளக அரசியல் அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும், ஐக்கிய நாடுகளில் இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காது, இந்தியா நடுநிலை வகித்திருந்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்தே இலங்கை ஜனாதிபதி கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் ‘தி ரைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிடுள்ளது.

2002- 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானத்தையே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தன. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலிருந்து இந்தியா இறுதி நேரத்தில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு: கூட்டமைப்பு குற்றச்சாட்டு

வடக்கில் கடந்த ஒரு மாதத்திற்குள் இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் மக்கள் மீண்டும் இராணுவச் சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களினால் நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான நிலைமைகளை நாட்டின் முப்படைகளின் தளபதி என்கிற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியச் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

கோபி என்பவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதனை முன்னிறுத்தி, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், வன்னிப் பிரதேச்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைக்கச் செல்லும் தோட்டச் செய்கையாளர்களாகிய வயோதிபர்களும் தங்களுடன் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று இராணுவத்தினர் வற்புறுத்தியிருக்கின்றார்கள். இதனால், மீண்டும் ஒரு மோதல் நிலைமை ஏற்பட்டுவிட்டதோ என்று தமிழ் மக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இளம் பெண்களை இராணுவத்தில் சேர வேண்டும் என்று இராணுவத்தினர் தொடர்ந்தும் வன்னியில் வற்புறுத்தி வருகின்றனர். மோதல்களில் பெற்றோரை இழந்து தனிமையில் அண்ணனுடன் வாழ்ந்து வருகின்ற தங்கை, இராணுவத்தில் சேர மறுத்ததையடுத்து அண்ணனை இராணுவத்தினர் கைது செய்ததாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்கமுடியாது. இது பற்றியும் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் முடிவடைந்த பின்பும், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, தமிழ் மக்கள் அனைவரையும் கெடுபிடிக்குள் உள்ளாக்கியிருக்கின்ற நெருக்கடியான சூழலை இல்லாமல் செய்து, அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய சூழலை உருவாக்குவதே தற்போது முக்கியமானதாகும். வடக்கின் தற்போதைய நிலைமைகளை எடுத்துக் கூறி பேச்சு நடத்துவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு நாளை புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா