Thursday 16 August 2012

ஈழத்தமிழர்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களை இழுத்து மூடுங்கள்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதிலிகளாக தாய்த் தமிழ் மண்ணிற்கு வந்த நம் ஈழத்துச் சொந்தங்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடி, அதில் தடுப்பிலிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசக் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர்,

இலங்கையில் இன்னமும் முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் நம் சொந்தங்களான ஈழத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களும் அரசியல் சம உரிமை பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், நம் ஈழத் தமிழ் சொந்தங்களின் நல் வாழ்வு, அரசியல் சம உரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு கூறிக்கொண்டாலும், அது இலங்கை அரசின் நட்பைப் பேணுவதில்தான் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.

அதனால்தான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இலங்கையில் வாழ் தமிழர்களின் அரசியல் சம உரிமைக்கும், மறு குடியமர்த்தலுக்கும் குரல் கொடுத்துள்ள தமிழக முதல்வர், இங்கு ஏதிலிகளாக வந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு பல்வேறு வகைகளில் வதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவாரா?

இலங்கைக்கு குருதி கடத்த முயன்றார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள் என்ற ஐயத்தின் பேரிலும் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பல ஆண்டுக்காலமாக சிறப்பு முகாம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள சித்ரவதைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலைப் பெற்ற பின்னரும், அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ், மனிதாபிமற்ற வகையில் அவர்களின் விடுதலையைத் தடுத்து, தொடர்ந்து சிறப்பு முகாம்களில் வைத்து வதை செய்து வருகிறது க்யூ பிரிவு.

தங்களை விடுதலை செய்து, தமிழ்நாட்டில் உள்ள இதர முகாம்களில் வாழும் தம் சொந்தங்களோடு வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சிறப்பு முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் நம் சொந்தங்கள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளனர்.

விடுதலை செய்வதாக வாக்குறுதி மட்டும் அளித்துவிட்டு அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் விடுதலைக்காகவும், வதை முகாம்களாக செயல்படும் சிறப்பு முகாம்களை இழுத்து மூடவும் கோரி கடந்த மாதம் 11ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானோம். ஆனால் அவர்களுக்கு விடியல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தங்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செந்தூரன் என்பவர் கடந்த 5ஆம் தேதியில் இருந்து மீண்டும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்றுடன் 12 நாட்களாக போராடிவரும் அவருடைய உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பூந்தமல்லி முகாமில் உள்ள மற்ற ஈழத்து சொந்தங்களும் ஒரு நாள் அடையாள பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் பூர்வீகக் குடிகளான நம் சொந்தங்கள் சம உரிமை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழக சட்டப் பேரவையில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதல்வர், தமிழ் நாட்டிலேயே அவர்களை வதைக்கும் இந்த சிறப்பு முகாம்களின் மீது தனது கவனத்தை செலுத்த வேண்டுமாய் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தங்களின் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும், மனிதாபிமானமற்று, அடிப்படை உரிமைகள் மறுத்து அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நியாயம்தானா?

எனவேதான் மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான சிறப்பு முகாம்களை இழுத்து மூடிவிட்டு, அதில் அடைக்கப்பட்டுள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு

லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது.

இலண்டன் ஒலிம்பிக் கிராமம், இலண்டன் HYDE PARK, OXFORD STREET, STRATFORD UNDERGROUND STATION மற்றும் ஒலிம்பிக்கிற்காக வருகை தந்த மக்கள் கூடும் இடங்களில் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மனிதநேயன் சிவந்தன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 22 நாட்களும் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

‘Sri Lanka! Stop Genocide of Tamils’, ‘Boycott Sri Lanka’ என்ற வசனங்களடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்க விட்டவாறு தொண்டர்கள் இலண்டன் நகரவீதிகளில் பரவலாக வலம் வந்தனர்.

2009 மே மாதத்துடன் இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுகின்றது என்ற கருத்து பலதரப்பட்ட வேற்று நாட்டு மக்களிடம் இருப்பதை அவர்களுடன் அளவளாவியபோது அறியக்கூடியதாக இருந்தது.

2009 மே யில் யுத்தம் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழினத்திற்கெதிராக எவ்வாறான வகைகளில் இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றிய விளக்கம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தொண்டர்களால் அவர்களுக்கு விளக்கமாக வழங்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை கொடுத்து தமிழர்கள் அவர்களுக்குரிய இறையாண்மையின் அடிப்படையில் மீண்டும் அவர்களுக்குரிய தேசத்தினை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஒலிம்பிக் நிகழ்வு வழங்கியது.

தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான(house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது.

உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசவை உறுப்பினர்களுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது என்ற விடயத்தை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த நியமனங்கள் யாவும் ஆகஸ்ட் 15, 2012 அன்று முதல் நடைமுறைக்கு வரும்.

மேற்சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. திருவாளர் ராம்சி கிளார்க் அவர்கள் அமெரிக்காவின் முன்னை நாட் சட்டமா அதிபராவர் அமெரிக்கச் சட்டத்திலும் அனைத்துலகச் சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலன் என்று பெயரெடுத்தவர்.கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச் சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். அனைத்துத் தமிழராலும் உற்றதோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.

2. ஒரு சிங்களக் குடிமகனான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன அவர்கள் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத இலங்கை அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். இலங்கையின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர். என்றென்றும் எமக்காக ஒலிக்கப்போகின்ற குரல் இவரதாகும்.

3. கலாநிதி ஜெயலிங்கம் நாகலிங்கம் அவர்கள் ஒரு மருத்துவ ஆய்வாளர். இவர் மட்டுமன்றி இவரது முழுக்குடும்பமுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.

4. திரு. சத்யா சிவராமன் அவர்கள் ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி தெற்காசியாவில் மனித உரிமைகள் மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றிய ஒரு தொழிற்பாட்டாளருங்கூட. இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததில் திரு சிவராமனுக்குப் பெரும் பங்குண்டு.

5. திரு இழஞ்செழியன் அவர்கள் கல்லூரிப் பராயத்திலிருந்தே சமூகத்தில் நிலை குலைந்தவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைத் தம்முடைய சமூக எழுச்சிப் போராட்டமாக மாற்றிக் கொண்டவர். அம்மாந்தர் வாழ்வின் கண்ணியத்தைக் காப்பதனையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொண்டவர். ஐ.நாவிற்குப் பத்து லட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் பணியில் தம்மைப் பகலிரவாக அர்ப்பணித்தவர்.

6. திரு.ஞானேஸ்வரன் அவர்கள் இலங்கையிலும் கனடாவிலும் பொறியியலாளராகப் பட்டயம் பெற்றவர். அறிந்தநாட் தொட்டு தமிழ் மக்கள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். புலம்பெயர் சமூகத்தில் கருத்தொருமிப்பை நிறுவுவதற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்.

7. உஷா ஸ்ரீஸ்கந்தராஜா அம்மையார் அவர்கள் கனேடியத் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். எமது பிரச்சினகள் பற்றிப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதன் மூலமே ஒரு புனித யுத்தத்தை நடாத்திக்கொண்டிருப்பவர்.

8. திரு இராஜரத்தினம் அவர்கள் புலம்பெயர் தமிழர் வாழ் உலகெங்கும் ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்விக்கென்று தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அதற்கான நூலாக்கக் குழுவிலும் பெரும்பங்கு கொண்டிருந்தவர். சிறந்த எழுத்தாளரான அவருடைய பண்பாடு வேரும் விழுதும் என்ற நூலானது தமிழ் நாட்டு அரசினால் சிறந்த நூலெனத் தேர்வு பெற்ற ஒன்று.

9. திரு. ஜெகன் நவரத்னம் மோகன் அவர்கள் தமிழீழச் சங்க மூலமாகவும் கனடியத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவகம் மூலமாகவும் கனடியத் தமிழ் மக்களுக்கு அளப்பருஞ் சேவைகள் செய்த ஒரு மூத்த வழக்குரைஞர். அவர் புரியும் பல்தரப்பட்ட பணிகளுக்காகவும் அவரின் தலைமைத்துவப் பண்புகளுக்காகவும் கனேடியப் பாராளுமன்றம் அவரைக் கௌரவித்திருந்தமை இங்கு குறிப்பிடற்பாலது.

இவர்கள் அனைவரையும் மேற்சபை உறுப்பினர்களாக வரவேற்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. இந்தப் பதவியை மனமுவந்து ஏற்றுக் கொண்டமைக்காக நாம் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்கள் ஒவ்வொருவரதும் திறமைகளும் அனுபவமும் தொழில் சார் தகமைகளும் நாம் எமது இலக்கை அடையும் முயற்சிகளில் நன்கு பயன்படும். அத்துடன் தமிழீழம் நோக்கிய எமது பயணத்தில் இவர்கள் தங்கள் இதயபூர்வமான அர்ப்பணிப்புடன் செயல்பட உறுதி பூண்டுள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

'நான் தீவிர பக்தை' - கோயில் கோயிலாக சுற்றும் கமல் மகள் ஸ்ருதி!

Shruthi S Regular Visit Popular Temples   

அப்பா கமல் தன்னை தீவிர நாத்திகவாதி என்று கூறிக் கொள்வதோடு, மேடைகளில் அதுகுறித்த வெளிப்படையான பிரச்சாரங்களும் செய்து வருகிறார். ஆனால் அவரது மகள் ஸ்ருதியோ கமலுக்கு நேரெதிர்.

சமீபத்தில் கூட திருப்பதி, காளஹஸ்தி, திருவனந்தபுரம், குருவாயூர் என பிரபல கோயில்களுக்கெல்லாம் ஒரு விசிட் அடித்து சாமி கும்பிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஆமாம் நான் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான்.

வீட்டில் பூஜை ரூம் இல்லை. அப்பாவும் சாமி கும்பிட சொல்லித் தரலை. ஆனா, கடவுள் இருக்காருனு நான் முழுசா நம்புறேன். திருப்பதி, திருவனந்தபுரம் கோயில்களுக்கு மட்டும் இல்லை... இன்னும் நிறையக் கோயில்களுக்குச் சத்தம் இல்லாமல் போயிட்டுதான் இருக்கேன். அது கடவுளுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்.

இந்த சாமி மட்டும்தான் பிடிக்கும்னு கிடையாது. எப்பப்ப எந்த சாமி பிடிக்குதோ, அப்பப்ப அவங்களைக் கும்பிட்டுக்குவேன். அப்பா இதைப் பத்தி எதுவும் கேட்டது இல்லை. நானும் சொன்னது இல்லை!'' என்றார்.

ஸ்ருதிஹாஸன் தனது ஒவ்வொரு படம் தொடங்கும்போதும், முடிந்த போதும் தவறாமல் கோயிலில் அர்ச்சனை செய்துவிடுவாராம். சமீபத்தில் அவர் நடித்த கப்பர் சிங் வெற்றிக்கு இப்படி செய்தவர், அடுத்து பிரபு தேவா படத்தில் ஒப்பந்தமானதும் இன்னும் தீவிர நம்பிக்கையுடன் போகத் தொடங்கியுள்ளாராம்.

யாருக்கும் தொந்தரவில்லாத நம்பிக்கை... இருந்துவிட்டுப் போகட்டுமே என்று கமல் அனுமதித்திருப்பாரோ!

நான் ரியல் எஸ்டேட்டை நம்பல... ரீல் எஸ்டேட்டைதான் நம்பறேன்! - கருணாஸ்

I M Always Investing Cinema Only Says Karunaas   

சென்னை: என் நினைப்பு முழுக்க சினிமாதான். 24 மணிநேரமும் சினிமாவைப் பற்றித்தான் சிந்திக்கிறேன். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன் என்கிறார் நடிகர் கருணாஸ்.

அம்பா சமுத்திரம் அம்பானி படத்தை அடுத்து கருணாஸ் சொந்தமாகத் தயாரிக்கும் படம் ரகளைபுரம். ஹீரோவும் அவர்தான். இந்தப் படம் முடிந்துவிட்டது. விரைவில் வெளிவரப் போகிறது.

அடுத்து மேலும் இரு படங்களைத் தயாரிக்கப் போகிறார். இவற்றிலும் ஹீரோவாக நடிக்கிறார்.

முழுநேரமும் சினிமா தயாரிப்பில் குதிக்கத் திட்டமா.. காமெடி வேஷம் பண்ணமாட்டீங்களா, என்று அவரிடம் கேட்டபோது, "ஆமாண்ணே.. நான் முழுநேர சினிமாக்காரன்தான். வேற சைட் பிஸினஸ்கூட கிடையாது.

அதேநேரம், நான் ஹீரோதான்னு சொல்லிக்க விரும்பல. கதைக்கேத்த ரோல்ல நான் நடிப்பேன். காமெடி, ஹீரோன்னாலும் பாக்க மாட்டேன்.

சினிமாவில் சம்பாதித்த காசை வச்சி நான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணல. இந்த 'ரீல் எஸ்டேட்'டைத்தான் நம்பறேன். மேல மேல பிலிம் ரோல்தான் வாங்கிக் குவிக்கிறேன். வட்டிக்கு வாங்கித்தான் சினிமா எடுக்கிறேன்.

ஒரு செகண்டுக்கு 24 பிரேம் என்ற கணக்கில் பிலிம் ஓடும்... நான் 24 மணி நேரத்தில் ஒரு செகண்டு கூட சினிமாவைத் தவிர வேறு எதையும் நெனக்கிறதில்லை.

ஆனா ஒரு நம்பிக்கை. செய்யும் விஷயத்தை திருத்தமா நேர்மையா செஞ்சா ஜெயிக்கலாம்," என்றார் கருணாஸ்.

சூரியன் ரீமேக்கில் விஷால்?

Vishal Suriyan Remake

ரீமேக் பட லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறது சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த சூரியன்.

1992-ல் கேடி குஞ்சுமோன் தயாரிக்க பவித்திரன் இயக்கத்தில் வந்த படம் இது. இந்தப் படத்தின் இணை இயக்குநர் ஷங்கர். படத்தில் கவுண்டமணியின் காமெடி மிகப் பிரபலம்.

அதிரடி ஆக்ஷன் - காமெடி, நல்ல பாடல்கள் என சரியான கமர்ஷியல் கலவையான இந்தப் படத்தை மீண்டும் ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளாராம் பவித்திரன்.

ஹீரோவாக விஷால் - ஹீரோயினாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் விஷால் தரப்பில் விசாரித்தபோது, அவருக்கு இந்தப் படத்தில் ஆர்வம் இருந்தாலும், இயக்குநர் விஷயத்தில் மட்டும் அத்தனை திருப்தியில்லையாம். பவித்திரன் தவிர வேறு யாராவது இயக்கினால் நடிக்கலாம் என்று நினைக்கிறாராம்.

பவித்திரன் பல வருடங்கள் கழித்து மாட்டுத்தாவணி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் வந்த சுவடே தெரியவில்லை. இடையில் சில படங்களை அவர் அறிவித்திருந்தாலும் அவை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதலைமுறையின் ‘விடை தேடும் விவாதங்கள்’

Talk Show Vidai Thedum Vivathanga

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் நடைபெறும் அவலங்களையும், அதற்கான தீர்வுகளையும் அலசுகின்றனர்.

விவாத நிகழ்ச்சிகள் என்றாலே அதில் பங்கேற்பவர்கள் பேசுவதை விட நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அதிகம் பேசுவார்கள். சன் டிவியின் அரட்டை அரங்கம் தொடங்கி, விஜய் டிவியின் நீயா நானா வரை இதற்கு விதி விலக்கில்லை. இவற்றிர்கிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சி சற்றே வித்தியாசமானதாக, சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்களிடையே பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது.

புதிய தலைமுறையில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிமுதல் 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் இந்த விவாத நிகழ்ச்சிக்கு தற்போது ரசிகர்களின் எண்ணிக்கை கூடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் கபிலன் வைரமுத்துவின் பேச்சு பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வரும் ஞாயிறுக்கிழமை விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சியில் வாரிசு அரசியல் பற்றி விவாதிக்க இருக்கின்றனர்.

இந்தியாவில் நேரு காலம் தொட்டு தற்போதையை காலம் வரை வாரிசு அரசியல் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி சூடாகாவும், சுவையாகவும் விவாதிக்கின்றனர் இளைய தலைமுறையினர். ஞாயிறு இரவு நேரம் இருப்பவர்கள் பார்த்து ரசியுங்களேன்.

பள்ளியின் அலட்சியத்துக்கு மகன் பலியாகிவிட்டானே.. - சினிமா இயக்குநர் கண்ணீர்

Carelessness The School Killed My Child

சென்னை: பள்ளியின் அலட்சியப் போக்கால் என் மகன் அநியாயமாக இறந்துவிட்டான், என்று திரைப்பட இயக்குநர் மனோகர் கண்ணீர் விட்டு கதறினார்.

கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சன், பிரபல இயக்குநர் மனோகரின் மகன் ஆவார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் படங்களை இயக்கியவர் மனோகர். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். அந்த வகையில் பெரிய சிபாரிசிக்கிடையில் தன் மகனை இந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் மனோகர்.

நீச்சல் பயிற்சியும் இங்கேயே தரப்படுவதால் மகனை அதில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

காலையில் பள்ளியில் மகனை விட்டுவிட்டு வந்த அடுத்த சில மணி நேரங்களில் அவன் நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளனர். பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தபோது, ரஞ்சன் மூச்சுப்பேச்சின்றி கிடந்திருக்கிறான். உடனே பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் காட்டியுள்ளனர். சிறுவன் ரொம்ப நேரத்துக்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அலட்சியம்...

"குழந்தையை பயிற்சிக்கு கூட்டிச் சென்றவர்கள், அவன் மூழ்கிவிட்டது கூட தெரியாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அந்த அலட்சியம் என் மகனின் உயிரைப் பறித்துவிட்டது. இவர்களின் அலட்சியத்துக்கு என் மகனைப் பறிகொடுத்து நிற்கிறேன்..." என்று கதறினார் ரஞ்சனின் தந்தை மனோகர்.

பள்ளி நீச்சல் குளத்தில் ரஞ்சன் உள்ளிட்ட 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராஜசேகர் என்ற ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே பயிற்சி அளித்துள்ளார். 15 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர், 2 கண்காணிப்பாளர்கள் உதவியுடன் பயிற்சியளிக்க வேண்டிய இடத்தில் ஒரே ஓரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார். போதிய அளவில் பயற்சியாளர்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என புகார் கூறும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரிய இடத்தில் செல்வாக்குள்ளவர்கள் இந்தப் பள்ளியை நடத்துபவர்களாக இருப்பதால், விசாரணை எப்படி நடக்கும் என்பதில் அவநம்பிக்கை தெரிவித்தனர் மனோகருக்கு ஆதரவாக வந்த மற்ற பெற்றோர்கள். அதற்கேற்ப இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யக்கூட இல்லை.

இந்த அவநம்பிக்கையைப் போக்குவது மாநகர போலீசின் கடமை...

றுகுணு சிங்க ளவர்கள், சப்ரகமுவ சிங்களவர்கள் ௭ன்றும் அழைக்கும்போது ஏன் ஈழத் தமிழர்கள் ௭ன்று அழைக்கக் கூடாது


டெசோ’ மாநாட்டில் நிறை வே ற் றப் பட்ட பிரேரணைகள் அனைத் தும் நல்லிண க்க ஆணைக்குழுவில் பரிந் து ரைக்கப்பட்ட பிரேரணை களை விட அதிகாரங்கள் குறைந் தவை ௭ன்று தெரிவித்திருக்கிறார் டெசோ மா நாட்டில் கலந்து கொண்ட நவ சம சமா ஜக் கட்சி யின் தலைவர் விக்ரமபாகு கரு ணா ரத்ன.


நவ சமசமாஜக் கட்சியின் பிரதான அலு வலத்தில் நேற்று நடைபெற்ற ஊடக விய லாளர் மாநாட்டின்போதே அக்கட்சியின் தலை வர் விக்ரமபாகு கருணாரத்ன மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில் தெரிவித்திரு ந்ததா வது,

டெசோ மாநாட்டு கூட்டத்திற்கு முன்பு ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் 13 வது திருத்தச் சட்டம் பற்றிய விவாவதம் ௭ழுப்பப்பட்டபோதே நான் ௭னது கருத்தைத் தெரிவித்தேன். அதாவது 13வது திருத்தச் சட் டத்திற்கு அப்பால் அதிகாரங்களை வழ ங் கியாகவேண்டும். இல்லையெனில் இப் பிர ச்சினைக்கு முடிவுகட்ட முடியாமல் போய் விடும்.

யுத்தத்தின் போது பெரும் அழி வுகள் ஏற்பட்டதை அனைவரும் ஏற்று க்கொள்கிறார்கள். ஆனாலும் இது இந்தியா நட த்திய யுத்தம் ௭ன்பதை நீங்கள் ஏற்று க்கொண்டுதான் ஆக வேண்டும் ௭ன்றும் தெரி வித்தேன்.

ஈழம் ௭ன்ற சொல்லை அல்லது ஈழத் தமி ழர் ௭ன்ற சொல்லை பாவிக்க முடியுமா ௭ன் பதில் பல சிக்கல்கள் இருந்தன. இன் றும் இருக்கின்றன. ௭னது கருத்துப்படி ஈழம் ௭ன்ற சொல்லையோ அல்லது ஈழத் தமிழர் ௭ன்ற சொல்லை பாவிப்பதில் ௭வ்விதத் தவ றும் கிடையாது.

கொழும்புத் தமிழர், மலை கத் தமிழர் ௭ன்றும் றுகுணு சிங்க ளவர்கள், சப்ரகமுவ சிங்களவர்கள் ௭ன்றும் அழைக்கும்போது ஏன் ஈழத் தமிழர்கள் ௭ன்று அழைக்கக் கூடாது.

இந்த டெசோ மாநாட்டில் நான் உரையா ற் றும்போது ௭ன் பேச்சை நிறுத்தச் சொன் னார்கள் ௭ன்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படி ஒன்றும் அங்கு நடைபெறவில்லை.

நான் உரையா ற்று வதற்காக ௭னக்கு 10 நிமிட நேரம் கொடுத்திருந்தனர். நான் அவர்களிடம் சொன் னேன், ௭ன் நேரம் முடிந்தபின் ௭னக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள் நான் ௭ன் உரையை நிறைவுசெய்கிறேன் ௭ன்று. நான் சொன்னதற்கிணங்கவே ௭ன் அரு கில் வந்த அதிகாரி நேரம் சரி ௭ன்று தெரிவித்தார்.

இதில் ௭ந்தத் தவறும் இல் லையே. இதை ஏன் ஊடகங்கள் தவறாக பிரதிபலிக்கின்றன ௭ன்று ௭னக்குப் புரிய வில்லை ௭ன்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் யுத்தத்தைத் தான் நான் செய்துகொண்டிருக்கிறேன் ௭ன்று மஹிந்த ராஜபக்ச ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அது உண்மையும்கூட. இந்தியாவின் அனுச ரணையிலும் ஆசிர்வாதத்திலும் தான் இன் றைய மஹிந்த அரசு நடந்து கொண்டி ருக்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்கோ ௭திர்கால சந்ததியினரின் வழிகாட்டலுக்கோ ௭வ்வித நடவடிக்கையும் ௭டுக்காமல் தங்களுடைய சுயலாபங்களை மட்டும் நிறைவேற்றி க்கொள் வதற்காக நாட்டையே தாரைவார்த் துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான தேசத்துரோகிகளை ஆட்சி யி லி ருந்து இறக்கி நேர்மையான ஒரு அரசா ங் கத்தை உருவாக்குவதற்காக நாம் ௭ம்மால் முடிந்தவரை போராட்டங்களை நடத்தியே தீருவோம் ௭ன்று விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

வீணா... என்னா அழகு, என்னா அழகு... புகழ்ந்து தள்ளிய லாலு பிரசாத் யாதவ், பாஸ்வான்!

Veena Malik Launches Sahara S New News Channel

சகாரா தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய செய்திச்சேனல் தொடக்க விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை வீணாமாலிக்கை, பிரபல அரசியல் தலைவர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

சகாரா குழுமத்தில் இருந்து புதிதாக செய்திச் சேனல் ஒன்று உதயமாகி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இந்தி செய்திகளை ஒளிபரப்பும் இந்த சேனலை தொடக்கி வைக்க பிரபல பாலிவுட் நடிகை வீணா மாலிக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய். இந்த விழாவில் பங்கேற்ற வீணா மாலிக், தனக்கு இது மிகச்சிறந்த தருணம் என்றார். சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் தன்னை சிறப்பு விருந்தினாராக அழைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

புதிய செய்தி சேனல் தொடக்க விழாவில் பாலிவுட் திரைப்படப் பாடகர் அனுமாலிக், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர்.

வீணாவைப் பற்றி விழாவில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவ் புகழ்ந்து பாராட்டினார். வீணா சிறந்த நடிகை மட்டுமல்ல கவித்துவமான அழகும் கொண்டவர் என்று பாராட்டினார் லாலு. இதை விட ஒரு படி மேலே சென்ற ராம் விலாஸ் பஸ்வான் இந்த தருணத்தில் வீணாவின் வருகை சிறப்பு வாய்ந்ததாகவும், நிகழ்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சியையும் அளித்துள்ளது என்றார்.

இளைஞர்களை சந்திப்பேன்... என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன்! - இசைஞானி இளையராஜா

I Will Meet The Young Generation Says Ilayaraaja

சென்னை: இளம் தலைமுறையை சந்திப்பேன்... என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், என்றார் இசைஞானி இளையராஜா.

தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்பெஷல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசைதான்.

இதுவரை இந்தப் படத்தின் இசைக்கான மூன்று முன்னோட்ட வீடியோக்கள் வந்துவிட்டன. மூன்றும் ரசிகர்களைப் பரவசப்பட வைத்துள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை உருவாக்கம் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெயா டிவியில் இளையராஜாவும் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துரையாடினர்.

அப்போது ஒரு பரம ரசிகனாக மாறி கவுதம் மேனன் கேள்விகளை எழுப்ப, இசைஞானி தனக்கே உரிய பாணியில் பதில்களைச் சொன்னார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது இந்த உரையாடல். இளையராஜாவும் ஆங்கிலத்திலேயே பேசினார்.

அப்போது, 'உங்களிடம் பேச வேண்டும், உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லக் கேட்க வேண்டும் என இன்றைய தலைமுறை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் நீங்கள் அதற்குத் தயாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சந்திப்பீர்களா..?'

"நிச்சயமாக கவுதம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களைச் சொல்ல, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். நிச்சயம் அவர்களை நான் சந்திப்பேன்," என்றார்.

உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் ஆசை என்றாலும், ஒரு அச்சம் காரணமாக வரத் தயக்கமாக இருக்கிறது, என்று கவுதம் மேனன் கூறியபோது, "என்னைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்... அதற்கு அவசியமில்லையே.." என்றார் இளையராஜா.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்று கேட்டபோது, "படத்தின் ஆல்பத்தில் உள்ள 8 பாடல்களுமே எனக்குப் பிடித்தவைதான். மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... இப்போதும் மாற்றித் தருகிறேன், என்றார் ராஜா.

உடனே கவுதம் மேனன், ஆத்மார்த்தமாக சொல்கிறேன்... எனக்கு அனைத்துப் பாடல்களுமே மிகத் திருப்தியாக இருந்தன, என்றார்.

இந்த நேர்காணலின் முடிவில் கவுதம் மேனன் ராஜாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்:

"சார்... நீங்க எனக்கு ஒரு பாட்டு எழுதினீங்க... என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு தூரம் எங்கும் போக மாட்டேன் என்று. நானும் அதையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன், உங்களைவிட்டு நானும் போகமாட்டேன்' என்ற போது ராஜாவின் முகத்தில் அந்த அக்மார்க் சிரிப்பு.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக, சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது... பாடலைப் பாடி பியானோ இசைத்தார் இசைஞானி!!

ரொம்ப கஷ்டப்பட்டேன்: ‘முகமூடி’ அனுபவம் பற்றி ஜீவா

Vijay Tv Special Show Mugamoodi Nammil Oruvan

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நம்மில் ஒருவன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இதில் முகமுடி படத்தின் இயக்குநர் மிஷ்கின், ஜீவா, நரேன் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சூப்பர் ஹீரோவாக மாறுவது சாதாரண விசயமில்லை. முகமூடி படத்தில் ஜீவாவின் உடைகள், மேக் அப் அதை உணர்த்தியது.

சினிமாவிற்காக நடிப்பது என்பது வேறு, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது வேறு. சில கதாநாயகர்கள் தான் கதாபாத்திரத்திற்காக தங்களை வருத்திக்கொள்வார்கள். கமல், விக்ரமிற்கு அடுத்தபடியாக இன்றைய இளம் தலைமுறை நாயகர்களில் அஜீத், ஷ்யாம், ஜீவா, ஜெயம்ரவி, ஆர்யா போன்ற கதாநாயகர்கள் தங்களின் கதாபாத்திரத்திற்காக பெருமளவில் தங்களை வருத்திக்கொண்டு நடிக்கின்றனர்.

விஜய் டிவியின் சுதந்திர தின நிகழ்ச்சியில் முகமூடி படத்தின் அனுபவங்களை சூப்பர் ஹீரோ ஜீவா, சூப்பர் வில்லன் நரேன், படத்தின் இயக்குநர் மிஷ்கின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

குங்பு பழகும் சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக உருவாகிறான் என்பதுதான் முகமூடி படத்தின் கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ஜீவா முகமூடி படத்திற்காக பல சிரமங்களை அனுபவித்ததாக மிஷ்கின் தெரிவித்தார்.இதற்காக ஜீவா அணிந்த உடைகளையும், அவர் போட்டுக்கொண்ட மேக் அப் போன்றவைகளை ஒளிபரப்பினார்கள். மிஷ்கின் சொன்னதை விட சிரமமாகவே இருந்தது.

கதையை கேட்காமலேயே முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டதாக டிராகன் ரோலில் நடித்த நரேன் தெரிவித்தார்.

ஜீவாவின் அமைதி குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா, கேள்வி எழுப்பினார். சூப்பர் மேன் உடைகளை போட்டுக்கொண்டு பேசக்கூட முடியாமல் தவித்ததாக ஜீவா வருத்தப்பட்டு தெரிவித்தார். அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், நகைச்சுவையோடு பேசும் தன்னை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் இந்த அளவிற்கு மாற்றிவிட்டதாகவும் கூறினார் ஜீவா.

இது குழந்தைகளுக்கான நகைச்சுவை கலந்த திரைப்படம் என்று மூவருமே கூறினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் சூப்பர் ஹீரோ திரைப்படம் முகமூடி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நிகழ்ச்சியின் இடையே சிறுவர்களின் கராத்தே நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறுவர்களின் சாகசங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இதற்காக விஜய் டிவிக்கு ஸ்பெசல் பாரட்டுக்களை தெரிவிக்கலாம்.

55,000 குழந்தைகள் மாயம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


சுமார் 55,000 குழந்தைகள் காணாமல் போனது குறித்து பதில் அளிக்குமாகு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 55,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை எந்த விவரமும் இல்லை.

காணாமல் போகும் குழந்தைகள் பற்றி வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த காவல்நிலையங்கள் தவறிவிட்டன என்றும், கடத்திச் செல்லப்படும் குழந்தைகளின் உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு அவை பிச்சை எடுக்கும் கொடுமைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது கடத்தல், விபச்சாரம், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம் என்று பொது நலன் மனுவை தாக்கல் செய்த சர்வ மித்ரா தனது மனுவில் கூறியுள்ளார்.

காணாமல் போன குழந்தைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அப்தாப் அலாம் மத்திய, மாநில அரசுகள் இதன் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Scv Attempts Block Puthiya Talaimurai Channel

சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சென்னையின் ஒரு பகுதியில் எஸ்.சி.வியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேவை தெரியவில்லை என்று நேயர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்சிவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டும் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எஸ்.ஆர்.எம் குழுமத்தினரால் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனல் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது. புதிய தலைமுறை டிவியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கை இனப் படுகொலை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் இந்த தொலைக்காட்சியினை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பு தொடங்கிய உடன் சன் நியூஸ் செய்தியின் டிஆர்பி குறையத் தொடங்கியது. இதனால் இரு சேனல்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தினர். எந்த நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல் எங்களுடைய கடமையை தொடர்ந்து செய்வோம் கூறியுள்ளனர். உண்மைக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மணிரத்னம் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட்!!

Mani Rathnam S Kadal Rs 50 Cr Budget

சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில்.

இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதால், நினைத்ததை எடுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது," என்றார்.

முற்றிலும் புதுமுகங்கள், ஓபனிங் வேறு இருக்காது...ரூ 50 கோடி என்பது அதிகமாகப் படவில்லையா என்றால், "புதுமுகங்களைப் பார்க்காதீர்கள்... இது மணிரத்னம் படம். அது போதாதா?" என்றார்.

ரூ100 கோடி பட்ஜெட்டில் எடுத்ததாக விளம்பரப்படுத்தப்பட்ட ராவணனுக்கு நேர்ந்த கதி வராமல் இருந்தால் சரி!

பிரபு தேவா... அடுத்த காதலில் மும்முரம்?

Prabhu Dheva Has New Ladylove

சென்னை: பொதுவாக நடிகைகளைப் பற்றித்தான் விடாமல் வதந்திகள் துரத்தும். ஆனால் பிரபு தேவா விஷயத்தில் இது தலைகீழ்.

நயன்தாராவுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு பெண்ணைப் பற்றித்தான் இப்போது வதந்திகள் வட்டமடிக்கின்றன. இவர் ஒரு நடிகையா என்றால், இருக்கலாம், என்கிறார்கள்.

பிரபுதேவா மும்பையில் குடியேறிய பிறகு அந்தப் பெண்ணுடன் நெருக்கமான உறவை மெயின்டெய்ன் பண்ணுவதாக மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

நயன்தாராவைப் பிரிந்த பிறகு, தன் மகன்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கூறியிருந்தார் பிரபுதேவா. சமீபத்தில்கூட மகன்களுடன் வெளிநாடு போய் வந்தார். மகன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.

இந்த நிலையில் இப்போது பிரபுதேவாவைப் பின்னிப் பிணைந்திருக்கும் அந்த புதிய காதலி குறித்த பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோது, அவர் பதிலேதும் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த உறவு இப்போது புதிதாக வந்ததில்லை என்றும், இதுகுறித்து ஏற்கெனவே நயன்தாராவுக்கும் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.

விஷயத்தை நயன்தாரா மூலம் கன்பர்ம் செய்ய சிலர் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாக தகவல் கிடைத்ததாம்!

என்ன செஞ்சா பிரபுதேவா டென்ஷனாவாரு... ரூம் போட்டு யோசிக்கிறாராம் நயனதாரா!

Nayanthara Her War Against Prabudev

சென்னை: விட்ட குறை தொட்ட குறையாக, பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட பிரபுதேவாவை அவ்வப்போது டென்ஷனாக்கியபடியே இருக்கிறாராம் நயனதாராம். மேலும் எதைச் செய்தால் பிரபுதேவாவுக்கு டென்ஷன் ஜாஸ்தியாகும் என்றும் ஆர் அன் டி செய்து அட்டாக் செய்தபடி இருக்கிறாராம்.

பிரபுதேவா, நயனதாரா ஏன் பிரிந்தார்கள் என்ற உண்மையான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். பூடகமாகக் கூட அதுகுறித்து இருவரும் பேசவில்லை, பேசவும் விரும்பவில்லை. இப்போது பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட அவரை மறைமுகமாக டீஸ் செய்தபடி இருக்கிறாராம் நயனதாரா - விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

பிரபுதோவுக்கு ஆர்யாவைப் பிடிக்காது போல. ஆர்யாவுடன் இணைந்து நடிக்காதே என்று முன்பே நயனதாராவிடம் கண்டிஷன் போட்டுநெருக்கி வந்தாராம் பிரபுதேவா. இதை மனதில் வைத்துக் கொண்டிருந்த நயனதாரா இப்போது ஆர்யாவுடன் நல்ல நெருக்கமும், நட்பும் பாராட்டி வருகிறாராம்.

அதேபோல தனது பரம எதிரியாக கருதி வந்த தனது முன்னாள் காதலர் சிம்புவையும் சமீபத்தி் தனியாக சந்தித்து தனிமையில் ஆற அமர பேசி விட்டுத் திரும்பினார். இதுவும் கூட பிரபுதேவை சீண்டிப் பார்க்கும் வேலை என்கிறார்கள்.

இப்படி அடுத்தடுத்து பிரபுதேவாவை டென்ஷனாக்கும் வகையில் நடந்து கொண்டு வருகிறாராம் நயனாரா. ஏன் இப்படி à®'ரு கெட்ட பழக்கம் என்று விசாரித்தால், எல்லாம் à®'ரு சுய சந்தோஷத்திற்காகத்தான் என்று கூறுகிறார்கள்.

முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்


16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “அபித” கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன.

எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணியினால் சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Wednesday 15 August 2012

'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் ஆக.19ல் வெளியீடு

Reel Protest Against Death Penalty

சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.

இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.

ராஜபக்ஷேவைவிட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன்

வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன் னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. நிலத்தை ஆக்கிரமித்தார், ஆளைக் கட்டிவைத்து அடித்தார், கோஷ்டிச் சண்டையை வளர்க்கிறார் என்று நிறையவே குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர். இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்கவும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமியின் பவள விழாக் கொண்டாட்டமும் இணைந்த தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது. முதலில் பேசிய பொறுப்பாளர்கள் அனைவரும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற ஈழ ஆதரவுத் தலைவர்களை வறுத்து எடுத்தனர். அடுத்துப் பேசிய மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சு, கூட்டத்தினரைத் திகில் அடையவைத்தது.



''உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படு கிறது. இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயதுகூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்தியபோது அதனைத் தடுத்தவர் கலைஞர். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.க-வினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.

தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம் மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார். மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.க-காரன் செய்ததாகச் சொல்ல முடியுமா? பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே? வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்ஷேவைவிட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ஷே, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்று முடித்தார்.

இறுதியாகப் பேசிய ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைமை பேச்சாளருமான ராஜன், ''85-ல் மதுரையில் டெசோ மாநாடு நடந்தது. ஆனால் அதில் பிரபாகரன் கலந்து கொள்ளவில்லை. திலகர் என்பவரை அனுப்பினார். 'அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்’ என்று தலைவர் கோரிக்கைவைத்தார். ஆனால், மாநாடு முடிந்த சில நாட்களிலேயே மற்ற போராளி இயக்கத்தினரைக் கொன்றுவிட்டார் பிரபாகரன். கொத்துப் புரோட்டாவைப் போல ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள். அதைக் கலைஞர்தான் செய்தார் என்று எத்தனை தி.மு.க-காரன் வெட்டப்பட்டான். இனத்துக்காக பழியை ஏற்றுக்கொண்டோம். இப்போது மிச்சம் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற கலைஞர்தான் இருக்கிறார்'' என்றார்.

''நீங்கள் பேசியதில் உறுதியாக இருக்கிறீர் களா?'' என்று கூட்டம் முடிந்த பிறகு என்.கே.கே.பி. ராஜாவிடம் கேட்டோம். ''நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் எங்கள் தலைவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்கள். அதற்குப் பதிலடி தரவேண்டியது எங்கள் கடமை. கலைஞர் பணம் தந்தபோது வேண்டாம் என்று மறுத்தவர் பிரபாகரன். மற்ற தலைவர்களையும் அங்கு வாழவிடவில்லை அவர். அதனால்தான் இத்தகைய பேரழிவு நடந்தது. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.

ராஜாவின் பேச்சு குறித்து ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். '' ஈரோடு ராஜாவுக்கு கொள்ளை அடிக்கத் தெரியுமே தவிர கடந்த கால வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. ஏதோ ஸ்டாலின் தயவால் அமைச்சராகி அதனையும் தக்கவைத்துக்கொள்ளத் தெரியாமல் இழந்துவிட்ட தற்குறி. அறிவார்ந்தவர்கள் இருந்த தி.மு.க., இவரைப் போன்றவர்களைத் தூண்டிவிட்டு கணக்குத் தீர்க்கப்பார்க்கிறது. ஓர் அப்பாவியைக் கட்டிவைத்து அடித்த கோழைக்கு, ஏழு நாட்டு ராணுவத்தை எதிர்கொண்ட பிரபாகரனைப் பற்றிப் பேசத் தகுதி கிடையாது. லோக்கல் ஏட்டையாவுக்குப் பயந்துபோய் வெளிமாநிலங்களில் தலைமறைவான மகா கோழைதானே இந்த ராஜா? தான் சொல்ல முடியாததை ராஜா போன்ற கூஜாக்களின் மூலமாக கருணாநிதி சொல்கிறாரோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ராஜாவின் பேச்சை கருணாநிதி ஆதரிக்கிறாரா இல்லையா என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார் சம்பத்.

சூட்டைக் கிளப்பி இருக்கிறது ராஜா பேச்சு. கருணாநிதி என்ன சொல்லப்போகிறார்?





சிறிலங்காவின் கபட நாடகம் - இந்தியா கடும் அதிருப்தி

இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட முக்கிய காணிச் சொத்தொன்றை சீன நிறுவனத்திற்கு சிறிலங்கா வழங்க உடன்பட்டமை தொடர்பில் இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவின் கொழும்பு தூதரகம் மற்றும் புதுடெல்லியில் இருந்து எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சக வட்டார தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் சிறிலங்கா வெளியுறவு அமைச்சு வட்டாரம் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவலையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பாத நிலையில், இத்தகவலைத் தெரிவித்தவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

காலி வீதி மற்றும் Duplication வீதி சந்திக்கும் இடத்தில் காணப்படும் 287 பேர்ஜ் நிலமானது முன்னர் Shaw Wallace and Hedgesஎன்ற நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலமானது தற்போது சீன விமான உற்பத்தி நிறுவனமான CATIC அல்லது சீன தேசிய விமான தொழினுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையாளுவதற்காக சீன நிறுவனம் எவ்வளவு தொகையை செலுத்தியது என்பது தொடர்பாக இன்னமும் தெரியவரவில்லை. ஆனால் இந்நிலமானது ஏற்கனவே இந்திய நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புபட்ட அனைத்து உத்தியோகபூர்வ செயற்பாடுகளும் நிறைவுபெற்றுவிட்டதாக வெளியுறவு அமைச்சு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய உயர் ஆணையகமானது சிறிலங்கா வெளியுறவு அமைச்சுடன் இச்சொத்து கொள்வனவு தொடர்பாக உடன்பாடொன்றை எட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதே.

இச்சொத்தை கொள்வனவு செய்வதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையிலும், இதனை இந்தியாவுடன் மேலும் முன்னகர்த்திச் செல்வதில் ஒன்றரை மாதங்கள் இழுபறி நிலை காணப்பட்டதாலும், ஏற்கனவே இதனை சீன நிறுவனத்திற்கு ஒதுக்குவதற்கு உடன்பட்டமை தொடர்பிலும் இந்தியா தனது ஆழ்ந்த அதிருப்தி அடைந்துள்ளது. ஒரு பேர்ஜ் நிலத்திற்கு ஏழு மில்லியன் ரூபா வீதம் 2009 மில்லியன் ரூபாக்களை வழங்குவதாக இந்தியா ஏற்கனவே உடன்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நட்சத்திர உல்லாச விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் Shangri La அமைந்துள்ள இடத்துடன் இணைந்து காலி முகத்திடலில் காணப்படும் ஏழு ஏக்கர் நிலத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதி CATIC என்கின்ற சீன நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதன் முதலில் வழங்கப்பட்டது. எனினும், இந்நிலத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் உடன்பட்டது. ஆனால் இச்சீன நிறுவனமானது பிறிதொரு நிலத்தை வாங்குவதென தீர்மானித்தது.

"CATIC சீனாவின் மிகப் பெரிய நிறுவனமாகும். இதற்குச் சொந்தமாக 11 விடுதிகளும், 56 உயர் பல்தொகுதி அங்காடிகளும் காணப்படுகின்றன. இதற்கான நிதியான சீனாவின் எக்சிம் வங்கியின் ஊடாக கடன் வசதிகளுடன் வழங்கப்படுகின்றது" என CATIC நிறுவனமானது சிறிலங்காவில் நிலத்தைக் கொள்வனவு செய்ய உடன்பட்டபோது சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலக் கொள்வனவு தொடர்பில் வழங்கப்பட்ட முற்பணம் தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை வரைபில் சிறிலங்கா மற்றும் சீன நிறுவனத்திற்கு இடையில் முரண்பாடு தோன்றியிருந்தது. இதற்கான முற்பணமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக CATIC தெரிவித்திருந்தது. ஆனால் சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன 54.4 மில்லியன் டொலர்கள் என நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்நிலமானது முன்னர் அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் இதனை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கத் தூதரகம் விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே.

இந்திய வர்த்தக முயற்சியாளர் குழுவானது இந்திய வர்த்தக, தொழிற்துறை மற்றும் ஆடைத்துறை அமைச்சர் ஆனந்த சர்மாவின் தலைமையில் சிறிலங்காவிற்கு வருகை தந்ததன் பின்னணியிலேயே தற்போது இந்தியாவானது இந்நில விவகாரம் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்

விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு அனுமதி கொடுத்து, பொலிஸ் அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் போராடி,...

...இடம் கிடைக்காவிட்டால் அறிவாலயத்தில் நடத்துவேன் என்று சமாதானம் அடைந்து... கடைசியில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தே முடிந்து விட்டது கருணாநிதி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு.

ஒவ்வொருவராகக் கழன்று கொண்டனர்

உலகம் முழுக்க இருந்து இந்த மாநாட்டுக்கு வருகிறார்கள் என்று முதலில் அறிவித்தார் கருணாநிதி. அகில இந்தியத் தலைவர்கள் வருவதாகவும் சொன்னார். ஈழத்து தமிழ் எம்.பி-க்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்றார்.

ஆனால் கடைசியில், வந்தவர்கள் வெகு சிலர்தான். மாநாட்டில் பங்கேற்கும் வி.ஐ.பி-களின் பட்டியலை தி.மு.க. முன்னரே அறிவித்து இருந்தது. வருவதாக ஒப்புக்கொண்ட சரத்பவார், பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய நால்வரில், பஸ்வான் மட்டும்தான் வந்தார். சரத்பவாரும் பரூக் அப்துல்லாவும் மத்திய அமைச்சர்கள்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த மாநாடு நடப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, அவர்கள் இருவரையும் காங்கிரஸ் மேலிடம்தான் போகக் கூடாது என்று தடுத்துவிட்டது என்கின்றன டெல்லித் தகவல்கள்.

சமீபகாலமாக டெல்லித் தலைமையுடன் கோபம்கொண்டுள்ள சரத்பவார் கூட இந்த மாநாட்டுக்கு வராதது கருணாநிதியை வருத்தம் அடைய வைத்தது. இது சில நாட்களுக்கு முன்னரே கருணாநிதிக்குத் தெரியவந்ததும், மாநாட்டுக்கு வருபவர்களது பெயர்களை மறைக்க ஆரம்பித்தனர்.

அதேநேரம், மாநாட்டுக்கு வர இருந்த சிலருக்கு விசா தர மத்திய அரசு மறுப்பதாகவும் கருணாநிதிக்குத் தகவல் வந்தது. இதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போதே, மத்திய வெளியுறவுத் துறை அனுப்பிய கடிதம் தி.மு.க. பிரமுகர் ஹசன் முகமது ஜின்னா பெயருக்கு வந்தது. அதில் 'ஈழம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இப்படி ஓர் இடியை கருணாநிதி எதிர்பார்க்கவில்லை.

எரிச்சலைக் கொடுத்த 'ஈழம்’

தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி டெசோ மாநாடு என்று தி.மு.க. ஆரம்பத்தில் சொல்லத் தொடங்கியதுமே, ப.சிதம்பரத்தை அனுப்பி மத்திய அரசு ஆப் பண்ணியது. வேறுவழி இல்லாமல் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

அதற்குப்பிறகும் நெருக்கடிகள் தொடரவே, மத்திய அரசுக்கு நெருக்கடிகளை உண்டாக்கக் கூடாது என்பதற்காக எவ்வளவோ இறங்கிப் போயிருக்கிறோம். அவர்கள் நமக்காக கொஞ்சமும் கருணை காட்ட மாட்டார்களா?’ என்று கோபத்தின் உச்சிக்கே போனாராம் கருணாநிதி.

மாநாட்டுக்கு வர சம்மதித்தவர்களுக்கு விசா தர மாட்டார்களாம். ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதாம். பிறகு எதற்கு நாம் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கொந்தளித்த கருணாநிதி, டி.ஆர்.பாலுவை அழைத்து பிரதமருக்குப் போன் போடச் சொன்னார்.

நமது கூட்டணி அமைந்த 2004 முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நம்பிக்கைக்குரிய கட்சியாக தி.மு.க. இருந்திருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் மீது விழும் விமர்சனங்களைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டு பதில் கொடுத்திருக்கிறோம்.

மம்தா போல இந்த ஆட்சிக்கு நாங்கள் இடையூறு செய்திருக்கிறோமா? இலங்கையில் நடந்த இறுதிப்போரில் காங்கிரஸ் விமர்சனத்துக்கு உள்ளானதைவிட, நாங்கள் உலகத் தமிழர்களிடம் காயப்பட்டதுதான் அதிகம்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். அதில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மாநாட்டில் என்னதான் பேச முடியும்?

தமிழ்நாட்டில் பிரதான கட்சியான நாங்கள் அரசியல் நடத்த வேண்டாமா?'' என்று மன்மோகன் சிங்கிடம் கர்ஜித்தார் கருணாநிதி.

அப்போது பிரதமர், 'உடனடியாக நான் கவனிக்கிறேன்’ என்று மையமாகச் சொன்னாராம். தொடர்ந்து பேச மனம் இல்லாதவராக டி.ஆர். பாலுவிடம் ரிசீவரைக் கொடுத்துள்ளார் கருணாநிதி. அவரும் தன் பங்குக்கு வருத்தங்களைச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் 'ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்’ என்ற அறிவிப்பு மத்திய அரசின் உள்துறையில் இருந்து வெளியானது.

இதே நேரத்தில், மாநாட்டுக்கு சென்னை பொலிஸ் தடை விதித்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது. தி.மு.க. வக்கீல் வில்சனின் அலுவலகத்துக்கு, டெல்லியில் இருந்து அந்தக் கடிதத்தை பக்ஸில் வாங்கி, கோர்ட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் கொடுத்தனர்.

டெல்லியில் இருந்து இப்படி ஓர் கடிதம் கிடைத்தாலும் கருணாநிதி மகிழ்ச்சி அடையவில்லை. 'சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம கெஞ்சிக்கிட்டு இருக்கணுமாய்யா’ என்று விரக்தியில் புலம்பியபடிதான் மாநாட்டுக்கு முந்தைய நாள் வரை இருந்துள்ளார்.

அவர் பெரிதும் எதிர்பார்த்தது இலங்கைத் தமிழ் எம்.பி-க்களை. அவர்கள் அனைவருக்கும் தி.மு.க. வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார். அவர்கள் வருவதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, கருணாநிதியும் செல்போனில் பேசி இருக்கிறார்.

யாருமே தமிழகம் செல்லக் கூடாது என்று இலங்கை அரசாங்கம் சொன்னாலும் அதைமீறி தமிழ் எம்.பி-க்கள் வருவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்த்தார். ஆனால், அவர்கள் வரவில்லை. அதைவிட, 'எங்களால் வர முடியாத சூழ்நிலை இருக்கிறது’ என்று முன்னதாகச் சொல்லவும் இல்லை என்பதுதான் கருணாநிதிக்குக் கூடுதல் வருத்தம்.

உளவுத்துறை சொன்ன ஒரு வரித் தகவல்

எப்படியாவது மாநாட்டை நடத்தி முடித்தால் போதும் என்ற முடிவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கருணாநிதி வந்தார். கோர்ட் அனுமதி கொடுத்தால் வை.எம்.சி.ஏ-வில் நடத்துவது, இல்லை என்றால் அறிவாலயத்தில் நடத்துவது என்று முடிவு செய்திருந்தார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கருத்தரங்கம் தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் நடந்தது. அந்த ஹோட்டலுக்குள்ளும் தமிழக அரசின் உளவுத்துறை பொலிஸும் வீடியோ கிராபரும் நுழைந்ததுதான் ஆச்சர்யம். வெளியே மத்திய அரசின் ஐ.பி. ஆட்கள் நிமிடத்துக்கு நிமிடம் தகவல்களை டெல்லிக்கு அப்டேட் செய்துகொண்டு இருந்தனர்.

இந்த ஆய்வரங்கத்தில்தான் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டன. 'தமிழீழம் கேட்கும் தீர்மானம் இல்லை சார்’ என்று உளவுத் துறையினர் மேலிடத்துக்குத் தகவல் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
மாலையில் நடந்த மாநாட்டுப் பந்தலுக்குள் காக்கிச் சட்டைகள் யாருமே இல்லை.

வெடி வைக்கவா போகிறோம்?

ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைப்பது கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கான மாநாட்டை நடத்துவதே கடினம் என்பது இப்போதுதான் புரிகிறது. இந்த மாநாடு முடிந்த பிறகும், தடை போட முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

நாங்கள் என்ன கண்ணி வெடி வைக்கவா இங்கே கூடியிருக்கிறோம். கண்ணீர்விடவே சேர்ந்திருக்கிறோம். 108 அம்புலன்ஸைக் கொண்டு வந்த, தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றிய கலைஞரா இடைஞ்சல் தருவார்?

போராட்டத்தின் களத்தை மாற்றி இருக்கிறோம். இந்த மாநாடு முடிவு அல்ல. ஈழத் தமிழரின் துயர் துடைக்கும் தொடக்கம் என்று சுப.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

ஈழத் தமிழர்களின் துயர் தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே தெரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்றால் அவர்கள் விடுதலைப்புலிகள் என்றுதான் நினைக்கிறார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால்தான் ஆயுதம் ஏந்தினார்கள் என்பது தமிழகத்தைத் தாண்டி வெளியே தெரியாமலே போய்விட்டது.

இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான் என்று அலற வைத்தார் ராம்விலாஸ் பஸ்வான்.

தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறிப் பேசினார் தொல்.திருமாவளவன். ராஜபக்சவின் இடுப்பு எலும்பை உடைக்கும் வகையில் இந்த மாநாட்டை கருணாநிதி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

ஈழத்துக்காக ஆரம்பத்தில் போராடிய ஒற்றைக் கட்சி தி.மு.க-தான். இப்போது தமிழ் ஈழம் வேண்டாம் என்று கலைஞர் சொல்வது ஓர் உத்தி. இலங்கையில் இருப்பவர்கள் பாதுகாப்பட வேண்டும் என்பதற்காக அதைச் சொன்னார்.

ஈழத் தமிழர் விஷயத்தை உலக நாடுகள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு. கலைஞர் வாள் ஏந்தும் நேரம் வந்து விட்டது'' என்று நரம்பு புடைக்கப் பேசினார். தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைந்தது இவரது பேச்சு.

இறுதியில் கருணாநிதி, ''ஈழத் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். முதலில் அங்கே காயம்பட்டுக் கிடப்பவர்களின் காயத்தை ஆற்றுவதற்கான முதலுதவியைச் செய்ய வேண்டும்.

டெசோ மாநாட்டின் மூலம் அதை செய்யத் தொடங்கியிருக்கிறோம். என் வாழ்நாளில் நிறைவேறாத கனவு... நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு நிச்சயம் போராடுவேன்'' என்று பேசி முடித்தார்.

முள்ளிவாய்க்காலில் சரிந்த தனது இமேஜை தூக்கி நிறுத்த கருணாநிதி முயற்சித்தார்... அது முடிய வில்லை!

10 ஆயிரம் பொய்... 1 லட்சம் பொய்...

அரசியல் கட்சிகள் எப்படி எல்லாம் பொய் சொல்லும் என்பதற்கு உதாரணம் இந்த மாநாடு.

மாநாட்டுக்கு அனுமதி கேட்டு, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன், 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சொல்லி இருந்தார்.

ஆனால், மாநாடு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், 'ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று அவர்களது அதிகாரபூர்வப் பத்திரிகையில் வெளியிடுகிறார்கள்.

ஒவ்வொரு ஊரில் இருந்தும் இத்தனை வேன், இத்தனை பஸ் என்று தீர்மானம் போடுகிறார்கள் என்று கிடுக்கிப்பிடி போட்டார். நாளிதழ்களில் வருவதை எல்லாம் ஆதாரமாகச் சொல்ல முடியாது என்று தி.மு.க. வக்கீல்கள் வாதமாக வைத்தார்கள். இதைப் பார்க்கும்போது நமக்குத்தான் தலை சுத்துகிறது!

கருணாநிதி படம் எரிப்பு

டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் முன், 'தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்’ என்ற இயக்கம் குமுறி உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்த் தேசக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் பொம்மையை திங்கட்கிழமை காலையில் தீயிட்டு எரித்து உள்ளது இந்த அமைப்பு.

அங்கு இந்திய அரசைக் கண்டித்தும், ஈழக் கோரிக்கையை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அங்கு ஏந்தப்பட்ட பதாகைகளில், 'இந்திய அரசைக் கண்டிக்கிறோம். ஈழ ஆதரவு மீண்டும் ரத்தஆறு ஓடுவதற்கான கோரிக்கை’ என்ற வரிகள் எழுதப்பட்டு இருந்தன.

இலங்கை தலைவர்கள் ஏன் வரவில்லை?

இலங்கைத் தமிழ்த் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், யோகேஸ்வரன், சரவண பவன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்வதாக கருணாநிதி அறிவித்து இருந்தார்.

இவர்களில் யாருமே வரவில்லை. இலங்கை நவ சமாசமாஜ கட்சித் தலைவர் விக்கிரமபாகு கர்ணரத்தின மட்டுமே வந்திருந்தார். இவர் பிறப்பால் சிங்களவர்!

வருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு ஏன் வரவில்லை? என்று அவர்களிடம் கேட்டோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,

2009 இறுதிக் கட்டப் போரின்போது தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் போராட்டம் அழிக்கப்படுவதற்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் துணையாக நின்றவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர் நடத்தும் மாநாடாக இருந்தாலும் அதில் பங்குகொண்டு தமிழ் மக்கள் விடிவுக்கான வழியைக் கொண்டுவரலாம் என முயற்சித்தோம்.

ஆனால், எங்களுக்கு இந்திய அரசு விசா கொடுக்கவே இல்லை. இந்திய அரசைக் காரணம் காட்டியே இலங்கை அரசும் விசாவை நிராகரித்தது. இறுதி நேரத்தில் விசுவலிங்கம் மணிவண்ணுக்கு விசா அளிக்கப்பட்டது. ஆனால், விசா அளித்த நேரத்தில் புறப்படுவதற்குள் மாநாடே முடிந்து விடும் என்பதால் அவரும் வரவில்லை!'' என்றார்.

டெலோ தலைவரான செல்வம் அடைக்கலநாதனிடம் பேசினோம்.

கருணாநிதி எங்கள் மக்களின் பிரச்சினைக்குக் குரல் கொடுத்தவராக இருந்தாலும் - அழிவுக்கும் காரணமாக இருந்து உள்ளார். அவர் நினைத்திருந்தால் மக்கள் சக்தியை உருவாக்கி அழிவைத் தடுத்திருக்கலாம்.

தமிழக தலைவர்களும், மக்களும், புலம்பெயர் மக்களும் ஓர் அணியில் நின்றால் மட்டுமே இலங்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.

தமிழகம் சென்றால் மீண்டும் கொழும்புக்குள் வர விட மாட்டோம்’ என்று மிரட்டப்பட்டதுதான், இவர்கள் வராததற்குக் காரணம் என்பதே பொதுவான கருத்து.

விக்ரமநாயக்க கருணாரட்ன! சிறிய மனிதன் பரந்த இதயம்!: குகதாசன்

உண்மையைக் கண்டறிவது மட்டுமல்ல, அதனை உரைப்பதும் அதனை விளக்குவதும் கூட கடினமானதே. தங்கள் சுயநலத்திற்காக பொய் நிலையைப் பேணுபவர்களை விட ஏற்கனவே நம்பப்பட்ட பொய்யை நம்பிக் கொண்டிருப்பவர்களின் எதிர்ப்பே அதிகமானதாக இருக்கும்.

இந்த இரண்டையும் விட, சரியான புரிதலின்றி உண்மை பொய் ஆகிய இரண்டையுமே தப்புத் தப்பாய் புரிந்து கொள்பவர்களின் தொகை ரொம்ப ரொம்ப அதிகம்.

அன்று தனிச் சிங்களச் சட்டத்தை பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க அவர்கள் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தில் இரண்டு சிங்களப் பெருந்தகைகள் உண்மையை தயங்காது உரைத்தனர்.

இன்னும் 25 ஆண்டுகளில் இந்த தனிச் சிங்களச் சட்டத்தின் விளைவைக் காணலாம் என்ற பொருள் பட ஒருவரும்

(1958 உடன் 25 ஐக் கூட்டினால் 1983 வருவதைக் கவனிக்க) , இரு மொழிகள் என்றால் நாடு ஒன்றாகவும், ஒரே ஒரு மொழி தான் என்றால் நாடு இரண்டாகும் என்று பொருள்பட இன்னொருவரும் பேசியிருந்தனர்.

இருவருமே இடது சாரிகள்: முதலாமவர் டாக்டர் என் எம் பெரேரா மற்றவர் கொல்வின் ஆர் டீ சில்வா.

தென் இலங்கையைப் பொறுத்தவரை, மத பீடங்களை விட இந்த இடது சாரித்துவப் பக்குவமுள்ளவர்கள் தான் அனேகமாக உண்மையை தொடர்ந்து பேசி வருகின்றனர்.

1971 ல் ஆயுதக் கிளரச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் பக்குவமும் தேவையான ஜனநாயக நீரோடைக்கு கட்டி இழுத்து கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மேலே குறிப்பிட்டவர்களின் ஆதரவு இடது சாரி வட்டத்திலேயே இளையோரால் குறை கூறப்பட்டு பழம் பெருந் தலைவர்களின் ஆதரவு குறைக்கப்பட்டு ஜே வி பியினர் தான் தற்போது பலமான இடது சாரிகளாக மேலே நிற்கின்றனர்.

ஜனநாயகம் என்பது வெறும் கொள்கை வழி அல்ல. அது சன்னியாசம் போல ஒரு பக்குவமும் தேவையான ஒரு புனிதமான கோட்பாடு. சீராகவும் உண்மையாகவும் கண்ணியத்துடன் நேர்மையாகவும் சிந்திக்க இயலாதவர்களினால் உண்மையான இடது சாரிகளாக இருக்க இயலாது.

இதனைத் தான் ஜே வி பியின் செயற்பாடுகளிலும் அதிலிருந்து பிரிந்து சென்ற கட்சியிலும் காண்கிறோம்.

ஜனநாயக வழியிலான அவர்களது ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் நீதி, சமத்துவம், ஜனநாயகம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.

ஜனநாயக வழி முறைகளை ஜனநாயகத்திற்கு எதிராகவே பாவிப்பவர்கள் இவர்கள்.

ரணில் - பிரபா சமாதான ஒப்பந்தத்தையும் அதனைத் தொடர்ந்த புலிகளின் இறுதிப் பேச்சு வார்த்தையையும் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றால் திசை திருப்பியவர்கள் இவர்கள்.
நோர்வே அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் நியாயமான நடுநிலையான நிலைப்பாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை அவற்றின் தூதரகங்களின் முன்னால் கொழும்பில் நடாத்தி அவற்றின் தேசியக் கொடிககளையும் எரித்தவர்கள் இவர்கள் தான்.

இவ்வாறே மகா வம்ச இனவாதத்திலிருந்து மீட்சி அடையாத சனநாயகப் பக்குவமற்ற சிங்களவர்களின் கையில் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் தமிழ்த் தேசிய இனத்தவரை சிறுபான்மையினராக்கி சோல்பரி பிரபு 1948 ல் வழங்கியதிலிருந்து இன்னொரு சனநாயகக் கருவியான வாக்கெடுப்பை பாவித்து தமிழர்களின் உரிமைகளை பறிக்க ஆரம்பித்து இன்று உயிர்களையும் அதே சனநாயகச் சிறைக்குள் அடித்தே பறிப்பதற்கும் இந்தப் பக்குவமின்மையே காரணம்.

சனநாயகம் என்பது தேர்தல் வாக்களிப்பு ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளில் ஆரம்பிப்பதல்ல. அது எதற்காக தேர்தல். யாரின் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பு. எந்த நியாயமான அல்லது சரியான முடிவைச் சென்றடைய வாக்கெடுப்பு என்ற சிந்தனையின் வழியிற் தொடரும் செயற்பாடுகளாகும்.

இனக் கலவரங்கள் என்ற பெயரில் இன அழிப்பு நடந்த காலங்களிலெல்லாம் தமிழர்களை வெறியர்களிடமிருந்து காத்த சிங்களவர்களும் இருக்கிறார்கள்.

இதே போல நியாயத்தை தங்களிற்கு துரோகப் பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் எடுத்துக் கூறும் சிங்களவர் ஒரு சிலராவது இல்லாமலும் இல்லை.

உதாரணமாக டாக்டர் பிறையன் செனிவரட்னாவையும் குறிப்பிடலாம். .

அந்த வகையில் இந்தியாவிற்கு டெசோ மாநாட்டிற்கு சென்று உண்மைகள் சிலவற்றை ஒத்துக் கொண்டு பேசி விட்டு கொழும்பில் வந்து இறங்கத் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர் தான் விக்கிரமபாகு கருணாரட்ன.

ஆட்சி அதிகாரமாகட்டும், அரசியலாகட்டும், போராட்டமாகட்டும் இதில் எதுவுமே இனத்திற்கு அல்லது சமூகத்திற்கு குந்தகமாக பாவிக்கப்பட்டால் அதனை மனிதாபிமான அடிப்படையில் மானிடம் சார்ந்து நியாயத்தை எடுத்துக் கூற எல்லோராலும் முடிவதில்லை.

காரணம் அவர்கள் அரசில் அமைச்சராகவோ அன்றில் அரசியலில் கட்சிக்காரராகவோ அல்லது இயக்கத்தில் பிரச்சாரத் துறையினராகவே இருந்தால் இது இயலாது போய் விடும்.

எனவே தான் எந்த ஊடகவியலாளனும் எந்த அரசியலையும் சாராதவனாக. தன் சுய அரசியல் அபிலாசைகளையும் தாண்டி தன் இனஞ் சார்ந்து அதன் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்து அல்லது மானிடம் சார்ந்து செயற்பட வேண்டும் இதையே இந்த விக்ரமபாகு கருணாரட்ன செய்துள்ளார்.

இடம், நேரம், காலம், இனம், மதம், நிறம் போன்ற எதையும் கருதாதவனே ஒரு சிறந்த கலைஞனாக ஊடகவியலாளனாக இடதுசாரியாக அரசியல்வாதியாக இருக்க முடியும்.

இங்கிலாந்தில் பிறந்து இசையால் புகழ் பெற்று அமைதிக்கும் சமாதானத்திற்குமாய் உலகெல்வாம் குரல் எழுப்பி இறுதியில் அமெரிகக்காவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு இசைக் கலைஞன் நடந்து முடிந்த ஒலிம்பிக் மைதானத்தில் நிறைவு நிகழ்வில் நினைவு கூரப்பட்டான்.

இவ்வாறு தேசிய எல்லைகளை மீறி பரந்து பட்டுச் சிந்திப்பதோடு அதனை தயக்கமின்றி எடுத்துரைக்கும் விக்கிரமபாகு போன்றவர்கள் தான் உண்மையான இலங்கையர்கள்.

இவ்வாறான சமத்துவ வாதிகளினால் மட்டுந் தான் இன நல் இணக்கம் பற்றியோ ஐக்கியம் பற்றியோ பேச இயலும்.

தமிழர் தலைமைகளைப் பொறுத்தவரை சேர் பொன் இராமநாதனிலிருந்து இன்றைய தலைமைவரை பிரபாகரன் அடங்கலாக யாருமே தேசியங்களின் ஐக்கியத்திற்கு இடைஞ்சலாக நின்றதில்லை.

இதனை மகிந்த சிந்தனையும் காந்தி தேசமும் சர்வதேசமும் கவனிக்க வேண்டும்.

ஈழத் தமிழருக்கு சம உரிமை வழங்க இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்! ஜெயலலிதா

இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

நம் உறவுகளாகிய, இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களவர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,

ஜெயலலிதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

அடுத்த டெசோ ஆர்ஜென்ரீனாவில்..! தமிழர் பிரச்சினையை உலகறியச் செய்ய தி.மு.க. முடிவு

தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நடத்துவது தொடர்பில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளூரப் பரிசீலித்து வருகின்றது.

தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இவ்வாறான மாநாடுகளை நடத்தினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற கருத்து ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டது.

தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டை சர்வதேசமயப்படுத்துவதன் ஓர் அங்கமாகத்தான் அதனை வெளிநாடுகளிலும் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்றும், "டெசோ' ஏற்பாட்டுக் குழு இதற்கான பூர்வாங்கப் பணிகளை முன்னெடுக்கும் என்றும் அறிய முடிகின்றது.

கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழகத்தில் சென்னையில் தி.மு.கவின் தலைமை யில் "டெசோ' அமைப்பின் மாநாடு நடைபெற்றது. "டெசோ' மாநாடு ஆரம் பிப்பதற்கு முன்னர் அன்று காலை ஆய்வரங்கமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வரங்கில் ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து பன்னாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன. அத்துடன், "டெசோ' அமைப்பின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது "டெசோ' மாநாட்டை ஆர்ஜன்டீனாவிலும் நடத்துமாறு அதில் கலந்துகொண்ட ஆர்ஜன்டீன பிரதிநிதியொருவர் தி.மு.கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் இவ்வாறான மாநாடுகள் நடத்தினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற கருத்தும் ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, "டெசோ' மாநாட்டை சர்வதேசமயப்படுத்துவது குறித்தும், அடுத்த மாநாட்டை ஆர்ஜன்டீனாவில் நடத்துவது குறித்தும் தி.மு.கவின் "டெசோ' ஏற்பாட்டுக் குழு உள்ளூரப் பரிசீலித்து வருகின்றது என அறியமுடிகின்றது.

சில காரணிகளைக் கருத்திற்கொண்டு அடுத்த மாநாட்டை வெளிநாடொன்றில் நடத்தும் நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளது என மேலும் அறியமுடிகின்றது.

அதேவேளை, டெசோ' அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சென்றுவிட்டு நேற்று நாடு திரும்பிய நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன , ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் "டெசோ' மாநாடு வெளிநாடுகளிலும நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஆய்வரங்கின்போது முன்வைத்துள்ளார்.

பிரிவினை நோக்கத்தில் டெசோ மாநாடு!- வெடிக்கிறார் 'ஒலிம்பிக்' போராளி சிவந்தன் கோபி

உலகமே லண்டனில் ஒலிம்பிக் போட்டியை கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய கோரிக்கைக்காக உண்ணாவிரதம் அமர்ந்தார் சிவந்தன் கோபி. தமிழ் ஈழ ஆதரவாளரான இவரது கோரிக்கை, இனப் படுகொலைக்குக் காரணமான இலங்கை, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்பது.

ஜூலை 22-ம் தேதி முதல் உண்ணாவிரதம் உட்கார்ந்த சிவந்தன், ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளின்போது உண்ணாவிரதத்தை முடித்தார். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

சிறிய அளவில் படுகொலைகளைச் செய்துவரும் சிரியா நாட்டின் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கு கொள்ளத் தடை விதித்து விசா தர மறுத்த லண்டன் அரசாங்கம், மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை செய்துவரும் இலங்கையையும் தடை செய்யவேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே?

எமது மக்களுக்கு எதிராக, மானிடத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தக் குற்றங்கள் எல்லாம் ஐக்கிய நாடுகள் சபையால் விசாரிக்கப்பட்டு, எமது மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு பெற்றுத் தர வேண்டும். குற்றம் செய்த இலங்கை அரசு சர்வதேசத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும்.

ராஜபக்சவின் அரசு இப்போது வேறு விதமான இனப் படுகொலையை கையில் எடுத்து உள்ளது. அது, நில அபகரிப்பு. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மை இனம் என்பதை இல்லாமல் செய்வதற்காகத் திட்டம் இட்டு சிங்களக் குடியேற்றங்களை நடத்திவருகிறது.

கிட்டத்தட்ட 20,000 சதுர கிலோ மீட்டர் பரப்புகொண்ட எமது தமிழ் ஈழப் பகுதி, போர் முடிந்த மூன்று ஆண்டுகளில் 7,000 சதுர கிலோ மீட்டர் ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது.

சர்வதேசம் தலையிட்டு இந்த நில அபகரிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதைப் போன்ற கோரிக்கைகளை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவே உண்ணாவிரதம் உட்கார்ந்தேன்!

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றதாகக் கருதுகிறீர்களா?

இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூலம் உலக மக்களின் மனசாட்சிகளைத் தட்டி எழுப்பினோம். லண்டன் மாநகரில் எமது தேசியக்கொடி பறந்தது. எம்மை விசாரிக்க வந்த பொலிஸார், நலம் விசாரிக்க வந்த மனிதநேய ஆர்வலர்கள் அனைவருக்கும் ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளை வீடியோ வடிவில் போட்டுக்காட்டினோம்.

பலர் அந்தக் கோரத்தின் வெம்மை தாங்காமல் கண்ணீர்விட்டு அழுதனர். எமது கடுமையான எதிர்ப்பால் ராஜபக்சவை, ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் செய்தோம். இவை உண்ணாவிரதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.

தாய்த் தமிழக மக்களிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்ன?

தமிழக மக்கள் ஈழத் தமிழர்கள் மீது அளவு கடந்த அன்பும் கருணையும் வைத்துள்ளார்கள். ஒரு சிலரைத் தவிர ஈழத்துக்காகப் போராடும் தலைவர்களின் நோக்கங்கள் வியாபார ரீதியானவை என்பது தெரியும். தயவுசெய்து தலைவர்களில் தங்கி இருக்காது சுயமாக எங்களுக்காகப் போராடுங்கள் நண்பர்களே... உங்களைவிட்டால் நாம் வேறு எங்குதான் போவது..?

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி உங்களுக்குக் கோரிக்கை வைத்தாரே..?

என் உயிர் முக்கியம் என்றால் ஈழத்தில் உயிர் இழந்த எனது தம்பிகளின் உயிர் முக்கியம் இல்லையா? ஈழத்தில் கதறக் கதறக் கற்பழித்துக் கொல்லப்பட்ட எனது அக்கா, தங்கைகளின் உயிர் முக்கியம் இல்லையா? போர் நடந்தபோது அவர் என்ன செய்தார்?

ஜூலை 22-ம் தேதி ஆரம்பித்து ஒலிம்பிக்கின் இறுதி நாளான இந்த மாதம் 12-ம் தேதி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்று முன்னமே அறிவித்திருந்தேன்.

நானே முடிக்க இருந்த நாளில் உண்ணாவிரத்தை முடிக்குமாறு அவர் கேட்கிறார். என் உண்ணாவிரதம் எதற்காக நடக்கிறது என்பதைக்கூட அவர் தெரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்பதுதான் வருத்தம்.

கருணாநிதி நடத்திய டெசோ மாநாடு ஈழ மக்களுக்குப் பயன்தரும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பாயும்புலி பண்டாரக வன்னியன் பற்றி எழுதி எங்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய கருணாநிதி, இந்த மாநாட்டை எப்போது நடத்தியிருக்க வேண்டுமோ... அப்போது நடத்தவில்லையே? அவர் ஆட்சியில் இருந்த நேரத்தில் இதைச் செய்திருக்க வேண்டும்.

எங்கள் மக்களுக்கு இடையே பிரிவினை உருவாக்கும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவே நினைக்கிறோம்! என்றார் சிவந்தன் கோபி.

ஜூனியர் விகடன்

மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

Ar Rahman Act A Malayalam Film

இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மானை மலையாளப் படம் ஒன்றில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மலையாள இயக்குனர் ஷஜூன் கரியால் 5 நண்பர்களை மையமாக வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். இதில் பிஜு மேனன், லால், சுரேஷ் கிருஷ்ணா, சுகுமார் மற்றும் சுனில் பாபு ஆகியோர் 5 நண்பர்களாக நடிக்கின்றனர். படத்தை பிஜு மேனனும் சேர்ந்து தயாரிக்கிறார். படத்தில் பிஜு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ட்ரூப்பில் இருக்கிறார்.

தனது கதாபாத்திரம் தத்ரூபமாக இருக்க அவர் ரஹ்மானை கெஸ்ட் ரோலில் வந்து செல்லுமாறு கேட்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் சில காட்சிகள் சென்னையில் உள்ள ரஹ்மானின் ஸ்டுடியோவில் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், சங்கரின் ஐ மற்றும் தனுஷின் மரியான் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

சிம்புவிடம் வாலாட்ட வரும் ஜெய்


Jai Act Simbu S Vaalu
சிம்புவின் வாலு படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறாராம் ஜெய்.

சிம்பு, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடிக்கும் வாலு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் சிம்வுடன் சேர்ந்து சந்தானம் அடிக்கும் லூட்டியில் திரையரங்கம் குலுங்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே வானம் படத்தில் காமெடி செய்தனர்.

இந்நிலையில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தமும் வாலு படத்தில் நடிக்கிறாராம். அப்போ காமெடி தூள் கிளப்பும் போல. இந்த படத்தில் ஜெய் கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறாராம்.

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக ஜெய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் போடா போடி படத்தின் கிளைமாக்ஸ் பாட்டை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அது முடிந்தவுடன் சிம்பு சென்னை திரும்பி வாலு ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவாராம்.

நடிகர் - நடிகைகள் மேனேஜர் வைத்துக் கொள்ளக்கூடாது - கேரளவில் திடீர் கெடுபிடி

Kerala Cinema Bans Artist Managers

கொச்சி: இனி நடிகர் நடிகைகள் மேனேஜர் என தனியாக ஒருவரை வைத்துக் கொள்ள தடை விதித்துள்ளது மலையாள பட உலகம்.

இந்த மேனேஜர்களுக்கு சம்பளமாக நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் 15 சதவீதம் தரப்படுகிரது. இந்தப் பணத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்தே நடிகர் நடிகைகள் வாங்கிக் கொடுத்தார்கள்.

மேனேஜர்களுக்கு கமிஷன் கொடுக்காதவர்களின் படங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. படப்பிடிப்புக்கு போகாமல் வேண்டுமென்றே தாமதம் செய்தனர்.

சமீபத்தில் பத்மபிரியாவும் இதுபோல் தொந்தரவு கொடுத்தார். ‘நம்பர் 66 மதுரை பஸ்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் பத்மபிரியா, படத்தை முடித்துத் தர வேண்டும் என்றால் தனது மேனேஜருக்கு கொடுக்க கூடுதல் பர்சன்டேஜ் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தாக இயக்குநர் நிஷாந்த் புகார் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பத்மபிரியா மீது புகார் தரப்பட்டது.

இதுகுறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் இனி மேனேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

சம்பள விஷயங்கள் குறித்து இனி நடிகர் - நடிகைகளிடம் நேரிலேயே பேசிக் கொள்ள தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tuesday 14 August 2012

டோறா மூழ்கடிப்பி​ல் காவியமான கடற்கரும்பு​லிகள் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து 15.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து மூழ்கடித்தனர்.

இதன்போது,

1.கடற்கரும்புலி லெப்.கேணல் நீதியப்பன்

(வீரபாகு சிவனேஸ்வரன் – மூதூர், திருகோணமலை)

2.கடற்கரும்புலி மேஜர்அந்தமான் (எழில்வேந்தன்)

(வடிவேல் செந்தில்குமார் – ஆரையம்பதி, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் மேலும் இரு டோறா படகுகள் கடற்புலிகளின் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தன.

இக்கடற்சமரின்போது சிறிலங்கா கடற்படையினர் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தாய் நாட்டின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் எழில்வேந்தன் ஆகியோரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கடற்கரும்பு​லி மேஜர் திசையரசி, லெப்.கேணல் பழனி, மேஜர் தூயவள் ஆகியோரின் நினைவு நாள் இன்று!

முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் திசையரசி, கடற்புலி லெப்.கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

15.08.2000 அன்று முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட படகு விபத்தில்,

1.கடற்கரும்புலி மேஜர் திசையரசி

(செல்லச்சாமி செல்வம் – உடுத்துறை, யாழ்ப்பாணம்)

2.கடற்புலி லெப்.கேணல் பழனி (பழனிராஜ்)

(அங்கமுத்து சிவநாதன் – கண்டி, சிறிலங்கா)

3.கடற்புலி மேஜர் தூயவள்

(சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி – முரசுமோட்டை, கிளிநொச்சி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடுதலைப் பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


இலங்கையில் காயப்பட்டுக் கிடப்போரின் ரணத்தை ஆற்ற முதலுதவி செய்யவேண்டும் - டெசோவில் கருணாநிதி

நடைபெற்று முடிந்த டெசோ மாநாட்டின் கலைஞர் கருணாநிதி அவர்கள் நிறைவுரையாற்றிய போது இலங்கைத் தமிழ்மக்களின் ரணத்தை ஆற்ற அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய கருணாநிதி,

’ஈழத்தமிழர்களின் இனிய விடியலை காண்பதற்காக களத்தில் நின்றும், தியாக வேள்விகள் புரிந்தும், உயிருற்ற கல்லறைகளாக மாறிவிட்ட மாவீரர்களாம் தியாக தங்கங்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்தி இந்த உரையைத் தொடங்குகிறேன்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக இங்கு மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டெசோ தொண்டர்கள், செயலாளர்கள் ஊருக்கு ஊர் சென்று ஆங்காங்கே நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டங்களிலே ஈழத்தமிழர்களின் அவலநிலை, அவர்களுக்கு நாம் தர வேண்டிய பாதுகாப்பு, அவர்களுக்கு நாம் நீட்டவேண்டிய உதவிக்கரம் பற்றி பேசி, அவர்களுக்கு பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று இங்கு பேசிய தலைவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். காலையில் பேசியவர்களும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும், நண்பர்களும் எடுத்துரைத்தார்கள். மாலையில் பேசிய திருமாவளவன், இலங்கை பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று பலமுறை இங்கே எடுத்துரைத்தார்.

நான் அவருக்கு ஒன்றை சொல்வேன். அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகளை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளை பாதுகாத்து வரும் இந்திய அரசு, அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏனென்ற கேள்வி தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது என்பதை இந்த மாநாடு இந்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத்தமிழ் மக்கள் அரசியல் பொருளாரம், பண்பாட்டு உரிமைகளை பெற்றெடுத்து சமத்துவம், அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.

அந்த தீர்மானத்தின் இறுதியாக, இலங்கையில் உள்ள தமிழர்கள், தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்க இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

இதை விட இந்திய அரசுக்கு வேறு என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும்? என்று எனக்குப் புரியவில்லை. இதுதான் சரியான அழுத்தம் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொண்டு இந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், இந்த தீர்மானத்தை வைத்துக் கொண்டே இந்திய அரசுக்கு நம்மால் அழுத்தம் கொடுக்க முடியும். இந்த தீர்மானமே இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம்தான் என்பதை திருமாவளவன் உணர்வார்.

மற்றவர்களும் இதை மிக நன்றாக உணர்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே, இன்றைக்கு நிம்மதியான, இனிமையான வாழ்வு பெற இன்றைக்கு இடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவர்களைப் போல இருக்கின்ற வாழ்க்கையில் இருந்து விடுபட வீரமணி மற்றும் நண்பர்கள் எல்லாம் எடுத்து சொன்னதைப் போல் இந்த மாநாட்டின் வெற்றி, இந்த மாநாட்டில் எவ்வளவு பேர் கூடினார்கள்? மாநாடு எத்தனை நாள் நடைபெற்றது? எவ்வளவு மணி நேரம் நடைபெற்றது? என்பது அல்ல. இந்த மாநாட்டினுடைய வெற்றி, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்து உணர வேண்டும்.

நாம் இந்த தீர்மானத்தின் மூலம் ஒவ்வொருவரும், தமிழ் ஆர்வம் உள்ள அத்தனை பேரும், ஈழத்தமிழர்கள்பால் அன்பு கொண்ட அத்தனை பேரும், இரக்கம் கொண்ட அத்தனை பேரும் அழுத்தம் கொடுத்து இந்த தீர்மானத்திற்கு வலு சேர்ப்பார்களேயானால், நாம் காணுகின்ற கனவு நிச்சயமாக நிறைவேறும்.

இலங்கையில் இருக்கும் அல்லல், உடனடியாக தீரும். ஒரே ஈழநாடு பெற வேண்டும் என்று கேட்டீர்களேயானால், அவர்களுக்கு சொல்லுகின்ற ஒரேயொரு சமாதானம் என்னவென்றால், முதலில் காயம்பட்டுக் கிடப்போரை, ரணத்தை, காயத்தை ஆற்ற அவர்களை உயிர் பிழைக்க முதலுதவி தேவைப்படுவதைப் போல, டெசோ மாநாட்டின் மூலமாக தேவையான முதலுதவிகளை எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நாம் அவற்றை செய்யத் தொடங்கி இருக்கின்றோம்’’என்று பேசினார்.

ஈழத் தமிழர்களின் துயர மேடையில் கருணாநிதியின் வெற்றிப் படைப்பு

கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது தமிழ்ப் பழமொழி. கண்ணுள்ள போது சூரிய நமஸ்காரம் செய்யாமல் விட்டுவிட்டு, கண் தெரியாமல் போன பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதென்ற பொருளை இப் பழமொழி வெளிப்படுத்தி நின்றாலும், அதற்குள் இருக்கக் கூடிய ஆழமான உட்கருத்தை எவரும் புரிந்து கொண்டு செயற்படுவதாக இல்லை.

இதில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் ஒருவர். கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதே வன்னி யுத்தம் இடம்பெற்றது.

அதே நேரம் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய ஆட்சியே மத்தியிலிருந்தது.

தமிழகத்தின் முதல்வர் என்ற தகுதிப்பாடும் தி.மு.க வின் பலத்துடன் கூடிய மத்திய அரசென்ற அதிகாரமும் இருந்த வேளையில் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக செய்யக் கூடியது ஏராளம்.

ஆனால் அந்தக் காலத்தில்தான் வன்னிப் போர் நடந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வரலாற்றில் பதிவாகியது.

இந்தப் பதிவை இல்லாதொழிக்க கலைஞர் எத்தனை மாநாடுகளை கூட்டினாலும் அது சரி வராது என்பது தெரிந்த விடயம்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மெளனமாக இருந்த கருணாநிதி இப்போது. வெறுமையாகி வீட்டுத் துன்பமும் வாட்டுங்கால் ஈழத்தமிழர்களின் நெட்டூரத்தை கையில் எடுத்துக்கொண்டு, உட் பூசலைச் சந்தித்து வரும் தன்கட்சிக்கும் குடும்பத் தகராற்றுக்கும் விமோசனம் தேட முற்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கலைஞர் எதைக் கதைத்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிவிட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் விடயத்தை எடுப்பதே இப்போதைக்கு ஒரேவழி என்று அவர் நினைத்துக் கொண்டார்.

ஆனாலும் அவரின் உண்ணாவிரத நாடகம், கலைஞர் கருணாநிதி கதைவசனத்திற்கும் மட்டுமல்ல, சிறந்த நடிகர் என்பதையும் தமிழ் உலகம் ஐயம் தெளிவுறக் கண்டுகொண்டது.

அரசியல் களத்தில் இன்னொரு சந்தர்ப்பம் இல்லை என்பதை தெளிவாகக் புரிந்துகொண்ட அவர் குறைந்தது தனது மனைவி, துணைவி ஆகியோரின் தொந்தரவில் இருந்தும் அவர்களின் ஊடாக தனக்குப் பிறந்த பிள்ளைகளின் கழுத்தறுப்புப் போட்டியில் இருந்தும் தப்பித்துக்கொள்ள ஈழத்தமிழர்களின் விடயத்தை நல்லதொரு நாடகப் படைப்பாக ஆக்கிக்கொள்வது என்று முடிபெடுத்தார்.

ஈழத்தமிழர்களுக்காக தான் இருந்த உண்ணாவிரதத்தை கைவிட்டதற்கு அவர் கூறிய காரணம் இருக்கிறதே, அது தான் கலைஞரின் மிக மோசமான - மிக அபத்தமான - மிக உச்சமான பொய்யும் நடிப்பும் நாடகமுமாக இருக்க முடியும்.

உண்ணாவிரதம் இருக்கும் போதே எத்தனை மணிக்கு அதனை முடிபுறுத்திக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டவர் கலைஞர்.

தனது உண்ணாவிரதத்தை முடிபுறுத்திக் கொள்வதற்காகவும், தான் உண்ணாவிரதம் மேற் கொண்டதனால் வன்னியுத்தம் நிறுத்தப்பட்டு விட்ட தாகவும் பொய்ப்பிரசாரம் செய்தவர் அவர்.

இத்தகைய ஒருவர் இப்போது, நம்பி உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறுவது ஈழத்தமிழர்களின் துயர மேடையில் கலைஞர் தனக்கொரு வெற்றிப் படைப்பை தயாரித்துள்ளார் என்றே கூற வேண்டும்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா