Saturday 25 June 2011

மூங்கில் இலை நுனியில் தூங்கும் ஒரு பனிநீர்க் குடம் உடையப்போகிறது!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் உயிருடன் இருக்கிறார்கள் என்று சிறீலங்கா அமைச்சர் அஸ்வர் பாராளுமன்றத்தில் பேசி அது ஒரு சுற்று வேகமாகக் கிளம்ப அவர் வாய் தடுமாறி உளறிவிட்டதாக தெரிவிக்க அந்தச் செய்தி 24 மணி நேரத்தில் புஸ்வாணமாகிவிட்டது.

அஸ்வரின் பேச்சில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன:

விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவியும், பிள்ளைகளும் இப்போது உயிருடன் இல்லை என்பதை சிறீலங்கா அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்குப் பதிலாக இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியதா என்ற கோணத்தில் பார்த்தால்..

அவர்கள் உயிருடன் இல்லை என்பதை அரசு நேரடியாக சொல்லாமல் அஸ்வர் மூலம் மறைமுகமாக சொல்லி முடித்திருக்கிறார்கள் என்று கருத இடமிருக்கிறது – இது நாணயத்தின் ஒரு பக்கம்:

இனி நாணயத்தின் மறு பக்கம்:

அஸ்வர் கொடுக்க முனைந்த உதாரணத்திலும் வசன ஒழுங்கிலும் சிந்தனைப் பிழையும், கருத்துப் பிழையும் இருக்கின்றன. ஒஸாமா பின்லேடனின் மனைவி கொல்லப்படுவதை அமெரிக்க அதிபர் பார்த்து ரசித்தார். ஆனால் மகிந்த ராஜபக்ஷவோ பிரபாகரனின் மனைவி பிள்ளைகளை கொல்லாது பாதுகாத்தார் என்பது அஸ்வர் அமைத்துக் கொண்ட பேச்சின் ஒப்புமை.

ஒபாமாவுடன் ஒப்பிட்டால் மகிந்த ராஜபக்ஷ உயர்ந்தவர் என்பதை உறுதி செய்ய இந்த உதாரணத்தை அவர் பயன்படுத்தினார்.

ஆனால்:

பின்னர் கருத்துரைத்த அஸ்வர் தமிழ்செல்வனின் மனைவி என்று கூறுவதற்குப் பதிலாக பிரபாகரனின் மனைவி என்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இங்குதான் அஸ்வரின் தவறு ஆரம்பிக்கிறது.

அஸ்வரின் தவறு:

பாராளுமன்ற பேச்சை மண்டைக்குள் வடிவமைக்கும்போது வடிகட்டிய முட்டாள் கூட பின்லேடனையும், தமிழ்செல்வனையும் ஒன்றாக நோக்கமாட்டான்.

தமிழ்செல்வன் விடுதலைப்புலிகள் தலைவரல்ல அவர் வன்னிப் போருக்கு முன்னரே கொல்லப்பட்டுவிட்டார். அவர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தைச் சேர்ந்தவர். இந்த உதாரணத்திற்குள் அவரை கொண்டு வந்ததாகக் கூறுவதில் பாரிய தவறு இருக்கிறது.

மேலும் தமிழ்ச்செல்வனின் மனைவியை ஜனாதிபதி தனிப்பட கண்காணிப்பதற்கு யாதொரு தேவையும் இல்லை. பொது மக்களோடு பொதுமக்களாக அவரும் கைதானார், அவ்வளவுதான்.

அவரை பின்லேடனின் மனைவியுடன் ஒப்பிட முடியாது. பின்லேடனுக்கு எத்தனையோ மனைவிகள் உண்டு..

இப்படியான பின்னணியில் பார்த்தால் அஸ்வர் வாய்தடுமாறிச் சொல்லியிருப்பார் என்று நம்ப முடியவில்லை.

ஆனால்.. இடையில் ஒரு சிறிய சரடு..

ஐ.நாவின் அறிக்கைக்கு பதிலளிக்க சிறீலங்கா எடுக்கும் எத்தனங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். பின்னர், அழுத்தங்கள் காரணமாக அஸ்வர் மறுத்திருக்கலாம் என்று எண்ணத்தைத் திருப்புகிறது அந்தச் சரடு.

மறுபுறம்:

உண்மையாகவே அஸ்வர் தவறாக உரைத்திருந்தால் உடனடியாக மறுத்திருக்க வேண்டும்.

பாராளுமன்றில் பிழையான தகவல் ஒன்று சொல்லப்படும்போது சபாநாயகரின் கடமை என்ன.. 24 மணி நேரம் காத்திருப்பதா..?

கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை என்றால் சபாநாயகரின் கடமை என்ன..? ஆளும் கட்சியில் இருந்தவர்கள் ஏன் பொம்மைகளாக இருந்தார்கள்…?

அஸ்வரின் பேச்சுக்கள் இவ்வாறான கேள்விகளை புயல்போல கிளப்புகின்றன..

மறுபுறம்:

பிரபாகரன் எங்கே என்ற கேள்விக்கு சரியான பதில் இதுவரை இல்லை..
அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும்கூட எங்கேயென்று தெரியவில்லை..

இந்தக் கேள்விகள் பதிலின்றி நீண்டு சென்றால் சர்வதேச போர்க்குற்ற கயிறு சிறீலங்காவின் கழுத்தில் இறுகிவிடும். இந்த நிலையில் சிறீலங்கா அரசு தப்பிக் கொள்வதற்காக அஸ்வர் என்ற ஏவல் பேயை ஏவிவிட்டுள்ளதா..?

இல்லை

அந்த ஏவல் பேயே பின் வாய் தடுமாறிக் கூரையைப் பிடுங்கியதா..?

இப்படி பல கோணங்களில் இதைப் பிரித்துப்பிரித்துப் பார்க்கலாம்.

2009 மே 17 – 18ம் திகதிகளில் நடந்த விடங்களில் மறைக்கப்பட்ட ஓர் உண்மையைப் போட்டுடைக்கப் போவது யார்..? மகிந்த அரசா இல்லை சனல் 4 தொலைக்காட்சியா..? என்ற கேள்விக்கான பதிலுக்கு வெள்ளோட்டம் போலவே அஸ்வரின் பேச்சு ஒளி காட்டுகிறது.

சனல் 4 தொடரும் என்று ஜி.எல் பீரீஸ் கூறியிருப்பதைப் பார்த்தால் உண்மை உடையும் நாட்கள் தொலைவில் இல்லை என்றும் உணர முடிகிறது.

நிறைவாக:

அஸ்வரின்:

உடல் மொழி..

குரல் மொழி..

அவர் பேசிய வசனத்தில் எழுவாய், பயனிலை செயற்படுபொருள் ஒழுங்குகள் பொருந்திய விதம்..

வசனத்தில் உவமானத்தை பதிவு செய்த விதம்..

இவைகளை வைத்துப் பார்த்தால் அவர் வாய் தடுமாறியதாகக் கூறுவதை நம்பமுடியவில்லை..

அவரின் வசன ஒழுங்கில் தமிழ்ச்செல்வனின் மனைவியை பொருத்திப் பார்க்க முடியாது.

நுணலும் தன் வாயால் கெடும்..!

பிரபாகரனும் அவருடைய குடும்பம் பற்றிய மர்மமும் மூங்கில் இலை நுனியில் தூங்கும் பனிநீர்க் குடம் போல ஆடுகிறது. அது விரைவில் கீழே விழப்போகிறது..

அஸ்வருக்கு ஜே..!

சிந்தனையாளன் - அலைகள் 25.06.2011

ருவாண்டா இனப்படுகொலை குற்றச்சாட்டு முன்னாள் பெண்அமைச்சருக்கு ஆயுள்தண்டனை

ருவாண்டா இனப்படுகொலை தொடர்பாக ஜ.நா. அனுசரணை நீதிமன்றம் அன்னாட்டின் முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தன்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 2001 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை நடைபெற்ற காலத்தில் அன்னாட்டு அமைச்சராக இருந்த போலினின் கண்காணிப்பின் கீழ் சிறுபான்மையின மக்கள் மற்றும் தாராளவாத போக்குடையவர்கள் என எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு பின்னர் தப்பிசென்ற போலின் 1997 ஆம் ஆண்டு கென்யாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ருவாண்டா படுகொலை விவகாரம் தொடர்பாக ஜ.நா அனுசரணை குற்றவியல் நீதிமன்றம் படுகொலைகளுக்காக பெண்ஒருவரை குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்துள்ளமை முதல்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர்.

இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவியுமுள்ளதாக சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து டன்சானியாவில் உள்ள ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் போது மேலும் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..

அவர்கள் முன்னாள் ஆளுநர்களான சில்வெயின் நசாபிமான, அல்போன்ஸ் நடசிராயோ மற்றும் அக்காலப்பகுதியில் நகரப்பிதாக்களாக கடமையாற்றிய ஜோசப் கன்யபாசி, எலியி நட்யாம்பஜே ஆகியோரவர்

பத்து வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட இவ்வழக்கு மேற்படி தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது.

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

லிபியா அதிபர் கடாபி தப்பி ஓட திட்டம்


லிபியா நாட்டை கடந்த 41 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபி பதவி விலகக்கோரி அந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது.


இந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடாபி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக திரிபோலி நகர் மீது குண்டு வீசி வருகிறது.


சமீபத்தில் கடாபியின் மாளிகை மீது நடந்த தாக்குதலில் அவரது இளையமகனும், 2 பேரகுழந்தைகளும் பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடாபி தானும் கொல்லப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் பாதாள அறைகளிலும், பதுங்கு குழிகளிலும் முடக்கி கிடக்கிறார். எனவே அவர் தன் உயிரை காப்பாற்றி கொள்ள திரிபோலியை விட்டு தப்பி ஓட திட்டமிட்டு இருக்கிறார்.


திரிபோலிக்கு வெளியே வேறு இடத்தில் பதுங்க அவர் முடிவு செய்து இருக்கிறார்.

ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்: மதிமுக

மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று (25-06-2011) காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.

அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.

விடுதலைப் புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும்..... தமிழ் மக்கள் ஆட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் அமையும்.

இலங்கை அரசு 2009க்கு பிறகு எங்கள் மண்ணில் விடுதலைப் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் விடுதலைப் புலிகளுக்கு தடை நியாயமா.

எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கான தடை நீங்கும்.... பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.

அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த 23ம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்த திட்டத்தை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள சிரேஸ்ட சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
செனல்4 ஊடகத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஜே.டி.எஸ் என்னும் ஊடக அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்: மதிமுக

மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று (25-06-2011) காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.

அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.

விடுதலைப் புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும்..... தமிழ் மக்கள் ஆட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் அமையும்.

இலங்கை அரசு 2009க்கு பிறகு எங்கள் மண்ணில் விடுதலைப் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் விடுதலைப் புலிகளுக்கு தடை நியாயமா.

எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கான தடை நீங்கும்.... பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.

இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம்: சீமான்

ஐக்கிய நாடுகள் அவையால் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் யூன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்போம். என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆகியோர் தாம் பெருமளவிற்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியூம் சித்ரவதை மானுடத்திற்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை உலகிற்கு உணர்த்தவூம் இந்நாள் ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.

சித்ரவதையென்பது மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பயங்கரத்தின் திட்டமிட்ட வடிவமாகும் சக மனிதனை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான துன்பத்திற்கு ஆளாக்குவதாகும்“.என்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம் கூறுகிறது.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா. அவையால் வெளியிடப்பட்ட சித்ரவதைக்கு எதிரான பிரகடனத்தில் யூன் இலங்கை இந்தியா உள்ளிட்ட 147 நாடுகள் கையெழுத்துட்டுள்ளன. இலங்கை 1994ஆம் ஆண்டு இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டது.

ஆனால் இந்த நாடுதான் சித்ரவதையை ஈழத் தமிழர்களுக்க எதிரான ஒடுக்குமுறையின் முதன்மை ஆயூதமாக இன்று வரை பயன்படுத்தி வருகிறது. உடல், மனரீதியாக பாதிப்பது பட்டினி போடுவது சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்தல் வெள்ளை வேன்களைக் கொண்டு கடத்தல் காணடித்தல் குடும்பத்தினரை பிரித்தல் மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டு கைது செய்வது விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்வது என அந்நாட்டின் பூர்வீக இனத்தையே வதைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது. ராஜபக்ச இனவெறி அரசு. போரின் போதும், போர் முடிந்த பின்னரும் வன்னி முகாம்களில் இத்தகைய வதைகளை இலங்கை அரசு வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறது.

இரண்டரை ஆண்டுக்காலப் போரில் சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான ஆயூதங்களை பயன்படுத்தி ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுக் குவித்தது அந்த இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசாலும் ராணுவத்தாலும் தொடந்து வதைபட்டு வருகின்றனர்.

தொடர் சித்திரவதை, கற்பழிப்புகள், கடத்திக் காணடித்தல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி மன உளைச்சலை அதிகரித்தல் என்று பலவழிகளிலும் ஈழத் தமிழினம் இன்று சிங்கள இனவெறியின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கள அரசின் மனிதாபிமானமற்றப் போக்கிற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மீனவர்களையும் சிங்கள் கடற்படை கால் நூற்றாண்டுக் காலமாக நடுக்கடலில் படுகொலை செய்தும் கண்ணியக் குறைவாக நடத்தியும் வதைத்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்காக இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கை கால்களை வெட்டி கொன்றதை விட வேற என்னா அத்தாட்சி வேண்டும்?

எனவே இலங்கை அரசின் தமிழின வதை போக்கை தோலுறுத்துக் காட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகு வர்த்தி ஏந்தி நிற்போம்.

சிங்கள அரசின் இருண்ட இனவெறிச் சித்திரவதைக் கூடங்களை உலகம் இந்த ஒளியின் வழி காணட்டும். இந்த ஒளி ஈழத் தமிழருக்கு விடுதலையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன பிடி உரிமையையும் பெற்றுத் தரும் பாதையை காட்டட்டும்.

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரசுகு சொந்தமானது: மேனகா

சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதிப் பணம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியினருக்கும் சொந்தமானது என பாஜக எம்பி மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நிருபர்களி்டம் அவர் பேசுகையில், சிபிஐ அமைப்பை காங்கிரஸ் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இந்த அமைப்பை தனது லாக்கரில் காங்கிரஸ் பூட்டி வைத்துள்ளது. தேவைப்படும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ ஏவி விடப்படுகிறது.

பாபா ராம்தேவ் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை கெளரவமானதாகத் தெரியவில்லை. அவர்களிடம் காங்கிரஸ் கட்சி நடந்து கொள்ளும் விதம் மிக அநாகரீகமானது.

சுவிஸ் நாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் தான் பணத்தை அங்கு பதுக்கி வைத்துள்ளனர்.

எனவேதான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் எழும்போதெல்லாம் அதை நசுக்க காங்கிரஸ் முயல்கிறது.

ஆகஸ்டு 16ம் தேதியில் இருந்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பது பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகும் என்றார்.

போர்க்குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கும் 'ஜெயசூரியாவை பிரித்தானியாவை விட்டு விரட்டுவோம்

சர்வதேசத்தின் கவனத்தை போர்க்குற்றவாளியாக ஈர்த்துள்ள சிறீலங்காவின் அரசத் தலைவர், மகிந்த ராஜபக்சவின் கட்சியில் அங்கத்தவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள சிறீலங்கா துடுப்பாட்ட வீரர் "சனத் ஜெயசூரியவை" இன்று (25-06-2011) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள துடுப்பாட்டத்தில் பங்குகொள்ளவிடாது தடுத்து விரட்டுவோம்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போர்க்குற்றவாளிக்கு துணை நிற்கும் "சனத் ஜெயசூரியவை" துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கும் அதேநேரம், சிறீலங்காவில் இடம்பெற்ற பாரிய இனவழிப்பின் சூத்திரதாரிகளின் முகத்திரையினை கிழித்து அது தொடர்பான விளக்கங்களை சர்வதேச துடுப்பாட்ட சம்மேளனம், மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் விளக்கி அவர்களிடமிருந்து சிறீலங்காவை அன்னியப்படுத்துவோம்.

கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிகள், மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உங்கள் கருத்துக்களையும், எதிர்ப்புக்களையும் உடனடியாக எவ்வித தாமதமுமின்றி தெரியப்படுத்துங்கள்.

Most British Understand the atrocities of Killing Field Regime but not few in Gloucestershire....

Tell them to be human! Tell them Cricket is not fun on others pain!

Stop Killing Field's team enter Bristol Grounds!

Boycott Killing Field's Cricket to promote humanity!

GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB
THE COUNTY GROUND
NEVIL RD
BRISTOL BS7 9EJ

Patron: The Lord Vestey
Chairman: Rex Body
Chief Executive: T E M Richardson
Office Hours:
Monday to Friday from 9am to 5pm and Match days.

Main Reception
Telephone: 0117 9108000
Email: reception@glosccc.co.uk

Membership
Telephone: 0117 9108017
Email: membership@glosccc.co.uk

Ticketing Office
Telephone: 0117 9108010
Email: tickets@glosccc.co.uk

Match information and prospects of play
(home matches only)
Telephone: 0117 9108000

Grace room match day bookings
Telephone: 0117 9108014

Press Office
Telephone: 0117 9108003
Email: pressoffice@glosccc.co.uk

Conference Bookings
Telephone: 0117 9108025
Email: conference@glosccc.co.uk

Sales & Marketing
Telephone: 0117 9108013
Email: marketing@glosccc.co.uk

Cricket Office
Telephone: 0117 9108015
Email: cricket@glosccc.co.uk

Club Shop
Telephone: 0117 9108020

Gold Bond
Telephone: 0117 9108019

Cheltenham Festival
Telephone: 01242 851092

Fax numbers
All departments except caterers
Fax: 0117 9241193

Gloucs Festival
Telephone: 01242 851092

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரவுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபை

அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சனல்4 ஊடகத்தின் முயற்சிகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முறியடித்ததனால் ஆத்திரமடைந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை இவ்வாறு இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த 23ம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்த திட்டத்தை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள சிரேஸ்ட சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சனல்4 ஊடகத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஜே.டி.எஸ் என்னும் ஊடக அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘உலகெங்கும் அலை அடிக்கிறது


சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 14ம் நாள் ஒளிபரப்பியிருந்தது.

இந்த ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி மூலம் பிரித்தானியாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

அதேவேளை உலகம் முழுவதிலும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 270,000 இற்கும் அதிகமானோர் இந்த ஆவணப்படத்தை காணொலிப் பதிவு மூலம் பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த ஆவணப்படம் அனைத்துலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திரையிடப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை நியுயோர்க்கில் இந்த ஆவணப்படம் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, நியுசிலாந்து, அயர்லாந்து, கிழக்குதிமோர் உள்ளிட்ட பல நாடுகளின் ஐ.நாவுக்கான தூதரகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பார்வையிட்டிருந்தனர்.

அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையிலும் கடந்த புதன்கிழமை இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், மனிதஉரிமைகளுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆன் கிளொவ்ட் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியொபன் மக் டொனா, அன்டி லவ், ஜிம் டோவ்ட், லீ ஸ்கொட், ஜஸ்மின் குரேசி, மைக் கேப்ஸ், பரோனஸ் மில்லர், சூசன் மில்லர், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரைன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இளம் பெண்கள், சிறுமிகளை தனித்து கொழும்புக்கு அனுப்பாதீர்கள் : யாழ்.பெற்றோருக்கு அனோமா கோரிக்கை .

யாழ்.மாவட்டங்களிலிருந்து, இளம் பெண்களையும், பிள்ளைகளையும் தனித்து கொழும்புக்கு அனுப்ப வேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வடபகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள் கொழும்பில் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, அனோமா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் :

வடபகுதியிலிருந்து தொழில் பெற்று தருவதாக அழைத்து வரப்பட்ட ஏழு பெண்கள் கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் ஒன்று எமக்கு தெரியவந்தது. உடனடியாக குறித்த இடத்துக்கு சென்றோம். எனினும் அங்கிருந்தவர்கள் அவ்வாறு ஒருவரும் இங்கு இல்லை என கூறினர். அவர்களுடைய பதிலில் சந்தேமகிருந்ததால், அவர்களையும் மீறி அந்த இடத்தை சோதனையிட்டோம். அப்போது அலமாரி போன்ற சிறிய இடம் ஒன்றில் ஏழு பெண்கள் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எமது அதிகாரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது. பின்னர் அவர்களளை ஒருவாறு மீட்டெடுத்தோம். இப்போது குறித்த பெண்கள் அவர்களது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இடத்திருந்து தப்பிய சிறுமி ஒருவர் வழங்கிய தகவலின் படியே அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை நடத்தி சென்றவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை கருதியே இவ்வேண்டுகோளை விடுக்கிறேன். வடக்கின் ஏழ்மையை நிலையை கருத்தில் கொண்டு தொழில் பெற்றுத்தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்கின்றனர். எனவே இந்த விடயத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Friday 24 June 2011

இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்பாக அச்சமடையப் போவதில்லை

இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்பாக அச்சமடையப் போவதில்ல ஐ.நா. இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவு சக்திகள் முன்னெடுத்து வரும் சூழ்ச்சிகளை தோற்கடிக்கவும் அந்தப் பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை வழங்க உள்ளேன் என்றார்.

சிங்கள படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்பு


இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜூன் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை “மே 17 இயக்கம்” முன்னின்று நடத்துகிறது.

ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட பிரபாகரன்


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்டய படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.



பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து, இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.


கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.



சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை விலக்க வேண்டும்! - மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்


வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை விலக்கி, அங்கு மீளவும் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதவி நிறுவனப் பிரதிநிதிகள், மேலவை உறுப்பினர் போன்றோரைக் கொணட குழுவொன்று சிறிலங்கா தூதுவரிடம் கையளித்துள்ளது.

இன்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்குச் சென்ற சுமார் 40 பேரடங்கிய குழுவே சிறிலங்கா தூதுவர் டி.டி.ரணசிங்கவிடம் இந்த மனுவைக் கையளித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தவறாக நடத்தப்படுவதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் கையளித்த மனுவில் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கைப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டு குடியியல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரும் பிரேரணை ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி மலேசிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் அந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்.

இந்தநிலையிலேயே மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு இன்று இந்த மனுவை இலங்கை தூதரகத்தில் சமர்ப்பித்துள்ளது.

உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்பு

இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜூன் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை “மே 17 இயக்கம்” முன்னின்று நடத்துகிறது.

ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதார தடை - தமிழக அரசின் தீர்மானம் கண்துடைப்பு: வைகோ

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தாமல், தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வெறும் கண்துடைப்பு என்று வைகோ கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

பொருளாதார தடை கொண்டுவரவேண்டுமானால் இந்திய அரசு பத்து நாட்களுக்கு முன்னால் இலங்கையோடு போட்ட பொருளாதர ஒப்பந்தங்கள், வர்த்த ஒப்பந்தங்களையும் இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

இந்திய அரசு பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டதை கண்டித்து, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போறீர்களா இல்லையா என்று தமிழக அரசு கேட்க வேண்டும். இதையெல்லாம் கேட்காமல் பொத்தாம் பொதுவாக பொருளாதா தடை என்றால் அது உண்மையாகவே சிங்கள அரசுக்கு ஒரு பொருளதார நெருக்கடியை உண்டாக்குகின்ற அனுகுமுறையாக இருக்காது என்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை இராணுவத்தினரே விற்றனர்: கோத்தாஅதிர்ச்சி

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை இராணுவத்தினரே விலைபேசி விற்க முற்பட்டிருப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டமை, விடுமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளமை, மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நோ்ந்துள்ள கதி, யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றமை ஆகிய விடயங்களின் காரணமாக இராணுவ சேவையிலிருந்து அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களும் தற்போது தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு தப்பியோடும் அதிகாரிகள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகள் ஒன்றிரண்டை எப்படியேனும் திரட்டிக் கொண்டே தப்பியோடுகின்றனர். அதனை தமிழர்தரப்புகளுக்கு விற்று பெரும் பணத்தொகையொன்றைப் பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வது அவர்களின் நோக்கமாகவுள்ளது.

அதில் ஒருசிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புகளும் இருப்பதுடன், இன்னும் சிலர் அவ்வாறான காணொளிகளுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு தப்பிச் சென்றவர்கள் மற்றும் தப்பிச் செல்லத் தயாரானவர்களை அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கும் அரசாங்கத்தின் முன்னைய முக்கியஸ்தர்கள் குழுவொன்று அடிக்கடி தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து வருவதாகவும் நம்பகமான தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குக் கிட்டியுள்ளன.

இராணுவத்தினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பது குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள அவர், அதனைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.

அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளின் பரிமாற்ற மையமாகப் பயன்படுத்தப்படும் தென்னிந்தியாவிலும் இலங்கைப் புலனாய்வாளர்கள் குழுவொன்று களமிறங்கியிருப்பதாகவும், அவர்கள் கொடுத்த தகவல்களின் பிரகாரம் தென்னிந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பல இலங்கையர் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருவதாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.

கொலையை செய்து விட்டு இரங்கலை தெரிவிக்கும் மகிந்த

பொதுமக்கள் ஒருவராவது கொல்லப்படவில்லை என்று இன்று வரை சாதிக்கும் அரசு இலங்கை பூராகவும் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் அரச செலவில் விசேட பூசைகளையும் அர்ச்சனைகளையும் செய்ய முன்வந்தள்ளது. முன்னுக்குப் பின் முரணாக நடப்பதில் வல்லமை பெற்ற அரசு கொலையையும் செய்யும் கொல்லப்பட்டவருக்கு இரங்கலையும் தெரிவிக்கும்.

வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உட்பட சிங்களப்படைகளின் எறிகணை வீச்சு, விமானக் குண்டு வீச்சு, சித்திரவதைகள் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஆத்மசாந்திக் கிரிகைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 30ம் நாள் வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று சகல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் மோட்ச அர்ச்சனைகள் நடைபெறும் என்று அரச உத்தரவுக்கு அமைவாக கல்வி பண்பாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான சிறப்புப் பூசை வழிபாடுகளுக்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதென்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோருக்கு ஆத்ம சாந்திக் கிரிகைகள் நடைபெறுமா என்று கேட்ட போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

வன்னியிலும் வடமாகணத்திலும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலாயங்களுக்கு அமாவசை தினத்தன்று நடைபெறவிருக்கும் பூசைகள் பற்றிய அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிக் கருத்து தெரிவித்த ஈழம் பிரெஸ் நிருபர் சிவபாலன் கீரிமலை நகுலேஸ்வரம், மன்னார், திருக்கேஸ்வரம் போன்ற சிவாலயங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்றார்.

பெரும்பாலான ஆத்மசாந்திப் பூசைகள் கடலோரக் கோயில்களில் தான் செய்யப்படுகின்றன என்ற படியால் கரையோரப் பாதுகாப்புப் படைகளின் அனுமதி பெறப்பட வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் இந்தக் கோயில்களில் ஆடி அமாவாசைப் பூசைகளைச் செய்ய முடியாது என்றும் சிவபாலன் தெரிவித்தார்.

Thursday 23 June 2011

இத்தாலி வழங்கிய நீதியும் -நெதர்லாந்து வழங்கும் தீர்ப்பும்!


இத்தாலியின் அனைத்து மாநிலங்களிலும் தாயக விடுதலைக்காக செயற்பட்ட 30 மனிதநேய செயற்பாட்டாளர்கள் 2008ம் ஆண்டு யூன் 18ம் திகதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கும் பிரதம நீதியரசரினால் 23.06.2011 வியாழக்கிழமை இன்று இத்தாலியில் நாப்போலி (சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது நகரம்) என்னும் நகரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களாக நடைபெற்ற இவ் வழக்கிற்கு இன்று வியாழக்கிழமை மதியம் 13.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ தேச விடுதலைக்காக மனிதநேயத்துடன் பணியாற்றிய பணியாளர்கள் இத்தாலியில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் அழுத்தத்தாலும், அங்குள்ள சிங்கள அமைப்புக்கள் கைகோர்த்து தமிழ் உணர்வாளர்கள் மீது மேற்கொண்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் இக்கைதுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் உண்மையும், நியாயமும் தமிழர் பக்கம் உள்ளது என்பதற்கமைய தமிழர்களின் பக்கம் பல அரசும் அரசுசார்பற்ற அமைப்புக்களும், இத்தாலி நண்பர்களும், வழக்கறிஞர்களும் மேற்கொண்ட பகிரத பிரயத்தனத்தால் இவ் வெற்றி தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த கைதுகளை இட்டு பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த தொண்டர்களும், இத்தாலி வாழ் தமிழ் மக்களும் இன்று மிகவும் சந்தோசத்தை அடைந்துள்ளதுடன், அந்த நகரத்தில் தமது வெற்றியை அனைத்து மக்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, இந்த வெற்றிக்கு பல்வேறு வழிகளில் தமக்கு ஆரவும் உதவியும் செய்தவர்களுக்கு தமது ஆழ்மன நன்றியை தெரிவித்துவருகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை சென்றிருக்கும் நெதர்லாந்து நீதிபதி தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் குழு சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் கே.பி மற்றும் சிறீலங்காவின் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலரிடம் விசாரணைகளை நடத்திவருகின்றது.

நெதர்லாந்து நீதியமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இவ்விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் முன்னதாக நடுநிலைவகித்து விசாரணைகளில் ஈடுபட முன்வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த சட்டவல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பாளருடன் சிறீலங்காவிற்கச் சென்றிருக்கும் நீதிபதி தலைமையிலான இந்த விசாரணைக்குழு, சிறீலங்கா அரசு தடுப்புச் சிறைகளில் வைத்திருக்கும் சில முன்னாள் போராளிகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

விசாரிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது என நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போராளிகளிடம் இருந்து இவர்கள் பெறுகின்ற தகவல்கள் உண்மையானதாக இருக்கமுடியுமா என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏனெனில் சிறீலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கி முனைகளின் உயிர் அச்சுறுத்தல்களில் இருக்கும் போராளிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் என்பது சிறீலங்காவிற்கு சார்பானதாகவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எதிரானதாகவுமே இருக்கமுடியும்.

அத்துடன், இவர்கள் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வியும் உள்ளது. இந்நிலையில், இவர்கள் வழங்கப்போகின்ற கருத்துக்களின் அடிப்படையில் நெதர்லாந்தில் தீர்ப்பு வழங்கப்படுமாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கும் அவர்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுக்கும் எதிரானதாகவே இருக்கமுடியும் என்ற அச்சம் தமிழ் மக்களை சூழ்ந்துள்ளது.

ஏற்கனவே, சிறீலங்காவினால் சாட்சியாகப்பட்ட சில முன்னால் போராளிகள் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்குத் துணைபோபவர்களாகவும், விடுதலைப் புலிகளிக்கு எதிரான கருத்தை விதைப்பவர்களாகவும் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறானவர்களிடம் பெறப்படும் விசாரணைகளின் முடிவில் நெதர்லாந்து வழங்கப்போகின்ற தீர்ப்பு தமிழ் மக்களுக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே எழுந்துள்ளது.

நாடு கடத்தலுக்கு எதிராக சுவிஸில் கையெழுத்துப் போர்


சுவிற்சலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டாம் என்று கோரி இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் பேர்னில் கையெழுத்துப் போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.

சுவிஸுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த இலங்கைத் தமிழர்களில் 2225 பேர் வரையானோர் கடந்த வருட இறுதியில் நாடு கடத்தப்பட வேண்டிய நிலைமையை எதிர்கொண்டு உள்ளானார்.

ஆனால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்ற பட்சத்தில் சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள், உயிராபத்துக்கள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றமைக்கு நேரலாம் என்று அஞ்சுகின்றார்கள்.

இந்நிலையில் தமிழீழ சுவிஸ் கழகம் உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கோரிக்கைக்கு ஆதரவாக 4844 கையொப்பங்களை சேகரித்து உள்ளார்கள்.

யுதத்தின் சாட்சி வாணிகுமாருக்கு ஜெனரல் சவேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.(காணொளி இணைப்பு)


இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர் குற்றம் புரிந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வன்னி இறுதி யுதத்தின் சாட்சியாக இருந்து வருபவர் வாணி குமார். இறுதி யுத்தத்தில் அகப்பட்டு பிரித்தானிய அரசால் மீட்கப்பட்டார் .

இவர் பல்வேறு பெயர்களில் உலாவுவதாகவும் சந்தேகப்பேர்வழி எனவும் இலங்கையின் முன்னணி இராணுவ தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா பல நூறு வெளிநாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் அச்சுறுத்தியுள்ளார்.

இவருடைய படையணி கொலை தமிழ் பெண்கள் கற்பழிப்பு என பல குற்றச்சாட்டுகளை உலக அரங்கில் எதிர் நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நியூயோக் ஒளிபதிவை வாணிகுமார் பிரித்தானிய பொலிசாரிடம் ஒப்படைத்து கொலை அச்சுறுத்தல் அரசியல் முத்திரை குத்தி மிரட்டியமை போன்ற குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யபடும் பட்சத்தில் சர்வேந்திரசில்வா இன்ரபோல் ஆதரவுடன் கைது செய்ய பிரித்தானிய அரசு உத்தரவிடலாம் என சட்டத்தரனி ஒருவர் தமிழ் சி.என்.என் இற்கு தெரிவித்தார்.

இத்தாலி வழங்கிய நீதியும் - நெதர்லாந்து வழங்கப்போகும் தீர்ப்பும்!

இத்தாலியின் அனைத்து மாநிலங்களிலும் தாயக விடுதலைக்காக செயற்பட்ட 30 மனிதநேய செயற்பாட்டாளர்கள் 2008ம் ஆண்டு யூன் 18ம் திகதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கும் பிரதம நீதியரசரினால் 23.06.2011 வியாழக்கிழமை இன்று இத்தாலியில் நாப்போலி (சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது நகரம்) என்னும் நகரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களாக நடைபெற்ற இவ் வழக்கிற்கு இன்று வியாழக்கிழமை மதியம் 13.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ தேச விடுதலைக்காக மனிதநேயத்துடன் பணியாற்றிய பணியாளர்கள் இத்தாலியில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் அழுத்தத்தாலும், அங்குள்ள சிங்கள அமைப்புக்கள் கைகோர்த்து தமிழ் உணர்வாளர்கள் மீது மேற்கொண்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் இக்கைதுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் உண்மையும், நியாயமும் தமிழர் பக்கம் உள்ளது என்பதற்கமைய தமிழர்களின் பக்கம் பல அரசும் அரசுசார்பற்ற அமைப்புக்களும், இத்தாலி நண்பர்களும், வழக்கறிஞர்களும் மேற்கொண்ட பகிரத பிரயத்தனத்தால் இவ் வெற்றி தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த கைதுகளை இட்டு பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த தொண்டர்களும், இத்தாலி வாழ் தமிழ் மக்களும் இன்று மிகவும் சந்தோசத்தை அடைந்துள்ளதுடன், அந்த நகரத்தில் தமது வெற்றியை அனைத்து மக்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, இந்த வெற்றிக்கு பல்வேறு வழிகளில் தமக்கு ஆரவும் உதவியும் செய்தவர்களுக்கு தமது ஆழ்மன நன்றியை தெரிவித்துவருகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை சென்றிருக்கும் நெதர்லாந்து நீதிபதி தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் குழு சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் கே.பி மற்றும் சிறீலங்காவின் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலரிடம் விசாரணைகளை நடத்திவருகின்றது.

நெதர்லாந்து நீதியமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இவ்விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் முன்னதாக நடுநிலைவகித்து விசாரணைகளில் ஈடுபட முன்வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த சட்டவல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பாளருடன் சிறீலங்காவிற்கச் சென்றிருக்கும் நீதிபதி தலைமையிலான இந்த விசாரணைக்குழு, சிறீலங்கா அரசு தடுப்புச் சிறைகளில் வைத்திருக்கும் சில முன்னாள் போராளிகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

விசாரிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது என நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போராளிகளிடம் இருந்து இவர்கள் பெறுகின்ற தகவல்கள் உண்மையானதாக இருக்கமுடியுமா என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏனெனில் சிறீலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கி முனைகளின் உயிர் அச்சுறுத்தல்களில் இருக்கும் போராளிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் என்பது சிறீலங்காவிற்கு சார்பானதாகவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எதிரானதாகவுமே இருக்கமுடியும்.

அத்துடன், இவர்கள் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வியும் உள்ளது. இந்நிலையில், இவர்கள் வழங்கப்போகின்ற கருத்துக்களின் அடிப்படையில் நெதர்லாந்தில் தீர்ப்பு வழங்கப்படுமாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கும் அவர்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுக்கும் எதிரானதாகவே இருக்கமுடியும் என்ற அச்சம் தமிழ் மக்களை சூழ்ந்துள்ளது.

ஏற்கனவே, சிறீலங்காவினால் சாட்சியாகப்பட்ட சில முன்னால் போராளிகள் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்குத் துணைபோபவர்களாகவும், விடுதலைப் புலிகளிக்கு எதிரான கருத்தை விதைப்பவர்களாகவும் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறானவர்களிடம் பெறப்படும் விசாரணைகளின் முடிவில் நெதர்லாந்து வழங்கப்போகின்ற தீர்ப்பு தமிழ் மக்களுக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே எழுந்துள்ளது.

கொலையை செய்து விட்டு இரங்கலை தெரிவிக்கும் மகிந்த

பொதுமக்கள் ஒருவராவது கொல்லப்படவில்லை என்று இன்று வரை சாதிக்கும் அரசு இலங்கை பூராகவும் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் அரச செலவில் விசேட பூசைகளையும் அர்ச்சனைகளையும் செய்ய முன்வந்தள்ளது. முன்னுக்குப் பின் முரணாக நடப்பதில் வல்லமை பெற்ற அரசு கொலையையும் செய்யும் கொல்லப்பட்டவருக்கு இரங்கலையும் தெரிவிக்கும்.

வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உட்பட சிங்களப்படைகளின் எறிகணை வீச்சு, விமானக் குண்டு வீச்சு, சித்திரவதைகள் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஆத்மசாந்திக் கிரிகைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 30ம் நாள் வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று சகல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் மோட்ச அர்ச்சனைகள் நடைபெறும் என்று அரச உத்தரவுக்கு அமைவாக கல்வி பண்பாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான சிறப்புப் பூசை வழிபாடுகளுக்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதென்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோருக்கு ஆத்ம சாந்திக் கிரிகைகள் நடைபெறுமா என்று கேட்ட போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

வன்னியிலும் வடமாகணத்திலும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலாயங்களுக்கு அமாவசை தினத்தன்று நடைபெறவிருக்கும் பூசைகள் பற்றிய அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிக் கருத்து தெரிவித்த ஈழம் பிரெஸ் நிருபர் சிவபாலன் கீரிமலை நகுலேஸ்வரம், மன்னார், திருக்கேஸ்வரம் போன்ற சிவாலயங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்றார்.

பெரும்பாலான ஆத்மசாந்திப் பூசைகள் கடலோரக் கோயில்களில் தான் செய்யப்படுகின்றன என்ற படியால் கரையோரப் பாதுகாப்புப் படைகளின் அனுமதி பெறப்பட வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் இந்தக் கோயில்களில் ஆடி அமாவாசைப் பூசைகளைச் செய்ய முடியாது என்றும் சிவபாலன் தெரிவித்தார்.

கடற்கொள்ளையர்களை போல செயல்படுகிறது இலங்கை கடற்படை: காங்கிரஸ் எம்.பி.

இந்திய மீனவர்கள் விவகாரத்தில் கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆருண் கூறியுள்ளார்.


ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஜே.எம். ஆருண் கூறியதாவது:


சர்வதேச கடல் விதிமுறைகளின்படி, மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிக்கலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. இதனிடையே, கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்ளக் கூடாது.


இலங்கை படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


1974-ல் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உள்ளது.


இவ்வாறு ஜே.எம். ஆருண் தெரிவித்தார்.

தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா .........

”18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ – இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள்.
‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது ‘சேனல் 4’ தொலைக்காட்சி.
போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி… அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.
”முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!” என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ”எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!” எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.
”இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!” என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, ‘சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது!’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது.
கூடவே, அதி முக்கிய விளக்கமாக, ‘சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டினென்ட் கர்னலாக இருந்தவர்!’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியாவுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை.
இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ”போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட்டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை!” என்கிறார் வருத்தமாக.
கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், ” ‘சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சிகள் உலகத்தின் கவனத்தை இரக்கத்தோடு திருப்பி இருக்கின்றன. தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்தும் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. ‘சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். ‘சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்திரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங்களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய்திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. ‘சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல்களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்!” என்கிறார் எதிர்பார்ப்புடன்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ”ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார்கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங்கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங்கள் தேடப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. ‘சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.
இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தினால் மட்டுமே, அங்கே நடந்த – இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!” என்கிறார் ஆதங்கமாக.
லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ”இன வெறிக் கொடூரங்களாக ‘சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்!” என்கிறார் ஏக்கத்துடன்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், ‘சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.
தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?
நன்றி விகடன்


மாவீரன் கிட்டு வந்த கப்பல்: காட்டிக் கொடுத்தது யார்?

ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல்.
1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளி களுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் - அவரே, இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை. நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் ஈழப் போராளிகளைக் கொண்டு வருவதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை.

முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது. இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக் கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக் களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராக வும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப் பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக் குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்த வர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான். பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை - அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப் பாணம் கொண்டு போய் துரோகம் - குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது.

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, அதை தமிழர்கள் மீது ஆயுத முனையில் திணித்தார். இந்தி யாவின் ‘கைப்பாவைக் குழுக்கள்’ கண்களை மூடிக் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரித்தன. உண்மையான விடுதலைப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் மட்டும் ஏற்க மறுத்தனர். ஆனாலும் இந்திய அதிகார வர்க்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மிரட்டி பணிய வைத்தனர். ‘இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; தமிழ் மக்களை இந்தியா பாதுகாக்கும் என்று நம்பி, ஆயுதங்களை ஒப்படைக் கிறோம்’ என்று, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். விடுதலைபுலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் சில போட்டிக் குழுக்களுக்கு உளவுத் துறை ஆயுதங்களை வழங்கி வந்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இதை வீடியோ படங்களுடன் ஆதாரத்தோடு அமைதிப் படை தளபதி ஹர்கிரத் சிங்கிடம் எடுத்துக் கூறினார். ஹர்கிரத் சிங்கும் உண்மையே என்று ஒப்புக் கொண்டார். இப்படி செய்வது தவறு, என்று இந்திய ராணுவத் தளபதியாக இருந்த கே.சுந்தர்ஜியிடம் சிங் புகார் கூறினார். சுந்தர்ஜியோ, ‘இது உயர்மட்டத்தின் முடிவு’ என்ற கூறிவிட்டார். இவையெல்லாம் ஹர்கிரத்சிங்கே வெளிப்படுத்திய உண்மைகள், மறுக்க முடியாது. அப்போதெல்லாம் ஹர்கிரத் சிங்கை பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் நேரில் பேசுவதற்கு பிரபாகரன் வரும்போது பிரபாகரனை சுட்டுவிடுமாறு ராஜிவின் ஆலோசனைக் குழு இலங்கைத் தூதுவரக இருந்த ஜெ.என். தீட்சத் வழியாக உத்தரவிட்டது. ஆனால், நேர்மையான அதிகாரியாக இருந்த ஹர்கிரத்சிங் இந்த படுபாதகத்தை தன்னால் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை, அதன் போராட்டத்தைத் தொடரவிட்டால், அவர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தை விரைவுபடுத்தி விடு வார்கள் என்பதோடு, இந்தியாவின் ஏவல் படையாக எந்த காலத்திலும் மாறமாட்டார்கள் என்பதை உறுதியாக புரிந்து கொண்ட இராஜீவ் காந்தியும், அவரது ஆலோசனை குழுவும், உளவு நிறுவனமும், விடுதலைப்புலிகளின் தலைமையை தீர்த்துக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டின. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தே ஆட்களைப் பிடித்தார்கள். பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா அந்த சதிவலையில் வீழ்ந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கொண்டே இந்திய உளவு நிறுவனத்துக்காக ரகசியமாக செயல்பட்டு வந்தார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், இந்தப் பின்னணியில்தான் ஈழத்தில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். ராஜீவ் சர்மாவின் இந்த நூல் உளவு நிறுவனங்களின் இந்த சதியை சூழ்ச்சிகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இந்த சதிகார நிறுவனங்கள் தமிழினப் பகைவர்கள் சுமத்திய களங்கத்தையும், வீண் பழிகளையும் அப்படியே நியாயப்படுத்துகிறது.

ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு வந்த கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படைவழி மறித்தது. இந்த நிகழ்வை இந்த நூல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை தந்து நியாயப்படுத்துகிறது. ராஜீவ் கொலையை நடத்தி முடித்ததற்காகவே அதன் ‘வெகுமதியாக’ விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களையும், நவீன கப்பல்களை யும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெறத் தொடங்கினர் என்று இந்த நூல் குற்றம் சாட்டுகிறது. அப்படி ராஜீவ் கொலைக்காக கிடைத்த நவீன ஆயுதங்களை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெற்று கப்பலில் கொண்டு வரும்போது தான் கிட்டு பிடிபட்டார் என்று அபாண்டமாக பழி சுமத்து கிறது, இந்த நூல். உளவுத் துறையின் அவதூறு களையும், பழியையும் நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு உண்மைகளையே மறைத்து எழுதி யிருக்கிறார் நூலாசிரியர்.

“1993 ஜனவரி 13 ஆம் தேதி சென்னை துறைமுகத் திலிருந்து 700 கி.மீட்டர் தொலைவில் இக்கப்பல் இடைமறிக்கப்பட்டது” என்கிறார் நூலாசிரியர். இந்திய எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பலை, இந்திய கப்பல் படை சட்ட விரோதமாக சென்று வழி மறித்ததை இந்த நூல் குறிப்பிடாமல், அப்படியே மூடிமறைக்க விரும்புகிறது. ‘700 மைலுக்கு அப்பால் சென்ற கப்பல்’ என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். சர்வதேச கடற்பரப்பில் கப்பலை மடக்கி, இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட உண்மையை மறைத்துவிட்டு, சென்னை துறைமுகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும்போது, அதாவது இந்திய கடற்பரப்பில் இருக்கும்போது அக்கப்பல் கிட்டுவால் வெடிக்கச் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? கிட்டுவின் கப்பல் - சர்வதேச கடல்பரப்பில் 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தபோது, உளவுத் துறைக்கு மாத்தையா வழியாக அத்தகவல் கிடைக்கப் பெற்றது. கப்பலை வழி மறிக்க இந்திய கப்பல் படை சென்றது. கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வருமாறு கப்பல் படையினர் மிரட்டினர். அதற்கு கிட்டு ஒத்துழைக்காத நிலையில், அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலுக் குள் குதித்தனர். அப்போது கிட்டுவும், உடன் வந்த போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வீரச் சாவைத் தழுவினர்.

கிட்டு என்ற மாவீரன் தனது இரு கால்களையும் இழந்த பிறகும் உள்ள உறுதியோடு விடுதலைக்காக களத்தில் நின்ற போராளி. இந்தியாவின் துரோகத் தினால் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு, வீரமரணத்தை தழுவினார்.

கப்பலில் உயிருடன் பிடிபட்ட 9 போராளிகள் மீது இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்டது. இந்திய கப்பல் படை சர்வதேச பரப்பில் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட இந்த நடவடிக்கை சட்ட விரோத மானது என்று அறிவித்த ஆந்திர உயர்நீதிமன்றம்,

9 புலிகளையும் விடுதலை செய்தது மட்டுமல்ல, கப்பல் புறப்பட்ட இடமான மத்திய அமெரிக்கா வுக்கு அவர்களை அரசாங்கமே சொந்த செலவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் தீர்ப்பளித்தது. ஈழ விடுதலையில் இந்தியாவின் சதிக்கும், கீழறுப்பு நடவடிக்கைகளுக் கும், இந்திய நீதிமன்றமே தந்த செருப்படிதான் இந்த தீர்ப்பு. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்ட இந்த நூல், இந்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றத்தில் நடந்ததாக ஒரு பொய்யான தகவலைத் தருவதோடு, இந்த விசாரணைக்காக அரசு 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும் பலன் கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலைப்பட்டு வருந்துகிறது.

இந்தக் கப்பல் பிடிபட்டதற்கு, புலிகள் இயக்கத் திற்குள்ளே நடந்த துரோகம் பற்றி இந்த நூல் மவுனம் சாதிக்கிறது. பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா தான். இந்த கப்பல் வரும் சேதியை ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தந்தார் ஆதாரங்களோடுதான், கூறுகிறோம்.

-- விடுதலை க.இராசேந்திரன்

நன்றி: புரட்சிப்பெரியார் முழக்கம்

புலிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இராணுவத்தில் பதவி


தமிழீழ விடுதலைப் புலிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்திய பல முக்கிய உயர் இராணுவ அதிகாரிகள் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போரின் போது முன்னணி செயற்பாடுகளை மேற்கொண்ட பிரிகேடியர்கள், ஜெனரல்கள் கொத்துக் கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் 30,000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கான ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதியரசர்களில் ஒருவர் சுகயீனமுற்ற காரணத்தினால் இன்றைய வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீனவர்களுடன் இணைந்து போராட்டம்: சீமான்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டமாக முன்னெடுக்கும். இவ்வாறு நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்த பொழுது,அங்கு வந்த சிங்கள கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிக கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சிந்தாத்துரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராம சாமி, உள்பட 23 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்று மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளது.

இந்த அட்டுழியத்தை இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் இராமேஸ்வரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத்தூதரை இன்று உடனடியாக கொழும்பு அனுப்பி சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டமாக முன்னெடுக்கும் என்று எச்சரித்தார்.

உடலில் கொப்புளங்களுடன் வாடுகிறார் கனிமொழி: கருணாநிதி உருக்கம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்

தில்லியில் கனிமொழியைச் சந்தித்துவிட்டு புதன்கிழமை இரவு சென்னை திரும்பிய அவர் சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் கூறியது:

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரைச் சந்திப்பதற்காக மட்டுமே தில்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது உடலில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. சரத்குமாரும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில்தான் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அந்தத் தவறான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதை தனது கடமையாகக் கருதி சி.பி.ஐ. செயல்படுகிறது.

தி.மு.க.வின் நிலைப்பாடு: ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் முதல்வராக இருந்தாலும் அதுதொடர்பான விசாரணை வரம்புக்கு உட்படுத்த சட்டம் கொண்டுவந்துள்ளோம். லோக்பால் சட்ட மசோதா விவகாரத்திலும் எங்களது நிலைப்பாடு அதுதான். ஊழலுக்கு எதிரான நல்ல முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், உள்நோக்கத்துடன் நடக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது. தி.மு.க., காங்கிரஸ் உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Wednesday 22 June 2011

'நாளை இன்றேல் ஒருபோதும் இல்லை'


சிறிலங்காவின் கொலைக்களம்’ என்ற பெயரில் பிரித்தானியாவின் சனல் - 4 தெலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலி, ஈழத் தமிழர் மத்தியில் பாரிய உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், போர்க் குற்றங்களைப் புரிந்தோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தாடலையும் அனைத்துலக சமூகத்தில் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

தமக்காக, தமது நலனுக்காக தமிழர் அல்லாதோர் காத்திரமாகச் செயற்பட வேண்டும் என – வழக்கம் போலவே – எதிர்பார்க்கும் ஈழத் தமிழ் மக்கள் இன்றைய காலச் சூழலில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும், தமது அரசியல் அவாக்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் இதய சுத்தியுடன் முயல்வார்களா என்பதில் சந்தேகம் தோன்றியுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களம்’ காணொலி சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சம காலத்திலேயே, பிரித்தானியாவில் இருந்து சுமார் 40 வரையான ஈழத் தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு எதிராக தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவிக்க முன்வராதமை, தற்போதைய சந்தர்ப்பத்தையும் தமிழர்கள் கைவிட்டு விடுவார்களோ என்ற ஐயத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

இத்தனைக்கும், அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பியனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு சனல்-4 ஊடகமும் மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்தன.

தமிழர்கள் திருப்பியனுப்பப் படுவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த விமானம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமான நிலையத்தில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் காலைமுதல் இரவு வரை நின்று தமிழர்களைத் திருப்பியனுப்புவதைத் தடுத்துவிடப் படாதபாடுபட்டனர்.

திருப்பியனுப்பப் படுவதற்காகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் கூட, தம்மைத் திருப்பினுப்புவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஈர்ப்பாட்டம் நடத்துமாறு தனிப்பட்ட முறையிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழ் மக்கள் அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.

ஏன்? எதனால்? மகிந்த ராஜபக்ச லண்டன் வந்திறங்கிய போது விமான நிலையத்தில் தொடங்கி அவர் தங்குமிடம் வரை விரட்டிச் சென்று மறியல் நடத்தி ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றவிருந்த உரையையும் கூட நிறுத்தம் செய்யுமளவு திரண்ட ஈழத் தமிழர்களுக்கு அன்றைய தினம் என்ன நடந்தது?

சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மற்றும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை என்பவற்றால் கனிந்துள்ள சூழலுக்கும் இது போன்றதொரு கதிதான் கிட்டப் போகின்றதா? இது புலம்பெயர் சமூகத்தில் அரசியல் பணியை முன்னெடுப்போர் மற்றும் பரப்புரைப் பணிகளில் ஈடுபடுவோர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

சமூக அசைவியக்கத்தில் பார்வையாளர்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட, அதனையே ஒரு பெருமையாகக் கருதிச் செயற்படும் மக்களைக் கொண்ட சமூகத்தில் வாழும் நாம், மக்கள் மத்தியில் இருந்து ஆதரவை எதிர்பார்க்க முடியுமே தவிர தன்னெழுச்சியான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, வெறுமனே மக்களைக் குறைகூறுவதில் பயனில்லை.

மாறாக, இது விடயத்தில் அரசியற் செயற்பாடுகளுக்கு பொறுப்பானோரே கவனஞ் செலுத்த வேண்டும்.

சனல்-4 தொலைக்காட்சி காணொலியைப் பொறுத்தவரை, வழக்கம் போன்றே சிங்களம் அதனை மறுதலித்தாலும் கூட, ஒரு சில விடயங்களை ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அது மட்டுமன்றி, சிங்களத் தரப்பில் அச்சம் ஏற்பட்டுள்ளமையும் பல்வேறு பிரமுகர்களின் பேச்சுக்களுடாக வெளிப்படுகின்றது.

மறுபுறம், சிங்களம் கூறும் சாக்குப் போக்குகளை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் அனைத்துலக சமூகம் இல்லையென்பதுவும், பல்வேறு பிரமுகர்களின் கருத்துக்களுக்கு ஊடாக வெளிப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களம்’ காணொலியைப் பார்வையிட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்ரர் பேர்ட், நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதே கருத்தையோ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூணும் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரை கருத்துத் தெரிவித்த யாவரும் மேற்படி விவகாரத்தை இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனரே தவிர, அனைத்துலக விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனக் கோரவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இத்தனை அநியாயங்கள் நடைபெற்ற பின்னரும் கூட அனைத்துலக சமூகம் இலங்கை அரசாங்கத்தை நம்பத் தயாராக உள்ளது என்பதையே இது புலப்படுத்தி நிற்கின்றது.

ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு என்ற அடிப்படைக்கும் அப்பால் நாளை இதுபோன்றதொரு நிலை தமக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கரிசனையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உள்ளதை மறைப்பதற்கில்லை.

‘சிறிலங்காவின் கொலைக்களம்’ காணொலியை தான் இதுவரை பார்வையிடவில்லை எனத் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இது தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்தப்படுவதாயின் ஐ.நா. பொதுச் சபையிலோ, பாதுகாப்புச் சபையிலோ அன்றி மனித உரிமைக் குழுவிலோ தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு தீர்மானம் தானாக நிறைவேற்றப்படாது என்பது தெரிந்ததே. அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதில் தமிழர்களாகிய நாம் எத்தகைய பங்களிப்பை நல்க முடியும் எனச் சிந்திக்க வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை கூடவுள்ளது. இந்த இரண்டு அமர்வுகளையும் இலக்கு வைத்து தமிழர்கள் தமது பரப்புரைப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். அத்தகைய பரப்புரை தொடர்ச்சியானதாகவும், தரம் வாய்ந்ததாகவும், இலக்கை மையப்படுத்தியதாகவும் அமையவேண்டியது அவசியம்.

துரதிர்ஸ்டவசமாக, இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம் எனும் கருத்து பல நாடுகளின் மத்தியில் உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அல்லது அத்தகைய ஒரு கருத்து சிங்களத் தரப்பால் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நவம்பரில் வெளியிடுவதாக சிங்களம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணியிலும் ஒரு சதி இருப்பதைப் போன்றே தென்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தொடர் செப்டம்பரிலும், பொதுச்சபை நவம்பரிலும் நடைபெறவுள்ள நிலையில் அந்த இரண்டு அவைகளிலும் போர்க் குற்றம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப் படுவதைத் தடுத்துவிட முடியும், அதன் பின்னர் ஏதேவொரு காரணத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தாமதப்படுத்துவது அல்லது அரசாங்கத்துக்குச் சார்பான அரைகுறை அறிக்கையொன்றை வெளியிடுவது, சமாந்தரமாக அரைகுறைத் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்குவதாக அறிவிப்பது எனப் பல்வேறு திட்டங்கள் அரசாங்கத் தரப்பில் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

காலம் செல்லச் செல்ல உலக அரங்கில் வேறு விடயங்கள் முன்னிலைக்கு வரும்போது ஈழத் தமிழ் மக்களின் விவகாரத்தை உலகம் மறந்துவிடக் கூடும் எனச் சிங்களம் எதிர்பார்க்கின்றது.

இத்தகைய சக்கர வியுகத்தை முறியடிக்கக் கூடிய வீரமும் விவேகமும் தமிழர் மத்தியில் உள்ளதா? புலம்பெயர் தமிழர் மத்தியில் பலர் ராஜதந்திர பரப்புரைச் செயற்பாடுகளில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்ற போதிலும் தூரதிர்ஸ்டவசமாக அவர்கள் மத்தியிலே ஒரு சிறப்பான ஒருங்கிணைவு இல்லாமல் உள்ளது.

இது தமிழர் தரப்பு பரப்புரையைப் பொறுத்தவரை பலவீனமான ஒரு அம்சமே. இது உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டிய ஒன்று.

‘நாளை இன்றேல் ஒருபோதும் இல்லை’ என்பதை மனதில் நிறுத்தி காரியமாற்றுவதே இன்றைய அத்தியாவசிய தேவையாகும்! இதை ஈழத் தமிழினம் உணருமா?

ஐ.நா வில்‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘நுழைந்து குழப்பம் விளைவித்த சவீந்திர சில்வா


நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக நுழைந்த ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும். பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

இவர்களுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை அழைப்பு விடுக்காத போதும், போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ள ஒரேஒருவர் என்ற வகையில் கருத்துகளை வெளியிடப் போவதாக கூறி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தக் கூட்டத்தைக் குழப்ப முயன்றார்.

சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படம் போலியானது என்றும் இது சிறிலங்காவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் காட்டுப்பகுதி ஒன்றில் புலிகளின் நிலைகள் மீது விமானங்கள் குண்டு வீசும்போது பிடிக்கப்பட்டு சிறிலங்கா விமானப்படையினால் வெளியிடப்பட்ட காணொலிப்பதிவு ஒன்றை, பொதுமக்கள் மீது குண்டு வீசப்படுவது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பொய்யான தகவல்களின் மூலம் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்த அனைத்துலக உதவி நிறுவனங்கள் முற்படுவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

அழையா விருந்தாளியாக நுழைந்த சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால் இந்த நிகழ்வில் பரப்புரைகளைச் செய்தது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளை வெறுப்படைய வைத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர் சாட்சியங்கள் வாய் திறந்தால் இந்த உலகத்தால் தாங்க முடியுமா?

18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்! இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள் கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சனல் 4’ தொலைக்காட்சி.

போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் இரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு.

புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது.

செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.

முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.

எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது.

இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது! எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.

இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள இராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும் என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன.

ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, சனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது.

கூடவே, அதி முக்கிய விளக்கமாக, சனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டினன்ட் கேர்ணலாக இருந்தவர் என்கிறது இலங்கை அரசு.

இசைப்பிரியாவுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப் பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை.

இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே,

போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன.

நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்திரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள இராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.

காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட்டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை என்கிறார் வருத்தமாக.

கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார்,

சனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் உலகத்தின் கவனத்தை இரக்கத்தோடு திருப்பி இருக்கின்றன.

தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்தும் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.

சனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க்குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன.

உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்திரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங்களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது.


பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது.

'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல்களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும் என்கிறார் எதிர்பார்ப்புடன்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார்,

ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார்கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங்கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங்கள் தேடப்படுகின்றன.

ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இனவெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது.

சனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.

இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக.

லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி,

இன வெறிக் கொடூரங்களாக 'சனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும்.

தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும் என்கிறார் ஏக்கத்துடன்.

எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், சனல் 4 காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை.

தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.

ஆனந்தவிகடன்

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா