அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கும் பிரதம நீதியரசரினால் 23.06.2011 வியாழக்கிழமை இன்று இத்தாலியில் நாப்போலி (சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது நகரம்) என்னும் நகரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக நடைபெற்ற இவ் வழக்கிற்கு இன்று வியாழக்கிழமை மதியம் 13.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ தேச விடுதலைக்காக மனிதநேயத்துடன் பணியாற்றிய பணியாளர்கள் இத்தாலியில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் அழுத்தத்தாலும், அங்குள்ள சிங்கள அமைப்புக்கள் கைகோர்த்து தமிழ் உணர்வாளர்கள் மீது மேற்கொண்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் இக்கைதுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் உண்மையும், நியாயமும் தமிழர் பக்கம் உள்ளது என்பதற்கமைய தமிழர்களின் பக்கம் பல அரசும் அரசுசார்பற்ற அமைப்புக்களும், இத்தாலி நண்பர்களும், வழக்கறிஞர்களும் மேற்கொண்ட பகிரத பிரயத்தனத்தால் இவ் வெற்றி தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த கைதுகளை இட்டு பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த தொண்டர்களும், இத்தாலி வாழ் தமிழ் மக்களும் இன்று மிகவும் சந்தோசத்தை அடைந்துள்ளதுடன், அந்த நகரத்தில் தமது வெற்றியை அனைத்து மக்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, இந்த வெற்றிக்கு பல்வேறு வழிகளில் தமக்கு ஆரவும் உதவியும் செய்தவர்களுக்கு தமது ஆழ்மன நன்றியை தெரிவித்துவருகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை சென்றிருக்கும் நெதர்லாந்து நீதிபதி தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் குழு சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் கே.பி மற்றும் சிறீலங்காவின் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலரிடம் விசாரணைகளை நடத்திவருகின்றது.
நெதர்லாந்து நீதியமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இவ்விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் முன்னதாக நடுநிலைவகித்து விசாரணைகளில் ஈடுபட முன்வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த சட்டவல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பாளருடன் சிறீலங்காவிற்கச் சென்றிருக்கும் நீதிபதி தலைமையிலான இந்த விசாரணைக்குழு, சிறீலங்கா அரசு தடுப்புச் சிறைகளில் வைத்திருக்கும் சில முன்னாள் போராளிகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
விசாரிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது என நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் போராளிகளிடம் இருந்து இவர்கள் பெறுகின்ற தகவல்கள் உண்மையானதாக இருக்கமுடியுமா என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏனெனில் சிறீலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கி முனைகளின் உயிர் அச்சுறுத்தல்களில் இருக்கும் போராளிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் என்பது சிறீலங்காவிற்கு சார்பானதாகவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எதிரானதாகவுமே இருக்கமுடியும்.
அத்துடன், இவர்கள் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வியும் உள்ளது. இந்நிலையில், இவர்கள் வழங்கப்போகின்ற கருத்துக்களின் அடிப்படையில் நெதர்லாந்தில் தீர்ப்பு வழங்கப்படுமாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கும் அவர்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுக்கும் எதிரானதாகவே இருக்கமுடியும் என்ற அச்சம் தமிழ் மக்களை சூழ்ந்துள்ளது.
ஏற்கனவே, சிறீலங்காவினால் சாட்சியாகப்பட்ட சில முன்னால் போராளிகள் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்குத் துணைபோபவர்களாகவும், விடுதலைப் புலிகளிக்கு எதிரான கருத்தை விதைப்பவர்களாகவும் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறானவர்களிடம் பெறப்படும் விசாரணைகளின் முடிவில் நெதர்லாந்து வழங்கப்போகின்ற தீர்ப்பு தமிழ் மக்களுக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே எழுந்துள்ளது.


No comments:
Post a Comment