ஊடக அறிக்கைபேர்ன், 22 யூன் 2011
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே - சுவிஸ் ஈழத்தமிழரவை
கையெழுத்துப்பிரதிகள் கையழிப்பும் ஒன்றுகூடலும்
காலம்: 23.06.2011 வியாழன் காலை 09.00 மணிக்கு
இடம்: பேர்ன் பாராளுமன்றம்
அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழீழ மக்களே
சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தற்காலிக வதிவிட அனுமதியுடன் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளை திருப்பியனுப்புவதற்கான நடைவடிக்கைகளை மேற்கொண்டமை யாவரும் அறிந்ததே. இலங்கையில் தமிழ்மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய சுமூகநிலை தோன்றியுள்ளது என சுவிஸ்நாடு தெருவித்திருந்தது. ஆனால் மனித உரிமை நிறுவனங்கள் இக்கருத்தை முற்றாக நிராகரித்தனர்.
இந்த அவல நிலையை தடுத்த நிறுத்துவதற்கு சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் தேர்வுமுறையில் தேர்ந்தெடுத்த சுவிஸ் ஈழத்தமிழரவை மனித உரிமை நிறுவனங்கள், கட்சிகள், என 15 க்கும் மேற்பட்ட சுவிஸ்நாட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து கையெழுத்து வேட்டையொன்றையும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றையும் பேர்ன் பாராளுமன்றம் முன்பாகவும் நடாத்தியிருந்தது.
கீழ் உள்ள மனிதாபிமானக் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தும் வரை எம்மை நாடு கடத்தாரீர்:
*இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க்குற்றவிசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலமே போர்க்குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவரமுடியும்.
*இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
*அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின்
முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இதன் விளைவாக சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நேரடிக் கருத்துப்பிரதிவாதம் ஒன்றை நடாத்துவதற்கும் சம்மதித்தது. இக்கருத்துப்பிரதிவாத நிகழ்வில் பல தமிழர்கள் கலந்துகொண்டு கேள்விகளை கேட்டு விளக்கமும் அழித்தனர்.
தோடர்விளைவாக கடிகதியாக சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் சிந்திக்காமல் முன்னெடுத்த இச் செயற்பாடு மந்தகெதியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இக் கவனயீர்ப்புக்காக நாம் சேர்த்த கையெழுத்துக்கள் எதிர்வரும் 23.06.2011வியாழன் உத்தியோகபூர்வமாக கையழிக்கப்படவுள்ளது. ஆகவே அனைத்துத் தமிழீழ மக்களையும் சமூகமழிக்குமாறு உரிமையுடன் அழைக்கி;ன்றோம்.
சுவிஸ் ஈழத்தமிழரவை
தொடர்புகளுக்கு: 078 602 95 62


No comments:
Post a Comment