யாழ்.மாவட்டங்களிலிருந்து, இளம் பெண்களையும், பிள்ளைகளையும் தனித்து கொழும்புக்கு அனுப்ப வேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.வடபகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள் கொழும்பில் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, அனோமா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் :
வடபகுதியிலிருந்து தொழில் பெற்று தருவதாக அழைத்து வரப்பட்ட ஏழு பெண்கள் கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் ஒன்று எமக்கு தெரியவந்தது. உடனடியாக குறித்த இடத்துக்கு சென்றோம். எனினும் அங்கிருந்தவர்கள் அவ்வாறு ஒருவரும் இங்கு இல்லை என கூறினர். அவர்களுடைய பதிலில் சந்தேமகிருந்ததால், அவர்களையும் மீறி அந்த இடத்தை சோதனையிட்டோம். அப்போது அலமாரி போன்ற சிறிய இடம் ஒன்றில் ஏழு பெண்கள் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எமது அதிகாரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது. பின்னர் அவர்களளை ஒருவாறு மீட்டெடுத்தோம். இப்போது குறித்த பெண்கள் அவர்களது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இடத்திருந்து தப்பிய சிறுமி ஒருவர் வழங்கிய தகவலின் படியே அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை நடத்தி சென்றவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை கருதியே இவ்வேண்டுகோளை விடுக்கிறேன். வடக்கின் ஏழ்மையை நிலையை கருத்தில் கொண்டு தொழில் பெற்றுத்தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்கின்றனர். எனவே இந்த விடயத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment