
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்திய பல முக்கிய உயர் இராணுவ அதிகாரிகள் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போரின் போது முன்னணி செயற்பாடுகளை மேற்கொண்ட பிரிகேடியர்கள், ஜெனரல்கள் கொத்துக் கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் 30,000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கான ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதியரசர்களில் ஒருவர் சுகயீனமுற்ற காரணத்தினால் இன்றைய வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment