இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜூன் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை “மே 17 இயக்கம்” முன்னின்று நடத்துகிறது.
ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment