இம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.
அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.
விடுதலைப் புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும்..... தமிழ் மக்கள் ஆட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் அமையும்.
இலங்கை அரசு 2009க்கு பிறகு எங்கள் மண்ணில் விடுதலைப் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் விடுதலைப் புலிகளுக்கு தடை நியாயமா.
எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கான தடை நீங்கும்.... பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.


No comments:
Post a Comment