இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்று தமிழகத்தின் பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளனர்.குறைந்தளவான தொகையினரே சமவுரிமைகளின் அடிப்படையில இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் பொது கற்கைகளுக்கான நிலையமான Loyola College நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆயவில் பங்கேற்ற 65 வீதமான மக்கள், இலங்கையின் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழீழமே நிரந்தர தீர்வை தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
70 வீதமான மக்கள், இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் அமர்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
74 வீதமானோர், மத்திய அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்காக போராடவேண்டும் என்று கோரியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை 84 வீதமானோர் வரவேற்றுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்கு 42.3 வீதமானோர் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என்பதற்கு 62 வீதமானோர் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த ஆய்வு இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கல்விமான்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினர் உள்வாங்கப்பட்டனர்.
இதேவேளை. ஈழத்தின் இறுதிப்போரில் 146 ஆயிரம் பேர் காணாமல் போனமை மாத்திரமன்றி, தமிழர்களின் கலாசாரமும் அழிக்கப்பட்டு வருவதாக இந்த ஆய்வின் போது தமிழகத்தின் சமூக நடவடிக்கையாளர் ஒருவ்ர் கருத்துரைத்துள்ளார்.


No comments:
Post a Comment