
சுவிற்சலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டாம் என்று கோரி இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் பேர்னில் கையெழுத்துப் போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.
சுவிஸுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த இலங்கைத் தமிழர்களில் 2225 பேர் வரையானோர் கடந்த வருட இறுதியில் நாடு கடத்தப்பட வேண்டிய நிலைமையை எதிர்கொண்டு உள்ளானார்.
ஆனால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்ற பட்சத்தில் சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள், உயிராபத்துக்கள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றமைக்கு நேரலாம் என்று அஞ்சுகின்றார்கள்.
இந்நிலையில் தமிழீழ சுவிஸ் கழகம் உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
கோரிக்கைக்கு ஆதரவாக 4844 கையொப்பங்களை சேகரித்து உள்ளார்கள்.


No comments:
Post a Comment