இலங்கையில் 2009 இல் போர் நடந்தவேளை அரங்கேறிய போர்க் குற்றங்களைக் காண்பிக்கும் விவரணப் படத்தை வெளியிட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி, அதில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் இலங்கை விவகாரத்தை சரியாகக் காண்பிக்கவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இலங்கைப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில், பான் கி மூன் அவசரமில்லாத ஒரு விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டு, அங்கிருந்த அகதி முகாமுக்கும் சென்று, அங்கிருந்த அகதிகளுடன் பேசினார் என்று கூறியுள்ள ஐ.நா பேச்சாளர், இது சனல் 4 வீடியோவில் காட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.மேலும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை பான் கி மூனே உதாசீனப்படுத்துகிறார் என்ற கருத்தை பேச்சாளர் மறுத்துள்ளதோடு, இலங்கை தேசிய பொறிமுறை ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பான் கி மூன் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றுள்ளார். மேலும், இந்த அறிக்கை பற்றி நடவடிக்கை எடுக்க ஒன்றில் இலங்கை அரசின் சம்மதம் வேண்டும் அல்லது சர்வதேச அமைப்பின் பணியாணை ஒன்று தேவை என்றும் அவர் கூறினார்.
பான் கி மூனுக்கு சனல் 4 வீடியோ குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளதாம்.


No comments:
Post a Comment