
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் தரப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரமான ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்றைய நாடாளுமமன்ற அமர்வின் போது பிரஸ்தாப தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது நந்திக் கடலில் இடம்பெற்ற மோதலின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட போதும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கொல்லப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள் எங்கு உள்ளார்கள், அந்தத் தகவல் அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பன போன்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி. தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.


No comments:
Post a Comment