
லிபியா நாட்டை கடந்த 41 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபி பதவி விலகக்கோரி அந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடாபி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக திரிபோலி நகர் மீது குண்டு வீசி வருகிறது.
சமீபத்தில் கடாபியின் மாளிகை மீது நடந்த தாக்குதலில் அவரது இளையமகனும், 2 பேரகுழந்தைகளும் பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடாபி தானும் கொல்லப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் பாதாள அறைகளிலும், பதுங்கு குழிகளிலும் முடக்கி கிடக்கிறார். எனவே அவர் தன் உயிரை காப்பாற்றி கொள்ள திரிபோலியை விட்டு தப்பி ஓட திட்டமிட்டு இருக்கிறார்.
திரிபோலிக்கு வெளியே வேறு இடத்தில் பதுங்க அவர் முடிவு செய்து இருக்கிறார்.


No comments:
Post a Comment