Saturday 23 June 2012

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்

பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.

இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேலும் 9 மாவீரர்களினதும் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

பெரியமடு ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்.

லெப்.கேணல் தனம் (ஐங்கரன்), நாகலிங்கம் யோகராஜ், கேப்பாப்புலவு, முல்லைத்தீவு

மேஜர் சிவதீபன் (திருமகன்), பாக்கியராஜா புலேந்திரராஜா கதிரவெளி, மட்டக்களப்பு

மேஜர் துளசி (இராமலிங்கம் குகபாலிகா) காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

மேஜர் ரதி (சாமித்தம்பி தேவி) சந்திவெளி, மட்டக்களப்பு

மேஜர் இந்திரா (இராமு சித்திராதேவி) இறம்பைக்குளம், வவுனியா

மேஜர் கோகுலநாதன் (சாந்தன்), சூசையா பயஸ், கல்லடி, மட்டக்களப்பு

மேஜர் விமல் (நிமல்) பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ், பேசாலை, மன்னார்

மேஜர் விவேகன் (சந்திரபிரபா) யோகராசா தில்லைநாதன், பெரியபேரதீவு, மட்டக்களப்பு

மேஜர் ஈழமூர்த்தி (வரதராஜ்) அன்பழகன் துஸ்யந்தன் , செங்கலடி, மட்டக்களப்பு

கப்டன் அன்பரசி (இராஜரட்ணம் ரஜனி) மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் பவளம் (விக்னேஸ்வரராஜா கேமலதா), மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் இந்திராணி (கந்தையா புஸ்பராணி ), புளியங்குளம், வவுனியா

கப்டன் அறிவுமாறன் (அரி) (கந்தையா சுதாகரன்), தர்மபுரம், கிளிநொச்சி

கப்டன் பெரியதம்பி (முகுந்தன்) தியாகரராஜா நிதிராஜா, அல்வாய், யாழ்ப்பாணம்

கப்டன் பரமலிங்கம் (நடராஜா ராஜரஞ்சித்) , பொத்துவில், அம்பாறை

கப்டன் பூலோகன் ( இராமநாதன் பரமசிவம்) கொடிகாமம், யாழ்ப்பாணம்

கப்டன் ஜெயச்சந்திரன் (சிதம்பரப்பிள்ளை சிவநாதன்), மாங்குளம், முல்லைத்தீவு

கப்டன் அனார்தன் (சுஜி) நாகமணி கோபாலரத்தினம், கோவில்போரதீவு, மட்டக்களப்பு

கப்டன் லீலாகரன் (ரவி) செல்வராசா ரவீந்திரன், வெல்லாவெளி, மட்டக்களப்பு

கப்டன் மதனரூபன் (சோமசுந்தரம் இசைச்செல்வன்), கல்லடி, மட்டக்களப்பு

கப்டன் புதியவள் (லோகிதாஸ் சாந்தமீனா), மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்

கப்டன் அன்பு (தங்கராசா மகேஸ்வரி) உருத்திரபுரம், கிளிநொச்சி

கப்டன் நித்திலா (சுபைதா), ( கனகலிங்கம் தர்சனி), அரியாலை, யாழ்ப்பாணம்

கப்டன் தமயா ( விஸ்வலிங்கம் சித்திராதேவி) ,முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

கப்டன் கலை (இரத்தினம் ராஜகுமாரி), சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் திவ்யா ( இராமலிங்கம் தேவகி), பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கீர்த்திராஜ், (யோகநாதன் புஸ்பநாதன்), கொம்மாதுறை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சுரேஸ் (சுந்தரலிங்கம் சந்திரசேகர்), செங்கலடி, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்), வீரக்குட்டி பிரகலாதன், கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ் (குமாரசாமி குலசிங்கம் ) மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயமூர்த்தி (நாகையா அசோக்குமார் ), மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயவன் (குகராசா ரவீந்திராஜா), பெரியபோரதீவு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கனகமுகன் (கோபாலசிங்கம் நிர்மலன்), மட்டக்களப்பு

லெப்டினன்ட் பௌணராஜ் ( சீனித்தம்பி ஜெகன்), ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் பொன்னப்பன் (நாகமணி கேந்திரமூர்த்தி), காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கமண்டலன் (நடராசா யோகராசா), ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் (பரமேஸ் கவிதா ), கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு

லெப்டினன்ட் ஆரணி ( கறுப்பையா அமுதவல்லி ) பெரியகுளம், வவுனியா

லெப்டினன்ட் நிரஞ்சனா (சின்னையா லோஜினி), சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நித்தியா (திரவியம் அமுதினி), கோப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி) இரத்தினம் வதனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நந்தா (கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம்), வேலணை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சுயந்தன் ( பழனியாண்டி சங்கர்), புளியங்குளம், வவுனியா

லெப்டினன்ட் ஈழவண்ணன் (கேசவன் வாமதேவன்), மாத்தளை, கண்டி

லெப்டினன்ட் ஈழமாறன் (செல்வன் செல்வச்சந்திரன்), தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் மித்திரன் (செல்லத்துரை சுரேஸ்குமார்), மூதூர், திருகோணமலை

லெப்டினன்ட் இயல்வாணன் (தியாகராசா சிறிகாந்தன்), இரத்தினபுரம், கிளிநொச்சி

லெப்டினன்ட் ஈசன் (வேலு ரவி), நொச்சிக்குளம், வவுனியா

லெப்டினன்ட் அப்பன் (காந்தி) முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன், சித்தங்கேணி, யாழ்ப்பாணம்,

லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்) பொன்னுத்துரை கிருபாகரன், சுழிபுரம், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் இசைமொழி, சித்திரவேல் மோகன், கதிரவெளி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குமரலிங்கம், தங்கராசா சிவலிங்கம், கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் கதிரன் (உருத்திரமூர்த்தி கரிகாலன்), கொக்குவில், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ரஜனி (ராஜன்) கணேஸ் புனிதரூபன், இருதயபுரம், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் தர்மதேவன் (கந்தசாமி சசிகரன்), செங்கலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் புவிதாசன் (ஆறுமுகம் ரஞ்சன்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் திருமேனி (மகேசன் ரஜினிகாந்), நாவலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குருகுலன் (நல்லதம்பி பாஸ்குமாரன்), கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் வரோதயன் ( மோகனசுந்தரம் தேவராஜ் ), ஆரையம்பதி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா (நித்தியானந்தன் செல்வானந்தி), நல்லூர், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் பரிமளா ( அழகுதுரை கோமதி), சம்பூர், திருகோணமலை

2ம் லெப்டினன்ட் யாழமுது (யாழரசி) கடம்பேஸ்ரன் வசந்தமலர், ஜெயந்திநகர், கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் ஈழநிலா ( ஐயாத்துரை றேணுகாதேவி), ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் இளம்பிறை ( சிவலிங்கம் மகேந்திரன்), கொம்மாதுறை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் (கனகலிங்கம் சுலேந்திரகுமார்), திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சரவணன் (சுப்பிரமணியம் கருணாகரன்), திருகோணமலை

வீரவேங்கை ஜெயாதுயிலன்( இராஜகோபால் கரிகிஸ்ணன்) திருக்கோவில், அம்பாறை

வீரவேங்கை சகாதேவன்( ஏரம்புமூர்த்தி மேகநாதன்) பேத்தாளை, மட்டக்களப்பு

வீரவேங்கை ஜெயானந்தன் (சித்திரவேல் ஜெயக்குமார்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை இன்பன் (நவரட்ணம் சுபானந்தம்), கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரவேங்கை நீலரட்ணம் ( விநாயகப்பிள்ளை யோகராசா), கிரான், மட்டக்களப்பு

வீரவேங்கை லோகதாசன் (கண்ணப்பன் சந்திரமோகன்), செங்கலடி, மட்டக்களப்பு

வீரவேங்கை வேணுகோபன் (வல்லிபுரம் குணரட்ணம்), தாளங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை சண்முகதாஸ் ( ஐயாத்துரை சந்திரகுமார்), கரடியனாறு, மட்டக்களப்பு

வீரவேங்கை நன்மாறன் ( பொன்னுத்துரை யமுனாநந்தன்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை ரட்ணேஸ்வரன் ( யோகராசா செந்தில்நாதன் ), பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரவேங்கை சுபத்தனன் (இளையதம்பி விநாசித்தம்பி), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை முரளீஸ்வரன் (இராசசிங்கம் பவளசிங்கம் ) களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரவேங்கை சம்மந்தக்குமார் (பொன்னம்பலம் சிவகுமார்), கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை வசந்தா (முத்துரட்ணம் ரஜனி) மூதூர், திருகோணமலை

வீரவேங்கை திருச்செல்வி (சண்முகராசா ரமா), முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரவேங்கை செம்பருத்தி (கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி), கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இன்னழகன் (சின்னராசா சிவசண்முகம்), புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

இதேநாள் பனிக்கநீராவியடிப் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரரின் விபரம்.

மேஜர் தயாபரன் (கதிர்வேல் கிருஸ்ணகுமார்) உருத்திரபுரம், கிளிநொச்சி

புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர் சிவகுரு சந்திரன் அருளாநந்தன், மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் சிந்தையன், செல்லையா சௌந்தரராஜா கிரான், மட்டக்களப்பு

கப்டன் புயல்வீரன் நித்தியானந்தன் பிரபுகாந்தன், இணுவில், யாழ்ப்பாணம்

கப்டன் கஜமுகி (மதி) மயில்வாகனம் கீதாஞ்சலி, பொக்கணை, முல்லைத்தீவு

கப்டன் தமிழினி (வர்ணா) அந்தோனிப்பிள்ளை ஆனந்தி, செட்டிகுளம், வவுனியா

கப்டன் தேவகி( சின்னராசா பத்மராணி ), யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் பவளராணி ( கனகரத்தினம் கலாநிதி), அல்வாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் காங்கேசன் ( செல்லத்துரை சுரேஸ்குமார்) ,விசுவமடு, முல்லைத்தீவு

பிரணாப்பை ஒருமனதாக ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை! பாஜக நிராகரிப்பு!

குடியரசுத் தலைவர் தேரதலில் பிரணாப் முகர்ஜியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. தங்களது வேட்பாளர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிட பேசிய ரவிசங்கர் பிரசாத், குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தவரான பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதே சிறந்த முடிவு. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இவர் மக்களவை தலைவராகவும் இருந்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த சங்மா நாட்டு மக்களிடையே பிரபலமானவர். மக்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருக்காக பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் என்றார்.

முன்னதாக வெளிநாட்டுப் பயணம் முடிந்து விமானத்தில் நாடு திரும்பும்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் அறிவிக்கப்பட்டவுடன் அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லியுடன் பேசினேன். பிரணாப்பை போட்டியின் தேர்வு செய்ய உதவிடுமாறு கோரினேன். திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்ட பிரணாப்பை ஆதரிக்கும என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை என்றார்.

அமெரிக்காவிடம் கையளித்த ஆவணம் குறித்து சண்டேலீடர் இலங்கை அரசாங்கத்துக்கு சவால்

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை வலியுறுத்தி வருகிறார். எனினும் அமரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனிடம் இலங்கை இரண்டு பக்க செயன்முறை அறிக்கையை கையளித்துள்ளதாக சண்டேலீடர் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

அதில் குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயன்முறை கூறப்பட்டுள்ளதாக சண்டேலீடர் தெரிவித்துள்ளது.

இந்த செயன்முறை திட்டம் கடந்த மே 18 ஆம் திகதி ஜி.எல். பீரிஸினால், ஹிலாரி கிளிங்டனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சின் கண்காணிப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தநிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறுகிய காலத்தில் செயற்படுத்தக்;கூடிய பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்த இலங்கைக்குழு உறுதியளித்துள்ளது.

நடுத்தர மற்றும் இறுதியுத்தம் தொடர்பான நீண்ட கால பரிந்துரைகள் உரிய காலங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கைக்குழு அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.

இறுதிப்பரிந்துரைகள் 8 அம்சங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் தேசியப் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனையே ஹிலாரி கிளிங்டனும் செயன்திறன்மிக்க நல்ல திட்டம் ஒன்றை இலங்கை கையளித்துள்ளது என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் தாம் அமெரிக்கர்களிடம் எவ்வித செயன்முறை ஆவணங்களையும் கையளிக்கவில்லை என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தொடர்ந்தும் கூறிவருகிறார்.

எனவே இன்று தாம் பிரசுரித்துள்ள இந்த செய்தியை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மறுப்பாரானால்,அமெரிக்காவிடம் கையளித்த உறுதிமொழி ஆவணத்தை முழுமையாக வெளியிடப்போவதாக சண்டே லீடர் அறிவித்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களும் – தமிழ் கூட்டமைப்பும் இணைவதன் பலத்திலேயே தமிழ்மக்களின் எதிர்காலம்

இலங்கையில் புலிகளின் போராட்டத்திற்குப் பிறகுதான் இனப் பிரச்சினை உண்டு ௭ன்பதனை சர்வதேசத்திற்கு தெரிய வந்ததுடன் இன்றைய ஜெனீவா பிரேரணை வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்ததிலிருந்து தான் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் முன்னெடுக்கக் கூடிய நிலைக்கு வந்ததெனலாம்.

இந்த விடயத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும் கூட இலங்கையின் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை இலங்கையில் ஆட்சி செய்த பேரினவாத அரசாங்கங்கள் சர்வதேசத்திற்கு இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையென்றும், ஒரு குழுதான் இலங்கையில் பயங்கரவாதம் செய்வதாகவும் அந்தப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் தான் ௭ன்றெல்லாம் சர்வதேசத்திற்கு கூறி வந்தது.

இலங்கை பேரினவாத அரசு தெரிவித்து வந்த போதிலும் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் 30 வருடம் உலகப் புகழ் பெற்ற ஒரு போராட்ட இயக்கமாக சர்வதேசத்தால் புகழப்பட்ட காலம் இருந்ததை உலகம் அறியும். தமிழர்களின் இனப் பிரச்சினையைத் தீர்க்கவென இலங்கை அரசுகளுடன் தமிழரசுக் கட்சி செய்த பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் ௭ல்லாம் கிழிந்தெறிந்த வரலாற்றை நாம் அறிவோம்.

இவ்வாறு பல உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு பின்பு செயலிழந்த போதிலும் தமிழ் அரசு கட்சி, தமிழ் விடுதலை கட்சி, தமிழர் கூட்டமைப்பு ௭ல்லாம் அரும்பாடு பட்டு வந்திருந்தாலும் சர்வதேசத்திற்கு தமிழர்களின் இனப்பிரச்சினையை கொண்டு சென்ற அமைப்பு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

மேலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தையையும் குறிப்பிடலாம். மேலும் இன்னும் பல ஒப்பந்தங்களும் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் யுத்த நிறுத்தங்களுமாக பல பேச்சுவார்த்தைகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டுத் தொடர்புடனும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நடந்து முடிந்துள்ளது.

2009 மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரைக்கும் தமது வயோதிப பருவத்தில் கூட தமிழ் மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமலும் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் துணிவுடன் நின்று தமிழ் மக்களின் உரிமைக்காக கருமமாற்றியவர் இரா. சம்பந்தன் ஐயா ௭ன கூறலாம்.

முடிவடைந்த போர் பெருந்தொகையான தமிழ் மக்களே பலியானதுடன் இடம்பெயர்ந்த மக்கள், அகதியான மக்கள், காணாமல் போன மக்கள் ௭ன பல்லாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் ௭ன இந்த நிர்க்கதிக்குள் ஆக்கப் பட்டனர். இந்த நிலை இன்றுவரைக்கும் முடிவில்லாத கதையாகத்தான் இருக்கின்றது. மேலும் அகதி வாழ்க்கை வாழும் மக்களாகத்தான் காணப்படுகின்றனர்.

இந்த யுத்தத்தின் பின்பு அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி சிங்கள மக்களும் சிங்கள அரசும் சந்தோசமாக இருந்த போது தான்... சர்வதேச சமூகம் சம்பந்தப்பட்டு சர்வதேச சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீறியதாக கூறி தமிழ் மக்களை மீளக்குடியேற்றுமாறு கூறிய போதும் கூட இலங்கை அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் அகதி மக்களை கம்பி வேலி போட்டு அடைத்து ஆடு மாடுகளைப் போன்று வைத்திருந்தது.

இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. மேலும் இந்த நடிவடிக்கை மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றியும், துன்புறுத்தியும் வந்த நிலைதான் அமெரிக்கா நாடு சம்பந்தப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ௭திராக ஒரு பிரேரணையை அமெரிக்கா முன் வைத்து அந்த பிரேரணையில் இலங்கை தோல்வி அடைந்த நிலையில் தான் இன்று இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்ட விடயத்தில் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை சர்வதேச அரங்கில் மேலோங்க வைக்க தமிழ் கூட்டமைப்பு பங்களித்தது போன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைந்தது. அத்துடன் இந்திய தமிழ் மக்களின் பங்களிப்பும் பெரியதெனலாம்.

புலம்பெயர் அமைப்புக்களும் புலம் பெயர் மக்களால் அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இவற்றையெல்லாம் ஒருங்கமைத்து ஐ.நா. சபை முன்பாக ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் ஒன்றுபட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தும் இலங்கைக்கு ௭திரான ஜெனீவா பிரேரணையில் இலங்கைக்கு ௭திராக ஆதரவைப் பெற்றதுடன் தமிழ் மக்களின் இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு ௭ட்டும்படி செய்தமையை நாம் அறிவோம்.

மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அதன் பரிந்துரைகளை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினைத் தீர்வு கொடுக்க விரும்பாத அரசாங்கம் சர்வதேசத்திடம் தப்பிக் கொள்ளவே அந்த ஆணைக்குழு அறிக்கையை சர்வதேசத்திடம் முன் வைத்தது.

ஆனால் அரசாங்கம் ஜெனீவா பிரேரணையில் தோல்வி அடைந்த போதுதான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்படி சர்வதேசமும் ஐ.நா. சபை, மனித உரிமைப் பேரவையும் அமெரிக்காவும் கூறி வரும் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்று சர்வதேசத்தின் கைகளில் உள்ளது.

இந்த கால கட்டம் தமிழ் மக்களின் இன அழிப்பு அதிகமாக நடந்ததென்ற வலி அதிகரித்திருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் முக்கியமான ஒரு கட்டமாகும். ௭னவே தான் சர்வதேச மயமாக்கப்பட்ட இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பு மிக முக்கியமாக பங்காற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனித்து தமிழ் கூட்டமைப்பு மாத்திரம் தமிழர் இனப்பிரச்சினையை முன்னெடுத்து ௭திர்காலத்தில் வெற்றி பெறுவது கஸ்டமாகிவிடும் ௭ன்பதால் தமிழ் கூட்டமைப்பு சர்வதேசத்தில் புலம் பெயர் தமிழ் மக்களுடன் அங்குள்ள அமைப்புக்களுடனும் தமிழ் ஈழ அரசுடனும் இணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடும் தேவையும் உண்டு.

இவ்வாறு செய்யாது விடும் பட்சத்தில் இலங்கை பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு ௭ந்தவிதமான தீர்வுத் திட்டமும் இனிக் கொடுக்காது இலங்கை அரசாங்கம் இதற்கென தனது இலக்கை அடையவென தமிழ் – முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிறு கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாவும் ஆக்கி அவர்களைக் கொண்டு இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டம் கொடுபடாமல் இருப்பதற்கான சகலவிதமான நடவடிக்கைகளையும் இந்த இரு சமூகத்திலுள்ள சிறு கட்சித் தலைவர்களையும் கொண்டு தமிழ் இனத்தின் தீர்வுத் திட்டம் கொடுபடாமல் ஆக்குவதில் பேரினவாத அரசாங்கங்கள் மிகவும் மும்முரமாக செயற்படும் ௭ன்பதில் ௭ந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

மேலும் முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பாடாததற்கு அதற்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருந்து விடக் கூடாது ௭ன்பதற்காக வேண்டியும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸையும் இணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனுக்கு உண்டு. இதில் பெரிதும் கவனம் ௭டுக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் அதிகம் உண்டு ௭னலாம்.

ஜின்னா

வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்! ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்!

இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: இலங்கையில் போருக்கு முன்னும், பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன. தேவாலயங்களை தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களையும் கொலை செய்தும் கடத்தி சென்றும் விடுகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அரசினர் அடக்கு முறைகளை, உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அங்கு வாழ இனி வாய்ப்பு இல்லை.

எல்லா மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் அனைத்து கோவில்களும் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித உரிமை அங்கு இல்லை. இது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியாகும்.

மதத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், கலாசாரத்திற்கு எதிராகவும் நடக்கின்றன. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும்.

ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது

இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியர் சரஸ்வதி, தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் போருக்கு முன்னும், பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது. இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன. தேவாலயங்களை தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களையும் கொலை செய்தும் கடத்தி சென்றும் விடுகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அரசினர் அடக்கு முறைகளை, உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக் கிறது. தமிழர்கள் அங்கு வாழ இனி வாய்ப்பு இல்லை.

எல்லா மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் அனைத்து கோவில்களும் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித உரிமை அங்கு இல்லை. இது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியாகும். மதத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், கலாசாரத்திற்கு எதிராகவும் நடக்கின்றன. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும். ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம் என்றனர் அவர்கள்.

அரசாங்கம் திடீரென கவிழும் அபாயம்: விக்கிரமபாகு

அரசாங்கத்திலுள்ள சிங்கள பௌத்த இன வாதிகள் வெளியேற்றப்படாவிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எந்த நேரத்திலாவது திடீரென கவிழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கும் நவசம சமாஜக் கட்சி அரசுக்குள்ளேயே அரசுக்கு எதிரான சக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

இது தொடர்பாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மா நகர சபை உறுப்பினருமான கலா நிதி விக்கிரம பாகு கருணாரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்;

அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரியும். அதே போன்று தான் அரசாங்கத்திலுள்ள இன வாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர்.

விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும். ஜனாதிபதி தன்னையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இன வாதிகளை வெளியேற்ற வேண்டும். வெகு விரைவில் இது இடம் பெறும்.

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மன தார விருப்பமில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரிந்துரைகளை அமுல் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்காது. அதன் போது ஆட்சியை தொடர முடியாது போகும். கியூபாவால் எமக்கு உதவி செய்ய முடியாது. அந்தளவுக்கு அந் நாடு செல்வந்த நாடல்ல.

எனவே மிக விரைவில் அரசிற்குள்ளிருக்கும் இன வாதிகள் வெளியேற்றப்பட்டு பரிந்துரைகள் அமுல் படுத்தப்படும் நிலைமை உருவாகும்.

இவ்வாறான இன வாதிகள் இந்த நாட்டில் தோன்றியமையானது சிங்கள , பௌத்த மக்கள் செய்த “பாவம்’ ஆகும். அரசுக்குள்ளேயே அரசை கவிழ்க்கும் சதித் திட்டம் தோல்வி அடையாவிட்டால் ஜனாதிபதியின் ஆட்சி பறி போகும் என்றார்.

அரசியல் தீர்வு காண ஏன் தாமதம் மன்மோகன் சிங்

இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டப்படுவது ஏன்? என இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.

தீர்வுக்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி விரைவில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரேஸில் ரியோடி ஜெனிரோவில் உள்ள வின்ட்ஸர் ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கும், பிரதமர் மன்மோகனுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணிநேரம் இரு தலைவர்களும் தனியே பேச்சு நடத்தினர். பின்னர் உத்தியோகபூர்வப் பேச்சு நடந்தது.

நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் விரிவாகக் கேட்டறிந்ததுடன் அதனைத் துரிதப்படுத்தி தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க எடுக்கப்படும் முயற்சிகளை இந்தியா உத்வேகத்துடன் வரவேற்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை துரிதமாக எட்டுவதன் மூலம் இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்கொண்டுவரும் அழுத்தங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியும் எனவும் மன்மோகன் சிங் மஹிந்தவிடம் கூறியுள்ளார். நிலையான நிரந்தரமான தீர்வை எட்டும் விடயத்தில் இலங்கைக்கு இந்தியா எந்த நேரத்திலும் உதவிகள் வழங்க தயாராக இருக்கிறது எனவும் இந்தச் சந்திப்பில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நிலைமை குறித்து மன்மோகனுக்கு விளக்கிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அகதி முகாம்களில் இருந்தவர்களுள் சுமார் மூன்று லட்சம் பேர் வரையானோருக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் ஆரம்பமாகிவிடுமென இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மஹிந்தவிடம் இதன் போது உறுதியளித்தாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

அறிவிப்பை வாபஸ் வாங்கியது ஆஸி. கடற்பாதுகாப்புச் சபை

சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்று ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதுவர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் இலங்கையர்கள் என முன்னர் அறிவித்த ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபை பின்னர் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கியதுடன் இலங்கையர்கள் எவரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அறிவித்தது.

இலங்கையர்கள் என நம்பப்படும் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்றுமுன்தினம் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஏ.எப்.பி மற்றும் சிட்னி மோனிங் ஹரால்ட் ஆகியன செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த படகு விபத்தில் சுமார் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அது கூறியுள்ளது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 110 பேரை இந்தோனேசியப் கடற்பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட 110 பேரில் 4 பேர் பின்னர் உயிரிழந்ததாகவும் இவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை எனவும் இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவர் நந்த மல்லவராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வந்து விபத்துக்குள்ளான படகில் இலங்கையர்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அநேகமானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என ஆஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.

200 பேர் பயணித்ததாகக் கூறப்படும் படகு விபத்துக்குள்ளானதில் 110 பேர் தற்போது உயிருடன் இருப்பதாகவும் 90 பேர்வரை காணாமல் போயுள்ளதாகவும் ஆஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தின் ஊடாக அவதானித்த போது பலர் உயிர்காக்கும் அங்கிகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் உயிர்காக்கும் அங்கிகள் கடலில் மிதந்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.கவிழ்ந்த படகு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதா என்பது பற்றி நிச்சயமாக எதுவும் கூறமுடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகு இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
படகில் பயணித்த பிரஜைகள் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்கள் இந்தப் படகில் இருந்தமை தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளிவரும் நிலையில், எங்கிருந்து இந்தப் படகு புறப்பட்டுச் சென்றது என எங்களால் நிச்சயப்படுத்திக் கூறமுடியாதுள்ளது’ எனவும் அவர் கூறினார்.

இந்த அனர்த்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எவரும் இருக்கவில்லை என இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அணைந்து போகவுள்ள விளக்கு போன்று தான் அரசாங்கத்திலுள்ள இன வாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர்


அரசாங்கத்திலுள்ள சிங்கள பௌத்த இன வாதிகள் வெளியேற்றப்படாவிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எந்த நேரத்திலாவது திடீரென கவிழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கும் நவசம சமாஜக் கட்சி அரசுக்குள்ளேயே அரசுக்கு எதிரான சக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

இது தொடர்பாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மா நகர சபை உறுப்பினருமான கலா நிதி விக்கிரம பாகு கருணாரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்:

அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரியும். அதே போன்று தான் அரசாங்கத்திலுள்ள இன வாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும். ஜனாதிபதி தன்னையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இன வாதிகளை வெளியேற்ற வேண்டும். வெகு விரைவில் இது இடம் பெறும்.

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மன தார விருப்பமில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரிந்துரைகளை அமுல் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்காது. அதன் போது ஆட்சியை தொடர முடியாது போகும். கியூபாவால் எமக்கு உதவி செய்ய முடியாது. அந்தளவுக்கு அந் நாடு செல்வந்த நாடல்ல.

எனவே மிக விரைவில் அரசிற்குள்ளிருக்கும் இன வாதிகள் வெளியேற்றப்பட்டு பரிந்துரைகள் அமுல் படுத்தப்படும் நிலைமை உருவாகும். இவ்வாறான இன வாதிகள் இந்த நாட்டில் தோன்றியமையானது சிங்கள , பௌத்த மக்கள் செய்த "பாவம்' ஆகும். அரசுக்குள்ளேயே அரசை கவிழ்க்கும் சதித் திட்டம் தோல்வி அடையாவிட்டால் ஜனாதிபதியின் ஆட்சி பறி போகும் என்றார்.

கரிகாலன் - மாறினார் இயக்குநர்!

Gandhikrishana Takes Over Karikalan

விக்ரம் நடிக்கும் சரித்திரப் படம் கரிகாலன் பற்றி கொஞ்ச நாட்களாக சத்தத்தையே காணோம்.

விசாரித்ததில் ஒரு சின்ன வில்லங்கம் தெரிந்தது.

இந்தப் படத்தின் இயக்குநராக முதலில் ஒப்பந்தமானவர் எல் ஐ கண்ணன். இவர் மணிரத்னத்திடம் பணியாற்றியவர்.

படம் ஆரம்பித்த சில தினங்களில், ராஜசேகரன் என்பவர், படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என கேஸ் போட, படம் அப்படியே நின்றது. சிக்கல் தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், படத்தின் இயக்குநர் மாறிவிட்டாராம்.

இப்போது படத்தை இயக்குபவர் கண்ணன் அல்ல... கதை வசனத்துக்கு சொந்தக்காரரான காந்திகிருஷ்ணா. செல்லமே, நிலாக்காலம் படங்களை இயக்கியவர் இவர்.

தயாரிப்பாளர்கள் அதே வாசன் மற்றும் பார்த்திதான். விக்ரம் ஜோடியாக ஜரின்கான் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

நான் ராஜாவாகப் போகிறேன்! - ஒரு விறுவிறு அரசியல் த்ரில்லர்!

Naan Rajavaagap Pogiren Political Thriller

நான் ராஜாவாகப் போகிறேன் - இது விரைவில் வரவிருக்கிற ஒரு படத்தின் தலைப்பு.

உதயம் வி.எல்.எஸ். சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக நகுல், நாயகியாக சாந்தினி நடிக்கின்றனர்.

நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லிகணேஷ், மயில்சாமி, அவனிமோடி, கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் என பெரிய பட்டாளமே இதில் உண்டு.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிருத்வி ராஜ்குமார் இயக்குகிறார். வின்னர் படத்தில் சுந்தர் சியுடன் பணியாற்றியவர். பின்னர் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து பொல்லாதவன் படம் செய்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் பிருத்வி ராஜ்குமார் கூறுகையில், "இது ஒரு அரசியல் ஆக்ஷன், திரில்லர். பரபரவென இருக்கும் திரைக்கதை பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கே கொண்டுவந்துவிடும்.

கதையின் முடிச்சு இதுதான்... அடுத்த பதினைந்து வருடம் கழித்து மக்கள் பயனடையும் வகையில் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி குரல் கொடுத்து பிரச்சாரம் செய்வர் மணிவண்ணன். அவர் கருத்துக்களை சாந்தினி பின்பற்றினார். இதனால் மணிவண்ணனுக்கு பிரச்சினைகள் உருவாகி அது சாந்தினியையும் பாதிக்கிறது.

சாந்தினியை காதலிக்கும் நகுலையும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை. நகுல், ஐ.டி. படிக்கும் மாணவராகவும், சாந்தினி சட்டக் கல்லூரி மாணவியாகவும் வருகிறார்கள். மணிவண்ணனுக்கு மிக முக்கிய வேடம்.

இயக்குநராக இது எனக்கு முதல் படம். ரொம்ப வித்தியாசமான படம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. படம் பார்த்தால் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதித் தர விரும்பி ஒப்புக் கொண்டார். அது எனக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார், ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற கிஷோர் எடிட்டிங்கை கவனிக்கிறார்.. முதல் பட இயக்குநரான எனக்கு முன்னணி கலைஞர்கள், டெக்னீஷியன்கள் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.

சகுனி - சினிமா விமர்சனம்

Saguni Film Review

நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்

இசை; ஜீவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: பிஜி முத்தையா

பிஆர்ஓ; ஜான்சன்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: சங்கர் தயாள்


அரசியலை மையமாக வைத்து சடையர் வந்து நாட்களாகிவிட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!

கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.

காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!

முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.

தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.

விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.

முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!

முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!

சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.

என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"

பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும்போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ 1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!

மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!

கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை.

இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!

ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம்.

கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்!

-எஸ். ஷங்கர்

'திருநங்கை' ஜெயம் ரவி!

Jayam Ravi As Transgender

அமீர் தன் அடுத்த படமான ஆதி பகவனை எப்போது வெளியில் தரிசனம் காட்டுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

இப்போது அதற்கு விடைகிடைத்திருக்கிறது. ஒரு படம் குறித்து செய்திகள் லேசு பாசாக வெளி வர ஆரம்பித்துவிட்டாலே, படத்தை வெளியில் விட ஆயத்தமாகிறார்கள் என்று அர்த்தம்.

இப்போது ஆதிபகவன் செய்திகள் மீடியாவில் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி - நீத்து சந்திரா ஜோடியாக நடிக்கின்றனர்.

ஜெயம் ரவி முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒருவேடம் திருநங்கை கேரக்டராம்.

ஆரம்ப காலப் படங்களில் விளையாட்டுப் பிள்ளை அல்லது பணக்கார இளைஞனாக நடித்து வந்த ஜெயம்ரவி 'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்தார். 'ஆதிபகவன்' படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டப் போகிறார் என்கிறார்கள்!

பார்க்கக் காத்திருக்கிறோம்...!

பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!

Rajesh Khanna S Health Deteriorates Admitted Hospital

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா கவலைக்கிடமான நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். அவரால் உணவு உட்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ராஜேஷ் கன்னா ஓரளவு உடல் நிலை தேறினார். ஆனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்த தகவல் பரவியதும்,ஏராளமான ரசிகர்கள் ராஜேஷ் கன்னா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்னர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜேஷ்கன்னா 1960கள் மற்றும் 70களின் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர். வெள்ளிவிழா நாயகன். அவருக்கு பல கோடி ரசிகர்கள் உலகெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுல் குல்கர்னி நடிக்கும் சுழல் - இசை வெளியீடு!

Suzhal Audio Launched

தேசப்பற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள த்ரில்லர் படமான 'சுழல்' இசை வெள்ளிக்கிழமை வெளியானது.

ஆர் ஜெயக்குமார் இயக்கியுள்ள சுழல் படத்தில் பாரீஸ் என்ற இளைஞர் நாயகனாக அறிமுகமாகிறார். ரோஸின், சாரு, ஜோதி ஆகிய மூவரும் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் சிறு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் அதுல் குல்கர்னி. இவர், கமலின் ஹேராம் படத்தில் அறிமுகமாகி, லிங்குசாமியின் ரன் படத்தில் பரபர வில்லனாக அறியப்பட்டவர். அதன் பிறகு நிறையப் படங்கள் நடித்துவிட்டார். சின்ன இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையாக துப்பறியும் வேடத்தில் நடிக்கிறார்.

எல்வி கணேஷ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலைப்புலி எஸ் தாணு, பி எல் தேனப்பன், எடிட்டர் லெனின் ஆகியோர் பாடல்களை வெளியிட்டனர்.

இந்தப் படத்தின் இசைக்காக, 80 இசைக்கலைஞர்களை வைத்து லைவ்வாக வாத்தியக் கருவிகளை வாசிக்க வைத்து பதிவு செய்ததாக எல் வி கணேசன் குறிப்பிட்டார். அப்படி லைவ்வாக வாசித்த போதுதான் காட்சிகளுக்கு அதன் உண்மையான உணர்வைத் தர முடிந்ததாகவும் கூறினார்.

பரவாயில்லை... எப்படியோ தமிழ் சினிமா இசை கீபோர்ட்டை தாண்டிவிட்டதில் சந்தோஷமே!

குழந்தை பிறந்தா குண்டாவது இயற்கை... அதுக்காக ஏடாகூடமா ஏதும் செய்துக்கக் கூடாது! - ஐஸ்வர்யா

Aishwarya Says Life Has Become Quie

குழந்தைப் பெற்ற பெண்கள் குண்டாகத்தான் செய்வார்கள், ஆனால் அதற்காக ஏதும் ஏடா கூடமாக செய்து கொள்ளக் கூடாது. அதை நான் விரும்பவும் இல்லை என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

இந்திய சினிமாவின் உச்ச நடிகையாகத் திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் குண்டாகிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கணவர் - குழந்தையோடு சென்றார்.

அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து கேட்டனர்.

ஐஸ்வர்யா கூறுகையில், "குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. தாயானபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

பெண்களுக்கு நான் சொல்வதெல்லாம் மன அழுத்தமின்றி சுதந்திரமாக இருங்கள். மனதை வருத்தும் விஷயங்களை பற்றி சிந்திக்காதீர்கள். குடும்பம் முக்கியம். அவர்களுக்காக வாழுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தன்னம்பிக்கை இருக்கும்.

புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.

வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்," என்றார்.

அடுத்து சகலகலா வல்லவனை ரீமேக் பண்றாங்களாம்... ஹீரோ சூர்யா!

Next Remake Kollywood Is Sakalakala

ரஜினியின் மெகா ஹிட் படமான முரட்டுக்காளையை ரீமேக் செய்து மூக்குடைபட்டதைக் கூட அதற்குள் மறந்துவிட்டு, அடுத்து சகலகலா வல்லவனை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் சூர்யா!

1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.

கதை ஒன்றும் புதிதில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - சரோஜாதேவி நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தைத்தான் சகலகலா வல்லவனாக்கியிருந்தார்கள்.

ஆனால் படத்தின் பெரிய பலம் இசைஞானி இசை. தமிழ் சினிமாவில் எந்த மசாலா படத்துக்கும் அமைந்திராத அளவு மெகாஹிட் பாடல்கள்.

இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இப்படத்தை தாங்களே ரீமேக் செய்வதாக ஏவிஎம் அறிவித்துள்ளது.

இதுபற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.

தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கா கதைப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது?!!

'ஷேர் ராக்கெட்' : செந்திலின் அதிரடி 'தில்லுமுல்லு'!

Vasanth Tv Comedy Seriyal Thillu Mu

ரியல் எஸ்டேட் விற்பனை வந்தாலும் வந்தது அதை வைத்து காமெடி செய்பவர்கள் அதிகரித்து விட்டனர். பத்திரிக்கைகளில் ரியல் எஸ்டேட் காமெடி பக்கம் பக்கமாக வர ஆரம்பித்து விட்டது. இதனிடையே புது சீரியல் மூலம் ரியல் எஸ்டேட் பிஸினசை பிரித்து மேய களம் இறங்கியுள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்.

வசந்த் தொலைக்காட்சியில் திங்கட்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடித் தொடர் தில்லுமுல்லு. நடிகர் செந்தில் நடிக்கும் இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிஸினஸ் மூலம் ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுபவராக வருகிறார் நடிகர் செந்தில்.

இந்த வாரம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவராக வரும் செந்தில், நகர நெருக்கடியில் வீடு வாங்க பிரியப்படாத ஒருவரிடம் `சந்திரமண்டலத்தில் 2 கிரவுண்டை வாங்கிப் போடுங்கள்' என்கிறார். `சந்திர மண்டலத்திலா?' என்று அதிர்ந்து போகும் அந்த நபரிடம், `எப்படி பூமிக்கு வந்து போவது என்ற பயத்தில் தானே இப்படி கேட்கிறீர்கள். இங்கே சென்னையில் தெருவுக்கு தெரு ஷேர்ஆட்டோ ஓடுவது போல் சந்திரனில் இருந்து அடிக்கடி சென்னைக்கு `ஷேர் ராக்கெட்' வரப்போகிறது. அதில் வந்து சென்னை கோயம்பேட்டில் காய்கறி வாங்கி விட்டு திரும்பிப் போகலாம். எனவே போக்குவரத்து பிரச்சினை இல்லை, என்று நம்ப வைக்கிறார். எப்போதுமே பரபரப்பான தி.நகரில் இடம் கேட்பவருக்கு பக்கத்தில் உள்ள பனகல் பூங்காவை பத்திரம் எழுதி கொடுக்கிறார்.

இந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் அவரை எங்கே கொண்டு போகிறது என்பதை நகைச்சுவைக் காட்சிகளுடன் இயக்கி இருக்கிறார், ஜெயமணி. செந்திலின் தில்லு முல்லு ரசிகர்களை ரசிக்கவைக்கத்தான் செய்கிறது

டிஸ்கவரி சேனலில் போராட்டக்களத்தில் சிக்கியவர்களின் கதை

I Shouldn T Be Alive

வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்பார்கள். போராட்டம் மிகுந்த இந்த வாழ்க்கை சூழலில் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக்கொண்டு போராடி மீண்டு வந்தவர்களின் உண்மைக் கதைகளை காட்சிப்படுத்துகிறது டிஸ்கவரி சேனல்.

தினமும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் `ஐ ஷுட் நாட் பி அலைவ்' நிகழ்ச்சியில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் முடிவெடுத்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவகள் ஆகியவற்றை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

பனி படர்ந்த கிர்கிஸ்தான் காடுகளில் ராட்சஸ பனிப்புயலுடன் நடக்கும் போராட்டம், கோஸ்டா ரிக்காவில் சுறாக்கள் நிறைந்த தண்ணீரில் நடக்கும் பயணம், மான்ட்டனா மலைகளில் கரடிகளின் தாக்குதல்கள், ஆப்பிரிக்காவில் காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் என பல்வேறுபட்ட ஆபத்தான சூழல்களையும், அவற்றை சமாளிப்பது பற்றியும் விளக்குகிறது, தொடர்.

இதன் ஒவ்வொரு அத்தியாயமும் மனிதர்களின் தாங்குசக்தியை நிரூபிக்கிறது. அசாதரணமான ஆபத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை மிகத் துல்லியமாக விவரிப்பதை காணலாம்.

கடந்த வாரங்களில் நியூசிலாந்தில் நடைபயணம் மேற்கொள்ளும் இருவரின் கதை ஒளிபரப்பானது. ஒரு பனிச்சுவரை சுற்றி பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நிலையற்ற ஒரு பாறையின் விளிம்பில் பத்து நாட்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹவாயில் உள்ள 3 லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் தேசிய பூங்காவில் பயணம் மேற்கொள்ளும் டூவி, பாதை தவறி ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிருடன் திரும்புகிறார். மலை உச்சியில் இருந்து விழும் ஜோர்டான் நிகுரிட்டி நான்கு நாட்களுக்கு காணாமல் போவதையும், நண்பர்கள் கேரி மற்றும் டேவ் பயணம் செய்த எளிய ரக விமானம் கோளாறு ஆனதால் கரடிகள் மிகுந்த அலாஸ்காவில் சிக்கிக்கொள்வதையும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பதையும் ஒளிபரப்பினார்கள்.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களின் வீர சாகசங்களினால் பார்வையாளர்களை கட்டிப்போடுவதுதான் நிகழ்ச்சிக்கு சிறப்பம்சமாகும்.

எனக்கும் ஆசை இருக்கு - ‘சின்னச்சின்ன ஆசை' தொகுப்பாளினி ஆர்த்தி!

Anchor Aarthi S Chinna Chinna Aasai

சலனப்படுத்தாத பேச்சு, துருதுரு செயல்பாடு, அழகான உச்சரிப்பு, எப்போதும் சிரித்த முகம். இவற்றுக்குச் சொந்தமானவர் சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆர்த்தி. சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சாட் பூட் த்ரி ஆடிக்கொண்டிருந்தார். தினந்தோறும் அடுத்தவரின் ஆசையை நிறைவேற்றும் ஆர்த்தியின் ஆசையை நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

"நான் பாரதி கல்லூரியில் எம்.ஏ., பிசினஸ் எக்னாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது முழுக்கமுழுக்கத் தமிழில் தொகுத்து வழங்க தொகுப்பாளினி வேண்டும் என்ற மக்கள் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். என் திறமைகளுக்கு மதிப்பு அளித்து இந்த வாய்ப்பை அளித்தார்கள். ஆரம்பத்தில் படித்துக்கொண்டே தொகுத்து வழங்கி வந்த நான் தற்போது முழுநேர தொகுப்பாளினி. எனது கல்லூரி நாட்களில் நானே நாடகங்களை இயக்கி நடித்ததால் மேடை அச்சமின்றி பேசக்கூடிய திறமை உள்ளது. அந்தத் திறமை எனக்குப் பேருதவியாக உள்ளது

சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சியை குழந்தைகள் தினத்தன்று வெறும் அரை மணிநேர நிகழ்ச்சியாக நாங்கள் தயாரித்த போதிலும், பார்வையாளர்களின் அதிக வரவேற்பு கிடைத்ததால் வாரந்தோறும் நிகழ்ச்சியாக மாறியது. இதன் மூலம் பெரும்பாலான குடிசைகளைச் சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றணும். என்னுடைய ஆசையை நிறைவேற்றவில்லை என்று ஒரு குழந்தைகூட சொல்லக்கூடாது என்பதில் எங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர்.

மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றால், பேசுவாங்களோ என்கிற தயக்கத்தோடு பார்க்கிற ரசிகர்கள், மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அவங்க குடும்ப உறுப்பினராகப் பாவிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி என்னிடம், ‘உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் என் மகனுக்குத் தேடிக்கொண்டிருக்கேன்'னு சொன்னது மக்களிடையே எனக்குக் கிடைத்த நன்மதிப்பைக் காட்டியது.

தமிழ்தாங்க நம்முடைய தாய்மொழி. அதில் பேசுவதுதான் நமக்கு அழகு. அதுதான் நமக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும். அந்நிய உணர்வு இல்லாம பக்கமா இருக்கிற மாதிரியான உணர்வை தமிழால்தான் ஏற்படுத்த முடியும்.

நிகழ்ச்சி தொகுப்பு தவிர நிறைய புத்தகம் படிப்பேன். இதற்காக எங்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்காகத் தனி நூலகமே அமைத்திருக்கிறார்கள். எத்தனை நிகழ்ச்சிகள் செய்து வந்தாலும், எதிலும் என் தனி அடையாளத்தைப் பதிவு செய்யத் தவறக்கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்கால ஆசை," என்று சொல்லி அதே டிரேட் மார்க் சிரிப்போடு நன்றி சொன்னார் ஆர்த்தி.

ரூ100 கோடி வசூலில் டாப் யார்? பாலிவுட் நடிகர்கள் கடும் போட்டி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேதனை அடைந்தார். கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதால் உடனடியாக அந்த தகவலை டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றியதுடன் கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும் மும்பை திரும்பிய அவர் சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்ததுடன் குடித்துவிட்டு தன்னிலை மறக்கத் தொடங்கினார். தள்ளாடியபடி அவர் நள்ளிரவு பார்ட்டியிலிருந்து வெளியேறிய காட்சிகளை படம் பிடித்து மும்பை பத்திரிகை, இணை தளங்களில் வெளியானது. மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற மனிஷாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறினார். மேலும் திரையுலக நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கோயில் வளாகத்திற்குள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்கிறார். சென்னையில் உள்ள பிரபல தியான மையத்திற்கும் அடிக்கடி வருகிறார். ஆன்மிக வகுப்பிலும் அவர் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். இப்போது தன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறாராம்.


கல்யாணம் பற்றி கேட்காதீர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'என் சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள்' என்று ஆவேசப்பட்டார், அனன்யா. அவர் மேலும் கூறியதாவது: என் திருமணம் பற்றி கேட்காதீர்கள். ரசிகர்களுக்கு என் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நான் நடிக்கும் படங்கள் பற்றி தெரிவிக்க வேண்டியது கடமை. திருமணம் எப்போது நடந்தாலும், பகிரங்கமாக நடக்கும். நானே மீடியாவிடம் சொல்வேன். தமிழில் நடிக்கவில்லை. கன்னடத்தில் நடித்த 'கோகுல கிருஷ்ணா' ரிலீசுக்கு தயார். மலையாளத்தில் பல படங்களில் நடிக்கிறேன். 'ரத்த ரக்ஷக்' படத்தில், முதல்முறையாக அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ஒரு வேடம், பேய். தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் ஷூட்டிங் நடக்கும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் எனக்கு மேக்கப் போடுவார்கள். சைக்கோ த்ரில்லரான இப்படம், கண்டிப்பாக விருது பெற்றுத் தரும். இதில் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.


கிளாமர் காட்டாவிட்டால் ஏற்பார்களா? டாப்ஸி கேள்வி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கிளாமர் காட்டாவிட்டால் ரசிகர்கள் ஏற்பார்களா? என கேட்கிறார் டாப்ஸி. 'ஆடுகளம், 'வந்தான் வென்றான் படங்களில் நடித்தவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்த ஆண்டு எனக்கு இதுவரை 'தருவுÕ என்ற ஒரு தெலுங்கு படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆனாலும் ஓய்வில்லாமல் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறேன். இதன் பிறகு வரிசையாக 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 'சஷ்மே பத்தூர்Õ இந்தி படம் ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நடித்துள்ள 'மறந்தேன் மன்னித்தேன்Õ பட ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதில் கிளாமர் காட்டாமல் நடித்திருக்கிறேன். இதை ரசிகர்கள் ஏற்பார்களா? அவர்கள் இதை எப்படி ஏற்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் Ôமதகஜ ராஜாÕ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து பொள்ளாச்சியில் நடக்க¤றது. இது அச்சு அசல் சுந்தர்.சி முத்திரையுடன் கூடிய படமாக இருக்கும். என்னுடைய சொந்த குணாதசியங்களை உள்ளடக்கிய கேரக்டராக இது அமைந்திருக்கிறது. நேரடி தமிழ் பட ஷூட்டிங்கில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் நடுக்கமாக உள்ளது. பட குழுவில் உள்ள அனைவருக்கும் தமிழ் நன்றாக தெரியும். தமிழ் தெரியாத ஒரே ஆள் நான்தான். விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். சுந்தர் சி., விஷால், வரலட்சுமி என செட்டில் இருப்பவர்கள் ஜோக் ¢அடித்து பேசும்போது அதை புரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


பால் வியாபாரம் போலதான் சினிமாவும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெள்ளித்திரை டாக்கீஸ் சார்பில் முஜீப், ஏ.ஆர்.சூரியன் தயாரிக்கும் படம் 'முதல் தகவல் அறிக்கை'. ராயன், கல்பனா ஜெயம் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராஜபார்த்திபன் ஒளிப்பதிவு. ரவிராகவ் இசை அமைத்துள்ளார். பா.ராஜகணேசன் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா பாடல்களை வெளியிட்டு பேசியதாவது: சினிமாவில் வியாபார படங்கள், கலைப் படங்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாமே வியாபார படங்கள்தான். வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே வியாபார படங்கள்தான். சினிமா வியாபாரம் என்பது பால் வியாபாரம் போன்றது. கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை கறந்து விற்க துணிந்து விட்ட பிறகு அது வியாபாரம் தான். அந்த பாலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கலக்காமல் வியாபாரம் செய்யாமல், சரிக்கு சரி தண்ணீர் கலந்து வியாபாரம் செய்யலாம். தண்ணீரில் பாலை கலந்து வியாபாரம் செய்யலாம். அது மாதிரிதான் சினிமாவும். அதில் எந்த அளவுக்கு தண்ணீர் கலக்குகிறீர்கள் என்பதை பொறுத்து அதன் தரம் நிர்ணயம் செய்யப்படும். குறைந்த அளவு தண்ணீர் கலந்து வியாபாரம் செய்யுங்கள்; அது நியாயமான வியாபாரமாக இருக்கும். வணிக சினிமாவுக்குள் இருந்து கொண்டே அற்புதங்களை படைக்கலாம். அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக, படத்தின் இயக்குனர் ராஜகணேசன் வரவேற்றார் முடிவில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.சூரியன் நன்றி கூறினார்.


ஆன்மீகத்தில் மூழ்கினார் மனீஷா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேதனை அடைந்தார். கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதால் உடனடியாக அந்த தகவலை டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றியதுடன் கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும் மும்பை திரும்பிய அவர் சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்ததுடன் குடித்துவிட்டு தன்னிலை மறக்கத் தொடங்கினார். தள்ளாடியபடி அவர் நள்ளிரவு பார்ட்டியிலிருந்து வெளியேறிய காட்சிகளை படம் பிடித்து மும்பை பத்திரிகை, இணை தளங்களில் வெளியானது. மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற மனிஷாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறினார். மேலும் திரையுலக நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கோயில் வளாகத்திற்குள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்கிறார். சென்னையில் உள்ள பிரபல தியான மையத்திற்கும் அடிக்கடி வருகிறார். ஆன்மிக வகுப்பிலும் அவர் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். இப்போது தன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறாராம்.


நடிகைகளுக்கு சிபாரிசா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் அஜ்மல், இந்த நடிகைதான் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது: இது தவறான தகவல். நான் யாரையும் சிபாரிசு செய்வதில்லை. சில இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு ஜோடியாக உள்ள கேரக்டர் பற்றியும் சொல்வார்கள். அப்போது இந்த கேரக்டருக்கு இந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற என் கருத்தைச் சொல்வேன். அதை வற்புறுத்தமாட்டேன். அவர்கள் வேறு யாரை நடிக்க வைத்தாலும் வருத்தமும் படமாட்டேன். ஹீரோயினுக்கு மட்டுமல்ல, மற்ற கேரக்டர்களுக்கும் இவரைப் போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறுவேன். அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். தற்போது நடித்து வரும், 'வெற்றிச்செல்வன்' படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் வேடம். யதார்த்தமான கேரக்டர். நானே டாக்டருக்கு படித்தவன் என்பதால் என் மாணவக்கால பருவத்தை பிரதிபலித்திருக்கிறேன். 'கருப்பம்பட்டி' படத்தில் அப்பா, மகன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறேன். 'கோ' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த டீம் மாறிப்போனதால் வாய்ப்பும் கைவிட்டுப்போனது.


கவுதம் படத்தில் நடிக்காதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படம், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. இதில் அபிநயா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்காதது ஏன் என்று அபிநயாவிடம் கேட்டபோது, அவரது தந்தையும், நடிகருமான ஆனந்த் வர்மா கூறியதாவது: முதலில் கவுதம் கம்பெனியில் இருந்து பேசினார்கள். சில மாதங்களுக்கு முன் ஸ்கிரீன் டெஸ்ட் மற்றும் போட்டோசெஷனில் அபிநயா கலந்துகொண்டார். இப்போது வேறொரு ஹீரோயின் நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. அபிநயா ஏன் தேர்வாகவில்லை என்ற காரணம் தெரியவில்லை. தமிழில் 'மேளதாளம்', மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்', தெலுங்கில் 'சந்துருடு', வெங்கடேஷ் மற்றும் மகேஷ்பாபு தங்கையாக 'சீத்தம்மா வாகிட்லோ ஓ ஸ்ரீமல்லிசெட்டு' படங்களில் அபிநயா நடித்து வருகிறார்.


ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க மாட்டேன்: கிஷோர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பொன்மாலை பொழுது' படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார் கிஷோர். இதுபற்றி அவர் கூறியதாவது: ஹீரோவுக்கு அப்பாவாக நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். காரணம் அந்த அளவுக்கு எனக்கு வயதாகவில்லை. ஒரு படத்தில் அப்பாவாக நடித்து அது வெற்றிபெற்றுவிட்டால் தொடர்ந்து அப்பா கேரக்டர்களாகவே வரும் என்பதால் மறுத்தேன். ஆனால், 'பொன்மாலை பொழுது' படத்தின் அப்பா கேரக்டர் ரொம்பவே பவர்புல். ரயில்வேயில் வேலை பார்க்கும் சாதாரண ஊழியன் தன் மகனுக்காக எப்படியெல்லாம் காம்ப்ரமைசோடு வாழ்கிறார் என்கிற கேரக்டர். வழக்கமான சினிமா அப்பாவாக இல்லாமல் யதார்த்தமாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். இனி, ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க மாட்டேன்.


விஸ்வரூபம் பட தலைப்புக்கு திடீர் எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமலின் 'விஸ்வரூபம் பட தலைப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் படங்களின் தலைப்புக்கு அவ்வப்போது சர்ச்சை எழுவது வழக்கம். 'சண்டியர் என்ற பெயர் வைத்தபோது அதை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இதையடுத்து 'விரும £ண்டி என பெயர் மாற்றப்பட்டது. 'வசூல் ராஜா எம்பிபிஎஸ் தலைப்பு வைத்தபோது டாக்டர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்போது 'விஸ்வரூபம் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் இது குறித்து கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கண்ணன் கூறி உள்ளார்.


விடுதலையின் உயிர்ப்பு - ச.ச.முத்து


நீண்ட பாதையின் ஊடான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும், பேரணிகளிலும் போராட்டங்களிலும் ஒன்றை கவனிக்கக் கிடைக்கிறது. நடை சோர்ந்து களைப்பு மிகும்போதெல்லாம் அந்த மனிதனின் பெயரை யாரோ ஒருவர், ஒரு துரத்து மலையின் எதிரொலி போல ஓங்கி ஒலிக்கும்போது எங்கிருந்துதான் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறதோ, அப்படி ஒரு உறுதியும் பெரும் உற்சாகமும் நுரைபுரண்டு ஓடும்.

அண்மையில்கூட இலண்டனில் மகிந்தர் பொதுநலவாய நாடுகளின் பொருளாதாரப் பேரவையில் உரையாற்றுவதை தடுப்பதற்கான பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் இதனையே பலதடவை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.

எங்கள் தலைவன் என்று ஒரு குரல் தொடங்கியதும் ‘பிரபாகரன்’ என்று அனைத்து குரல்களும் எந்தவொரு பிசிறும் இன்றி சொல்வது வெறும் கோசமாகவும் கூட்டத்தில் கூவுதலுமாக தெரியவில்லை. அவர்களின் மன ஆழங்களில் இருந்து இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பீறிடும் ஒரு சத்தியத்தின் குரலாகவே தெரிகிறது.

ஆம், அந்த மனிதனின் பெயரே சோர்வை விலத்தி எறிந்து விடுதலைக்கான உரத்தையும் உறுதியையும் தரும் மந்திரச்சொல்லாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எப்படி எமது தேசியக்கொடி எமது தேசியத்தின் அடையாளமாகவும் எழுச்சியின் சின்னமாகவும் ஏந்திப் பிடிக்கப்படுகிறதோ அதனைப் போலவே அந்த மனிதனின் பெயரும் அவரும் உருவமும் தமிழினத்தின் உரிமைகளுக்கான எழுகையின் ஒரே குறிச்சொல்லாக விளங்குவதைப் பார்க்கமுடிகிறது.


இன்றும் என்றும் விடுதலைக்கான எழுச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒற்றை சொல் ‘பிரபாகரன்’ என்பதே.
இந்த வார்த்தைக்குள் எப்படி இப்படியான ஒரு மந்திரசக்தி புகுந்துகொண்டது. ஒரு முழு இனத்தினதும் இயங்கு திசையை இன்றும் தீர்மானிக்கும் ஒற்றைச் சொல்லாக பிரபாகரன் என்ற பெயர் இருக்கின்றது என்றால் அது வெறும் ஒரு இரவுக்குள் அவர் உருவானது அல்ல. நீண்டதும் மிகக் கடினமானதும் வலிகள் நிறைந்ததுமான அவரின் போராட்ட வரலாற்றினுள் இருந்தே அது முகிழ்ந்தது.

அவரது வாழ்வு முழுதும் இதற்கான உதாரணங்கள் கோடி கோடியாகக் குவிந்து கிடக்கின்றன. அதில் ஒன்றை இந்த வாரம் பகிர்ந்துகொள்ளலாம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான இன்றைய நிலையில் ஒவ்வொருவரிடமும் அடுத்தவர் மீது சொல்லிக்கொள்ள முடியாத பல சந்தேகங்களும், பயங்களும் நிறைந்ததாகவே தமிழர் அரசியல்வெளி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தை எதிரி சிதைத்ததை விட இதுவே அவனது பெரிய வெற்றியாகக் கருதலாம். ஆம், எல்லோருக்குள்ளும் சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் விதைத்திருக்கிறானே அதுவே எதிரியின் பெரும் வெற்றி.

இதனை எப்படி உடைத்தெறிந்து எமது இனம் முன் நகரப் போகின்றது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் கேள்வி ஆகும். இதனை உடைத்தெறியாமல் ஒரு அங்குலம்கூட விடுதலைப் போராட்டத்தை முன் நகர்த்த முடியாது என்பதும் மிகப்பெரும் உண்மையாகும்.

ஆனால் இதற்கான தெளிவான பதிலை தேசியத் தலைவர் இருபத்து எட்டு வருடங்களுக்கு முன்னரேயே கூறி இருப்பதைப் புரிந்துகொண்டால் நாம் பார்க்கும் எல்லோரையும் நம்பிக்கையீனமாகவும் சந்தேகமாகவும் நோக்குவது சரியா தவறா என்பது விளங்கும்.

1984ம் ஆண்டு அது. 83 இனக்கலவரத்தின் பின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியின் விளைவாக பயிற்சிக் களங்கள் அங்கு உருவாக்கப்பட்டு வீரர்கள் உருவாக்கப்பட்ட பொழுது அது. தேசியத் தலைவரின் இருப்பிடம் சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்திருந்தது. அமைப்பின் கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டு அதில் புதிய வீரர்கள் இணைக்கப்பட்டு கொண்டிருந்த காலமும் அதுதான். அதுவரை காலமும் தலைவருடன் ஒன்றாக அலைந்து திரிந்து அமைப்பை வளர்த்த மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டமைப்பின் பொறுப்பாளர்களாக மாறி விட்டிருந்த பொழுது அது.

தலைவருக்கு என்று அதுவரை மெய்ப்பாதுகாவலர்களாக இருந்தவர்களுக்கும் இயக்க வளர்ச்சியில் வேறு வேலைகள் வழங்கப்பட்டுவிட்டிருந்தன. தலைவருக்கு என்று ஒரு புதிய பாதுகாப்பு அணி, மெய்பாதுகாவல் அணியாக உருவாக்கப்பட்டது அப்போது. 83ம் ஆண்டுக்கு பின்னர் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்ற வீரர்களில் திறமையான, நம்பிக்கையான வீரர்கள் முப்பது பேரளவில் அந்த மெய்ப்பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டார்கள். (பின்னர் மிகப்பெரிய தளபதியாக விளங்கிய பிரிகேடியர் சொர்ணமும் அதில் ஒருவர்)
தலைவரின் வீட்டை எந்த நேரமும் இரவு பகலாக பாதுகாத்து தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இவர்களின் வேலை. தலைவரின் வீட்டுக்குள் எந்தநேரமும் துப்பாக்கியுடன் திரிவதற்கு இவர்களுக்கு அனுமதியும் உரிமையும் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் தலைவரைச் சந்திப்பதற்காக அவரின் ஆரம்பகால நண்பர்கள் வந்திருந்தார்கள். தலைவரை மிக நீண்ட காலமாக அறிந்தவர்கள் அவர்கள். தலைவரின் ஆரம்பகால செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். அதன் பின் தமது சொந்த வாழ்க்கைக்குள் புகுந்தவர்கள் அவர்கள். தலைவர் மீது அளவு கடந்த நேசமும் பற்றும் பாசமும் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

தமது நேசத்துக்கு உரிய தம்பி ஒரு பெரும் விடுதலை அமைப்பின் தலைவனாக ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு வழிகாட்டுபவனாக இருப்பதை பார்க்க அவர்களுக்கு பெரும் மகிழ்வுதான். ஆனாலும் ஒரு விடயம் மட்டும் அவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. அதனையும் அவர்கள் தலைவருடன் உணவு அருந்தும் பொழுதில் சொல்லி விட்டார்கள்.

‘தம்பி, முதல் என்றால் உன்னுடன் எப்போதும் சீலன் அல்லது சங்கர் அல்லது கிட்டு அதுவும் இல்லை என்றால் லாலா, புலேந்திரன்தான் பாதுகாப்பாக நிற்பார்கள். இப்போது பார், உன் வீட்டுக்குள் யார் யாரோ புதிய பொடியள் எல்லாம் பிஸ்டல், ரைபிள்களுடன் நிற்கிறான்கள். கவனம் தம்பி. யாரையும் நம்பமுடியாது...’ என்று தலைவருக்குச் சொன்னார்கள்.

அப்போது தலைவர் தனக்கே உரித்தான புன்முறுவலுடன் ‘பின்னுக்கு நிற்கிறவன் சுடுவான் என்று பயந்து கொண்டிருந்தால், முன்னுக்கு ஒரு வேலையும் என்னாலை செய்ய ஏலாது. சாவு வரும் என்று பயந்து விடுதலைப் போராட்டத்தை நடத்தேலாது. விடுதலைப் போராட்டம் என்றால் நம்பிக்கையும் முக்கியம். அதே நேரம் விழிப்புணர்வும் முக்கியம்’ என்று சொன்னார்.

இவை வெறும் வசனங்கள் அல்ல. இவை ஒரு கதையாடலில் அவர் சொன்ன பதில் மட்டும் அல்ல. இன்றைய குழப்பமான காலகட்டத்தில் அனைவரும் உணர வேண்டிய வார்த்தைகள் அவை. தேசிய விடுதலைப் போராட்டத்தில் அருகில் நிற்பவன் ஏதும் செய்வான் என்ற அச்சத்துடனேயே பயணிக்க முடியாது. இந்த கதையாடல் முடிந்து ஒரிரு மாதங்களில் இந்திராகாந்தி தனது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே தனது சொந்த இல்லத்துள் வைத்து சுட்டு கொல்லப்படுகிறார். அது நடந்த இரண்டு நாட்களில் முன்னர் தலைவரைச் சந்தித்த அவரது நண்பர்கள் மீண்டும் வருகிறார்கள்.

‘பார்த்தியா, அந்தப் பெரிய தலைவியையே மெய்ப்பாதுகாப்பு வீரர்கள் சுட்டுவிட்டார்கள். கவனம் தம்பி’ தலைவருக்கு மீண்டும் சொல்லுகிறார்கள். இந்த முறையும் தலைவர் அதே தெளிவுடனும் உறுதியுடனும் அதனைச் சொல்லுகிறார்.

‘விடுதலைப் போராட்டம் என்றால் நம்பிக்கை முக்கியம்’
‘அதே நேரம் விழிப்புணர்வும் முக்கியம்’

நன்றி: ஈழமுரசு

தாயக நில அபகரிப்புக்கு எதிராக உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட உருத்திரகுமாரன் அழைப்பு!


தாயகமண்ணில் அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

நில அபகரிப்புக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம், தமிழர் தாயகத்தின் கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள திருமுறிகண்டியில் எதிர்வரும் ஜுன் 26 ஆம் திகதி இடம்பெறுகின்றது.

இப்போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், சமாந்திரமாக ஒரே நாளில் புலம்பெயர் நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றது.

இந்நிலையில், நமது நிலத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் தாயகத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தோழமையுணர்வை வெளிப்படுத்த அனைவரும் அணிதிரள்வோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

தமிழீழத் தாயகத்தினை சிங்களமயமாக்கும் திட்டத்தை, சிங்கள அரசு தீவிரப்படுத்தி வருவதனைத் தாயகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் துல்லியமாக வெளிப்படுத்துவனைத் தாங்கள் அறிவீர்கள்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், வீதிக்கு வீதி முளைக்கும் புத்தர் சிலைகளும், மேம்பாடு என்ற போர்வையில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனக் கபளீகர முயற்சிகளும், ஈழத் தமிழர் தேசத்தின் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கி வருகின்றன.

தமிழீழத்தின் வீதிகள் யாவும், வீடுமனைகள் யாவும், வழிபாட்டுத் தலங்கள் யாவும் சிங்கள ஆக்கிமிப்புப் படைகளின் சப்பாத்துக்கால்களால் மிதிபட்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

ஒரு நாடு ஒரு மக்கள் என்ற கோசத்தின் அடிப்படையில், இலங்கைத் தீவினை சிங்கள நாடாகவும், சிங்கள தேசத்தின் நாடாகவும் ஏற்று, அடங்கி வாழ் என தமிழீழ மக்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக சிங்களம் கட்டளையிடுகிறது.

சிறிலங்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும், அடக்குமுறைச் சட்டங்களுக்கு மத்தியிலும் சிங்களத்தின் நிலஆக்கிமிப்புக்கு எதிரான போராட்டத்தை தாயக அரசியல் தலைவர்களும், மக்களும் முன்னெடுத்து வருகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்களை, சட்டத்தின் மூலமும், படையினரின் அடாவடித்தனத்தின் மூலமும், புலனாய்வாளர்களின் காடைத்தனம் மூலமும் அடக்கி ஒடுக்க முனைகிறது சிங்களஅரசு.

அடக்கு முறைகளுக்கும் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும், தாயகமக்கள் மேற்கொள்ளும் இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கவேண்டிய கடமைபுலத்தில் உள்ளமக்களுக்கு இருக்கிறது.

இதன் நிமித்தம், தமிழர் வாழும் தேசம்யாவும் நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவிய அளவில் நமது தாயகத் தலைவர்களுக்கும் , மக்களுக்கும் தோழமையுணர்வு தெரிவித்து, தமிழர் வாழும் பல்வேறுநாடுகளிலும் எதிர்வரும் 26 ஆம் திகதி அடையாள எதிர்ப்புப் போராட்டத்தை நாடுகடந்த தமிழீழு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இப் பேராட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு, நமது நிலத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் நமது தாயகத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தோழமையுணர்வை வெளிப்படுத்த ஒன்றிணைவோம்.

Friday 22 June 2012

மீண்டும் கைகோர்க்கும் ஷாருக் – ஃபராகான்

Shahrukh Khan Is Not The Only One

பெண் சூப்பர் இயக்குநர் ஃபராகானும், இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். படத்துக்கு தலைப்பு ‘ஹேப்பி நியூ இயர்' இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஃபரா கான், ஷாருக்கான் இணைந்து உருவாக்கிய மே ஹூன் நா, ஓம் ஷாந்தி ஓம் படங்கள் சூப்பர்ஹிட். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஷாருக்கை தவிர்த்து வேறு ஹீரோக்களை நாடினார் ஃபரா கான். இருவரும் இனி இணைய மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் இதோ மீண்டும் ஒன்றாக படம் எடுக்கின்றனர். ஃபராகானின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதாலும், இதுவரை நடித்த படங்களிலிருந்து இப்படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் ஷாருக்.

இந்தாண்டு இறுதியில் தொடங்க உள்ள இந்தப் படத்தை ஷாருக்கானே தயா‌ரிக்கிறார், ஹேப்பி நியூ இயர் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்களாம். இந்த திரைப்படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஃபரா கானின் ஆசை.

இந்த திரைப்படத்தில் ஷாருக் தவிர்த்து பொம்மன் இரானியை மட்டுமே உறுதி செய்திருக்கிறார் ஃபரா கான். மற்ற மூன்று பேர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அபிஷேக் பச்சன் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

மூவரின் மரண தண்டனையை ரத்து செய்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக உறுதியளித்தால் திமுகவும், திருமாவளவனும் ஜனாதிபதியாக போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிக்கலாம் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தெரிவித்தார்.

முன்னதாக, இராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், அமீர் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது.

அது தொடர்பாக இன்று இராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.

இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20ம் தேதி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கூறியது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்.

அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும். இதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 வருடங்கள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபக்ச பேசியிருக்கிறார்.

அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 வருடங்கள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றனர்.

ஈழத் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌யிரை‌க் கா‌‌க்க மு‌ன்வருவாரா கருணா‌நி‌தி!: தா.பா‌ண்டிய‌ன்

தமிழ் ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்கு முன்பு அங்குள்ள தமிழர்களின் உயிரைக் காக்க தி.மு.க தலைவர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலார் தா. பாண்டியன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் இந்தியாவுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என இலங்கை அரசு கூறி வருகிறது.

இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்த இந்தியாவுக்கு இலங்கை நெருக்கடி கொடுக்கும வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கையின் சுயரூபத்தை இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

2009 மே 17ம் தேதியுடன் உள்நாட்டுப் போர் முடிவுற்றதாக இலங்கை அரசு கூறினாலும், இன்று வரை ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களில்தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்கு முன்பு அங்குள்ள தமிழர்களின் உயிரைக் காக்க திமுக தலைவர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று தா.பா‌ண்டிய‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

கூட்டணி மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! கலைஞர் பேட்டி!

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று (22.06.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி முக்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலை நடந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?

பதில்: வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?

பதில்: சொன்னால் கலந்து கொள்கிறேன்.

கேள்வி: திமுகவில் அனுபவம் வாய்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காலியாகப்போற நிதித்துறையை கேட்டுப் பெறுவீர்களா? அல்லது முக்கிய துறையை கேட்டுப்பெறுவீர்களா?

பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?


இவ்வாறு பதில் அளித்தார்.

ஜெயலலிதா சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது! ஆர்காடு வீராசாமி பேச்சு!

அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி,

இன்றைய தினம் கலைஞர் அவர்கள் செயற்குழுவைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி 4ஆம் தேதி சிறை போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்க்கிற அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறைசெல்ல இருக்கிறார்கள். ஜெயலலிதா திருந்துவார் என்று சிலபேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இன்றைக்கு அல்ல. இன்னும் பத்து தலைமுறை ஆனாலும் அந்த அம்மா திருந்தவே மாட்டார்கள். திமுகவினரை யார் யார் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் அழிந்ததாக வரலாறு இருக்கிறதே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. எனவே நான் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை திமுகவினரை சிறைக்குள் அடைக்கிறார்களோ, அதே வேகத்திலே ஜெயலலிதாவும் சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு பேசினார்.

பேய் அடிக்குதென்று சம்மந்தர் பிசாசிடம் முறைப்பாடு

தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசினாலும் அரச படைகளினாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் முறையிடவுள்ளார் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லியில் இந்திய முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.இதன்போதே அவர் இந்த முறைப்பாட்டைத் தெரிவிப்பார் என்றும் இதனைத் தடுத்து நிறுத்த இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கோருவார் எனவும் அறியவருகிறது.

ஆயினும் சம்பந்தன் யார் யாரைச் சந்திப்பார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை எனப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து அவரைக் கைது செய்யுமாறு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்தநிலையில் இரா.சம்பந்தன் மருத்துவ சிகிச்சை ஒன்றுக்காகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன்னதாக புதுடில்லியில் இந்தியாவின் முக்கிய் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்தச் சந்திப்புக்களில் தமிழர் தாயகப் பகுதியில் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக் குறித்து அவர் கடும் விசனத்தை வெளியிடுவார் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இலங்கையர்களில் 75 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 200 பேருடன் ஆஸ்திரேலியா சென்ற படகொன்று இந்தோனேஷி யாவின் கடற்கரைப் பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள கிறிஸ்மஸ்தீவின் வடக்கே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது அந்தப் படகில் பயணித்த இலங்கையர்களில் 75 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் அனேகமாக எல்லோரும் தமிழர்களே என ஆஸ்திரேலிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். படகிலிருந்த 40 பேர் ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷியக் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஏனையோரின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்தத் தகவலை ஆஸ்திரேலியச் சுங்கப்பிரிவு நேற்று மாலை உறுதிப்படுத்தியது. இலங்கை நேரப்படி நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கிறிஸ்மஸ்தீவின் வடக்கே ஏறத்தாழ 110 கடல்மைல்களுக்கு அப்பால் கவிழ்ந்த படகை வேவுப்பணியில் ஈடுபட்டிருந்த விமானமொன்று நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் கண்டுபிடித்துள்ளது என ஆஸ்திரேலியச் சுங்கப்பிரிவு தெரிவித்தது.

இப்படகில் ஏறத்தாழ 200 பேர்வரை பயணித்திருக்கக் கூடும் எனவும் முழுமையான விவரங்கள் இன் னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.

தலைகீழாகக் கவிழ்ந்த படகின் மேற்பாகத்தில் தங்கள் உயிரைக் கையில் பிடித்தவாறு தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏனையோர் நீரில் மூழ்கிவிட்டார்கள். இதில் 75 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் ஏனையோரின் கதி தெரியவில்லை எனவும் மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் கார்ள் ஓ கலஹன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எத்தனை பேர் பலியாகியிருப்பர் என உறுதியாகக் கூறமுடியாது. அப்படகில் 200 உயிர்காப்பு அங்கிகளும் இருக்கவில்லை. நீரில் சடலங்கள் மிதந்து கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருப்போர் குறித்து நாம் அச்சப்படுகிறோம் என்றும் அவர் கூறினார்.

படகில் இருந்த அனைவரும் இலங்கையில் இருந்து புறப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் எனவும் அவர்களில் பெரும் பாலானோர் தமிழர்கள் எனவும் ஆஸ்திரேலியா சுங்கப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியத் தேடுதல் கண்காணிப்புக் கடற்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்புப் பணிகளில் ஆஸ்திரேலியக் கடற்பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டுள்ளது. இந்தோனேஷிய தேடுதல் மீட்பு அதிகார சபையான பஸார்னஸ் முழு வீச்சில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபையின் தகவல் படி இன்னமும் பலர் கடலில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதாகவும் ஆயினும் அவர்களின் தொகையை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிய வருகிறது.

உயிருக்குப் போராடுவோரை காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலிய, இந்தோனேஷிய கடற்படைக் கப்பல்களும் அனர்த்தம் நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். அத்துடன் இரு நாடுகளின் விமானப் படையினரும் மீட்புப் பணிக்கு உதவி அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துத் தொடர்பான முழுமையான தகவல்களை அறிய தாம் காத்திருப்பதாக இந்தோனேஷிய தேடுதல் மீட்பு அதிகார சபையான “பஸர்நாஸ்’ பிரிவின் பேச்சாளர் ஹகா பிரகோசோ தெரிவித்தார். கவிழ்ந்த படகு இலங்கையைச் சேர்ந்தது என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சுமார் 238 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த மேலும் மூன்று படகுகள் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடந்த 24 மணி நேரமாக கடலில் இடைமறித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

இந்த மூன்று படகுகளில் பயணித்தோரும் இந்த விபத்துச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பாம்புத் தோல் 'ஷூ' போட்ட கிம் கர்தஷியானுக்கு 'பெடா' கொட்டு!

Kim Kardashian Blasted Peta Over Snakeskin Boots

கிம் கர்தஷியான் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. வழக்கமாக பாய் பிரண்டுகளால்தான் அவருக்குப் பிரச்சினை வரும். ஆனால் தற்போது பாம்புத் தோலால் பிரச்சினையாகி விட்டது.

சமீபத்தில் டிவிட்டரில் படு கவர்ச்சிகரமான ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அதில் கருப்பு நிற உள்ளாடையும், காலில் பாம்புத் தோலால் ஆன ஷூவும் போட்டபடி குண்டக்க மண்டக்க குணிந்து நிற்கிறார் கிம். இது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பி விட்டுள்ளது. ஆனால் பெடா எனப்படும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி விட்டது.

பாம்புத் தோலால் ஆன பூட்ஸை அவர் எப்படி அணியலாம் என்று கேட்டு பஞ்சாயத்துக்கு வந்துள்ளனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

பெடாவுக்கும், கிம்முக்கும் இடையே மோதல் வெடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஒரே நாளில் இரண்டு முறை விலங்குத் தோலால் ஆன கோட்களை அணிந்து பெடாவின் கோபத்தை சம்பாதித்தவர்தான் கிம் என்பது நினைவிருக்கலாம்.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!

சுவிஸ் அரசாங்கம் மிக விரைவில் சுவிசில் அகதி தஞ்சம் கோருவோருக்கான கட்டுப்பாடுகளை மிக மோசமாக இறுக்கமாக்கிக் கொள்ளவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கின்றது.

அதை எதிர்த்து நாளை சனிக்கிழமை 14:30 மணியளவில் Schützenmatt என்ற இடத்தில் ஆரம்பித்து Bundesplatz (Bern பாராளுமன்றத்தின் முன்பாக) நோக்கி சுவிஸ் அகதிகள் உதவி நிறுவனம்  மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.

தயவுசெய்து தமிழ்மக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள். மேலதிக விபரங்களுக்கு  http://www.asyl.ch/demo/

Thursday 21 June 2012

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் துன்புறுத்தபடவில்லையாம்!


பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் எந்தவித துன்புறுத்தலுக்கும் உட்படுத்தபடுவதில்லை என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இலங்கையில் துன்புறுத்தப்படுவதாக பிரித்தானியாவை மையமாக கொண்டு இயங்கும் உலகளாவிய தமிழ் அமைப்பு மற்றும் பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலம் முதல் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கோ அல்லது பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் வரை மொத்தமாக 970 பேர் பிரித்தானயாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில், சுயவிருப்பத்தின் பேரிலும் பலவந்தமாகவும் அனுப்பட்டவர்கள் உள்ளடங்குவதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியவுக்குச் சென்ற அகதிகள் படகு விபத்து! 75 பேர் பலி: இலங்கையர்களும்?


அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் 200 பேரைக் கொண்ட அகதிகள் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் கார்ல் ஓ´கல்லஹான் தெரிவித்துள்ளார்.


விபத்துக்குள்ளான அகதிகள் படகில் இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதில் பயணித்தவர்களில் சுமார் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், 40 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆட்களை ஏற்றிவந்தமை காரணமாகவே படகு கவிழ்ந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இலங்கையூடாக பயணத்தை மேற்கொண்டிருந்த படகொன்றே விபத்துக்குள்ளானதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள கிறிஸ்மஸ் தீவுக்கு அருகிலும், இந்தோனேஷியாவிலிருந்து 120 கடல் மைல்கள் தொலைவிலும் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இரண்டாம் இணைப்பு

110 பேர் உயிருடன் மீட்பு: இலங்கையர்களா என சந்தேகம்!

அகதிகளை ஏற்றியவாறு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் இருந்து 110 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களில் இலங்கையர்கள் இருக்கிறார்களா என இன்னும் தெரியவரவில்லை எனவும் இந்தோனேசியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா