
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 வயதுடைய நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமி கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். திருமணமாகாத சிறுமி குழந்தையைப் பிரசவித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சிறுமி தனது மூத்த சகோதரியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மூத்த சகோதரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழில்வாய்பொன்றைப் பெற்றதன் மூலம் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த நிலையில், மூத்த சகோதரியின் வீட்டில் சிறுமியின் பெற்றோர், சகோதரியின் கணவர் இவர்களோடு குறித்த சிறுமியும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மூத்த சகோதரியின் கணவர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் குறித்த நபர் சிறுமியைத் தொடர்ந்தும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் சிறுமி கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்


No comments:
Post a Comment