
வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் பேசியுள்ளார். இதற்கு சிங்கள அமைச்சர் சம்பிக்க ரனவக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழர்கள் இதேபோன்று பேசினால் இன்னும் 100 முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று திமிராக பேசியுள்ளார்.
சிங்கள அமைச்சரின் பேச்சு தமிழ் மக்களை அச்சுறுவத்துவதாக உள்ளது என்றும், அந்த அமைச்சரின் பேச்சை கண்டித்து இலங்கை தூதரகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வன்னியரசு, சிங்கள அமைச்சரின் பேச்சுக்கு இந்திய பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். இலங்கை அமைச்சரை கைது செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள அமைச்சரின் உருவபொம்மை மற்றும் இலங்கை அரசின் கொடியை கிழித்து எரித்தனர். இதையடுத்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


No comments:
Post a Comment