
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் கிராமத்தில் பிறந்து 5 நாட்களான குழந்தையொன்று நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயார் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்ணொருவருக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. கணவன் இறந்த பின் வேறு ஒருவருடன் கொண்ட தொடர்பினால் இக்குழந்தை பிறந்துள்ளது.
கிராமத்தவர்களிடம் அவமரியாதை ஏற்படும் என்ற காரணத்தினாலும், குழந்தை பிறந்ததை வெளியில் மறைப்பதற்காகவும் தான் பெற்ற குழந்தையை உயிருடன் புதைத்தாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட தாய்க்கு நான்கு வயதுடைய பெண் குழந்தையொன்றும் உள்ளது.


No comments:
Post a Comment