
ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலைஞர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘’நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற வைப்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.
அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:
Post a Comment