மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இந்தியாவுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என இலங்கை அரசு கூறி வருகிறது.
இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்த இந்தியாவுக்கு இலங்கை நெருக்கடி கொடுக்கும வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கையின் சுயரூபத்தை இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
2009 மே 17ம் தேதியுடன் உள்நாட்டுப் போர் முடிவுற்றதாக இலங்கை அரசு கூறினாலும், இன்று வரை ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களில்தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்கு முன்பு அங்குள்ள தமிழர்களின் உயிரைக் காக்க திமுக தலைவர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று தா.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:
Post a Comment