
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் எந்தவித துன்புறுத்தலுக்கும் உட்படுத்தபடுவதில்லை என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இலங்கையில் துன்புறுத்தப்படுவதாக பிரித்தானியாவை மையமாக கொண்டு இயங்கும் உலகளாவிய தமிழ் அமைப்பு மற்றும் பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலம் முதல் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கோ அல்லது பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் வரை மொத்தமாக 970 பேர் பிரித்தானயாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில், சுயவிருப்பத்தின் பேரிலும் பலவந்தமாகவும் அனுப்பட்டவர்கள் உள்ளடங்குவதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்


No comments:
Post a Comment