Saturday 26 November 2011

வழிப்போக்கன்... வில்லன்... விவேக்!


முன்னணி காமெடியனான விவேக் வில்லன் வேடத்துக்கு மாறியுள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

பெங்களூரில் நடந்த இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் விவேக் கூறுகையில், "வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.

இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும். எனக்கு கன்னட மொழி தெரியாது. படப்பிடிப்பில் அதைkd கற்றுக் கொள்வேன்.

கன்னடத்தில் டப்பிங் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனக்கு சவாலான படமாக இருக்கும்," என்றார்.

சமீப காலமாக வெளியாகும் படங்களில் இவரது காமெடியே வில்லத்தனமாக மாறிவிட்டதால் மெயின் வில்லனாகிவிட்டார் போலிருக்கிறது!

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேனா? - நமீதா விளக்கம்


சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா.

நடிகை நமீதா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த முதல் தமிழ் படம் எங்கள் அண்ணா சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்தார். நமீதா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் 'இளைஞன்' படம் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் இல்லை. தற்போது மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்.

கட்டுமான நிறுவன தொழில் அதிபர் ஆனதால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக செய்தி பரவியது. இதுபற்றி கேட்டபோது, நமீதா மறுத்தார். அவர் கூறுகையில், "சினிமாவை விட்டு நான் விலக வில்லை. மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி இருப்பது உண்மைதான். அதற்கு நான் உரிமையாளர் மற்றபடி தொழிலை கவனித்துக் கொள்ள நிறைய பேரை நியமித்துள்ளேன்.

நான் சில நாட்கள் மும்பையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மூலம் எனது உடம்பை குறைத்தேன். இப்போது நிரந்தரமாக சென்னைக்கு குடி வந்துவிட்டேன்.

மங்கை அரிராஜன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறேன். என்.கே. விஸ்நாதனனின் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற 'ரீமேக்' படத்திலும் நடிக்கிறேன்.

இது தவிர தெலுங்கு படமொன்றுக்கும் ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படத்தில் முழுக்க சேலை கட்டி நடிக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்து இருக்கிறேன். அப்படி கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

மட்டக்களப்பில் தேசியத்தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்!ஆலயங்களில் விசேட பூஜைகள்


தமிழீழ தேசியத் தலைவரின் 57 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் மக்கள் கொண்டாடியுள்ளனர்.தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன் பல இந்து ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூசைகள் நடைபெற்றன. இப் பூசைகளிலும் மக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் இந்நிகழ்வுகள் இடம் பெற்றன.

மேற்படி நிகழ்வுகள் தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் அவரின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டன.

ஓடடுக்குழுக்களான கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் சிறிலங்கா படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் தேசியத் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் தேசியத் தலைவர் நிறைந்திருப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

திடீரென பல இடங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு.உலக தமிழர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


ஈழத்தமிழர் இதயத்தின்
முழு முதலான
வீரமகன் வாழியவே!

தமிழன் வீரத்தில் வரலாறு
எழுதிய
வெற்றியின் நாயகன் வாழியவே!

கண் தூங்கா விண்ணுயர்
காவலனாம்
கலங்கரை விளக்கம் வாழியவே!

போராட்ட பரிமாணத்தின்
கூர் தீட்டி
புதுமைகண்ட விஞ்ஞானி வாழியவே!



நவீன சிந்தனையில்
வரி தொகுத்த
நாலடி விருத்தம் வாழியவே!

தீமையின் கண்களுக்கு
தீயான
சிம்ம சொப்பனம் வாழியவே!

அரசியல் செய்யாமல்
அகிலம் வென்ற
ஆளுமையின் சிகரம் வாழியவே!

தன்நலன் கொள்ளா
புதுமை கொண்ட
தனித்தலைவன் வாழியவே!

அளவில்லா ஆற்றல் கொண்ட
நடமாடும்
ஆதவன் நீ வாழியவே!

சோவென்று மழைபோன்ற
செருக்களத்தின்
செயல் வீரன் வாழியவே!

தந்தவனின் கடன் தீர
என்றைக்கும் மறவாத
சங்கரன் நீ வாழியவே!

எல்லாளன் நிழல் பிறந்த
வல்லாளன்
எரிமலை நீ வாழியவே!

பார்வதி பெற்றெடுத்த
பைந்தமிழ்
பரம்பொருள் நீ வாழியவே!

சீருடையில் சிறப்பென்று
பார்போற்றும்
நேரான சூரியன் நீ வாழியவே!

சாவினை வென்று வந்த
சரித்திரமே
சத்தியமே வாழியவே!

மூலம் அறியாத முழுமுதலே
காலம் ஈர்ந்தளித்த
கற்பகம் நீ வாழியவே!

ஊர்க்குருவி.

துரோகிகளாக மாறிவரும் நண்பர்களே நீங்களும் படியுங்கள்

கல்லறை வீரர்களின் வீரத்திருநாள் கார்த்திகை-27என் அன்புக்குரிய தமிழீழ மற்றும் (தமிழ் பேசும்) மக்களே யாவருக்கும் மாவீரர் மாத எழுச்சி வணக்கம்:ஈழத்திலும் புலத்திலும் பரந்தோடி வாழுகின்ற ஈழமக்களின் வீரத்திருநாள் இந்த வீரத்திருநாளை தமிழ் மக்களாகிய அனைவரும் ஒன்றுகூடிக்கொண்டாடவேண்டும் இது ஆணையோ அதிகாரமோ அல்ல வீரம் சொந்த மண்னில்பிறந்த ஈழத்தமிழர்களாகிய நாங்கள் நெஞ்சினில் நெருப்பேந்தி பாசறையில் கார்த்திகை தீபமேத்தும் வீரத்திருநாள் இது வெறும் அஞ்சலிக்கூட்டமோ அல்லது நினைவு நாளோ அல்ல நேற்று எம்முடன் ஒன்றாக விளையாடிய  தோழர்கள் எம்முடன் ஒரே பாத்திரத்தில் உணவு உண்ட நன்பர்கள் இன்று கல்லைறையின்மடியில் உறங்கிக்கொண்டுடிருக்கின்றார்கள் இந்த உத்தமர்களை நினைவுகூறும் இந்த நன்நாளிலே மாவீரர்களின் பொற்ப்பாதங்கலுக்கு மலர்தூவி மெளனஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு ஈழத்தமிழரின் கடமையாகும்அந்தவலிகள் இன்னும் ஆறவில்லை அந்தவடுக்கள் இன்னும் மாறவில்லை தோய்ந்தோடிய குருதியின் துர்நாற்றமும் கரைகளும் இன்னும் போகவில்லை எம் தேசத்திலே…மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்தார்கள் மாவீரர்குடும்பங்களை சிதைத்தார்கள் எம் தேசத்துக்காக போராடிய போராளிகளை சிறையில் தள்ளி சித்திரவதைகளை செய்கின்றார்கள் இவர்களுடன் இனைந்தோ அல்லது எமது போராளிகளுக்கு எதிராகவோ எமது மக்களுக்கு துரோகமாகவோ செயல்ப்படுகின்ற நண்பர்களுக்கு  ஓர் அன்பான வேண்டுகோள் வெற்றி எனும் ஆனந்தக்கடலிலே நாங்கள் குழித்த காலங்கலில் தோல்வி  என்ற துயரத்தையும் தோள்களில்  சுமந்திருக்கின்றோம் காட்டிக்கொடுப்புக்களுக்குமத்தியிலும் தேசதுரோகங்களுக்கு நடுவிலும் நின்று நேருக்கு நேர் முகம் கொடுத்தவர்கள் எங்கள் போராளிகளும் பொதுமக்களும் ஆகையால் உங்கள் செயல்களால்   நாங்கள் அஞ்சவோ கெஞ்சவோ போவதில்லை மாறாக உங்களின் போலி முகத்திரையை மக்கள் மத்தியில் கிழித்தெறிவோம் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்பன்னிரு வயதினிலே பகைவிரட்டிய மாவீரர்கள் கையிழந்தும் காழிலந்தும் அவர்கள் களத்தினிலே வீழ்ந்தபொழுது அவர்கள் பட்ட ரணத்தின் கடுப்பினை நாம் அறிந்ததில்லை தன்னிகரற்ற தாயகக்கனவுடன் கல்லறையிலே உறங்கிக்கொண்டிருக்கும் ஆயிர ஆயிரமாம் போராளிகளையும் இதுவரைகாலப்போரினிலே களப்பலியான அப்பவிப்பொதுமக்களையும்  என்றும் வரலாற்றில் அழியாபோவதும்  இல்லை எம் நெஞ்சங்கலில் இருந்து அகற்றிவிடவும்  முடியாது கல்லறைகளும்  மாவீரர் நாட்களும் வெறும் கற்ப்பனையால் வடிக்கப்பட்டது அல்ல எம் உயிரினிலும் மேலான உறவுகள் சங்கர்முதற்க்கொண்டு சரித்திரங்கள் பல படைத்த சமர்க்கள நாயகர்கள் கையளவு  மண்கூட எதிரியிடம் களவுபோய்விடக்கூடாதென்று கத்திரி வெயிலிலும் கடும் மழையிலும் இரவு பகலாக காவல்காத்து களமாடிய மகத்தான மாவீரர்கள் துயில்கொள்ளும் புனிதப்பாசறைதான் நாம் போற்றும் மாவீரர் துயிலும். இல்லங்களையும்  மாவீரர் நாட்களையும்  இவர்கள் கனவுகளையும்  கல்லறைகளையும்  விற்று நாம் வாழவேண்டுமா…புலம்பெயர் தேசங்களிலே  வாழ்ந்துகொண்டிருக்கின்ற சில தமிழ் நண்பர்கள்  இதைத்தான் செய்கின்றார்கள் எமது  அன்புக்குரிய மக்களே இந்த நண்பர்களை  இனம்கண்டு உலகெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழ் உறவுகளுக்கு அடயாளப்படுத்துங்கள் இது உங்கள் கடமை நீங்கள்தான் எதிர்வரும் காலங்களில்  எம் தேசத்திலே முளைக்கின்ற…முளைக்கவிருக்கின்ற… விசச்செடிகளை  களையெடுக்கவேண்டும்…இது ஒவ்வொரு ஈழத்தமிழரின் கடமையாகும்இன்று எங்களின் ஆயுதங்கள் மட்டுமே மெளனித்துள்ளது எங்கள் உரிமைப்போராட்டம் ஏதோ ஒரு மூலையில் முத்துக்குமாராகவும் செங்கொடியாகவும் தீயிட்ட தீபங்களாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது கொதித்தெழுந்த தமிழர்கள் கொழுந்துவிட்டு எரிந்தபொழுதெல்லாம் புலத்தில் தமிழர்கள் நொந்து துடித்தனர் ஆனால் சில தமிழ் அரசியல் ஓநாய்கள் மட்டும் எரிந்து மடிந்து வீழ்ந்து கிடந்த எம் உறவுகளின்  உடலைவைத்து அரசியல் நாடகம் நடத்தி நயவஞ்சகம் செய்தனரே தவிர துயரத்தில் பங்குகொள்ளவோ…போரட்டத்தைத்தொடர்ந்து முன்னெடுக்கவோ முன்வரவில்லை என்பது நிஜம் இந்தக்கேவலம்கெட்ட ஓநாய்களுக்கும் இன்று புலத்திலே மாவீரர் நினைவு நாளை கேவலப்படுத்தி விற்ப்பனை செய்கின்ற ஈழத்தமிழ் நன்பர்களுக்கும் என்ன வித்தியாசம்…. ஈழத்தமிழினத்தை ஒடுக்கி அடக்க  நினைக்கும் பேரினவாதிகள் டக்லஸ் கருனா பிள்ளையான் பத்மநாதன்  இமெல்டா  சுகுமார் போன்ற தமிழ் நண்பர்களுக்கெல்லாம் எச்சி எழும்புத்துண்டை வீசியெறிந்து தம்வசம் ஈர்த்துக்கொண்டது சிங்களம் கைமாத்துக்கு அவர்களும் பேரினவாதிகளுக்கு காம இச்சையைத்தீர்த்து வைக்க  வடகிழக்கிலே. மசகுக்களி (கிரீஸ்) பூதங்கலையும் ஏவிவிட்டனர் இருந்தும் புலத்திலே தொடருகின்ற ஈழத்தமிழர்களின்  சுய உரிமைப்போராட்டத்தை எதிர்கொள்ளவோ தடுத்து நிறுத்தவோ முடியவில்லை இந்த முதுகெழும்பில்லா மகிந்த குடும்பத்துக்கு…அவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த்  உச்சிமாநாட்டிலே தலைகுனிவுடன் வெளியேறிய மகிந்த ராஜபக்ஸ மாலைதீவிலே நடந்த சார்க் உச்சிமகாநாட்டில் ஏதாவது கிடைக்கும் என்று மன்மோகன்சிங்கின் கரத்தை ஒருகையிலும் பாகிஸ்த்தானிய பிரதமர் யூசுப் ரஸாக் கிலானி (Yousuf Raza Gilani) யின் கரத்தை மறுகையிலும் இறுக்கிப்பற்றிக்கொண்ட மகிந்த போர்க்குற்றத்தில் இருந்து தம்மைக்காப்பற்றுமாறு மண்டாடியும் பலன் கிடைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை சிங்களப்பேரினவாத அரசினால் சோதனை என்ற பெயரிலே இடம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்மக்களின் வீடு வீடாகச்சென்று அதிகாலை 2-3 மணியென்றும் பாராமல் துயிலுடையில் (nighttie) உறங்கிக்கொண்டிருக்கின்ற பெண்களை  எழுப்பி புகைப்படம் எடுப்பதும் தகாத வார்த்தைகளால்  பேசுவதும் இத்தனைக்கும் ஒரு பெண் பரிசோதகர் கூடச்செல்வதில்லை என்பது வேதனைக்குரியது இவையாவும் இன்னும் நம் ஈழத்திலே நடந்துகொண்டுதான் இருக்கின்றது
புலிகள் தோற்க்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று மார்தட்டும் முன்னய நாள் சில புலி உறுப்பினர்கள் புலத்திலே நின்றுகொண்டு சாதியம் பேசுவதும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மக்களின் பணத்தை ஏச்சு ஏப்பமிடுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது இவர்கள் யார்…? எப்படி புலத்திலே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்…? இவர்கள் யாரால் எப்படி ஏவப்படுகின்றார்கள்…? இவர்கள் கையகப்படுத்தி நிறுவியுள்ள  தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் யாவை…? தொடர்ந்து இவர்கள் எப்படி புலத்தில் உள்ள மக்களை ஏமாத்தி பணம் வசூலிக்கின்றனர்…? இந்த அத்தனை கேள்விகளுக்கான பதிலும் ஒலி வடிவில் இந்த புலித்தோல் போர்த்திய ஓநாய்களின் புகைப்படத்துடன் வெளியிடுவோம் அதுமட்டுமின்றி எங்கள் தேசியத்தலைவரால் நிறுவப்பட்ட  எங்களின் தேசியவானொலியான புலிகளின்  குரலையும்  இனித்தேவயில்லையென்று கூறுகின்றார்கள் இவர்கள் தமிழீழ மக்களின் அசையும் அசையாச்சொத்தை கையாள இவர்களுக்கு யார் உரிமையை வழங்கியது…? எமது  அன்புக்குரிய மக்களே நாங்கள் இவர்களை அடையாளம் காட்டுவோம் நீங்கள் கேள்விகளைக்கேளுங்கள் கேள்வி கேட்கும் உரிமையை எம் தேசியத்தலைவர் மக்களிடம் ஒப்படைத்துள்ளார் என்பதனை இவர்கள் உனரவேண்டும் இனியும் இப்படியொரு தவறு நடக்காமல் நீங்கள்தான் தடுத்து நிறுத்தவேண்டும்
மக்களே உங்களுக்கு நன்கு தெரியும் புலத்திலே எங்கள் மக்களுக்கு சொந்தமான கடைகள் தொழில்கூடங்கள் கட்டிடத்தொகுதிகள் எரிபொருள் நிலையங்கள் எங்கெல்லாம் உள்ளது இதை யாரெல்லாம் கையாளுகின்றனர் என்று…? ஏன் இவர்களால்  ஈழத்தில் இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவமுடியவில்லை…? ஏன் விடுதலையான எங்கள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை இன்னும் ஏன் பத்திரிக்கையூடாகவும் வானொலிகள் ஊடாகவும் தொலைக்காட்ச்சிகள் ஊடாகவும் ஊடகங்கள் மற்றும் இணையம் ஊடாகவும் எமது அங்கவீனப்பட்ட  போராளிகளும் பொதுமக்களும் உதவி கோருகின்றனர்…? சிந்தித்துப்பாருங்கள் இதற்க்காகவா அவர்கள் இரவுபகலாக எங்களுக்காக இரத்தம் சிந்திப்போராடினார்கள் இதற்க்காகவா அவர்கள் சிறைசென்றார்கள் இதற்க்கும் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது இவைகளையும் நாங்கள் உங்கள் முன் கொண்டுவருவோம் இவர்கள் கையாடல் செய்யும் பணம். ஊசியாகக்குத்துகின்ற குளிரிலும் விடிய விடிய கண்விழித்தும் உளைத்து நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்கே உரிமையுள்ளது. இதை தட்டிக்கேக்க உங்களுக்கே உரிமை உள்ளது .உங்களால் உதவமுடியுமாயில்  நேரடியாக ஈழத்திலே உள்ள மக்களுக்கு  அதை நீங்களே செய்யுங்கள் இல்லையென்றால் நிஜத்திலே உதவிகோருவோரை நேரடியாக நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். புலத்திலே மாவீரர் நாள் நினைவுகளில் பங்குகொள்ளும் தமிழ் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எக்காரணத்தைக் கொண்டும் உண்டியலிலோ அல்லது பூ விற்ப்பனையாலர்களிடமோ
ஒரு சதமேனும் கொடுக்க வேண்டாம் மீறியும் கேட்டால் உடனடியாக அவரின் பெயர் பற்றுச்சீட்டு அவரின் புலத்தின் அடயாள அட்டை இலக்கம் போன்றவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளவும் இந்த பதிவு நடைமுறைதான்   காலம் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது காரணம் உங்கள் உழைப்பு  வீண்போகக்கூடது                ““`
இன்று இலங்கைத்தீவில் உள்ள சிறைச்சாலைகளில்  வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை கொஞ்சம் என்னிப்பாருங்கள் ஏதோ ஒரு வழியில் போராடியதற்க்காகவோ பங்களிப்புச்செய்ததற்க்காகவோ அல்லதுபோனால் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகவோ வகை தொகையின்றி சிறியவர் பெரியவர் முதியவர் அங்கவீனப்பட்டவர் புத்திசுவாதீனம் அற்றவர் என்று சிங்களவன்  வெறியடங்க கைது செய்து அடைத்து வைத்துள்ளான் இவர்களின் வழக்குச்செலவினத்திற்க்குத்தான் உங்களால் உதவ முடியாவிடிலும் பறவாயில்லை அவர்களின்  அத்தியாவசியப்பொருட்க்களுக்காவது உதவி செய்திருக்கலாம் கொழும்பு மெகஸின் சிறைச்சாலை காலி பூஸா சிறைச்சாலை அணுராத புரம் சிறைச்சாலை களுத்துறை சிறைச்சாலை கண்டி போகம்பர சிரைச்சாலை வவுனியா சிறைச்சாலை யாழ்ப்பானம் சிறைச்சாலை மட்டக்களப்பு சிறைச்சாலை திருகோணமலை சிறைச்சாலை பதுளை சிறைச்சாலை பண்டாரவளை புனர்வாழ்வு முகாம் வவுனியா தடுப்பு முகாம்கள் இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாத எத்தனையோ முகாம்களில் உள்ள எங்கள் உறவுகளையும் கொஞ்சம் என்னிப்பாருங்கள் இவர்களுக்கு தொடர்ந்து உதவுங்கள் நாங்களாவது  ஒரு நாளேனும்  வாய்க்கு ருசியான உணவு உண்டிருப்போம் கிட்ட தட்ட 15-25 வருடமாக எந்தவொரு தபால்தொடர்வும் இன்றி ஒரு நாளேனும்  வாய்க்கு ருசியான உணவு இன்றி  எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்று உங்களுக்குத்தெரியுமா…? நானும் நான்கு வருடத்திற்க்கு மேலாக சிங்களனின் சொல்லொன்னா சித்திரவதைகலையும் தாங்கிக்கொண்டு சிறையில் வாடியவன் எனக்குத்தெரியும் அந்த நரக வேதனை எப்படி இருக்கும் என்று
புலத்திலே மக்களின் பணத்தை ஏச்சு கொள்ளையடித்துக்கொண்டு சுகபோக வாழ்வு நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் நண்பர்களே என்றாவது சிறையில் இருக்கும் எங்கள் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்று நீங்கள் எண்னியது உண்டா…? அல்லது  முயற்சிதான் செய்ததுண்டா நான் எழுதிய இந்தக்கடிதத்தை உதாசினம் செய்து விட்டு இருந்துவிடலாம் என்று எண்னிவிடவேண்டாம் இதற்க்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தவறும் பட்ச்சத்தில் உங்களை நாங்கள் களையெடுக்கவும் தயங்க மாட்டோம் உங்கள் போன்று விசமிகள் எங்கள் தேசத்திற்க்கே ஓர் அவப்பெயர் நாங்கள் காற்றோடு காற்றாக கலந்து மக்களோடு மக்களாகியவர்கள் எங்கும் எதிலும் எப்படியும் வலம் வந்துகொண்டே இருப்போம் உங்கள் அருகாமையில் நின்றுகொண்டு யாவற்றையும் அவதானித்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதை மறந்துவிட வேண்டாம் நன்பர்களே எங்கள் மாவீரர்களை கல்லறையிலாவது உறங்க விடுங்கள்…நாங்கள் மெளனிகளாகவே இருந்துவிடமாட்டோம் உங்களால் புலத்திலே மக்கள் நடத்துகின்ற போராட்டத்துக்குத்தான் உதவமுடியாவிடிலும் பறவாயில்லை அதை முன்னின்று நடத்துபவர்களையாவது தொடர்ந்து நடத்த வழி விடுங்கள் சிங்களன் என்றோ தமிழ் ஈழம் என்ற ஒன்றை அங்கீகரித்து விட்டான் அதனால் தான் அவன் தன்னுடன் சேர்ந்து இயங்குகின்ற ஒட்டுக்குழுக்கலின் பெயர்களில் உள்ள ஈழம் என்ற சொல்லை அவனால் அகற்ற முடியவில்லை இந்தக்கடிதத்தின் மூலமாக நான் உங்களை குற்றவாளிகள் என்பதைவிட குற்றமற்றவர்களாக இனியாவது வாழுங்கள் என்கின்றேன் இந்த பூமிப்பந்திலே எமது வாழ்க்கை ஓர் சொற்ப்பகாலமே ஏதோ ஒரு இயற்க்கை அனர்த்தத்தின் போதோ அல்லது எதிர்பாராத விபத்திலோ இல்லை இயற்க்கை எய்தலிலோ எங்கள் மூச்சு இந்த பூமித்தாயின் மடியை முத்தமிட்டுவிடும் அதற்க்குள் நாங்கள் ரணம்கண்டு ஏதிலிகலாக தத்தலிக்கின்ற எமது உறவுகளுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் இனியும் வேண்டாம் இந்த கொடூர வலிகள் எம்மவர் இதயங்களிலே… மீண்டும் ஆதாரத்துடன் உங்களுடன் உரையாடுவேன்.
தணியாத தாயாகக்கனவுடன்
அன்புடன்   :ஒற்றன்
ottan999@gamil.com

தாயகவிடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக நினைவாலயம் திறப்புவிழா


சுரீச்சில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயகவிடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது,
முதல் தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு, மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா இனிதே நடாத்தப்பட்டது.

மாலை 19.00 மணியளவில் சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தாய் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைசுடரேற்றி அகவணக்கம், மலர்வணக்கம், மலர்வணக்கம், தீபவழிபாடு, கவிதாஞ்சலி, எழிச்சி உரை, வாழ்த்துச் செய்திகள் பொன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.


“இன்று வழக்கமான நாள் தான், ஆனால் பாதுகாப்பு அதிகரிப்பு“ – யாழ்.படைகளின் தளபதி


யாழ்ப்பாணத்தில் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சுவரொட்டிகளை ஒட்டி கொண்டாடுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதனை படையினர் தடுத்து விட்டதாகவும் சிறிலங்காவின் யாழ்.படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிலர் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை சிறிலங்காப் படையினர் தடுத்து விட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று வழக்கமானதொரு நாளாகவே இருக்கும்.எந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதையும் தடுப்பதில் கவனமாக இருப்போம்.

குடாநாட்டு வீதிகளில் படையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்துப் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு சிறிலங்கா காவல்துறையினருக்கு உதவ ஒரு தொகுதி படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் ஆதரவு சக்திகளை நாம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.“ என்றும் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ரஜினி ஜோடி அனுஷ்கா?


கோச்சடையான் படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே, ரஜினியின் ஜோடி யார் என்ற பேச்சும் கிளம்பிவிட்டது.

இந்தப் படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடிப்பார் என்கிறார்கள்.

கோச்சடையான் கி.பி. 735-ல் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஆவான். வீரதீரம் நிறைந்த அவனது வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராவதாகக் கூறப்படுகிறது.

உலகிலேயே அதிக வசூல் குவித்த அவதார் மற்றும் டின் டின் படங்களின் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ். ரவிக்குமார் கவனிக்கிறார்.

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.

அனுஷ்காவுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்கா தற்போது விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இவர் ராணா படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருந்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

சுல்தான் தி வாரியர் வேறு; கோச்சடையான் வேறு! - கே எஸ் ரவிக்குமார்


கோச்சடையான் படம் புதிய கதை, புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சுல்தான் - தி வாரியர் என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் சௌந்தர்யா ரஜினி. அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அந்தப் படத்தை உருவாக்கினார். இடையில் ரஜினி எந்திரனில் நடிக்கத் தொடங்கியதால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

எந்திரன் வெளியான பிறகு சுல்தான் வரும் என்றார்கள். ஆனால் பல்வேறு தடைகளால் சுல்தான் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் ராணா படத்தை அறிவித்தார் ரஜினி.

ராணா தொடங்கிய ஏப்ரல் 29-ம் தேதியன்றே, ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணா படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. இதோ அதோ என பல தேதிகளை பத்திரிகைகள் ஹேஷ்யங்களாக வெளியிட்டு வந்தன. ஆனால் ரஜினி தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்லப்பட வில்லை. வரும் ஜனவரியில் இதுகுறித்து சொல்வதாக கூறியிருந்தனர். ரஜினியும் இதை பின்னர் உறுதி செய்தார்.

இந்த நிலையில், திடீரென ரஜினியின் புதிய படம் கோச்சடையான் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் அனிமேஷனாகக் கூட இல்லாமல், ஜோம்ஸ் கேமரூனின் அவதார், ஸ்பீல்பெர்கின் டின் டின் படங்களைப் போல மோஷன் கேப்சரிங் உத்தியில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3 டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் இந்தப் படம் முன்பு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட சுல்தானா என்று கேட்டபோது, இந்தப் படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள ரவிக்குமார் கூறுகையில், "சுல்தான்தான் ராணா என்று முன்பு சொன்னார்கள். இரண்டு வேறு வேறு என்று முன்பு நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை. கோச்சடையான் முற்றிலும் புதிய கதை, புதிய திரைக்கதை.

ரஜினி சார்தான் இதில் நடிக்கிறார். இதில் ஒரு ஹைடெக் செட்டுக்குள் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி, அவற்றை மோஷன் கேப்சரிங் உத்தியில் மாற்றுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி, இது முழுக்க முழுக்க ரஜினி படம்.

ராணா ஒரு ஹெவியான படம். அதற்கு முன் இந்தப் படத்தில் நடிப்பது ரஜினிக்கு ஒரு ரிலாக்ஸான அதேநேரம் சுமையற்றதாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவு. ராணா நிச்சயம் 2012-ல் தொடங்கும்," என்றார்.

அணையின் வரலாறு தெரியாம டேம் 999ல் நடித்துவிட்டேன்: விமலாராமன்


முல்லைப்பெரியாறு அணையின் வரலாறு பற்றி தெரியாமல் டேம் 999 படத்தில் நடித்துவிட்டேன் என்று அப்படத்தின் நாயகி விமலாராமன் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இதில் விமலாராமன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த விமலாராமனுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து விமலாராமனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர், "நான் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்புக்காக கடந்த 1 வார காலமாக குலுமணாலியில் உள்ளேன். படப்பிடிப்பு ஒரு குக்கிராமத்தில் நடப்பதால் டேம் 999 படத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு இருப்பது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.

நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். நான் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவள். கே. பாலசந்தர் தனது 'பொய்' படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு அணையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. இயக்குனர் என்னிடம் கதை சொன்னபோது அதை படமாகத் தான் பார்த்தேன். தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லை," என்றார்.

தலைவர் பிறந்தநாள்: ஓடும் பஸ்ஸில் இனிப்பு வழங்கிய பெண்கள்! (படங்கள் இணைப்பு)

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 57ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேருந்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழகப் பெண்கள் செயற்கள ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையில் 100 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம் (காணொளி)

மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான் அவர் திகழ்கிறார்

அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக் கிடக்கின்றன.

மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காகவோ, மற்றவர்கள் தன்னை பின்பற்ற வேண்டும் என்றோ பேராடப் போனவர் அவர் அல்ல. அவர் மிகமிக இயல்பாக, அதிலும் மிக உண்மையாக தனது இலட்சியத்துக்காக தான் தேர்ந்தெடுத்த தான் நம்பிய பாதையில் சஞ்சலம் சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பவர்.

அவருடைய வாழ்வில் இருந்து இன்றைய பொழுதில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் எதுவென்றால் ‘அங்கீகாரத்துக்காக மட்டும் எதையும் செய்யாத ஒரு செயற்பாடு’ என்பதாகும்.

உயிரினங்கள் அனைத்தினதும் மிகமுக்கியமான செயல்முறையே உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஆகும். உணவு தேடுவது, காலநிலைகளின் தாக்கத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ள எத்தனிப்பது, தேவை கருதி இடம்பெயர்வது என்று அனைத்தையுமே தமது வாழ்வை, தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளாகவே அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.

இவற்றை செய்வதற்கு அவற்றுக்கு யாரும் கற்பிப்பது இல்லை. மனிதனுக்கு உயிர்வாழ்தலுக்கு அடுத்தாக அங்கீகாரம் என்பது மிகமுக்கியமான ஒன்றாக எப்போதுமே இருந்துவந்து கொண்டிருக்கிறது. தனக்கான அங்கீகாரம், தனக்கான அடையாளம், தனது கருத்துக்கான அங்கீகாரம் என்று அங்கீகாரத்துக்காகவே மனிதம் ஓய்வு ஒழிச்சல் இல்லாத செயற்பாடுகளை செய்துவந்து கொண்டிருக்கிறது.

இன்றைய தமிழ் அரசியல் என்பது 2009 க்கு பிறகு முழுக்கவே அங்கீகாரத்துக்காக மட்டுமே நடைபெறும் ஒருவித மாயவிளையாட்டுபோல இருக்கின்றது. முதலில் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற பின்னரே போராட்டமோ,அரசியலோ எதுவுமே செய்வோம் என்ற நிலைப்பாட்டையே மிகக் கூடுதலானவர்களிடம் காணக் கிடைக்கிறது.

அங்கீகாரம் என்ற மாயமானை பிடிப்பதற்கான செயற்பாடுகளாகவே இன்றைய தமிழ் சமூக செயற்பாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கான பதில் முழுதையும் தனது போராட்டம் முழுதும் தேசியத்தலைவர் கொண்டிருப்பதை இவர்கள் உள்வாங்கத் தவறியது ஏன் என்றுதான் தெரியவில்லை.

தேசியத்தலைவரின் போராட்ட ஆரம்பத்தை பாருங்கள். மிகச்சிறிய வயதிலேயே அவரை சுற்றி நிகழும் சம்பவங்களை நேரில் பார்த்தும், பாதிக்கப்பட்டவர்களின் உடைந்து நொருங்கிய குரல்களை கேட்டும் வளர்ந்த அவருக்குள் தன்னை சுற்றி அநீதியும், கொடுமையும் நிகழ்த்தப்படுவதாக உணர்ந்துகொள்ளப்படுகிறது.

இது அவருடைய நான்கு வயதிலிருந்தே நிகழ்கின்றது. தேசியத்தலைவரின் நான்காவது வயதில் 58ம் ஆண்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும், தாக்குதல்களும் நிகழுகின்றது.

அந்த காலப்பகுதியில் தலைவரின் தந்தையாரின் உத்தியோகம் காரணமாக அவரின் குடும்பம் தென் தமிழீழ நகரமான மட்டக்களப்பின் தாமரைக்கேணி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த அன்னப்பாக்கியம் என்ற பெண்ணின் கணவரான செல்லத்துரை என்பவரும் இந்த 58ல் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறியாட்டத்தில் 26.05.1958 ல் பதுளைபகுதியில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.

கணவனை சிங்கள பேரினவாத வெறியாட்டத்துக்கு பறிகொடுத்த அந்தப் பெண்மணி தினமும் தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை அம்மாவுடன் தனது கவலைகளை கதைப்பதை கேட்டுகேட்டு அதற்குள்ளாகவே அவரின் சிறுவயது வளர்ந்தது.

இதற்குள்ளாக பாணந்துறையில் எரித்து தார் பீப்பாவுக்குள் போடப்பட்ட அர்ச்சகரின் மனைவி சொன்ன கதை என்று ஆயிரம் சம்பவங்கள் அவரை பாதித்திருந்தன. அதன்பின்னர் அவர் சொந்தஊர் திரும்பிய பின்னரும் இந்த சம்பவங்களே அவரை எந்நேரமும் ஆக்கிரமித்திருந்தன.

இதற்கான தீர்வு என்ன?நான் பேசும் மொழி மூலம் நானும் எனது மக்களும் இனம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதை எப்படி நிறுத்தலாம்?தினமும் அஞ்சிவாழும் அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகளே அவர் படிக்கும் காலத்திலும் அவருக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கேள்விகளாகின.

அவர் இதற்காகவே தேடினார். தனக்கு கிடைத்த புத்தகங்கள், நண்பர்கள், பாடசாலைத் தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் இதற்கான பதிலை தேடினார். ஏறத்தாழ அவரின் 14 வயதிலேயே அவருக்கு தனது இலட்சியம் பற்றியும் அதனை அடைவதற்கான போராட்டபாதை பற்றியும் தெளிவாகி இருந்தது.

தேசியத்தலைவர் அவர்கள் இதனைப்பற்றி 1994ம் ஆண்டு தமிழீழ கலை, பண்பாட்டு பிரிவால் வெளியிடப்படும் இதழான வெளிச்சம் (சித்திரை-வைகாசி மாதத்துக்கான) புத்தகத்தில் மிகவும் தெளிவாகவே கூறயிருந்தார்.

இதனை அவரது வார்த்தையிலே தருகின்றேன். “14 வயதிலே இனத்தின் விடுதலைக்காக போராட வேண்டும் என்று நான் துடித்த துடிப்பு இருக்கிறதே அது அன்றைய எனது வயதொத்த சிறுவர்களின் அன்றாட வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்தது” என்கிறார் தேசியத்தலைவர்.

வரலாறு மிகவும் வீரியமானது. அது இப்படியான பொழுது ஒன்றுக்காகவே சிலரை தெரிவுசெய்து அதனூடாகவே எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களினூடாகவே வரலாறு முன்னகர்கிறது. அவர்களே வரலாற்றின் நாயகர்கள் ஆகிறார்கள்.

தேசியத்தலைவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்தவுடன் இதனை யாரும் அங்கீகரிக்க வேண்டும் என்றோ தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ காத்துக்கொண்டிருந்தவரல்ல. விடுதலை என்பது தனது மக்களுக்கு மிகமிக முக்கியமாக தேவை என்பதை உணர்ந்தவுடனேயே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்த சத்தியமானவர் அவர்.

அவர் போராட புறப்பட்ட 72லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்தது எல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான். யாருடயை பதிலுக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சியக் கனலுடனும் கட்டிவளர்த்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.

குழப்பவாதிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்து எடுத்தார்கள். மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரை விட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்த வேலைகளுக்கும் சென்ற அந்த பொழுதில் ஏறத்தாழ ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே தலைவருடன் நின்றிருந்தார்கள்.

அப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக்குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது.“இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்றுதன்னும் எங்கள் மக்களின் விடுதலைக்காக ஏதும் செய்துதான். போவேன்” என்றார்.

இந்த உறுதியும் விடுதலையின்மேல் கொண்ட சமரசம் அற்ற பற்றும் அவர் தனித்துநின்றபோதிலும்,அவர் கடற்படை,விமானப்படை கொண்ட மரபுவழிப்படைகளைகொண்டிருந்தபோதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.

அவருக்கு தெரிந்ததெல்லாம் விடுதலை. அதற்காக தன்னால் இயன்றதை செய்வது. மேலும் அவர் விடுதலை இத்தனை வருடங்களில் சாத்தியமாகும் என்றோ இத்தனை வருடங்களில் தமிழீழம் பெறலாம் என்றோ கற்பனைகளில் மிதந்தவரும் அல்ல.

இப்போதைய எனது வேலை விடுதலைக்கு போராடுவது. அதனை மெதுமெதுவாக நகர்த்துவதுதான் இப்போதைய போராட்டமுறை என்பதில் உறுதியானவர் அவர். 80களின் ஆரம்பத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தலைவர் திடீர் திடீர் என புதிதாக சேர இருக்கும் உறுப்பினர்களுடன் தானேசென்று கதைக்கும் வழமையை கொண்டிருந்தார்.

அச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார். இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்தற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள். கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார். “எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.

அந்த மாணவனும் “ 4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான். உடனே தலைவர் “இல்லை, இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான். 40 வருடமும் ஆகும். 400 வருடமும் ஆகலாம். இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம். அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்” என்றார்.

திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் “விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?”என்று அதற்கு தலைவர் சொன்னார்.

”விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி, சிங்கள தேசத்தின் வீழ்ச்சி, தமிழகத்தின் ஆதரவு, சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்” என்று சொன்னார்.

அவர் இன்றோ நாளையோ விடுதலை எடுத்து தருவேன் என்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டு போராட்டக்களத்துக்கு வந்தவர் அல்ல. அவரின் இந்த பிறந்ததினத்தில் ‘சரியான செயற்பாடுகள் செய்துகொண்டே போகும்போது அங்கீகாரம் கிடைத்தே தீரும்’ என்பதை அவரின் வரலாற்றினூடாக புரிந்துகொள்வோம்.

அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. அவர் போராடப் புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில். பாருங்கள்.13 வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி எந்தவித சளைப்புமின்றி போராடிய அவரின் தவம் எத்தனை உயர்ந்தது.

இந்த உயர்ந்த புரட்சிக்குணமே அவரை தேசியத்தலைவராக பல லட்சம் மக்களின் மனங்களுக்குள் எழுந்துநிற்க வைத்தது. அவரின் இந்த பிறந்ததினத்தில் இதனையே ஒரு பிரகடனமாக கொள்ளுவோம்.

அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது என்றும், அது,’நீந்தப் பழகிய பின்னரே நீருக்குள் இறங்குவது போலானது’ என்றும் கற்றுக்கொள்ளுவோம்.

ச.ச.முத்து
ilamparavai@hotmail.com

தென் தமிழீழத்தில் பல பகுதிகளிலும் தேசியத்தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழீழ தேசியத் தலைவரின் 57 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் மக்கள் கொண்டாடியுள்ளனர்.

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன் பல இந்து ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூசைகள் நடைபெற்றன. இப் பூசைகளிலும் மக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் இந்நிகழ்வுகள் இடம் பெற்றன.

மேற்படி நிகழ்வுகள் தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் அவரின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டன.

ஓடடுக்குழுக்களான கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் சிறிலங்கா படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் தேசியத் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் தேசியத் தலைவர் நிறைந்திருப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

திடீரென பல இடங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க பல்லாண்டு

உள்ளூறும் உணர்வை எல்லாம்
சொல்லால் நான் வடிக்கவில்லை.

சொல்லில் நான் வடிப்பதென்றால்
கடலில் துளியையே இங்குரைப்பேன்.

சொல்லால் எது சொன்னாலும்
தலைவா உனக்குப் பிடிப்பதில்லை.

ஆதலால் நான் நேற்றுவரை
உனைப் புகழ்ந்து பாட நினைக்கவில்லை.

இருந்தும் ஏனோ இன்று
உனைப் பாடாமல் இருக்க
என்னால் முடியவில்லை.

இடம்மாறி வாழும் போதும்
இதயத்தில் தலைவா உன்னை
தினம் தோறும் சுமக்கின்றேன்.

தடம் மாறிப் போகா உன்னை
தலைவனாய் கொண்ட எந்தன்
உணர்வுகள் தொடுதே உன்னை

எங்கு தான் வாழ்ந்தாலும்
தாய்மடி தாங்கும் எண்ணம்
துளிகூடக் குறைந்ததில்லை.

என் நிலை மறந்த போதும்
உன்னை நான் மறப்பதில்லை.

கண்ணிமை கவிழும் போதும்
கரிகாலா!
கனவிலும் தழுவும் உன்னை
பாடாது இருக்க என்னால்
நினைத்தாலும் முடியவில்லை.

எல்லாம் புரக்கும் இறைவா!
வல்ல தலைவா!
வாழ்க பல்லாண்டு.

தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!

சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற்
செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே
நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின்
நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ நீர்வான்
காற்றென்றும் ஐம்பூத வடிவம் தாங்கிக்
காலப்போர் புரிந்ததமிழ் மறவர் தேவே!
மாற்றில்லாப் பசும்பொன்னாய் மிளிரும் ஈழ
மக்கள்தம் மன்னவனே வாழி! வாழி!!

பூவெல்லாம் நின்மாண்பு சொல்லுமா போல்
புதுவிதழ்கள் மிகவிரித்து எழிலாய் நிற்கும்!
நாவெல்லாம் நின்னாற்றல் பேசிப் பேசி
நயன்சொல்லும்! நம்கவிஞர்; யாக்கும் இன்பப்
பாவெல்லாம் பைந்தமிழர் தலைவ நின்னை
பல்லூழி வாழ்கவெனும் தமிழீழத்துக்
காவெல்லாம் உறைவிலங்கு புட்கள் யாவும்
கரிகாலன் பேரிற்பல் லாண்டு பாடும்!

குட்டுகின்ற போதெல்லாம் குனிந்து கூப்பிக்
கும்பிட்ட நிலைமாற்றி வைத்தோய் வாழி!
வெட்டுக்கு வெட்டென்று பதில்கொ டுத்த
வேங்கைமா மன்னவனே வாழி! வாழி!!
இட்டசிறு பிச்சையினை இருகை நீட்டி
இரந்துண்டு வாழந்திட்ட இனத்தில் வந்த
மொட்டவிழ்ந்து மணம்வீசும் மலர்போல் நெஞசின்
மாதலைவ மண்ணினிலே நீடு வாழி!

செந்தமிழர் ஆயிரமாம் ஆண்டு செய்த
செழுந்தவத்தின் பெரும்பயனாய் வாய்த்தாய் வாழி!
வந்திறங்கி வானிருந்து வளம்பெ ருக்கும்
வண்டமிழர் கங்கைநதி போல்வாய் வாழி!
மந்தையிலை மறத்தமிழர் நாமென் றீன
மாற்றர்க்குப் பெரும்பாடம் சொன்னாய் வாழி!
அந்தமில்சீர் தமிழீழ அணியார் நாட்டின்
சூரியனே நீவாழி! தமிழும் வாழி!!

தலைவரின் பாதையில்... கவிதை வடிவம் சசி

என் ஈழ‌த்தின்
தந்தையும் நீயே
தமிழ் இனத்தின்
தலைவனும் நீயே தலைவா.

உன் வீரத்தை
உலகமே போற்றும்
காலம் கனிகின்றது தலைவா

நீ தனி மனிதன் அல்ல
உன் பின்னால்
பல்லாயிரம் வீரர்கள்
உன் கரங்களை பற்றி பிடிப்போம்

நிச்சயம் ஈழம் மலரும்
மாவீரரின் கனவுகள்
நினைவாகும் இது உறுதி

பிரித்தானிய கொடியோடு தேசிய கொடியும் சேர்ந்து ஏற்றப்பட்டது! (படங்கள் இணைப்பு)

பிரித்தானிய தமிழ் மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2011 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழகம் உட்பட பிரித்தானியாவின் பிரசித்தி பெற்ற எட்டு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியங்களும் சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரித்தானியாவின் லிபரல் டெமகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Simon Hughes அவர்கள் கலந்து பிரித்தானிய தேசிய கொடியை ஏற்றி வைத்தார் அத்தோடு ப்ருநெல் பல்கலைகழக மாணவரும் இளையோர் அமைப்பின் உறுப்பினருமான செல்வன் ராகேஷ் நம்பியார் தமிழீழ தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கொடி வணக்க பாடல் நிறைவு பெற அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றல் அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. கைகளிலே விளக்குகளை ஏந்திய படி எழுந்து நின்று எமது மாவீர செல்வங்களுக்கு மரியாதையை செய்யப்பட்டதோடு மட்டும் நின்று விடாமல் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய" மாவீரர் பாடல் இசைக்க மாணவர்களின் கண்ணில் சிந்திய அந்த துளிகளுடன் அஞ்சலி செய்யப்பட்டது.

நிகழ்வினை ஆரம்பிக்க லிபரல் டெமகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Simon Hughes அவர்களின் உரை இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து Brunel University , City University , Imperial College , Kings College London , Queen Mary University of London , university College London , South Bank university, பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்சிகள், பாடல்கள், உரைகள் என பல இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் உரையுடன் நிகழ்வு இறுதி கட்டத்தை அடைந்தது. இறுதியாக உறுதிமொழியுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.






ஈழத்துச்சூரியனே... பாமினியின் வரிகள்

வேங்கையாக வந்தவரே!
அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை
எழுப்பிய அயனே.

குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை
பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர்
அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை
தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர்.
நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர்.
வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி
விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை
ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர்.
புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர்.

கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர்
காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர்.
தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை
களமாட விட்டு கண்ட ரசித்தீர்.
அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை
கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர்.
அகப்பையோடு அலைந்த அவளை
ஆட்லறியோடிங்கு விளையாடச்செய்தீர்
அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை
எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர்.
அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும்
வானிலும் தரையிலும் மிடுக்குடன்
நடப்பது உம்மால்..

தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம்
எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம்
ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய்
நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம்
என நாம் உயர்ந்தோம்.
காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான்
இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில்
தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன்
பலர் உங்களின் படை தொடர்வோம்.
காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை
நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன்
பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்..
வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற
எழியவர்கள் தலைகுனிந்தார்

அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள்
உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான்
இறுதிவரை உமைத் தொடர்வார்.
மலையென எதிரி எம் குகை புகுந்தாலும்
இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும்
உம்முன்னே நாம் நடப்போம்
வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன்
உங்களின் வழி தொடர்ந்திருப்போம்...

பாமினி

நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்...

தலைப் பயணியே எங்கள்
தாற்பரிய வேர் முடியே
அலைக் கரத்தில் அவதரித்த
உலைக் கரமே யாராலும்
விலைக்கென்றும் வாங்கேலா
வித்தகமே எம் மண்ணில்
போர்க்குணத்தைத் தோற்றுவித்த
பொருள் முதலே! கனவிலும் நாம்
கட்டுவதை எண்ணிப் பார்க்கேலாக்
கட்டமைப்பை உன்னுடைய
சுட்டு விரல் அசைவாலே
சூழந்து நிற்க வைத்தவனே..!

உலக வரை படத்தின்
எங்கோ ஓர் மூலையிலே
பெயரின்றிக் கிடந்த ஓர்
பேரினத்தின் பேண் தகவை
அகில உலகத்தின்
அன்றாடப் பார்வைகளில்
பெரும் பிம்பமாக்கி வைத்த
பெரும..!

மண்ணின்று
நீ வந்த நாளின் நினைவில்
நின் இருப்பை
சோகங் கலந்திருந்தும்
சுமை நிறைந்து நெஞ்செரிந்தும்
தாகம் தீர்ப்பதற்கு வந்திடுவாய்
என ஏங்கி
பாலைவன ஒட்டகமாய்ப்
பார்த்துளது, காலத் தீ
உலகே சேர்ந்தொன்றாய்
ஊதி விட்ட காற்றினிலே
எம் காட்டை
எரித்து விட்டுப் போனாலும்
அதனுள்ளால்
நினை ஏந்திப் போயிருப்பார்
நிச்சயமாய் என்கின்ற
வானேந்தும் வார்கடலின்
வற்றாத உறுதியைப் போல்
நாமேந்திக் கொண்டிருக்கோம்.

நம் நெஞ்சில்.. ஆகவனே
எம்முடைய வாழ்வும்
எதிர்கால வழித் தெளிவும்
உன் பயணச் சுவடெங்கும்
உயிர் நிறைந்து கிடக்கிறது
எம் பயணம் எதுவென்றும்
எது அதற்கு வழி என்றும்
உன் பயணச் சாராம்சம்
உரத்திங்கே சொல்கிறது
கண்ணின் கதிராடி போன்றவனே!

உன் வரவை
எண்ணி இமைக் கரங்கள்
எட்டுகின்ற திசைகளெல்லாம்
அண்ணா எனத்தேடி அழைக்கிறது
விழிச் செவியும்
பார்வைச் செவிப் பறையில்
படும் உந்தன் குரல் என்று
ஆர்வங் குலையாமல்
அலைகிறது, போதுமினி
ஓர்மம்
தான் பெற்ற ஒரு மகனே
தோன்றிடுக..!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள திருமாவளவன் அழைப்பு

நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்கள், கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக நவம்பர் 27ம் நாள் உலகம் முழுக்க தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளை நவம்பர் 27 ந் தேதி என்பதால் மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் கொண்டாட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு வீரநங்கை செங்கொடி அரங்கில் மாவீரர் நாள் நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தடுக்கவில்லை... தமிழகம் தவிர பிற பகுதிகளில் 'டேம் 999'!


டெல்லி: மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட டேம் 999 படம், தமிழகம் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் 550 திரையரங்குகளில் வெளியானது.

முல்லை பெரியாறு அணையால் தமிழக, கேரள மக்களுக்கு ஆபத்து என்றும், 30 லட்சம் தமிழர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் சித்தரிக்கும் வகையில் கேரள இயக்குனர் சோஹன் ராய் எடுத்த டேம் 999.

இந்தப் படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. 100 ஆண்டு பழமையான இந்த அணையை உடைத்து புது அணை கட்ட வேண்டும் என்றும் இல்லையேல் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்றும் படத்தில் வலியுறுத்தப்பட்டுயுள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தினர். இதையடுத்து தமிழக அரசு டேம் 999 படத்துக்கு தடை விதித்தது. இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தின. பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது.

ஆனால் எதிர்ப்பை மீறி தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று ரிலீசானது. இந்த படத்தின் முன்னோட்ட சிறப்பு காட்சியை மத்திய அரசின் பிலிம் டிவிஷன் நேற்று டெல்லியில் உள்ள திரைப்பட வர்த்தக சபையில் திரையிட்டது. பத்திரிகையாளர்களுக்காக இந்த சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

பெரிய அணை, சிறிய அணை என இரு அணைகள் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. அணை பிடிப்பில் உள்ள மக்கள் மலையாளத்தில் பேசுகிறார்கள். புதிதாக கட்டப்படும் சிறிய அணை பலவீனமாக உள்ளது என கூறி அதற்கு திறப்பு விழா நடத்த மேயர் மறுத்து விடுகிறார். இதனால் பெரிய அணையில் உள்ள தண்ணீர் சிறிய அணையில் திறந்து விட மறுக்கப்படுகிறது.

திடீர் என புயல், நில நடுக்கம் ஏற்படுகிறது. இதில் மேல் அணை உடைந்து விடுகிறது. தண்ணீர் சீற்றத்தினால் இன்னொரு அணையும் உடைகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது போல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. படத்துக்கு தடை விதிக்கும் படி தமிழகத்தில் இருந்து வந்த கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

கேரளாவில் இந்த படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது. அங்குள்ள ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் படம் ரிலீசான அனைத்து தியேட்டர்களிலும் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது.

மீடியாவில் எழுந்த சர்ச்சைகள், தலைவர்களின் எதிர்ப்புகளே படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்ததால், சுமாரான இந்தப் படத்துக்கு எக்கச்சக்க வசூல் கிடைத்துவிட்டது முதல்நாளில்!

Friday 25 November 2011

மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்

தேசியத் தலைவர் அவர்களால், எங்கள் காவிய நாயகர்களுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட புனித நாள். எங்கள் தேசம் மீண்டும் சிங்கள ஆட்சியாளர்களிடம் வீழும்வரை, மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாகக் கோலம் கொண்டது. தமிழீழம் மட்டுமல்ல, தமிழர் வாழு நாடுகளை அது பற்றிப் படர்ந்து பரணி பாட வைத்தது.

இந்த நாள் எமக்கான மகத்துவமான புனித நாளாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றாய் எழுந்து, எழுச்சியுடன் வீர வணக்கம் செய்தார்கள். புலம்பெயர் தேசங்களில் அந்தக் காவிய நாயகர்களது நினைவு வணக்க நாளை எழுச்சியுடன் நடாத்தும் செயற்பாடுகள் தேசியத் தலைவரால் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களிடம் விடுக்கப்பட்டது.

காலப் பெரு வெள்ளத்தாலும் அழியாத காவிய நாயகர்களை மீள எழுப்பி உறவாடும் நாளை முள்ளிவாய்க்கால் பேரவலம் தாண்டியும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் எழுச்சியுடன் நடாத்தியது வரலாறு.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழுக்காய், புலிக் கொடியேந்திப் போரில் களமாடி வீழ்ந்த எம் தேசத்தின் வேங்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் மலர்கொண்டு அர்ச்சிக்கும் நிகழ்வு இன்று வரலாற்றுப் பேரவலத்தை எதிர்கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியத் தளங்களைக் குறி வைக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், இந்த மாவீரர் தினத்தைப் பிளப்பதனூடாக அந்த வீர மறவர்களின் தாயகக் கனவைச் சிதைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் எங்கள் மத்தியில் புதிய போர்க் களம் ஒன்றைத் திறந்துள்ளான்.

புரியப்படாத சில காரணங்களுடன் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கு எம்மவர்களே எதிரிக்கு உதவுவது போன்று, இதுவரை காலமும் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களால் நிகழ்த்தப்பட்டுவந்த மாவீரர் தினத்திற்குப் போட்டியாக, புலம்பெயர் நாடெங்கும் போட்டி மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.

தேசியத் தலைவரது கட்டளைகளை மீறுபவன், அவரது சிந்தனைகளை உதாசீனம் செய்பவன், அவரது தமிழீழ விடுதலை இலட்சியத்தை எதிரியுடன் சமரசம் செய்து கொள்பவன் யாராகவிருந்தாலும் அவனைத் தமிழீழம் மன்னிக்காது, வரலாறு மன்னிக்காது, மாவீரர்களும் மன்னிக்கமாட்டார்கள்.

விடுதலைப் புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட புலம்பெயர் தேசியத் தளத்தைச் சிதைத்துவிட்டு, மறுபடியும் ஒரு மண் குடிசையைத்தானும் கட்டுவதற்கு எவராலும் முடியப் போவதில்லை. அதனால்தான், எதிரி திட்டமிட்ட வகையில் மாவீரர் தினத்தைக் குறிவைத்து நகர்கின்றான்.

எனவே, புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல், மாவீரர் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க, புலம்பெயர் தேசங்கள் தோறும் தொடர்ந்து பணியாற்றும் தமிழ்த் தேசிய தளங்களுடன் இணைந்து நின்று, இன்று நடைபெறும் வரலாற்றுச் சதியினை முறியடிக்க வேண்டும்.

கார்த்திகை மாதம், எங்கள் வல்லமைக்காக எங்கள் மாவீரர்களுக்கு கார்த்திகைப் பூ வைத்து வணங்கும் நாளுக்கான மாதமும் அதுதான். எங்கள் தேசத்தின் அடிமை விலங்ககற்றி, எம்மைச் சுதந்திர வாழ்வுக்குரிய மனிதர்களாக மாற்றம் கொள்ள வைத்து, தேசிய விடுதலைக்காக எம்மைக் களமிறக்கிய வீரத் தமிழன் பிரபாகரன் அவர்களை எமக்குத் தந்த மாதமும் கார்த்திகைக்கான சிறப்பாக உள்ளது.

தமிழினத்தைத் தலை நிமிர வைத்து, அவனியெங்கும் முகவரிகள் பெற்றுத்தந்துவிட்டு, விடுதலைக்கு வித்தான வேங்கைகளைத் தொழுவதற்காகவே, அந்த மாதத்தில் கார்த்திகைப் பூக்களும் சிலிர்த்துப் பூச் சொரியும் அதிசயமும் அந்த மாதத்தின் தனியழகு.

தமிழீழ மண்ணில் சிங்கள தேசம் நடாத்தி முடித்த இன அழிப்பின் பின்னரும், இந்தக் காந்தள் மலர்கள் கல்லறைப் பூக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை சிங்களத்தால் இன்றும் தடுக்க முடியாததாக காட்சியாக உள்ளது.

தமிழீழம் தலை சாய்த்து வணங்கிய மாவீரர்களது கல்லறைகளும் சிங்களத்தால் சிதைக்கப்பட்டு, உலகத் தமிழினத்தின் உணர்வுகளுக்குச் சவாலாகிப் போன காலங்களில், நாம் இன்னமும் ஒன்றாகிப் பலமாகி ஒரே தளத்தில் நின்று எங்கள் மாவீரர்களை வணங்குவோம்!

எமது தாயாக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களை புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம் பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.வேலுப்பிள்ளை பிரபாகரன்


மேலதிக விபரங்கள் அறிய...

மாவீரர் வாரம், ஒவ்வொரு வீட்டிலும் எம் தியாக தீபங்களுக்குத் தீபமேற்றித் தியானியுங்கள்

மாவீரர் வாரம், ஒவ்வொரு வீட்டிலும் எம் தியாக தீபங்களுக்குத் தீபமேற்றித் தியானியுங்கள், சமயத் தலங்களுக்குச் சென்று அவர்களுக்காக வழிபடுங்கள், மாவீரர் தினம் நடைபெறும் இல்லங்களுக்குச் சென்று உங்கள் நன்றிக் கடனைச் செலுத்துங்கள்.

அதேவேளை, இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை விரைவில் அமைப்போமென மாவீரர்களை மதிக்கும் அத்தனை உறவுகளும் இன்றே சபதம் எடுத்து செயற்பட வேண்டும்.

ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் எமது இறுதிப் போரான அரசியல் போரைக் காலம் கடத்தாது முடிவிற்குக் கொண்டுவர தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் தாமதியாது இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

உண்மையுடனும், உறுதியுடனும் உழைத்த கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழரும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும்.

இதுகண்டு, மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.

கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org

ராஜீவ் காந்தி ஒரு துரோகி என்கிறார் "உச்சிதனை முகர்ந்தால்" தயாரிப்பாளர் புகழேந்தி

இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக சர்வதேசத்திற்கு பொய் கூறிவரும் சிங்கள தலைவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான கருவியே உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் என்கிறார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்,

புனிதவதி என்ற அந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரிகளின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், இந்தியாவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்,

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த வேளையில் பிரபாகரனிடமிருந்து ஆயதங்களை வாங்கிவிட்டு பிரபாகரனையும் தமிழர்களையும் கொல்வதற்கு எதிரிகளுக்கு ஆயுதங்களை கொடுக்கவில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் முழுப்பாதுகாப்பை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று மிகவும் தெளிவாக ஒரு குழந்தைக்கு புரிகிற மொழியில் பிரபாகரன் பேசியதாக உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கூறிய பிரபாகரனை முதுகில் குத்தி ரஜீவ்காந்தி துரோகம் செய்ததாக அவா் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்ட போது மக்களை இந்தியா போய் காப்பாற்றியதா? தாக்குதல்களைத்தான் நிறுத்தினார்களா? அவர்களது நோக்கம் என்னவாக இருந்தது?
பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்து 20ஆவது நாள் பிரபாகரனை தீர்த்துக் கட்ட எதிரிகளுக்கு சொல்லியது யார்?

இந்தத்துரோகத்திற்கு யார் பதில் சொல்வது? இந்த துரோகத்திற்கு யார் பின்னணியில் இருந்தது. எல்லாம் ராஜீவ் காந்தியின் வழிகாட்டலிலே என தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் புகழேந்தி.

இலங்கையின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கொல்லப்பட்ட மக்களை காப்பாற்ற வெண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்

கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.

புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.

எருக்கலைக்காடாய் எவனோ மிதித்து எச்சில்படுத்தும் குப்பைகளின் மேடாய் என் சொத்தென்று பத்திரங்கள் நிரப்பி பாழாய்ப் போனவர்கள் வேலியிடும் வம்சப் பெருவடுவாய் எம் குஞ்சுகளை மலர்தூவி மார்பில் இறுமாந்து மண்ணள்ளித்தூவி மலையாய் நிமிர்ந்த சத்தியமைந்தர்களின் சாவற்ற சந்நிதி நித்தியம் பார்த்து நாம் நெகிழ்ந்த நெருப்புகளின் இருப்பு தொழுதிட முடியா துரதிஸ்டமாயிற்று.

ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவல்லவா கண்டார் நிச்சயம் ஒரு நினைவழியா நாள் வருமென்றுதானே கொற்றவைதேவியின் கோயிலில் இத்தனை செல்வங்களும் இரத்தபுஸ்பங்களாய் சத்திய வரிகளை எழுதிச் சாய்ந்தனர்.

பற்றி எரிகிறது வயிறு இத்தனை பெரிய அடிமை இருளில் ஏங்கித்திரியவா பச்சைக் குழந்தைகள் பாடை ஏறினர்.

ஆற்றலின் உறைவிடமாய் இருந்த வீடு தோற்றதன் மாயமென்ன

தோற்றதா இல்லை தொலைந்ததா அல்லது அஸ்தமன திசையின் அகங்கார வெறிக்குள் வீழ்த்தப்பட்டதா

உலகாதிக்கத்தின் உன்னதம் அறியாத்தனத்தில் உறைந்து போனதா

என்ன நடந்தது. என்ன நடந்தது. ஏன் நடந்தது. எப்படி நடந்தது.

இந்தக் கேள்விகளை கேட்கும்போதெல்லாம் ஈழத்தமிழன் செத்துப்போகிறான்.

கல்லறைகள் தழுவி கண்ணீர் விட்டழுது என் மனக்கிடக்கைகளை மருந்திட்டு மனமாறிப்போகலாம் எங்கே என் திருக்குழந்தைகளின் திண்ணிய மேனி நீள் துயில்கொண்ட திருநிலம் இல்லையே கண்ணெதிரில் கிடக்கிறது கசக்கி எறியப்பட்ட கனவுகளின் விளைநிலம் எண்ணமுடியாத் துயரில் என் கார்த்திகை கடக்கின்றது.

கண்ணீர் விட்டு ஓவென்று அழுதால் காவல் நிலையங்களுக்கு காரணம் சொல்லவேண்டும் அடக்கிக் கொள்கிறேன்.

மரணித்தவர்களை நினைப்பது கூட மகா குற்றம் என்ற நிலையில் இன்றைய நாட்களில் என் பெயரை மரக்கட்டை என்று மாற்றிக்கொண்டேன்.

ஈகத்தின் இமயத்தை தொட்டவர்க்கு நெய் விளக்குகள் ஏற்றமுடியவில்லை மெய் விளக்குகள் உள்ளே ஓங்கி எரிகின்றன.

மடியில் இருக்கும் போதும் மண்ணுக்குள் இருக்கும் போதும் தன் பிள்ளையின் எண்ணம் தாயறிவாள் அம்மாவின் அரவணைப்பை பிள்ளை ஆதர்சமாய் அடையும் அதை எந்த வல்லரசாலும் வெல்லமுடியாது.

உயர்ந்த காதலின் மொழியை எங்கள் ஊருக்குள் எழுதினால் விசாரிக்கப்படுவேன் வெறித்தனத்தால் முறைக்கப்படுவேன் இழுத்தேற்றப்படுவேன் எலும்புகள் முறிக்கப்படுவேன் கல்லறையை பாடியதற்காய் கதை முடிக்கப்படுவேன் என்பதனால் நான் மட்டும் பாடுகின்றேன்.

கல்லறைக்குப்போன காவியங்களே! நீங்கள் மட்டும் தமிழர்கள். நீங்களே தமிழர்கள். அன்றாடம் ரணப்படுகிறோம் தமிழர்களா நாம்.

நேற்றுத்தான் உங்களை நெஞ்சமெலாம் வைத்து போற்றுவதாய் புளுகினோம் புளகாங்கிதம் அடைந்தோம். முந்திக்கொண்டு முறுக்கேற பேசினோம் இன்று எல்லாம் வீண்வேலை என்கிறோம்.

கதிரை அரசியலே கடவுள் என்கிறோம். எங்கள் கடைக்கோடி வரை வந்து எவன் எவனொ களவெடுக்கிறான் கற்பை உருவுகிறான் கன்னத்தில் அறைகிறான் செத்தபிணம்போல திரிகிறோம்.

எங்களில் சில பேருக்கு நேற்று அப்பிடியும் இன்று இப்படியும் எப்படி முடிகிறது. சிலர் இருக்கும் வரைகூட இனிய நிலம் விடியாது. நினைவுகளை நெருங்க முடியாது.

புல்முளைப்பதற்கா புண்ணியர்கள் எருவானார்கள். தலைகுனிவதற்கா தங்கைகள் வெடியானார்கள். புற்றெடுப்பதற்கா புதுச்சரிதம் எழுதினார்கள்.

ஒவ்வொன்றாய் இன்முகங்கள் இதயத்தில் எழுகின்றன. அந்த நாட்களை ஆராதிக்க தவிக்கின்றேன். இந்த தெருக்களுக்கு அவர்கள்தான் அழகு எந்தப் பாடலுக்கும் அவர்கள்தான் அழகு எந்த இரகசியத்துக்கும் அவர்கள்தான் அழகு எந்த பேரொலிக்கும் அவர்கள்தான் அழகு எந்த புன்னகைக்கும் அவர்கள்தான் அழகு அவர்கள் இல்லாத நாட்கள் சூனியம்தான்.

கார்த்திகையே! ஏன் எனை தீண்டுகிறாய்

எத்தனை இரவுகள்
எத்தனை விழிப்புகள்
எத்தனை ஆச்சரியங்கள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை சத்தியங்கள்
எத்தனை பிரிவுகள்
எத்தனை சந்திப்புகள்
எத்தனை நட்புகள்
எத்தனை காதல்கள்
எத்தனை தவங்கள்
எத்தனை மௌனங்கள்
எத்தனை காயங்கள்
எத்தனை வருடல்கள்
எத்தனை எதிர்பார்ப்புகள்

ஓர் அழகிய சாலை பாதங்களை இழந்து பாழடைந்து கிடக்கின்றது ஒற்றைக் கண்ணீரில் விழுந்துடைகின்றது ஒரு இராச்சியத்தின் கனவு.

எத்தனை நாட்களை கொண்டாட நாம் சித்தங்கொண்டிருந்தோம் இன்று ஒற்றை நாளைக்கூட கண்ணிலொற்ற மறுக்கப்பட்டோம்.

கொள்கை பற்றி கொளுத்தி எறிந்தவர்கள் எல்லாம் முடிந்ததென்று எதிரிகள் காலடிக்கு சரணம்பாட சம்மதமானபோது நம் குலத்து இளவல்கள் இருவர் வானமேறி வதம்செய்ய போனார்கள்.

பொக்கணையின் உப்புவெளியே இரணைப்பாலையின் இதயமே எடுத்துரை ஈகம் செய்த எம் தேவமைந்தர்களின் விடியலின் நம்பிக்கையை.

வானவியலை எங்கள் வரலாற்றை அகிலத்தின் மொழிகளை ஆழப் படித்தவர்கள்தான் அவர்கள் இறுதி வேளையிலும் உறுதிகுலையாதிருந்தார் எழுந்தார் பறந்தார் மடிந்தார் எங்கள் மானக்கொடி பறக்குமென்று.

நாங்கள் எல்லாம் நடப்பதறிந்த ஞானிகள் என்று உயிர்கொண்டோடி வந்து இன்று சந்தியிலும் சபையிலும் முந்திக்கொண்டு பேசுகிறது.

தன்மானம் இழந்து தாய்மானம் விற்று அடிமைச் சாசனத்தை ஆரத் தழுவியதன் அடையாளம்.

நாம் இழந்தது எப்பெருமிடுக்கென்று எவரேனும் உணர்ந்தீரா காலத்தின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஈழத் தமிழனுக்கு இனியொரு தலைவனில்லை என்பதுணர்ந்தீரா.

எல்லா முகங்களிலும் ஏகப்பட்ட குறைபாடுகள்.

சின்னத் துரோகங்களுக்கே சீறிய நாங்கள் இப்போது எண்ணற்ற துரோகங்களோடு வாழ்க்கை நடத்த வஞ்சிக்கப்பட்டோம்.

அர்ப்பணிப்புக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணம் எழுதிய பிரம்மாக்கள் இப்போது அடிவருடுவதும் ஒரு வகை அழகென்று முடிவெடுத்து திரிகின்றார்.

கொடி பிடித்து கூட்டம் நடத்தியவர்கள் எல்லாம் கொள்கை என்ன கொள்கை எல்லாம் குடுக்கிறதை வாங்கிக்கொண்டு அடங்கிறதுதான் அறிவென்று அலட்டுவதை இப்போது வீரம் விளைந்த மண்ணில் மலிவாக கேட்டு மனம் வேகலாம்.

பாவம் அந்த வாலிபத்தை தொலைத்து வாழ்க்கையை முடித்து ஈழம் காணப் போன இதய தெய்வங்கள்.

கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மானத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.

ஓ! உள்ளுறையும் உற்பவங்களே! நேற்று நடந்தவற்றுள் தோற்றுப்போன கதைதான் பலரின் ஞானத்துக்கு எட்டியது வென்ற கதை நூறு இருந்ததை அறிய நாளைவரை காத்திருக்க வேண்டும்.

விடுதலைப் போர்களில் நிச்சயம் இந்த விந்தைகள் இருக்கும்.

ஆயுத்ததோடு சம்மந்தப்பட்டதாக அறியப்பட்டாலும் ஆழ் மனதோடும் பிரிக்கமுடியாத பேராற்றல் பெற்றது விடுதலை தேடல்.

இந்த இடத்தில் உலகம் தமிழர்களிடம் தோற்றுக் கிடக்கின்றது.

பிரபாகரனை பிடிக்காத மேதாவிகளுக்கு தமிழர்களை பிடிக்கிறது என்பது கோமாளித்தனம்.

பிரபாகரனை சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் அரசியல் நடத்துகிற நாகரிகம் இப்போது. மாவீரர்கள் என்ற வரலாற்றுச் சொல்லை உச்சரித்தால் தங்கள் அரசியலுக்கு தள்ளாட்டமே இல்லையென்பது மக்களை நாடி பிடித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

கல்லறைகளும் கறைபடிந்த இலங்கை அரசியலுக்கு சில்லறைகளாக மாறிவிட்டன என்பது ஒரு புறம் கவலைதான்.

தியாகங்களை பேசுகின்றவர்கள் எங்கள் தாயகம் வடக்கு கிழக்கு இணைந்தது என்பதை எண்ணத்தில் வைக்கவேண்டும்.

பிரிக்கப்பட்ட எமது இராச்சியத்தில் முதல் அமைச்சராக வருவது யார் என்பதற்கு அடிபடுவதல்ல வரலாற்றுக் கடமை.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் இரத்த ஓலம் உயரக் கிளம்பியபோது கொன்றவன் கூத்துக்கு தாளமிட்டவர்களையெல்லாம் தண்ணி தெளித்துவிட்டு துரோகத்துடக்கு போயிற்றென்று அடிவீட்டில் வைத்து விருந்தளித்து அர்ப்பணிப்பு நிறைந்த மண்ணில் ஆழ இடங்கொடுத்தால் வரலாறு மன்னிக்காது.

தியாகங்களை வைத்து நடத்துகிற அரசியல் புனிதமற்று போய்முடியும்.

மக்களின் மாவீரர்களின் குருதியில் விரிந்தது ஒரு செங்கம்பளம் அதில் அமெரிக்க இராசாங்கம் போனது எங்கள் மன்றம் இன்று.

வென்றவர்கள் மண்ணுறைந்துள்ளார்கள் விண்ணாய் எழுதிய அவர்களின் வீரியத்தின் விளைவுகளை ஒன்றாய் நின்று உயர்ந்த எண்ணங்களோடு வாங்குக என்பதுதான் எங்கள் வாசலில் கேட்கிற அறைகூவல்.

அகில இலங்கைக்குள் அடிக்கடி சத்திய பிரமாணங்கள் செய்து கொண்டு உரிமை பற்றி பேசுவதில் எந்த உரப்பும் கிடையாது.

செத்தவர்களின் மேடுகளில் நின்றுகொண்டு இன்னும் பத்தோ இருபது வருடங்கள் தமிழர்களின் வரைவிலக்கண வகுப்பு எடுத்தால் அரசமர விழுதுகளில் நம் அரசியல் சிக்குண்டு நம் இனம் தொலைந்து போகிற துரதிஸ்டம் நிகழும்.

என் ஊரில்ஒருவன் தமிழ்ச்சங்க கடிதத் தலைப்பில் இருந்து புலிச்சின்னத்தை அகற்றி தன் சிங்க விசுவாசத்தை செதுக்கியிருப்பது இனிவரும் காலத்தின் எம் இன இழி நிலைமைக்கான முன்னோட்டம்.

சோழன் மன்னன் இருந்தான் என்று ஈழத் தமிழ் சங்கங்களில் எவனும் இனி பேசானாக்கும்.

நம் கண்ணெதிரில் நிகழ்ந்த நெருப்பு வரலாற்றை தமிழன் சாதித்த சரித்திரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டி வடை சுட்ட கதைசொல்லும் கலாச்சார மேடைகளும் மண்ணாடை இல்லாத மாநாடுகளும் பொன்னடைக்குள் மினுங்கும் போராட்டத்தில் பங்கொன்றும் எடுக்காத பெருந்தியாகிகளும் என்று ஊர் தெரு நரிகளின் ஊளையால் நாறிக்கிடக்கின்றது.

ஈக வர்ணங்களால் எழுந்திருந்த நம் தேசம் இன்று நாச வர்ணங்களால் நலிவுற்றுக்கிடக்கின்றது.

இப்படி எல்லாம் எழுதுவதால் துப்பாக்கிக்கு துதிபாடுதல் என்று பொருளல்ல மரணமே என் வாசலில் மீண்டும் மலிந்திடுக என்ற வலிந்த அழைப்பல்ல.

மீண்டும் ஒரு பதினாறு வயது இளவல் தன் வாழ் நாளை இனத்துக்காக கொடுத்து தன் வசந்தங்களை துறந்து காட்டிலும் மேட்டிலும் இரவுகள் நூறை துறந்து இனிமைகள் கோடி துறந்து இறுதியில் கொடுந்துயர் ஒன்றை தன்னினத்துக்காக சுமக்காதிருக்க.

காலவெளியில் கரிகாலன்போல் (பிரபாகரன்) அவன் சேனை நடத்திய வீரமறவர்போல் மங்கையர்போல் இனியொருபோதும் தமிழனுக்கில்லை தனிநிமிர்வு.

கார்த்திகை தனித்திருந்தெழுதும் என் புலம்பல் வெளியாயினும் தமிழன் மனச்சாட்சியை உரசிப்பார்க்கும் உன்னத இடம்.

பாதைகளை சரிபார்க்கும் கலங்கரை. இந்த நாளில் அக்கணத்தில் அச்சுடர்கள் எரியும் எவர் கண்ணும் அறியா எம்மண் அறியும் அந்த அக்கினிச்சுவாலையின் அர்த்தத்தை. எங்களில் ஒவ்வொருவர் வீழும் போதும் நாம் ஓவென்றழுதோம் அவ்வொலி ஓர் நாள் எரிமலையின் குமுறலாய் ஒலிக்கும்.

எம் மனங்களை சரி செய்வோம் அதுவே இனத்துக்கு தரப்படுகின்ற ஆயுதம்.

மாவீரர்களே! மரணத்தின் பின்னும் உறங்க இடம் மறுக்கப்பட்டதிலிருந்து உங்கள் வீரத்தின் உச்சமும் அது தரும் அச்சமும் உணரப்படுகின்றது.

ஆணவத்தில் ஆடாதீங்க! ஜெயலலிதாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை!!

பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக அலுவலகம் முன்பு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 24.11.2011 அன்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

லஞ்சம், ஊழலை ஓழித்து அதன் மூலமாக உங்கள் துறைகளை உயர்த்த வேண்டுமே தவிர, வெறும் விலைவாசி உயர்வு மூலம் தமிழ்நாட்டு மக்களை தண்டிக்கக் கூடாது. முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள். மெட்ரோ ரயில், மோனோ ரயில் மூலம் பல லட்சம் கோடி ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துங்கள்.

மிடாஸ் கம்பெனி மூலம் டாஸ்மாக் கடை செழிப்படைந்து கொண்டிருக்கிறதே அதை தடுத்து நிறுத்துங்கள். இதையெல்லாம் செய்யத் தவறியவர்கள் எல்லா வரிச்சுமையையும் மக்கள் மீது சுமத்தி, அவர்கள் மட்டும் வசதியாக வாழ்ந்து கொண்டு ஏழைகளை மீண்டும் மீண்டும் ஏழைகளாக்கிக்கொண்டும் பணக்காரர்களை மீண்டும் மீண்டும் பணக்காரர்களாக ஆக்கிக்கொண்டிருக்கும் நிலைமைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.

உங்களுக்குச் சொல்கிறேன். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினவர்கள் மண்ணுக்குள்ளே போனக்கதை உங்களுக்குத் தெரியுமா? என்ற நிலையை நீங்கள் மறந்துவிடக் கூடாது. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம். சுற்றிக்கொண்டுதான் இருக்கும். மேலே இருப்பவர்கள் கீழே வந்துதான் ஆக வேண்டும். கீழே இருப்பவர்கள் மேலே போயிதான் ஆகணும். இன்னைக்கு உங்கள் சுத்துல மேலே இருக்கீங்க என்ற ஆணவத்தில் ஆடாதீங்க. மக்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் கஷ்டத்தை உணருங்கள். அதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீருங்கள்.

அம்மா என்று உங்களை சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகத்திலேயே மிகவும் புனிதமான வார்த்தை அம்மா. அம்மா என்றால் என்ன. பசித்த குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். ஆனால் இந்த வார்த்தைக்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். அவ்வளவு பெரிய வார்த்தையை உங்களுக்கு தந்ததற்காக, அந்த பட்டத்தை உங்களுக்கு கொடுத்ததற்காக மக்களுடைய கஷ்டத்தை உணருங்கள். இவ்வாறு பேசினார்.

இளம் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை! (படங்கள், வீடியோ இணைப்பு)

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் கத்தியால் குத்திய நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பாட்டாளிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியையான 03 வட்டாரம், கட்டைபறிச்சான் பகுதியைச் சோ்ந்த திருமணமாகாத குருகுலசிங்கம் சிறிவதனி (வயது-33) என்பவர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் வாசிக்க...

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சுற்றுவதை விட்டுவிட்டு, காரில் ஒவ்வொரு தெருவுக்கும் வரவேண்டும்: பிரேமலதா

பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக அலுவலகம் முன்பு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 24.11.2011 அன்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

புட்சித் தலைவி என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உண்மையில் அந்த புரட்சிக்கு உரியவதாக நீங்கள் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை அறிவித்திருக்க வேண்டியதுதானே. உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தல் வர நேரம் இருக்கிறது என்ற ஒரு தைரியத்தில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளீர்கள்.

மம்தா பானர்ஜி ஒரு தைரியமான பெண். அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய அரசாங்கத்தின் எந்த உதவியும் எங்களுக்கு தேவையில்லை என்று தைரியமாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

உங்கள் நீங்களே தைரியமானவர் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா அவர்கள் அறிவியுங்கள் நாங்கள் ஒன்றும் மத்திய அரசாங்கத்தை நம்பி இல்லை. ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் எங்களால் காப்பாற்றிக் கொண்டு வர முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள். ஏன் இதையெல்லாம் செய்யாமல் மக்கள் மீது உங்கள் பிரச்சனையை சுமத்துகின்றீர்கள்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்து ஒட்டு மொத்த தமிழக இளைஞர்கள் அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தற்போது உயர்தர மதுபானங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். இதெல்லாம் எதற்காக மிடாஸ் என்கிற அவர்களுடைய கம்பெனி 100 சதவீதம் லாபகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர, உண்மையிலுமே அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

பேருந்து வசதிகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். கலர்களை மாற்றிவிட்டு, சொகுசுப் பேருந்து, தாழ்தள பேருந்து என்று மாற்றிவிட்டு பஸ் கட்டணத்தை ஏற்றியுள்ளார்கள். கட்டணத்தை உயர்த்திய நீங்கள், அந்த பேருந்தில் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்தீர்களா.

முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் சுற்றுவதை விட்டுவிட்டு, ஒரு காரில் இங்கு உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் வரவேண்டும். அதற்காகத் தான் ஒட்டு மொத்த தமிழக மக்களும் உங்களை மெஜாரிட்டி தந்து உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். எல்லா சாலைகளிலும் சென்று பாருங்கள். சாலைகள் சரியாக இருக்கிறதா. பேருந்தில் போகிறவர்கள் பாதுகாப்பாக போகிறார்களா என்று பாருங்கள். இதையெல்லாம் செய்ய தவறிய ஒரு அரசாங்கம் விலை வாசியை மட்டும் மக்கள் மீது சுமத்துகிறார்கள். இவ்வாறு பேசினார்.

பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க!: அமெரிக்கா

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த அச்சுறுத்தலை அமெரிக்கா விடுத்துள்ளதாக தெ ஐலன்ட் செய்திதாள் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாகவே கருதுகிறது.

இந்தநிலையில் வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையின் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வாரம் 3 வருட சிறைத்தண்டனை விதித்தது.

இதனையடுத்து அமெரிக்க இராஜதந்திரி ஒருவருக்கும் இலங்கையின் உயர்தர அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தமது நாடு இலங்கையில் நடத்திய ஆய்வு ஒன்றில் சரத் பொன்சேகா விடுவிக்கப்படவேண்டும் என்றே பெரும்பாலான பொதுமக்கள் விரும்புவதாக இந்த சந்திப்பின்போது அமெரிக்கா இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும்.

இல்லையேல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வரும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.

இலங்கையின் உயர் அமைச்சருடன் அமெரிக்க தூதர் பெற்றீசியா புட்டினியஸே இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடாகியிருந்தது.

எனினும் கடைசி நேரத்தில் அவரின் பிரதிநிதி ஒருவரே –ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் அமைச்சரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க இராஜதந்திரி, இந்த பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நகர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்தி கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் எழுச்சிச் சுவரொட்டிகள் (படங்கள் இணைப்பு)

யாழ் பல்கழலக்கழக வளாகத்தினுள் இன்று (24-11-2011) பல இடங்களில் எழுச்சிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாணவர்கள் புத்தெழுச்சியுடன் காணப்பட்டனர்.

யாழ் பல்கலைக்கழகை வளாகத்தின் முக்கியமான பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக மாணவர் பொது மண்டபம் மற்றும் ஈருறுளி தரிப்பிடம் போன்ற பகுதிகளில் இவை காணப்பட்டன.

தமிழீழத் தேசியத் தலைவரின் 57வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று மாலை சில இடங்களில் எழுச்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் பல சுவரொட்டிகள் மாவீரர் நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்தன.

‘சத்திய இலட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய, மான மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து சுதந்திர தமிழீழத்தை வென்றுடுக்க உறுதி பூணுவோம்’ என்ற வாசகம் அடங்கிய எழுச்சி சுவரொட்டிகளே ஒட்டிப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் வரையான படைகள் குவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் மாவீரர்களை நினைவேந்தும் இவ் வாரத்தில் அதிகளவு சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆலயங்களில் மணி ஒலிக்கவும் ஆக்கிரமிப்புப் படையினர் தடை விதித்துள்ளனர்.

அத்துடன், படைப் புலனாய்வாளர்களினதும், படைத்துணைக் குழுக்களினதும் கண்காணிப்புக்கு மத்தியில் யாழ் பல்கலை வளாகத்தினுள் ஒட்டப்பட்ட இவ் எழுச்சிப் பிரசுரங்கள் சிறீலங்கா அரசுக்கும் படைகளுக்கும் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படையினர் மாணவர்கள் மீது வன்முறையை பிரயோகிகக்கூடும் என்ற அச்ச நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள மாணவர்கள் அடக்குமுறைகளும், கொலைகளும் எமது மனங்களுக்குள் வாழும் மாவீரர்களின் நினைவுகளையும், தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான அவர்களின் ஈகங்;களையும் என்றும் அழித்துவிடாது என்பது இந்த சுவரொட்டிகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்றும், இதனை சிறீலங்கா அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்த மாவீரரை கொளரவிக்கும் எழுச்சி சுவரொட்டிகள் உந்துருளிகளில் சென்ற படைப்புனாய்வாளர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்புப் படைகளின் அடாவடித்தனம்

இன்று அதிகாலை முதல் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர்களை கௌரவிக்கும் எழுச்சி வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மாணவர்களால் ஒட்டப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1.45 அளவில் தமது முகங்களை துணிகளால் மூடிக்கட்டியவாறு உந்துருளிகளில் சென்ற 6 பேர் கொண்ட ஆயுதக் குழு, யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலின் ஊடாக உள்நுளைந்து அடாவடித்தனம் புரிந்துள்ளனர்.

படைப்புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் இந்த நபர்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த பொது மண்டப சுவரொட்டி பலகையின் கண்ணாடியை உடைத்து அவற்றை எடுத்து சென்றுள்ளதாக மாணவர்கள் மேலும் கூறினர்.

பட்டப்பகலில் பல்கலைக்கழக நிர்வாகம் பார்த்திருக்க, கறுப்புக் கண்ணாடிகள் அணிந்தவாறு, முகத்தை துணியால் மறைத்தவாறும் ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்தினுள் புகுந்து அனாகரீகமான முறையில் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் நடந்து கொண்டதாக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரது இந்த நடவடிக்கையானது, தமிழீழ மக்களின் விடுதலை வேட்கை பற்றிய அவர்களின் மனக்கிலேசத்தையும், அச்சத்தையும் வெளிக்காட்டி இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறினார்.

சுவரொட்டிகளை அப்புறப்படுத்தி மாணவர்களை அச்சப்படுத்திவிடலாம் என சிறீலங்காப் படையினர் கற்பனை செய்வதாகவும், ஆனால் உண்மையில் விடுதலைக்கான பற்றுறுதி தற்போது மாணவர்களிடத்தில் மேலும் அதிகரித்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா அரசாங்கம், மற்றும் படைகளின் அடக்குமுறை எந்த வடிவில் தொடர்ந்தாலும், தமது விடுதலை வேட்கையையும், எழுச்சியையும் தடுத்து நிறுத்த முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் யுத்தக்குற்றவாளிகள்: நீதிமன்றம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடுத்தனர்.விசாரணைகளின் பின் சுமார் நான்கு மணித்தியாலங்கள் கழித்து மேற்படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

டொனி பிளேயர் மற்றும் ஜோர்ஜ் புஷ் மீது ஈராக் யுத்தத்தில் சர்வதேச சட்டத்தை மீறியமை, துரோகம், 2003 படையெடுப்பு மூலம் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. புஷ் மற்றும் அவருக்கு கீழ் செயல்பட்ட 7 முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மயக்கம் என்ன... தனுஷ்- செல்வராகவனுக்கு ரஜினி பாராட்டு


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “மயக்கம் என்ன” படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினி பார்த்தார்.

மயக்கம் என்ன படம் இன்று ரிலீசானது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இதன் சிறப்பு காட்சி ரஜினிக்கு பிரத்யேகமாக ரியல் இமேஜ் அரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.

வழக்கமாக செல்வராகவன் படம் ரிலீசுக்கு முன் சிறப்பு காட்சிகள் திரையிடுவது இல்லை. ஆனால் ரஜினிக்காக ஏற்பாடு செய்து இருந்தார்.

படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இப்படத்தில் தனுஷ் ‘ஓட ஓட ஓட தூரம் பாட பாட பாட பாட்டு முடியல…’ என்ற பாடலை எழுதி பாடி உள்ளார். இப்பாட்டு ரஜினியை மிகவும் கவர்ந்து விட்டதாம். படம் முடிந்ததும் தனுசையும், செல்வராகவனையும் ரஜினி பாராட்டினார். தனுசுக்கு இப்படம் இன்னொரு மகுடம் என்று கூறி வாழ்த்தினார்.

செல்வராகவனையும் நீண்ட நேரம் பாராட்டினார் ரஜினி.

ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் கமல்!


விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.

கமல் – பூஜா குமார் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜோர்டான் நாட்டில் படமாகின்றன.

தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் ஆப்கனில் இயங்கி வரும் முஜாஹிதீன் தீவிரவாதியாக நடிக்கிறாராம் கமல் ஹாசன்.

இப்படத்தில் அமெரிக்காவாழ் இந்தியரான பூஜா குமார், இந்திய மாடல் அழகி இஷா ஷெர்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கமல் படத்தை தயாரிக்கும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

சங்கர் இஷான்லாய் இசையமைக்கிறார்கள்.

தமிழக அரசின் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- டேம் 999 இயக்குனர் பேச்சு


கொல்லம்: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக படத்தின் இயக்குனர் சோஹன்ராய் தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குனர் சோஹன்ராய் இயக்கிய டேம் 999 படத்தில் முல்லைப்பெரியாறு அணை உடைவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த படம் நேற்று துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் திரையிடப்பட்டது.

இதையொட்டி சோஹன்ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய படத்தில் ஒரு இடத்தில் கூட முல்லைப்பெரியாறு என்ற வார்த்தையை பயன்படுத்தவி்ல்லை. அணைக் கட்டுகள் ஒரு தண்ணீர் வெடிகுண்டாகும். இந்த அணைக்கட்டுகளால் ஏற்படும் சமுதாய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த படத்தின் நோக்கம்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் அணையால் ஏற்படும் இழப்புகள் குறித்து தான் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் இந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது முறையல்ல. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா