பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காலை முதல் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த் மாலையில் உரையாற்றி உண்ணாவிரதத்தை முடித்தார்.விஜயகாந்த் பேச்சுக்கு பிறகு பேசியவர்கள், பொதுவாக உண்ணாவிரதம் முடிந்ததும் வழக்கமாக மோர் கொடுப்பார்கள். தற்போது பால் விலை உயர்ந்துவிட்ட காரணத்தால், எலுமிச்சை ஜூஸ் குடித்து கேப்டன் அவர்கள் உண்ணாவிரத்தை முடிப்பார்கள் என்றனர். அப்போது ஒரு சிறுமியை அழைத்து, அந்த சிறுமியிடம் எலுமிச்சை ஜூஸ் கொடுத்து அனுப்பினார்கள். விஜயகாந்த் அதனை பருகி உண்ணாவிரதத்தை முடித்தார்.


No comments:
Post a Comment