அமெரிக்காவின் ஏவுகணை சிஸ்ரம் தற்போது ஒரு வலைப்பின்னல் போல ரஸ்யாவை சுற்றி அமைக்கப்பட்டுவிட்டது. கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்திவிட்டு பார்த்தால் அமெரிக்காவின் இரகசியமான நகர்வு ரஸ்யாவை சுற்றி ஏவுகணை மயமாக மாறியிருப்பதை எளிதில் அவதானிக்க முடியும். நட்பாக பேசிக்கொண்டே அமெரிக்கா அருவமான முறையில் ரஸ்யாவை சுற்றி வளைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏவுகணைகளை பொருத்திவிட்டு ஒன்றுடன் ஒன்று நெற்வேர்க்கை ஏற்படுத்தினால் அது ஒரே நொடியில் ரஸ்யாவை சுற்றி மாலை போல விழுந்துவிடும். இவ்வாறு அமெரிக்கா ரஸ்யாவை சுற்றி ஏவுகணைகளால் சர்ப்ப வியூகம் அமைத்துள்ளமை ரஸ்யாவுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தான் தேவையற்ற நெருக்குவாரத்திற்குள் இருப்பது போன்ற பிரமையில் இப்போது ரஸ்யா துடிதுடிப்பது நியாயமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா ஏவிய ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமுள்ள ஏவுகணை இந்த அச்சத்தின் திரியில் தீயை மூட்டியுள்ளது. அது எப்போது வெடிக்கப்போகிறது என்பதே முக்கிய கேள்வியாகும்.
உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது அமெரிக்க ஏவுகணை!


No comments:
Post a Comment