கடாபியின் மகனோடு இணைந்து சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டிய குற்றவாளி இவராகும். இவரைக் கைது செய்தபோது போர் நடைபெறவில்லை, பேச்சுக்கள் மூலம் சரணடைந்துள்ளார். கடாபியின் காலத்தில் நடைபெற்ற வர்ணிக்க முடியாத படுகொலைகள், பாதகமான நயவஞ்சக செயல்கள், நம்பிக்கைத் துரோகங்கள், மனித குலம் வெட்கித் தலை குனியும் செயல்களுக்கு இவர் பொறுப்பானவர். மோசமான ஓர் உளவுப்பிரிவின் தலைவரான இவரின் கைது உளவுப்பிரிவுகளால் படுகொலை புரியும் பல நாடுகளுக்;கு வயிற்றில் புளி கரைக்கும் எச்சரிக்கையாகும்.
கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் மீதான விசாரணை, நேர்மையான முறையில் நடக்கும்’ என, லிபியாவின் இடைக்கால பிரதமர் அப்துர் ரகீம் அல் கைப் தெரிவித்துள்ளார். இவர் மீது, சர்வதேச கிரிமினல் கோர்ட் (ஐ.சி.சி.,) குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், சயீப் அல் இஸ்லாம் மீதான விசாரணை, சர்வதேச விதிகளின் படி, நேர்மையாக நடக்க வேண்டும் என, ஐ.சி.சி., கோரியுள்ளது.
ஐ.சி.சி.,யின் வழக்கறிஞர் லூயிஸ் மொரினோ ஒகம்போ, அடுத்த வாரம் லிபியா செல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த லிபிய இடைக்கால பிரதமர் அப்துர் ரகீம் அல் கைப், “சயீப் விசாரணை, நேர்மையாக வெளிப்படையாக நடக்கும் என உறுதியளிக்கிறேன்’ என்றார்.


No comments:
Post a Comment