திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசு கடந்த மே மாதம் ஆட்சி அமைத்த நிலையில் ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மின் ஆளுûU முயற்சிகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
உலக அளவில் உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் கருதப்படுகிறது. 2011-12ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தி திறன் 3,280 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
அந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட 3,280 மெகாவாட் மின்சாரம் கடந்த திமுக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்களால் கிடைக்க கூடியது - அதிமுக ஆட்சியின் 3 மாத காலங்களில் உற்பத்தியானதல்ல.
3 மாதங்களுக்கு முன் பாராட்டியதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தற்போதைய சீர்கேடுகளுக்கெல்லாம் திமுக அரசுதான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுவது நியாயமா?
நிதிநிலை அறிக்கையில் மின்உற்பத்தியை பெருக்க பல்முனை உத்திகளை மேற்கொண்டுவருவதாகவும், மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் அறிவித்துவிட்டு, இப்போது திமுக ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 5 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த புதிய மின் உற்பத்தி திட்டங்களும் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் சீர்கேடுகளுக்கு எல்லாம் திமுக அரசுதான் காரணம் என ஜெயலலிதா முதலைக்கண்ணீர் வடிகிறார். தமிழக மக்கள் உண்மையை நன்றாகவே உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் காதுகளில் இனி ஜெயலலிதா பூ சுற்ற முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.


No comments:
Post a Comment