
இலங்கையின் தெற்கு கரையோர நகரான பலப்பிட்டியவில் நேற்று மாலை 4.15 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவி சரிதவியல், அளவையியல் மற்றும் சுரங்கத் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி விஜயானந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கொழும்புக்கு தென்மேற்கே 350 கிலோமீற்றர் தூரத்தில் மாலைதீவு கடற்பரப்பில் நேற்று மாலை 4.10 மணியளவில் 4.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மாலை பலப்பிட்டியவில் சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment