மாவீரர் வாரம், ஒவ்வொரு வீட்டிலும் எம் தியாக தீபங்களுக்குத் தீபமேற்றித் தியானியுங்கள், சமயத் தலங்களுக்குச் சென்று அவர்களுக்காக வழிபடுங்கள், மாவீரர் தினம் நடைபெறும் இல்லங்களுக்குச் சென்று உங்கள் நன்றிக் கடனைச் செலுத்துங்கள்.அதேவேளை, இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை விரைவில் அமைப்போமென மாவீரர்களை மதிக்கும் அத்தனை உறவுகளும் இன்றே சபதம் எடுத்து செயற்பட வேண்டும்.
ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் எமது இறுதிப் போரான அரசியல் போரைக் காலம் கடத்தாது முடிவிற்குக் கொண்டுவர தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் தாமதியாது இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.
உண்மையுடனும், உறுதியுடனும் உழைத்த கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழரும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும்.
இதுகண்டு, மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.
கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org


No comments:
Post a Comment