Saturday 11 February 2012

அதிகாரப் போட்டிக்குள் சிக்கித் தவிக்கும் மாலைதீவு



மாலைதீவில் எல்லாமே விரைவாக நடந்து முடிந்து விட்டது. இப்போது பதவியிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி நீதிமன்ற உத்தரவு பிறக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
பொதுவாக மாலைதீவு ஆட்சியாளர்கள் இலங்கையோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். மொஹமட் நஷீட் இலங்கையிலேயே கல்வி கற்றவர் எனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்.
இதற்கிடையில் மாலைதீவின் ஆட்சிமாற்றம் அந்நாட்டின் உள்விவகாரம் என்றும், அதனால் அந்நாட்டுடனான நெருக்கமான உறவுகளில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மாலைதீவில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படுமென்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2008இல் ஜனநாயக தேர்தல் முறையொன்றின் மூலம் மொஹமட் நஷீட் ஆட்சிக்கு வந்தபின், அந்நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் சார்க் நாடுகள் மற்றும் பொது நலவாய அமைப்பின் ஊடாக மாலைத்தீவில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்திருப்பதுடன் மொஹமது  நஷீட்டின் பாதுகாப்பு தொடர்பாக தானும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் ஜனாதிபாதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் ஜெனீவா மனித உரிமை  மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாக பேச இருந்தமையால் நஷீட்டுடைய பதவி கவிர்ப்பு இலங்கைக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மாலைதீவின் பிரச்சினைகளுக்கெல்லாம் நஷீட்டுக்கு முன்னர் சுமார் முப்பது வருட காலமாக நாட்டை ஆட்சி செய்து வந்த மொமூன் அப்துல் கையூமுக்கும் நஷீட்டுக்கும் இடையேயுள்ள அதிகாரப் போட்டியே என்பது தெளிவாகியுள்ளது.
இதற் கிடையில் நஷீட்டின் பதவி கவிழ்ப்புக்கு சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் மற்றும் கொழும்பு அமெரிக்க தூதுவராலய உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் மாலைத்தீவுக்கு சென்றிருந்தமைக் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியானது இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவோ எனவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்துக்கும் ஏனைய பல நாடுகளுக்கும் மாலைத்தீவின் தூதுவராக செய்ல்ப்பட்ட பாராபைஸல் இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிரச்சினை வெடித்துக் கிளம்ப காரணமாயிருந்தது கடந்த மாதம் மாலைதீவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜமீல் என்பவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியே. அப்பேட்டியில் அவர் மொஹமட் நஷீட்டின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மொஹமட் நஷீட் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவ்வாறு கைது செய்தது தவறென குற்றவியல் நீதிமன்ற நீதியரசர் அப்துல் மொஹமட் தீர்ப்பளித்தார்.
இதனால் வெகுண்ட மொஹமட் நஷீட் இலஞ்சக் குற்றச்சாட்டொன்றைச் சுமத்தி அவரைக்  கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
நீதிபதியை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு,  நீதிச் சேவைகள் ஆணைக்குழு, ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் ஆகியன கோரின. உப ஜனாதிபதியும் வேண்டுதல் விடுத்தார். மொஹமட் நஷீட் செவிசாய்க்க மறுத்துவிட்டார். இதனையடுத்து மோதல்கள் வெடித்தன.
நீதிபதியை விடுதலை செய்யக் கோரி உயர் பாதுகாப்பு வலய இராணுவத் தலைமையகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50 பொலிஸார் கட்டளைக்கு அடிபணிய மறுத்து கலகம் புரிந்தனர். இராணுவம் அவர்கள் மீது இறப்பர் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியது. பின்னர் அது இராணுவத்தினரால் மறுக்கப்பட்டது. அரசுக்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்குமான மோதல் தலைநகர் மாலேயில் தொடங்கி நாடெங்கும் ஏனைய தீவுகளனைத்திற்கும் பரவியது.
முன்னாள் ஜனாதிபதி கையூமின் ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
நாடெங்கிலும் 18 பொலிஸ் நிலையங்களும், நீதிமன்றம் மற்றும் அரச கட்டிடங்களும் சூறையாடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தனை ரகளைகளுக்குப் பிறகு ஏழாம் திகதி மொஹமட் நஷீட் பதவி விலக முன் வந்தார். முதலில் சதிப்புரட்சியொன்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதாகத் தெரிவித்திருந்த அவர் பின்னர்  இராணுவம் மற்றும் பொலிஸாரின் துப்பாக்கி முனையிலான அச்சுறுத்தலின் காரணமாக பதவி விலக நேரிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரே பொலிஸாரின்  ஒரு பிரிவினர் அரச ஒலிபரப்பு நிறுவனத்தைக் கைப்பற்றி முன்னாள் ஜனாதிபதி கையூமுக்கு ஆதரவான செய்திகளை ஒலிபரப்பினர்.
நஷீட் பதவி விலகிய சில மணி நேரத்திற்குள்ளேயே உப ஜனாதிபதி பதவி வகித்து வந்த மொஹமட் வாஹீட்ஹசன்  ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஹசன் நஷீட்டுக்கு எதிரான சதிப்புரட்சி மற்றும் அச்சுறுத்தப்பட்டது தொடர்பில் மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.
இராணுவப் பேச்சாளர் ஒருவர் இராணுவம் நஷீட்டை பதவி விலகும்படி ஆலோசனை மாத்திரமே வழங்கியதாகத் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி ஹசன் பதவியேற்றவுடன் எடுத்த  முதல் நடவடிக்கை இரு அவசர கால அமைச்சர்களை நியமித்ததேயாகும். உள்துறை மற்றும் பாதுகாப்புக்கு இரு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
சிறை வைக்கப்பட்டிருந்த குற்றவியல் நீதிமன்ற  நீதியரசர் அப்துல்லா மொஹமட் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புதிய பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் ஜமீல் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது மிக மோசமானதும் துக்ககரமானதுமான நிலைமை எனத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் தலைநகருக்கு அடுத்த பெரிய நகரான அட்டு (Addu) வின் மாநகர முதல்வர் அப்துல்லா சிர்டிக் சட்டமும் ஒழுங்கும் நிலை குலைந்துள்ளது என  கருத்து வெளியிட்டுள்ளார். அட்டு நகரில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சர் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்க அமைச்சு மாலைதீவு விடயங்களை அவதானிப்பதற்காக விஷேட தூதுவரொருவரை சனிக்கிழமை அனுப்பி வைத்ததாகத் தெரிவித்திருந்ததெனினும்,  நிலைமைகளின் தீவிரத் தன்மை காரணமாக அவ்வெண்ணம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
செவ்வாய்க்கிழமை ஹசன் பதவியேற்றதைத் தொடர்ந்து அடுத்த நாள் மொஹமட் நஷீட் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திய போதே அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். நஷீட்டுடைய மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் செயலாளர் மூஸா மானிக் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும்,  நஷீட்டுக்கு சிறிய காயமே ஏற்பட்டுள்ளதென அவருடைய சகோதரர் இப்ரஹம் நஷீட் டெய்லி கிராப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
நஷீட்டும் அவர்களுடைய ஆதரவாளர்களும் தாக்கப்பட்டது தொடர்பில் மாலைதீவு பாதுகாப்புப் படைகள் அவர்களுக்கும் அவருடைய  ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பை வழங்க  தவறிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளது.
மொஹமட் நஷீட் தாம் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படலாம் சர்வதேச சமூகம் சரியானதைச் செய்யும் என நான் எதிர்பார்க்கின்றேன். 2008இல் ஜனநாயகத் தேர்தல் மூலம் சர்வாதிகாரப் பாதையிலிருந்து மீண்ட மாலைதீவு மீண்டும் சர்வாதிகாரத்திற்குள் ஒடுங்கியுள்ளது. சர்வாதிகாரி ஒரு நாளில் அகற்றப்பட்டு விடலாம், ஆனால் சர்வாதிகாரப் போக்குகளை அகற்ற நெடுங்காலமாகும் என்ற பாடத்தை மாலைதீவு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சதிகள் குறித்து இப்போது பதவியேற்றுள்ள வாஹிட் ஹஸன் நன்கறிவார் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாஹிட் ஹஸன் இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளதுடன், விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முறையாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே தனது முழுக்கவனமும் உள்ளதென தெரிவித்துள்ளார். பின்னர் வெளிவந்த தகவல்களின் படி நஷீட் கைது செய்யப்படமாட்டார் என்று புதிய ஜனாதிபதி உறுதிமொழியளித்துள்ளதாகவும் அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என வாஹிட் ஹஸனின் ஊடக öŒயலாளர் மஸுட் இடாட் தெரிவித்துள்ளார்.
நஷீட் தலைமறைவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் எதிரிகளால் அவருக்கு துன்பம் ஏதும் @நர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கின்றோம்.
அவர் கைது செய்யப்படவோ , வீட்டு காவலில் வைக்கப்படவோ இல்லை எனவும் ஜனாதிபதி வாஹிட் மேலும் தெரிவித்திருந்தார். மாலைதீவில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக  இங்கிலாந்து,  அமெரிக்கா, அவுஸ்திரேலிய இராஜதந்திரிகள் இலங்கையை நெருங்கியுள்ளார்கள்.
பி.பி.சி. ஊடகவியலாளர்  என்று நோர்த் (Andrew North) மொஹமட் நஷீட் தனது பாதுகாப்பு குறித்து தன்னிடம் கவலை தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தூதுவர் ஜோன் ரன்கின் (John Rankin) மொஹமட் நஷீட்டிற்கு ஆபத்துகளேதும் நேராதிருப்பது குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும், இது தமது நாட்டினதும் சர்வதேசத்தினதும் அக்கறைக்குரிய விடயமாகும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தனது இரு குழந்தையுடன் இலங்கை வந்துள்ள மொஹமட் நஷீட்டின் மனைவி லைலா ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவருக்கு பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபரை அரசு பணித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைத்தீவு அரசுடன் தொடர்பு கொண்டு முன்னாள் ஜனாதிபதி  நஷீட்டின் பாதுகாப்பு உறுதியையும் படியும் கூறியுள்ளார்.
 மொஹமட் நஷீட்டுடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தொல்ஹாத் இப்ரஹாம் (Tholhath Ibrahim) வையும் கைது செய்யும்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
மொஹமட் நஷீட் மீதான பிடியாணை இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றதென்றும் நஷீட் தலைமறைவாகியுள்ளாரென்று சில தகவல்கள் தெரிவித்த போதும் வெள்ளியன்று தொழுகையை முடித்துக் கொண்டு நஷீட் வீடு திரும்பியுள்ளார்.
மாலைத்தீவு புதிய அரசு அமெரிக்கா அங்கீகரித்தமை தனக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நஷீட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களுடனான அவருடைய மந்திராலோசனையின் போது வாஹீட் பதவி விலக வேண்டும் இரண்டு மாதகாலத்துக்குள் பொதுதேர்தலை நடத்த சபாநாயகர் முன்வர வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீமூன் மாலைதீவு மக்களிடம் வன்முறையைக் கைவிட்டு சட்டத்திற்கு மதிப்பளிக்கும் படி கோரிக்ரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் (வெள்ளிக்கிழமை) ஐ.நா. உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்ணாண்டஸ் மாலைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
ரொபட் பிளக்கின் இலங்கை விஜயத்தின் போது அவர் மாலைத் தீவுக்கும் செல்வார் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
44 வயதான மொஹமட் நஷீட் அடித்தளத்திலிருந்து மேலெழும்பிய கையூமின் எதிர்ப்பாளர்களில் ஒருவராவார் கையூமின் ஆட்சிக் காலத்தில் மூன்று தடவை சிறைவாசம் அனுபவிக்க அவருக்கு நேர்ந்தது.
2003ல் சிறைச்சாலையில் கைதியொருவர் இறந்தபோது நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு இதுவே மாலைதீவில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டமென மாலைதீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
1980, 1983, 1988 காலப் பகுதியில் கையூமின் ஆட்சிக்கெதிராகவும் சதி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டனவெனினும் கையூம் அவற்றை வெற்றிகரமாக சமாளித்தார். முதலிரண்டு சதிகளும் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லையாயினும் 1988 சதியை முறியடிக்க இந்தியாவின் உதவியை நாடவேண்டிய தேவை கையூமுக்கு ஏற்பட்டது.
சுமார் 1000 தீவுகளைக் கொண்ட மாலைதீவு பிரதான தொழிலாக மீன் பிடியையும், சுற்றுலா பயணத்துறையையும் கொண்டுள்ளது. பளிங்கு போன்ற நீர்ப்பரப்பையும், பவளப்பாறைக் காட்சிகளையும் சொகுசு விடுதிகளையும் கொண்டுள்ள மாலைதீவு உலகில் அதிகளவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு இடமாகும். வருடந்தோறும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு  வருகை தருகின்றார்கள். தற்போதைய நிலைவரங்கள் மாலைதீவுக்கு பொருளாதார ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மொஹமட் நஷீட்டின் எதிர்காலம் என்ன? தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமைகளை இராஜதந்திரத்துடன் சமாளித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அவருக்கு வாய்ப்புள்ளதா என்பதேகேள்வியாகியுள்ளது.
எது எவ்வாறெனினும் மாலைதீவு அரசியல் தலைமைகள் தமக்குள் ”முகமான தீர்வு காணவிடில் வல்லகளின் ஊடுருவல் ஏற்படும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை. பிரிட்டிஷரின் விமான தளமொன்று 1965 வரை அங்கு இயங்கி வந்ததும் கவனிக்கத் தக்கது.
தொடர்ந்து கலவரங்கள் நாட்டில் பல பகுதிகளிலும் பரவி வந்தாலும்,  தலைநகர் மாலேயில் மழையுடன் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புக்களும்


ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது. 
சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது. 
இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு 
வருகை தந்துள்ளார்.
அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கும் அமெரிக்க மக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலர் மரி ஒட்டேரோவும் (Marie Otero) அவர்களும் வருகை தர உள்ளனர்.
பெப்ரவரி 27ஆம் திகதியிலிருந்து மார்ச் 23 ஆம் திகதிவரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவகாரம் எழுப்பப்படாலாமென்று எதிர்வு கூறப்படும் நிலையில் இம்மூவரின் வருகையும் முக்கியத்துவமடைகிறது.
மானுடத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விவகõரங்களைக் கையாளும ஸ்டீபன் ராப்பினதும் மரி ஒட்டேரோவினதும் பயணமானது மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் பற்றி பேசுவதற்கானதென ஊகிக்கப்படுகிறது.
அதாவது இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் ஹிலாரி கிளின்டன் வரவேற்புக் கடிதம் அனுப்பிய பின்னரே இம்மூவரின் தொடர் விஜயங்கள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
அனேகமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து மேற்கொள்ளப்படும் விவாதங்கள் அல்லது பிரேரணைகள் என்பன நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் அமையுமென எதிர்பார்க்கலாம்.
சுயாதீன சர்வதேச போர்க் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்கிற முடிவினை மேற்குலகம் ஏற்கனவே தீர்மானித்திருந்தால் இத்தகைய இணக்கப்பாட்டு விஜயங்கள் தேவையற்றது. 
ஆகவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க மாட்டோமென அரசு உறுதிப்படக் கூறியுள்ளது. எனவே அதிலுள்ள பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்கிற அழுத்தத்தை முதல் கட்டமாக பிரயோகிக்க மேற்குலகம் விரும்புகிறது எனலாம். சுயாதீன விசாரணைப் பொறிமுறை என்கிற ஆயுதத்தை, இறுதியாகப் பயன்படுத்தவே மேற்குலகம் முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து நோக்க வேண்டும். வாங்கிய கடனை அடைப்பதற்கு மேலதிக கடனை வாங்கும் வழிமுறைகள் பற்றியே மத்திய வங்கி ஆளுனரும் திறை÷சரிச் செயலாளர்களும் மூளையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 4 சதவீதத்தை தொடுவதால் அரசினை ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation)) கடினமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, உட்கட்டுமானத் திட்டங்களுக்கு கூடுதல் முதலீடுகளை செலவிட்டாலும் அதிலிருந்து பெறும் வருவாய் குறைவாக உள்ளது.
முதிர்ச்சியடையும் அரச முறிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. அதாவது பத்திரங்க ளைக் கொடுத்து காசு வாங்கலாம். அதற்கான வட்டியையும் செலுத்தலாம். ஆனால் அதற்கான கால எல்லை அல்லது முதிர்ச்சி நிலை அண்மிக்கும்போது வாங்கிய கட னைத் திரும்பவும் கொடுக்க வேண்டும்.
ஆகவே மறுபடியும் புதிய அரச முறிகளை விற்று அதிலிருந்து பெறப்படும் நிதியைக் கொண்டு பழைய முதிர்ச்சியுறும் முறிகளுக்கு செலுத்தலாம்.
ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான புதிய அரச முறிகள் விற்பனை செய்யப்படுமென மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட செய்தி இதனை உறுதி செய்கிறது.
மூலதனச் சந்தையில் இத்தகைய முறி வியாபாரத்தில் தவிர்க்க முடியாமல் ஈடுபடும் அரசு, சர்வதேச நாணய நிதியத்தோடு வேறு வகையான பேரம் பேசலில் ஈடுபவதைக் காணலாம்.
ஏற்கனவே 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை 1.1 சதவீத வட்டிக்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அடுத்த தவணை கொடுப்பனவான 800 மில்லியன் கடனை 3.1 சதவீத வட்டிக்கு வழங்கப்படுமென அந்நிதியம் கூறியதால் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குழப்பமடைந்துள்ளார்.
ஒட்டுமொத்த கடனிற்கும் 3.1 சதவீத வட்டி அறவிடப்படுமென்றும் அவர் நினைத்ததால் வந்த குழப்பம் இது. 
ஆனாலும் 3.1 சதவீத வட்டி இனிமேல் வழங்கப் போகும் 800 மில்லியன் டொலர்களுக்கு மட்டுமே என்று மின்னஞ்சல் ஊடாக உறுதிப்படுத்தியவுடன் சிக்கல் தீர்ந்துவிட்டது.
இவை தவிர இலங்கை நாணயத்தின் மதிப்பிறக்கம் தொடர்பான புதிய சிக்கலொன்றும் உருவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
உண்மையான பெறுமதியைவிட இலங்கை நாணயத்தின் மதிப்பு 20 சதவீதத்தால் அதிகரித்துக் காணப்படுவதால் அதனை இயல்பான முதிர்வுக்கு அனுமதிக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த வருடம் நவம்பரில் 3 சதவீதத்தால் இலங்கை ரூபாய் மதிப்பிறக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
மறுபடியும் இம்மாதம் 2 ஆம் திகதி நாணயத்தின் பெறுமதியை 20 சதவீதத்தால் குறைத்து அமெரிக்க டொலர் ஒன்றிற்கு 114.10 ஆக நிர்ணயித்தது இலங்கை மத்திய வங்கி.
ஆனாலும் நிர்ணயம் அல்லது மாற்றத்தைத் தடுப்பது (Pegging) என்பதைப் பிரயோகிக்காமல், நெகிழ்வான நாணய மாற்றும் விகிதக் கொள்கையை (Flexible Exchange Rate Policy) கடைப்பிடிக்க வேண்டுமென்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது நாணய நிதியம்.
அதேவேளை, இம்மாதம் 3 ஆம் திகதியன்று, அரச வட்டி வீதத்தை 0.5 வீதத்தால் அதிகரித்துள்ளது மத்தியவங்கி.
நாணயமாற்று விகிதத்தை நிர்ணயிப்பது மற்றும் வட்டி வீதத்தை உயர்த்துவதும் போன்ற நகர்வுகள் அதிகரிககும் இறக்குமதியை மட்டுப்பத்துவதோடு அமெரிக்க டொலருக்கான தேவையையும் குறைத்து விடுமென மத்திய வங்கி எண்ணுவது போலுள்ளது.
இலங்கையின் தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறையானது (Current Account Deficit) மொத்த உள்ளூர் உற்பத்தியின் 20 சதவீதத்தை எட்டியுள்ளது. 
ஆகவே வளர்ச்சியடையும் வர்த்தக பற்றாக்குறையை எவ்வாறு குறைப்பது என்கிற சிக்கலில் திணறுகிறது இலங்கையின் திறைசேரி.
ஏற்றுமதியின் தேவை அதிகரிக்கும்போது சேமிப்பிலுள்ள டொலரை பயன்படுத்தி, ரூபாவின் பெறுமதி மதிப்பிறக்கமடையாமல் எவ்வாறு தடுப்பது என்கிற பிறிதொரு நெருக்கடிக்குள்ளும் மத்திய வங்கி தள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
ஏற்கனவே கடந்த வருடத்தில் மட்டும், மத்திய வங்கியின் ஒரு பில்லியன் டொலரிற்கு மேற்பட்ட நிதியினை சர்வதேச நாணயச் சந்தை விழுங்கிய நிலை ஏற்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஆகஸ்டில் 8 பில்லியன் டொலர்களாவிருந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, அதேவருடம் டிசெம்பரில் 5.9 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை இக் கையிருப்பு இன்னமும் குறைவடையக் கூடிய ஒரு நிலை காணப்படுவதாக கலாநிதி அர்ச்சுனா சிவானந்தன் போன்ற பொருளியலாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.
அத்தோடு விலையுயர்ந்த நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியும் திறைசேரிக் கையிருப்பை வற்றச் செய்கிறது.
உதாரணமாக 2010 ஆம் ஆண்டை விட 2011 இல் பதிவு செய்யப்பட்ட கார்கள் 60.14 சதவீதமாகவும் முச்சக்கர வண்டி 39.96 சதவீதமாகவும் மோட்டார் சைக்கிள்கள் 11.72 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அரச வட்டி வீத அதிகரிப்பால் இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் உயர்வடையும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் எரிசக்தி துறையாகும்.
இந்த வட்டி அதிகரிப்பு, எண்ணெய் இறக்குமதி பெரியளவில் தங்கியிருக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அதிகம் பாதிக்கும். அந்தப் பாதிப்பும் அதனால் உருவாகும் சுமையும் மக்கள்மீதே இறக்கி வைக்கப்படுமென்பதை சுட்டிக் காட்டத் தேவையில்லை.
அத்தோடு ஈரான், மீதான மேற்குலகின் பொருளாதாரத்தடை மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கப் போகிறது. என்பதில் ஐயம் இல்லை. இத்தடை குறித்து 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம், 2012ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி நடைமுறைக்கு வருகிறது. 
இலங்கையைப் பொறுத்தவரை அதன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான 93 சதவீதமான மசகு எண்ணெய் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
ஏனைய நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணெய் உடன் ஒப்பிடுகையில், இதன் சல்பர் (Sulphor) அளவும், அடர்த்தியும் மிக அதிகமானது.
இந்த எண்ணெயைச் சுத்திகரிக்கக் கூடிய வகையிலேயே சப்புகஸ்கந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது தான் இங்கு எழும் சிக்கல் நிலைமைக்கான காரணியாகவிருக்கிறது. 
ஏப்ரல் 2008இல் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு மையத்தைத் தரமுயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டதோடு இலங்கையின் உட்கட்டுமானப் பணிகளுக்காக 1.5 பில்லியன் டொலர்களை கடனடிப்படையில் வழங்க முன்வந்தது.
ஆனால் சபுகஸ்கந்த நிலையத்தின் செயற்திறனை இரட்டிப்பாக உயர்த்தும் திட்டத்தில் 500 மில்லியன் டொலர்களை தனது பங்காக இலங்கை அரசு செலுத்த வேண்டுமென்கிற நிபந்தனையை ஈரான் விதித்தது.
இதனை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாததால் தரமுயர்த்தும் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் தற்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், மேற்குலகின் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறி ரஷ்யா, சீனா போன்று இலங்கையாலும் செயற்பட முடியுமா என்பதுதான்.
இத்தனை காலமாக ஏ.சி.யூ. (ACU) என்றழைக்கப்படும் ஏசியன் கிளியறிங் யூனியன் (Asian Clearing Union) ஊடாகவே ஈரானிற்கான நிதிப் பரிவர்த்தனைகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது.
1974 ஆம் ஆண்டு டிசெம்பர் 9 ஆம் திகதி, ஐ.நா. சபையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான சமூக பொருளாதார ஆணைக்குழுவின் முயற்சியினால் இந்த ஒன்றியம் உருவானது.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை உள்ளடக்கிய இவ்வொன்றியத்தின் தலைமைப் பணிப்பாளராக இந்தியாவைச் சார்ந்த கலாநிதி டி. சுப்பராவும் செயலாளர் நாயகமாக ஈரானைச் சார்ந்த திருமதி லிடா போர்ஹன் அசாத்தும் செயற்படுகின்றார்கள்.
இதன் இலக்காக பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான நாணய பரிவர்த்தனை என்பன அமைகின்றன. ஆகவே அமெரிக்காவின் தடை விவகாரத்தால் ஜூலை மாதம் வரையான ஏற்றுமதி இறக்குமதிக்கான நிதிப் பரிவர்த்தனையை எவ்வாறு கையாள்வது என்பதோடு அடுத்து வரும் நாட்களில் எங்கிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வது என்பதையிட்டு இலங்கை அரசு கலக்கமடைவதை நோக்கலாம்.
அத்தோடு இந்த ஒன்றியத்தின் ஊடாக இலங்கை மேற்கொள்ளும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை எடுத்துக் கொண்டால், கடந்த டிசெம்பர் மட்டும், இலங்கை பெற்ற கடன் தொகை 279.83 மில்லியன் டொலர்களென்று புள்ளி விபரங்கள் கூறு
கின்றன.
அதாவது 2011 இற்கான நிலுவையிலுள்ள மொத்த கடன் 4065 மில்லியன் டொலர்களாகும். 2010இல் இத்தொகை 2552 மில்லியன் டொலர்களாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே தினமும் 50,000 பீப்பாய் எண்ணெய் தேவைப்படும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதன் பயன்பாட்டிற்கு உகந்த செறிவான மசகு எண்ணையை ஓமான், சவூதி போன்ற நாடுகளிலிருந்து சிறிதளவு பெற்றுக் கொள்ள முயன்றாலும் நாட்டின் கடன் அதிகரித்துச் செல்வதைத் தடுக்க முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய பெரும் சிக்கலில் இலங்கை மாட்டித் தவிக்கும்போது இம்மாதம் 2 ஆம் திகதியன்று அமெரிக்க திரைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் லூக் புரோனின் (Luke Bronin) அவர்கள் எண்ணெய் இறக்குமதி விவகாரம் குறித்து உரையாட கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தாரென கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இறக்குமதி செய்வதற்கான பணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து அரச உயர் அதிகாரிகளுடன் புரோனின் உரையாடியுள்ளார்.
ஆயினும் அமெரிக்க டொலர் நாணயத்தில் இந்த வர்த்தக நிதிப் பரிமாற்றம் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தவே அவர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்தார் என்பதை அரச அதிகாரிகள் புரிந்து கொண்டார்கள்.
இந்தியாவும் தனது சொந்த நாணயத்தில் ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் நாணயத்தின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்துள்ளதோடு திறைசேரியின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை கீழிறக்கி வைத்துள்ள இலங்கை என்ன நகர்வினை மேற்கொள்ளப் போகிறது என்பதே பலரிடம் எழும் காத்திரமான கேள்வியாகும்.
அமெரிக்க பிரதிநிதி லூக் புரோனின் வருகையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று இந்திய பெற்றோலிய அமைச்சின் உயர்நிலை அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பிற்கு வந்திறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வந்தவர்கள், சபுகஸ்கந்த எண்ணெய் சத்திகரிப்பு மையத்தைத் தரமுயர்த்த தாம் தயாரென்கிற விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இதற்கு அரசு உடன்பட்டால் தமது தொழில்நுட்ப பிரிவினர் விரைவில் இலங்கை வருவார்களென்றும் கூறிச் சென்றுள்ளனர்.
ஆனாலும் இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து அரசின் உயர் மட்டங்களில் வேறு பல சிந்தனைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஓமான், சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அரபு நாடுகளிலிருந்து சபுகஸ்கந்தவிற்கு உகந்த எண்ணெயை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபடலும் அடுத்த தெரிவாக சீனக் கம்பனி ஒன்றினூடாக ஈரானின் எண்ணெயை இறக்குமதி செய்வதும் அதற்குச் செலுத்தும் பணத்தை நீண்டகால கடனாக மாறிக் கொள்ளலுமாகும்.
இவை எவ்வாறு இருப்பினும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கலாமென எதிர்வு கூறப்படும் நிலையில் அவ்வாறானதொரு மோதல் உருவானால் சவூதி, ஓமான், கட்டாரிலிருந்து இறக்குமதி செய்யும் கனவும் சிதைக்கப்படலாம்.
இம்மோதல் ஹொர்மூஸ் கால்வாயில் (Strait of Hormuz) ஏற்படும் பதட்டம், சீனாவிற்கு மேற்கொள்ளும் எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே மத்திய கிழக்கில் உருவாகும் முறுகல் நிலையால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலையை நோக்கி நகரப் போவதை ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் இவ்வாறான சரிவு நிலையை இந்தியா எவ்வாறு தனது பிராந்திய நலனிற்குப் பயன்படுத்தப் போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒப்பந்தம் øகூடாத நிலையில் நாட்டின் இயங்கு நிலைக்கு ஆதாரமாக விளங்கும், எரிபொருள் உற்பத்தி மையத்தை கையகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறதா என்பதை அடுத்து வரும் மாதங்களில் காணலாம்.
(இதயச்சந்திரன்)

மாநில சுயாட்சியை நோக்கி தமிழ் மக்களுக்கான அதிகாரம் நகர்த்தப்பட வேண்டும் -சுப்ரமணிய சுவாமி


மாநில சுயாட்சியை நோக்கி தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் முன் நகர்த்தப்பட வேண்டும். பெரும் பான்மையினத்தை இதற்கு இணங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால், அதனை உடனடியாகச் செய்ய முடியாது. மெதுவாகவேயே வேண்டும் என்று இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி வார இதழுக்கு கடந்த 7ஆம் திகதி கொழும்பில் வைத்து வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அரசியலமைப்பு ரீதியில் அதிகாரப்பரவ லாக்கல் இடம்பெற வேண்டும் எனக் கூறும் டாக்டர் சுப்ரமணிய சுவாமி முதலமைச்சர் பதவியை வழங்கி விட்டு பொலிஸ் அதி காரத்தை வழங்கவில்லை என்றால் வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.
புலிகளுக்கு எதிராக தமிழக மண்ணிலும், இந்தியாவிலுமிருந்து குரல் கொடுத்தவன். என்னைப் போன்றவர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பதை இலங்கை அரசாங்கம் உணர வேண்டும். புலிகளை அழித்தன் மூலம் இந்திய தேசிய பாதுகாப் புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உதவியுள்ளார் என்று குறிப்பிட்ட டாக்டர் சுப்ரமணிய சுவாமி வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் குறித்து இந்திய மத்திய அரசில் பேசக்கூடிய, அழுத்தம் தரக்கூடிய நிலையில் தமிழக அரசியல்வாதிகள் இல்லை. அவர்கள் தமது சுயநலன்களுக்காக இந்திய மத்திய அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக செயற்படுகின்றனர். எனவேதான் இந்திய மத்திய அரசின் வெளிநாட்டுக்கொள்கை தமிழர்களுக்கு சதகமாக அமைவதில்லை. இதில் வெளிநாட்டுத் தமிழர்கள் குறித்து மாத்திரமல்ல தமிழக மக்கள் குறித்தும் இதே நிலைதான்.
என்று தமது சுயநலன்களைப் புறந்தள்ளி தாம் ஆறுகோடி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றோம் என்ற உணர்வுடன் தமிழக அரசியல்வாதிகள் செயற்பட முன்வருகிறார் களோ அன்று தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனம் பிறக்கும் என்றும் டாக்டர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.
அவர் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வி வருமாறு:
கேள்வி: நீங்கள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்குகின்ற ஒரு அரசியல்வாதியாக தமிழகத்தில் மாத்திரமல்ல அகில இந்திய ரீதியிலும் அடையாளம் காணப்பட்டுள் ளீர்கள்?
பதில்: உண்மைதான், இந்தியாவில் மாத்திரமல்ல, அமெரிக்காவிலும், ஹாவார்ட்டிலும் கூட சர்ச்சைக்குரிய மனிதராக நான் இருந்துள்ளேன்.
கேள்வி: நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு. தமிழர் விவகாரம் வேறு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தீர்கள். தமிழக முதலமைச்சரும் இதே நிலைப் பாட்டில்தான் இருந்தார். இன்று புலிகள் இல்லை. தமிழர் விவகாரம் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: புலிகள் வேறு, தமிழர் விவகாரம் வேறு என்ற நிலைப்பாட்டில் தமிழக முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா கொஞ்ச காலம் இருந்தார்.
இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயக ரீதியில்தான் முதலில் தொடங்கின.
எஸ்.ஜே.வி.செல்வ வநாயகம் போன்றோருடன் சிங்களத் தலைவர்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர். சில சமயங்களில் தேர்தல் இலாபங்களுக்காக தமிழ் மக்களைப் பாவித்து விட்டு கழற்றிவிட்டனர். அதற்குப் பிறகு தமிழ் மக்களிடையே அது வன்முறைப் போராட்டமாக மாற்றம் அடைந்தது.
வன்முறை என்பது எமது கலாசாரத்தினாலும் அல்லது இந்து, பௌத்த சமயங்களினாலோ ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அங்கீகரிக்கும் நிலையிலும் இல்லை.
இந்த பின்னணியில் விடுதலைப் புலிகள் ஒரு அமைப்பாக உருவெடுத்தனர். இவர்களால் தமிழர்களுக்கு மிகப் பெரிய ஆதரவாளராக இருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப் பட்டார். இலங்கையில் அ.அமிர்தலிங்கம், வெயோகேஸ்வரன், அவரது மனைவி, கலாநிதி நீலன் திருச்செல்வம் என்று பலரை அவர்கள் கொலை செய்தனர்.
 அதாவது தம்மை மீறி எவரும் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்தனர். எவரும் தமக்கு எதிராக இருக்கக் கூடாது, நூறு சதவீதம் தம்மை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து புலிகள் செயற்பட் டனர். இவர்களுடைய ""பயங்கரவாத'' நடவடிக்கை களால் தமிழ் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
வெளிநாடுகளைப் பொறுத்து குறிப்பாக இந்தியாவே தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஒரு பின்னணியை வைத்து எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆய்வு செய்தேன். இறுதியில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
தமிழ் மக்களைப் பொறுத்து வெள்ளைக் காரர்கள் அவர்களை பழுதாக்கிவிட்டனர். இந்தியாவில் எவ்வாறு ஆரியர், திராவிடர் என்ற பிரிவினையை உருவாக்கினார்களோ அதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. மொழி ரீதியில் ஒருசில வேறுபாடுகள் இருந்தபோதும் சிங்கள மொழியில் சமஸ்கிருத சொற்கள் பல உள்வாங்கப்பட்டுள்ளன.
தமிழர்களிடையேயும், சிங்களவர்களிடையேயும் காணப்படும் ஒற்றுமையை, சகோதரத்துவ உறவை மேலும் வளர்த்து வலுவாக்க முன்வர வேண்டும்.
பெரும்பான்மை சமூக ஜனநாயகம்
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு வாக்களிப்பதன் மூலம் பெரும்பான்மை சமூக öŒல்வாக்கு இலங்கை அரசியலில் உருவாகியதன் காரணமாக தனிப்பெரும்பான்மையைப் பெற்ற Œமூகமாக சிங்கள Œமூகம் உருவாக வழிவகுத்தது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை சீர் குலைப்பதற்காகவும், இந்தியாவின் செல்வாக்கை இலங்கையில் மங்கச் செய்வதற்காகவும் வெளிநாட்டுச் சக்திகள் பல பெரும்பான்மைவாதத்ததை மேலும் தூண்டி விட்டன. இந்த வலையில் சிங்கள மக்களும் வீழ்ந்தனர். இந்த ஒரு பின்னணியை வைத்துக் கொண்டு நான் மிகச் சுருக்கமாக சில விடயங்களைக் கூற விரும்புகிறேன்.
1.எமக்கிடையே வேறுபாடுகள், அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் பாராட்ட வேண்டும்.
பல வெளிநாடுகளின் தலையீடுகள், நிர்ப்பந்தங்கள் இருந்தபோதும் அவற்றைக் கணக்கிலெடுக்காது விடுதலைப் புலிகளை அவர் அழித்து விட்டார்.
2. மஹிந்த ராஜபக்ஷ பாராட்டப்பட வேண்டியவர்
விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கும் ஆபத் தானவர்கள். புலிகள் இலங்கையில் வளர்வது, இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான போரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்தார். அதில் வெற்றி பெற்றதானது இந்தியாவுக்கு பெரிய இலாபமாகும். இந்தியாவின் தேசியப்பாதுகாப்புக்கு பெரிய இலாபம் கிடைத்துள்ளது. இதனால், அவருக்கு இந்தியாவில் நல்ல பெயரும், கௌரவமும் உள்ளது. இதனை அவர் உணர்ந்து கொள்ள @வண்டும்.
இந்தியாவில் அவரைப் பெருமையுடன் பார்க்கும் நிலை உள்ளதென்பதையும் அவர் உணர வேண்டும்.
தமிழ் மக்கள் தோற்கவில்லை
3 இந்தப் போரில் தமிழ் மக்கள் தோற்கவில்லை; விடுதலைப் புலிகள்தான் தோற் கடிக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மையை, வேறுபாட்டை சிங்கள மக்களும் உணர வே ண்டும் அல்லது அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஜேர்மனியில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டதன் பின் ஜேர்மனியை அமெரிக்கா அழித்துவிட வில்லையே! ஜே ர்மனி பல துறைகளில் முன்னேறுவதற்கு அமெரிக்கா பல வழிகளில் உதவியது.
4. அதிகாரப் பரவலாக்கல் வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு நோக்கிய நகர்வு விடுதலைப் புலிகளால் பின் தள்ளப்பட்டுவிட்டது. அந்த முயற்சிகள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சட்டத்தில் தெளிவான இடம் இருக்க வேண்டும். அதிகாரங்களும் இருக்க வேண்டும். சட்ட ரீதியில் அதிகாரப் பர வலாக்கல் இருக்க வேண்டும். அது செய்யப் பட வேண்டும்.
5. சிங்கள மக்களின் அச்சம்
ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு உள்ளது. அதிகாரங்களை கொஞ்சம் கூடுதலாக தமிழர்களுக்குக் கொடுத்தால் நாடு பிரிந்து போய் விடும்; தனிநாடு உருவாகிவிடும்; என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டும்.
6. பொலிஸ் அதிகாரம் இல்லாத
முதலமைச்சர் பதவி வேடிக்கையானது
அதேவேளையில் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே கொடுக்காமலும் இருக்க முடியாது. உதாரணமாக முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரம் கொடுக்கவில்லை என்றால் அது வேடிக்கைக்கு உரியதாக போய்விடும்.
இந்தியா இருபக்க உறவை
வளர்க்க வேண்டும்
இந்தியா இருபக்க உறவை அதாவது சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான உறவை வளர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இதனை மெது மெதுவாகத்தான் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
முதலில் கொடுப்பதை எடுத்துக் கொண்டு பிறகு இன்னும் கேட்க வேண்டும்.
 எல்லாம் ஒரேடியாகக் கிடைத்து விடும் என்பதல்ல. பரஸ்பரம் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவ தன் மூலமே இதனை அடைந்து கொள்ள முடியும். வடபகுதி தமிழர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி வலியுறுத்துகின்றனர். இணைந்த வடக்கு, கிழக்கு கிடைக்கும். அதற்கு காலமெடுக்கும்.
மகாத்மா காந்தியிடம் இருந்து
கற்றுக் கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தியிடம் இருந்து நாம் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள  வேண்டும்.
அவர் வெள்ளைக்காரரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உரிமைகளைப் பெற்றுக் கொண்டார். இறுதியில் பூரண சுயாட்சியைக் கொடுத்துவிட்டு வெள்ளைக்காரர்களை நாட்டை விட்டுப் போகுமாறு கோரினார்.
8 இலங்கை வாழ் இந்திய வம்சாவளி
மக்களுக்கு இந்தியாவின் துரோகம்
இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியா பெரும் துரோகம் செய்து விட்டது.
1948இல் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் பெரும் சக்தியாக இருந்தனர். ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் போன்றவைகளால் இந்த மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.
இந்தியா இத்தகைய முட்டாள்தனமான ஒப்பந்தங்களைச் செய்திருக்காவிட்டால் இலங்கை நாடாளுமன்றத்தில் 40 எம்.பி.க்கள் இன்று இருந்திருப்பர். இது போன்றதொரு முட்டாள்தனத்தை நான் உலகில் எங்கும் பார்க்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பெரும்பணியை ஆற்ற வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது.
இன்று O.C.I என்ற அந்தஸ்தை இந்தியா கொடுத்துள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்துக்கு இல்லாத பல கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய அரசாங்கத்துடன் பேசவுள்ளேன்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பாக பெரியளவில் சர்வதேச மகா நாடொன்றை விரைவில் தமிழ் நாட்டில் நடத்த வுள்ளேன். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இம்மகாநாடு நடைபெறும்.
இந்தியா அனைத்து தமிழர்களுக்காகவும் பேசவேண்டும்.
இந்தியா இலங்கையில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் பேச வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தியா அவ் வாறு நடந்து கெள்வதாக தெரியவில்லை. இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்களைத் தவிர்த்து வட பகுதி தமிழ் மக்களுக்காக மட்டுமே பேசுவதாகத் தெரிகின்றது.
பேசித் தீர்க்கலாம்
இலங்கையில் தமிழர் தொடர்பான சில பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த் துக் கொள்ளலாம். இலங்கையில் சில இந்துக் கோவில்களை தமிழர்களிடமிருந்து எடுத்து கையப்படுத்தி யுள்ளனர்.
சீனாவின் மனமாற்றம்
திபெத்திலுள்ள கைலாய மலையை வழி பாட்டுக்கென திறந்துவிட சீனா மறுத்தது. இந்த விடயம் தொடர்பாக மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக நான் பேசியதன் பயனாக இறுதியில் சீனா வழிபாட்டுக்குத்திறந்து விட ஒத்துக் கொண்டது. நான் சீனாவின் நண்பன் என்பது சீனாவுக்குத் தெரியும். அந்த உணர்வும் சீனாவுக்கு இருந்தது.
இதுபோன்றதொரு நம்பிக்கை என்மீது இலங்கையில் உள்ளது என்பதை இந்த இலங்கைப் பயணத்தின் போது உணர்ந்து கொண்டேன். விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், போருக்கு ஆதரவாளராகவும் தமிழகத்தில் இருந்து குரல் கொடுத்தவன் என்ற உணர்வு இலங்கையில் உள்ளது.
நான் கதிர்காமத்திற்குச் சென்ற பொழுது அங்குள்ள முக்கிய பௌத்த மதகுரு நேரில் வந்து என்னை ஆசீர்வதித்தார். இவ்வாறான நம்பிக்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
11. தமிழக அரசியல்வாதிகள்
பணத்திற்காக கோஷமிடுகின்றனர்
தமிழ் நாட்டில் இருக்கின்ற எவரெல்லாம் இலங்கைக்குத் தமிழர்களுக்காக கோஷம் போடுகின்றனரோ அவர்கள் அனைவரும் பணத்துக்காகத்தான் கோஷம் போடுகின்றனர்.
வைகோவாக இருக்கட்டும் அல்லது சீமானாகவோ, நெடுமாறனாகவோ இருக்கட்டும். அனைவரும் பணத்துக்காகவ கோஷம் போடுகின்றனர் என்பதே எனது அபிப்பிராயமாகும்.
தமிழ் நாட்டில் உள்ள இவர்கள் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு தலைவர் இந்தியாவின் பிரதம மந்திரியாகும்.
இதனால், மதுரையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் நான் பேசப்போகின்றேன். இந்தியாவிலுள்ள தமிழர்கள் அனைவ ரும் தாம் முதலில் இந்தியன் என்று நினைக்க வேண்டும். அதற்குப்பிறகு தமிழன் என்ற உணர்வு வர வேண்டும்.
தமிழர்கள் எதிர்பார்க்கும் அபிலாஷைகளுக்கும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்குமாயின் தமிழர்கள் முதலில் இந்தியன் என்ற நிலைப்பாட்டிலேயே சிந்திக்க வேண்டும்.இதுபோல் இலங்கையிலுள்ள தமிழர்களும் முதலில் இலங்கையர் என்று நினைக்க வேண்டும். செயற்பட வேண்டும்.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தபொழுது தமிழர்கள் தமது கல்வித் தகைமை, புத்தி கூர்மை காரணமாக பெரியளவில் மேன்மை நிலையில் இருந்தனர்.சிங்களத்தரப்பினர் இந்த நிலையை மாற்றுவதற்காக தரப்படுத்தல் போன்ற முட்டாள்தனமான காரியங்களைச் செய்தனர். இவ்வாறான விடயங்கள் இனிமேலும் நடைபெறக் கூடாது.
12. இலங்கை அச்சத்ததின் காரணமாகவே சீனா பக்கம் போகின்றது. ஆனால், இந்தியாவை மீறி செயற்பட விரும்புவதில்லை. எனவே தான் ஹம்பாந்தோட்டையை முதலில் இந்தியாவுக்கு வழங்க முன்வந்தது. ஆனால், இந்தியா கருணாநிதிக்காக அதனை ஏற்க வில்லை.
கேள்வி: செல்வா பண்டா ஒப்பந்தம் போன்று பல ஒப்பந்தங்கள் மீறப்பட்டதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதுபோல் தான் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்க மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் உள்ளது. அதனையொட்டித்தான் 13ஆவது திருத்தச் சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதனைக் கூட வழங்குவதற்கு மறுக்கப்படுகின்றது. புலிகள் இருக்கும்வரை தீர்வுக்குப் @பாவதாக தொடர்ச்சியாக கூறி வந்தது. தற்பொழுது புலிகள் இல்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை. இவை கள் அனைத்தும் தமிழ் மக்கள் இலங்கை அரச தரப்பின் மீது நம்பிக்கை வைக்கும் நிலை இல்லை. இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்.
பதில்: இதில் பாதி எமது தவறு. பாதி அவர்களுடைய தவறு.
அவர்களுடைய இருதயம் (சிங்களத் தரப்பு) பெரிதாக இருக்க வேண்டும். சிறியதாக இருக்கக் கூடாது. போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணமோ தமிழ் மக்கள் ஒரு அடிமைச் சமூகம் என்ற எண்ணப்பாடோ அவர்களிடம் இருக்கக்கூடாது.
விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமிழ்த் தலைவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை. உயிர்ப்பயம் காரணமாக டக்ளஸ் தேவானந்தா போன்றோர் ஆதரவளித்தபோதும் பெரும்பாலானவர்கள் ஆதரவளிக்க முன்வரவில்லை.
@பாரின்போதுதான் இந்த நிலைப்பாடு என்றால் தேர்தலின் போதும் கூட தமிழ்த் தலைமைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை. சரத்பொன்சேகாவையே ஆதரித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். அப்படியிருந்தும் படைத் தளபதியை தமிழ்த் தலைமைகள் ஆதரித்துள்ளனர். போர்க்குற்றங்கள் எனக் கூறப்படுகின்ற அனைத்தும் செய்தவர்கள் இராணுவத்தினர். அப்படியிருந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்காமல் விட்டமை பெருந்தவறாகும்.
அமெரிக்காவின் கோபத்தால் ஒன்றும் நடக்காது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது அமெரிக்காவுக்கு அதிருப்தியும், கோபமும் உள்ளது.
விடுதலைப் புலிகளின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டபின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண் பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக் காவுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
இந்த வாக்குறுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றவில்லை என்ற கோபம்; அதிருப்தி  அமெரிக்காவுக்கு உள்ளூர உள்ளது.
அமெரிக்காவின் இந்த கோபத்தை தமிழர் தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த கோபத்தால் ஒன்றும் நடக்கப் @பாவதில்லை. அமெரிக்காவாலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் மக்கள் இந்த விடயத்தில் பெரிய தவறு செய்துள்ளனர் என்பதுதான் எனது அபிப்பிராயமாகும். இராணுவத் தளபதியை ஆதரித்தமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனதில் எத்தகைய உணர்வலைகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்
அவர் தமிழ் மக்களின் ஆதரவின்றியே ஜனாதிபதியாகிவிட்டார். இவ்வாறு ஜனாதிபதியாகிய ஒருவர் தமிழர் நலன் குறித்து செயற்பட முனைந்தால் அவர் தமக்கு ஆதரவளித்த மக்களாலேயே கைவிடப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்.
உதாரணமாக வாஜ்பாய் நிலைமை அவருக்கு வந்து விடும். இந்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியிலமர்ந்த அவர் முஸ்லிம் மக்களுக்காக செயற்படப்போய் இறுதியில் இந்து மக்கள் அவரைக் கைவிட்டு விட்டனர்.
கேள்வி: இந்திய வெளியுறவு அமைச்சர் அண்மையில் இலங்கை வந்திருந்த பொழுது அதிகாரப் பரவலாக்கலில் 13 பிளஸ் குறித்த நிலைப்பாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி வந்துள்ளதாக அறிவித்து விட்டுச் சென்றார்.
அவர் சென்ற மறு கணமே இலங்கை அரசாங்கம் அதற்கு மாறான கருத்துகளை தெரிவித் துள்ளது. ஒரு இந்தியக் குடிமகன் என்ற வகையில் முரண்பட்ட இந்தப் போ க் கினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:இது ஒரு முட்டாள்தனமான செயலாகும். இதுபோன்ற முக்கிய அறிக்கையை இருதரப்பு கூட்டறிக்கையாக பத்திரிகை மாநாட்டில் வைத்து வெளியிட்டிருக்க வேண்டும்
. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முதலில் பேச  வைத்திருக்க @வண்டும்.
என்னைப் பொறுத்து இது ராஜதந்திர ரீதியில் @தால்வியாகும். இந்தியாவின் பெயரே கெட்டுப்போய்விட்டது.
கேள்வி: இலங்கை நோக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை வெற்றி பெறாத கொள்கையாக@வ உள்ளது. அதற்கும் அப் பால் மகாத்மா காந்தி, நேரு காலந்தொட்டு இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டதே வரலாறாக உள்ளது.
பதில்: தமிழக அரசியல்வாதிகளே இதற்கு காரணமென்று நான் ஆரம்பத்தில் இருந்@த கூறிக் கொண்டு வருகின்றேன்.
தமிழக அரசியல்வாதிகள் எப்பொழுதும் வட நாட்டுத் தலைவர்களுடைய கைக் கூலி களாகவே இருக்கின்றனர். இன்றும் அவ்வாறே செயற்படுகின்றனர்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இதற்கு விதிவிலக்கானவர். ஆனால், அவரும் எவராவது நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதாக கூறினால் பயந்து விடுவார்.
ராஜாஜிகூட நேருவுக்கு ""காக்கா#'' பிடித்துக் கொண்டிருந்தார்.நேரு துரோகம் செய்த பின்னர்தான் அவர் தனிக்கட்சியை ஆரம்பித்தார். அவரது செயற்பாடுகள் இறுதியில் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சிக்கே உதவின.
இந்தியாவின் ராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லாது இலங்கை அசாங்கத்தின் பேச்சைக் கேட்கும் அளவுக்கு இருக்கிற தென் றால் அதற்கு தமிழர்களின் அரசியல் தலை மைகளே காரணமாகும்.
தமிழக அரசியல் தலைமைகள் டெல்லியில் பேசும் திரணியற்றுள்ளன. செல்வாக்கு செ லுத்தும் நிலையிலும் இல்லை. அதற்கான உதாரணத்தை என்னால் தரமுடியும்.
தமிழ், தமிழ் என்று பேசுகின்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி மத்திய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக கூறவில்லை. ராஜாவுக்கு டெலிகொம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நெய்வேலியை தேசிய மயமாக்கும் விவகாரத்திலோ மத்திய அரசில் இருந்து விலகுவதாக கூறும் கருணாநிதி அவர்கள் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கவில்லையென்றால் விலகுவேன் என்று கூற ஏன் அவர் முன்வரவில்லை.
அதாவது சுயநலன்களுக்காகவும், அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் விலைபோகும் நிலையில் தமிழ்த் தலைமைகள் உள்ளன என்பதுதான் உண்மையாகும்.
இத்தகைய சுயநலப்போக்குகளில் இருந்து தமிழக தமிழ்த் தலைமைகள் விடுபட வேண் டும். தமிழகத்தில் ஆறுகோடிமக்கள் இருக்கின்றார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு வர வேண்டும். தமிழர்களுக்கான அந்தஸ்து டெல்லியில் இருக்க வேண்டும் என்ற உணர்வும் வர வேண்டும்.
மஹாராஷ்டிராவில், பெங்கோளில் தமிழகத்தைப் போன்று பெரிய ஜனத்தொகை இல்லை. ஆனால், டெல்லியில் இந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் வாதிகள் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஆறு@காடி மக்கள் இருந்த@பாதும் அவர்களுக்காக டெல் லியில் குரல் கொடுப்பதற்கு எந்தத் தமிழ்த் தலைமையும் இல்லை. அனைத்து தமிழ் தலைமைகளும் டெல்லியில் எவராவது ஒரு அரசியல் வாதிக்குப் பின்னால் நின்று ""காக்கா#'' பிடிக்கின்றன.
அமைச்சர் சிதம்பரம் தமிழ்நாட்டில் மிரட்டுவார். டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் கை கட்டி நிற்பார்.
மலேஷியா வாழ் தமிழர்களாட்டும், தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களா கட்டும், இலங்கையில் வாழும் தமிழர்களாகட்டும். ஒட்டுமொத்த தமிழினத்திற்காகவும் டெல்லியில் காத்திரமாக குரல் கொடுப்பதற்கு எந்த தமிழ் தலைமைகளும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.
1984இல் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தனி ஈழத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தை ஆரம்பிப்பதாக அறிக்கை வெளியிட்டேன். இதுகுறித்து இலங்கை அரசாங்கம் அவ்வேளையில் ஏதும் கூறவில்லை.
1984இல் கச்சத்தீவில் தனி ஒருவனாக இறங்கி ஜனதா கட்சிக் கொடியை ஏற்றினேன். அவ்வேளையில் இலங்கை அரசாங்கம் ஒன்றும் கூறவில்லை.
ஆனால், அன்டன் பாலசிங்கம் என்னை ""அமெரிக்காவின் ஏஜென்ட்'' என்று கூறினார். அந்த செய்தி வந்தவுடனேயே விடுதலைப் புலிகளை அழி க்க வேண்டும் என நான் நினைத்தேன்.
என்னைப் பொறுத்து என்று தமிழக அரசியல் தலைமைகள் ""காக்கா'' பிடிக்காது தேசிய அளவில் உரிமைகளுக்காக பாடுபடுவோம் என்ற உணர்வுடன் செயற்படுவார்களாயின் இந்த நிலைமையை மாற்றியமைக்கலாம்.


'ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன்" _


  விஜய் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி" படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தப் பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திரையரங்குகளுக்கு சென்று நண்பன் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறாராம் விஜய். 

இதன் ஓர் அங்கமாகவே 'நண்பன்" படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக மதுரைக்கு சென்ற விஜய் அங்கு நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கொன்றில் இரசிகர்களைச் சந்தித்துள்ளாராம். 

சந்தித்தது மாத்திரமா அவர்களுடன் இரண்டொரு வார்த்தைகளையும் பேசியுள்ளாராம்!

'என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாராதவிதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'நண்பன்" இல்லாமல் இருக்க முடியாது. 

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 

எனது ரசிகர்களுக்கும் நான் அதைத்தான் கூறுவேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையைத் தெரிவு செய்தால் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்

மாலைதீவில் நடந்ததுதான் என்ன?

 குறைந்தளவிலான மக்கள் தொகையைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்தது பாரிய ஆர்ப்பாட்டம்.

முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது.


அமைதியாக இருந்த இந்த மாலைதீவில் உண்மையில் நடந்தது தான் என்ன என்று அறிந்து கொள்வதற்கு பலரும் பெரும் ஆவலாக இருக்கின்றார்கள். ஆம் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மக்களைக் கொண்ட இந்த சிறிய தீவுக்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர் முஹம்மது நஷீட். சுமார் மூன்று தசாப்தங்களாக மாலைதீவைத் தன்பிடிக்குள் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோற்கடித்து முஹம்மது நஷீட் மக்களால் பெரும் ஆதரவுடன் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்.

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து நாட்டின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார். சுன்னி இஸ்லாமிய நாடான மாலைதீவில் இந்த வருட முற்பகுதியில் அறிமுகப்படுத்திய நவீன திட்டங்களின் பின்னரே இவ்வாறான புரட்சி வெடிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்துள்ளது என்று தெற்காசிய ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திகளிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.


இதுவும் உண்மையா? இவ்வாறு கூறப்பட்டாலும் அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதி அப்துல்லாஹ் முஹம்மதுவைக் கைது செய்வதற்குக் கட்டளையிட்டதற்கமைய இராணுவம் கைது செய்தமையும் அதனால் ஏற்பட்ட பொலிஸார் ஆதரவுடனான கலகமுமே நசீட் பதவி விலகி தனது துணை ஜனாதிபதியான டாக்டர் வாகிட் பதவியேற்க வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதுடன், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சக்கட்டமாக புதன்கிழமை இரவு இடம்பெற்ற பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பலர் காயமடைந்ததாகவும் அதில் பதவி விலகிய நசீட்டும் ஒருவரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இதேவேளை இருதரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா மற்றும் அமெரிக்கா ,பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில் மாலைதீவு பிரச்சினைக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் பின்னணியில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனினும் இலங்கையைப்போன்று மாலைதீவும் முக்கிய கேந்திர மையமாக இருப்பதால் இந்திய குறியாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட் கொழும்பில் கல்வி பயின்றவர். அது மட்டுமன்றி பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இலங்கையிலிருந்து செயற்பட்டிருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. எனினும் இந்த விடயம் பெரும்பாலானவர்கட்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்.

ஆம்! தான் 2008 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கடலுக்கடியில் நடத்தி சர்வதேசத்தை தன்பால் கவரச் செய்தவர் நஷீட். மக்களை பகடைக்காய்களாக்கி தான் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டியதொரு தேவையில்லை என்றதற்கமைய தனித்தன்மை வாய்ந்த சிறந்த தலைவனாக இருந்தவர் இவர்.


மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாலே நகர் வீதிக்கு நேரடியாக வந்த அதிபர் நஷீட் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சென்று விளக்கமளிக்க முற்பட்டார். கலகக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுக்கும், எதிரணி ஆதரவாளர்களுக்குமிடையே இரத்தக் களரி ஏற்படுகின்ற நிலை அங்கு தோன்றியது.

அங்கிருந்து அகன்ற ஜனாதிபதி நஷீட், தான் மாலைதீவில் சட்டரீதியாக ஜனநாயக முறைப்படி பதவிக்கு வந்த நிலையிலும் மக்களைக் காயப்படுத்திக் கொண்டு அவர்களின் இரத்தத்தின் மேல் நின்று அதிகார பீடத்தில் இருக்க விரும்பவில்லை என்று தொலைக்காட்சியினூடாக கூறியதுடன் தனது சகாவிடம் பதவியையும் ஒப்படைத்தார்.

அத்துடன் தன்னைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பொலிஸார் தன்னை ஆயுத முனையில் அச்சுறுத்தி பதவி விலக்க கோரியதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நஷீட்டின் மனைவி லைலா மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் பாதுகாப்புக் கருதி இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இது இவ்வாறிருக்க நேற்று வியாழக்கிழமை மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதனை அறிந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். அது மட்டுமா அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு அந்நாட்டின் தற்போதைய நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இந்த பதற்ற நிலை தொடருமா? அல்லது சுமுகமான நிலை ஏற்படுமா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் !
___

Friday 10 February 2012

நக்கீரன் கோபாலின் கைதுக்கு நீதிமன்றம் தடை

முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக செய்தி வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னர் இவ்விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில் நக்கீரன் கோபால் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி உண்டது குறித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கினர். மேலும் அந்த செய்தி குறித்து என்மீது ஜாம்பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

செய்தி வெளியிட்ட அதே நிகழ்வு தொடர்பாக என்மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்டதற்காக, எங்கள் மீது ஆபாச படங்களை வெளியிட்டதாகவும், மத உணர்வை புண்படுத்தியதாகவும், மத மோதலை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் என்மீது பதிவாகியுள்ளது. ஒரே குற்றத்தன்மை கொண்ட புகாருக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழகம் முழுவதும் என்மீது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள ஜாம்பஜார் போலீஸ் நிலையத்துக்கு மாற்ற டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிடபட்டிருந்தது.

இந்நிலையில் இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகளான எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் 'இந்த வழக்கில் ஏற்கனவே கோபால் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். எனவே அதே குற்றச்சாட்டின்கீழ் பதிவான மற்ற வழக்குகளில், அவரை கைது செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டனர். வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இலங்கையில் விரைவில் மக்கள் போராட்டம் ஏற்படும்!- சரத்

மாலை தீவில் மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளதைப் போன்று, இலங்கையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் காலம் தொலைவில் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

மாலைதீவில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்ட அலை தென் ஆசியாவையும் தாக்கியுள்ளது என குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அழகிய நாட்டை உருவாக்கிக் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெப்ரவரி 8ஆம் திகதி தன்னை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழின அழிப்பு தொடர்கிறது - அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

இலங்கையில் தொடர்ந்தும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த 4 ஆம் திகதியன்று தமிழ்க் காங்கிரஸ் நடத்திய இரவுப்போசன நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன்போது கருத்துரைத்த பலரும் 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.

நிகழ்வின் போது வன்னியில் மருத்துவமனை ஒன்றின்மீது இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து இளம்பெண் ஒருவர் வீடியோ திரையை காண்பித்து விளக்கம் அளித்தார்.

இதேவேளை இலங்கையில் இருந்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கவில்லை என்று அங்கு வந்திருந்தவர்கள் கருத்துரைத்தனர்.

அயர்லாந்தில் பிறந்தவரும் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுப்பவருமான பெற்றிக் மெக்கோரி இங்கு கருத்துரைக்கையில்,

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான அகதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

2009 ஆம் ஆண்டில் இலங்கையின் இறுதியுத்தம் முடிந்த பின்னர் அதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான நிர்வாகத்தை நினைக்கும் நிலையில் வடபகுதி மக்கள்!


விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக அவர்கள் தமது பகுதியில் நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே புலிகள் அமைப்பு மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று.விடுதலைப்புலிகள் செய்ததெல்லாம் சரியென்று எவரும் வாதிடமாட்டார்கள். அப்படியானதொரு வாதம் நடந்ததாகவும் வரலாறு இல்லை. அப்படியிருந்தும் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக, அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது.

ஊழல் அற்ற நிர்வாகம், பெண்களுக்கான பாதுகாப்பு, திருட்டு, களவு என்ற பயம் அறவே இல்லாத நிலைமை, கலாசார பேணுகை, விரசமான சினிமாப் பாடல்களுக்குத் தடை, ஆபாச நிகழ்ச்சிகளுக்கு அறவே இடமில்லாத கடும் கட்டுப்பாடு, தெருச்சண்டை, குழுச்சண்டை, அட்டகாசம், அடாவடி என்ற பட்டியலில் இருப்போருக்கு பரமலோக தண்டனை என்றவாறு அவர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடிய பகுதிகளை நிர்வகித்தனர்.

இதனால் தமிழ் மக்கள் அச்சமற்று வாழ்ந்தனர். பெண்கள் எந்தப்பயமும் இன்றி வீதியில் நடமாடினர். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. திருடர், கள்வர், கொள்ளையர் என்ற சொற்பதங்களுக்கு அறவே இடம் இருக்கவில்லை. இதன் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தனர்.

எனினும் போருக்குப் பின்னரான சமகால நிலைமை எப்படி என்பதை ஒருகணம் சிந்தித்தால், நிலைமை மிகவும் மோசமாகி வருவதை உணர முடியும். கொள்ளையர்களின் அட்டகாசங்கள், கோஷ்டிச் சண்டைகள், வாள் வெட்டுக்கள், போதை வஸ்துப் பாவனைகள், கலாசார சீரழிவுகள் என்பன ஆரம்பிக்கத் தொடங்கி விட்டன.

அதிலும் இளைஞர்கள் குழுக்களாக இயங்குவது, கோஷ்டிச் சண்டையில் ஈடுபடுவது, வாளால் வெட்டுவது என்ற அட்டகாசங்கள் இப்போது ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இதற்கு மேலாக வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை அபகரிக்கும் அநியாயங்கள், வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை வாளால் வெட்டிவிட்டு நகைகளை அபகரிக்கும் கொள்ளையர்கள், குழந்தைப் பிள்ளையை பணயம் வைத்து தங்க நகைகளை கபளீகரம் செய்யும் கயவர்கள் தலை விரித்தாடுகின்றனர்.

இந் நிலைமை நீடிக்குமாக இருந்தால் 2013 ஆம் ஆண்டின் பிறப்பில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் பயங்கரமான சூழல் இங்கு இருக்கும். எத்தனையோ களவுகள், கொள்ளைகள் நடந்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாமல் இருக்கின்ற வடபகுதிப் பொலிஸாரில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் வேண்டுபவர்களாகவே காணப்படுகின்றனர்.

அவர்கள் குச்சொழுங்கையில் காத்து நின்று பாலுக்கும் பாணுக்கும் கடைக்குச் செல்பவர்களிடம் தலைக்கவசம் இல்லையென்று குற்றம் சுமத்தி லஞ்சம் வேண்டுவதைப் பெரும் தொழிலாக்கிவிட்டனர்.

இவர்களால் வடபகுதியில் இடம்பெறும் களவு, கொள்ளை, கொலைகளை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. இந் நிலையில் தமிழ்மக்கள் போருக்கு முந்திய நிர்வாகத்தை நினைக்கத் தலைப்படுவர்.

தமிழருக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது - பாகிஸ்தான் நாளிதழில்


நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டோன்‘ (Dawn) நாளேட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரபலமான ‘டோன்‘ நாளேட்டில் ‘சிறிலங்காவில் போர்க்குற்றங்கள்‘ என்ற தலைப்பில் இன்று இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

கொழும்பிலும் ஈரானிலும் பிபிசியின் முகவராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் இந்தக் கருத்தை எழுதியுள்ளார்.

“தமிழ்ப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஜெனிவாவில் அடுத்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கு தீர்மானம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் இன்று பாகிஸ்தானில் மூன்று நாள் பயணத்தை தொடங்குகிறார்.

சிறிலங்காவில் நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது.

ஐ.நா மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைத்தோர், இறப்புகளை இன்னும் கணக்கெடுக்கிறார்கள் என்ற தலைப்பிலான நூல் ஒன்றை பிரான்சிஸ் ஹரிசன் இந்த கோடை காலத்தில் லண்டனில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இனிமே ஆபாசமா எழுத மாட்டேன்! - இது சத்தியம்!!

நான் ஒரு சூப்பர் முடிவு எடுத்திருக்கிறேன்! அதாவது இனிமேல் கில்மா பதிவு எழுதுறதில்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்! என்னோட இந்த முடிவைப் பாராட்டி, நீங்கள் பாராட்டு விழா நடத்தலாம்! ஆனா, எப்ப பாரட்டுவிழான்னு 10 நாளைக்கு முன்னாடியே அறிவிக்கணும்! அப்போத்தான் நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன்!

கிளிக்குக!

ட்விட்டரில் தனுஷ் - சிம்பு மோதல்!

தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!

நயன்தாரா முதல்வர் சந்திப்பு

நயன்தாரா தானே நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் காசோலை ஒப்படைத்தார். நடிகை காசோலையை நேரில் ஒப்படைக்க செயலகத்தில் நேற்று தமிழ்நாடு ஜே ஜெயலலிதா தலைமை அமைச்சர் சந்தித்தார். நயன்தாரா சமீபத்தில் நடிப்பு தொடர முடிவு செய்துள்ளது அவள் அஜித் மற்றும் ஆர்யா நடித்த விஷ்ணுவர்தன் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அவர் தனது நடிப்பு வாழ்க்கையை தொடர சில நல்ல வாய்ப்புகள் தேடி, ஆதாரங்கள் சொல்கின்றன. நயன்தாரா ரஜினிகாந்த், அனைத்து தானே புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நிதி உதவி ஒப்படைக்க முதல்வர் சந்தித்த யார் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் இணைந்து.

சச்சினும் தோனியும்

சச்சின் மற்றும் தோனி பெயரில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ளது. சச்சின் பெயரில் Boost வழங்க Why this கொலவெறி டீம் கிட்டத்தட்ட அதே சாயலில் 'Sachin is the secret of INDIA's  energy' என்ற பெயரிலும், தோனி பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இளையராஜா இசையிலும் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் சச்சின்.




பட்டி தொட்டி என்றில்லாமல் நாடுகளை கடந்து ஹிட் அடித்த ரஜினி குடும்ப டீமின் அடுத்த வெளியீடு.
வழக்கம் போல் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
வழக்கம் போல் அனிருத் அதே சாயலில் இசையமைத்துள்ளார்.
Extra Fitting  அனுஷ்கா
வழக்கம் போல் அழகாய் உள்ளார்.
Why this கொலவெறி ஹிட்டானதற்கே பல பேர் கொலவெறியுடன் அலைகிறார்கள். அதற்குள் அதே போல் இன்னொரு பாடல். கொலவெறி பாடல் ஹிட்டானதற்கு மார்கெட்டிங்  தான் காரணம் என்று கூறப்பட்டாலும் பாடல் எனர்ஜிட்டாக தான் இருந்தது.  நண்டு, சிண்டு கூட பாடிக்கொண்டு அலைந்தது. ஆனால் இது போன்ற பாடல்களின் ஆயுட்காலமும் கம்மி. நாளடைவில் மறந்து விடுவோம். சச்சின் போன்ற மாஸ்டர் பேட்ஸ்மேனின் புகழ் பாட எடுத்த பாடல் காலம் கடந்து நிற்கும் படி எடுத்திருக்கலாம். சச்சினை வைத்து சில ஷாட்ஸ் கூட எடுக்காமல் பழைய கிளிப்பிங்ஸ்,போட்டோவை வைத்தே முழுப்பாடலையும் முடித்து விட்டார்கள். எப்படி இருந்தாலும் என்னைப் போன்ற சச்சின் ரசிகர்களுக்கு ரஜினி படம் Opening Show பார்த்த குதூகலத்தை தருகிறது பாடல்.
பாடல் பார்க்க:



அடுத்து தோனி
இளையராஜா தன் இசையை கேட்க வருபவர்கள் மட்டும் வந்தால் போதும்  என தனக்கென ஒரு கடையை நடத்திக்கொண்டு வருகிறார். பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வழக்கமான பாடல்கள். ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோசம்.
வாங்கும் பணத்துக்கும்  என ஆரம்பிக்கும் பாடல். SPB தன்னை அடித்துக் கொள்ள ஆளில்லை என சம்மட்டி அடி அடித்து நிருபித்திருக்கிறார். மற்றுமொரு ஆச்சர்யம் பிரபுதேவா. மெலடியான இந்த பாட்டிற்கு தனது Favourite Steps மூலம் மேலும் அழகூட்டியுள்ளார்.  

மீண்டும் சந்திப்போம்.


ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், சினேகா, ஆன்டிரியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ராஜேஷ் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர். சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா நடிக்கிறார். இதனையடுத்து, படத்தில் சினேகா, அண்ட்ரியா ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர்.


கூல் கூல் வசதிகளுடன் கூகுளின் வினோத கூலிங் கிளாஸ்… !


Google to Unveil High Tech Glasses
வளர்ந்து வரும் தலை முறையில் தொழில் நுட்பத்தின் விந்தை நாளுக்கு நாள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தொழில் நுட்ப உலகில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளது. உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கிளாஸை உருவாக்கி உள்ளது கூகுள்.
இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் போதும், கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை எளிதாக பார்க்கலாம்.  ஏனெனில் இத்தகைய உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கூகுள் கிளாஸில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இதில் முகப்பு கேமராவும் உள்ளது.
கேட்பதற்கே சற்று வினோதமான வசதியை உருவாக்கி இருக்கிறது கூகுள் நிறுவனம். இதை ஆப்பரேட் செய்யும் முழு விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது கூகுள். இன்னும் இது பற்றிய தகவல்களை காத்திருந்த தான் பெற வேண்டும்.

பிரதமரின் விருந்துக்கு 'கொலவெறி' நாயகி ஸ்ருதிக்கும் அழைப்பு

Shruti Hassanசில தினங்களுக்கு முன் கொலவெறி பாடலுக்காக, அதை எழுதிப் பாடிய நடிகர் தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும், அதில் கலந்து கொண்ட பிறகு தனுஷுக்கு கிடைத்த கூடுதல் பப்ளிசிட்டியும் நாடறிந்த சமாச்சாரம்.

இந்த கொலவெறி விருந்துகள் இப்போதைக்கு ஒய்வது போலத் தெரியவில்லை. ஹீரோ தனுஷுக்கு அடுத்து, அந்தப் படத்தின் ஹீரோயின் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளதாம், பிரதமர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு.

தனுஷ் கலந்து கொண்ட விருந்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் ஜப்பான் பிரதமர்.

இந்த முறை மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலத்துக்கு டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இந்த விருந்துக்குதான் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, "பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியதை கவுரவமாக நினைக்கிறேன். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வயதில் எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம்தான்," என்றார்.

Thursday 9 February 2012

கொக்கட்டிச்சோலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

கொக்கட்டிச்சோலையில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்பட்டதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.15 வயதான சிறுமி ஒருத்தியே இவ்வாறு 17 வயதான நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

> நயன்தாராவின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா அல்லது சிம்பு நீங்கள் தயாரா ?

நயன்தாரா காதல் நாடகம் கலவர எபிசோடுக்கு திரும்பியிருக்கிறது. பிரபுதேவாவும், சிம்புவும் நயன்தாராவுக்கு கல்தா கொடுத்ததுடன் கல்லாவிலும் கை வைத்தார்கள் என்று காட்டமாக புகார் எழுப்பியிருக்கிறது நயன்தாராவின் குடும்பம்.

சிம்பு - நயன், நயன் - பிரபுதேவா காதலும் மோதலும் அனைவருக்கும் மனப்பாடம் என்பதால் அடுத்த அத்தியாயத்துக்கு வருவோம். நயன்தாராவை மேலே உள்ள இருவரும் திட்டமிட்டு ஏமாற்றியதாக நயன்தாராவின் குடும்பத்தார் சொல்லத் தொடங்கியுள்ளனர். சிம்புவும், பிரபுதேவாவும் நயன்தாராவிடமுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு அவரை அம்போவென விட்டுவிட்டதாக அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

பிரபுதேவா தனது முன்னாள் மனைவி ரமலத்துக்கு தந்த ‌ஜீவனாம்ச பணம் யாருடையது என்பது அவரவருக்கு‌த் தெ‌ரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று சொன்னதாலேயே பிரபுதேவா அவரை விட்டுப் பி‌ரிந்ததாகவும் நயன்தாராவின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

இந்த புகாருக்கு இதுவரை மாஸ்டர் பதிலளிக்காமல் வழக்கமான மவுனத்துடன் இருக்கிறார். சிம்புவிடமிருந்து இல்லாவிட்டாலும் டிஆ‌ரிடமிருந்து விரைவில் எதுகை மோனையில் ஒரு எக்ஸ்பிரஸ் மறுப்பு வரக்கூடும்.


அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும்

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரடைப்பு ஏற்படும்

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு. இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும், மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

உயிருக்கு ஆபத்து

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம். அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

அடிக்கடி நடங்க

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்

> தனுஷின் 3ஐ பற்றி ஐஸ்வர்யாவின் மூன்று ரகசியங்கள்.

ஐஸ்வர்யாவின் 3 படத்தைப் பற்றிய சில மூடுபனி விவகாரங்களை அவரே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

பிப்ரவரியில் வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகிறது. பெரிய நடிகர்களின் படங்களை முக்கியமான நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்ப்ப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால்தான் பிப்ரவரியில் 3 வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம்.

3 படம் தமிழில் வெற்றி பெற்றதில் தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று நினைத்தார்களாம். கொலவெறி பாடல் 3 யை சர்வதேசப் படமாக்கியதால் தமிழில் படம் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் படத்தை வெளியிடலாம் என்று டப்பிங் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் படம் வெளியாவது தாமதமாகிறது.

இரண்டாவது, 3 படத்தை தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிடப் போகிறார்கள். இதற்காக நல்ல இந்தி மொழிபெயர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது மிக முக்கியமானது. தனுஷ் இந்தியில் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் என்றதெல்லாம் சும்மாவாம். விரைவில் இந்திப் படமொன்றில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்பதே உண்மையாம்.

தமிழ்மணத்துக்கு டார்ச்சர் கொடுக்கும் மூடக்கூட்டமே...!

ணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! 


கிளிக்குக!

> பிரபுதேவா சுருட்டியது போக தானே புயலுக்கு நயந்தாரா ரூ.5 லட்சம் நிதியுதவி.

தானே புயல் நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாயை நயன்தாரா வழங்கினார்.

பிரபுதேவாவுடனான காதல் கான்ட்ரவர்சிக்குப் பிறகு பொது இடங்களுக்கு வருவதை நயன்தாரா தவிர்த்து வந்தார். இப்போது காதல் எனும் மாயையிலிருந்து விடுபட்டிருப்பவர் தெலுங்கிலும், தமிழிலும் தலா ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் முதல்வரை நேரில் சந்தித்தவர் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார்.

சிவகுமார், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று திரையுலகில் நடிகர்கள்தான் அதிகம்பேர் நிவாரண நிதி அளித்துள்ளனர். பிரபல நடிகைகளில் நயன்தாராதான் பர்ஸ்ட்.

நயன்தாரா சகஜநிலைக்கு திரும்பியதற்கான அத்தாட்சியாகவும், அவரது மனிதாபிமானமாவும் இந்த நிதி அளிப்பைச் சொல்லலாம்.

வார்ம் வெல்கம் மேடம்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா