சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்.
வேலுப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து க்றேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐ.நாவை நோக்கி 4வது நாளாக எம்மினத்தின் விடிவிற்கான வழியைத்திறக்கும் என்ற நம்பிக்கையில் வலிகளைத்தாங்கி வலிமையுடன் தொடர்கிறனர்.
கடும் குளிர், மற்றும் காற்றின் மத்தியில் இடம்பெறும் நடைபெறும் நடை பயணம், மற்றும் அஞ்சல் வழிப் விழிப்புணர்வுப் போராட்டங்களிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது ஆதரவைக் கொடுத்து, தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம் மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி, இன அழிப்பை அம்பலப்படுத்த துணை நிற்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புகுழு அலுவலகங்கள், அல்லது பிராந்தியப் பணியாளர்கள் ஊடாக இந்த அஞ்சல் அட்டைகளைப் பெற்று, தாம்வாழும் நாடுகளில் உள்ள வேற்று நாட்டு மக்களுக்கும் அவற்றைக் கொடுக்குமாறு நடை பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.
அஞ்சல் அட்டைகள், மற்றும் துண்டுப்பிரசுரங்களை www.walk-for-justice.org என்ற இணையம் ஊடகாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஏற்ப்பாட்டாளர்கள் அறியத் தருகின்றார்கள்.


No comments:
Post a Comment