
ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி அருகே ஒப்பிலான் என்ற ஊரில், தங்களது வயல்களில் பயிர்களை மேய்ந்து நாசப்படுத்திய 7 பசு மாடுகளை விஷம் வைத்துக் கொன்ற விவசாயிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மாடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது.
ஒப்பிலான் ஊரில் வசித்து வரும் காளீஸ்வரியின் 4 பசுக்களும், பூரணம், பாப்பா, ஜெயலான் ஆகியோரது 3 பசு மாடுகளும் காலையில் பால் கறந்த பிறகு மேய விடுவது வழக்கம், அதன்படி ஊருக்கு வெளியே மேய்ந்து கொண்டிருந்த 7 பசுக்களும் ஆங்காங்கே விழுந்து இறந்து கிடந்தன.
இந்த சம்பவம் குறித்து பசுக்களின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில புகார் அளித்தனர்.வழக்கைப் பதிவு செய்த ஆய்வாளர் லாமேக், துணை ஆய்வாளர் சுப்ரம்ணியன், தீவிர விசாரணை நடத்தியதில், அந்த ஊரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் துத்தன், தர்மா, சின்னராஜா, ராமசாமி, யேசு ஆகியோர், தங்களது பயிர்களை மேய்ந்து நாசப்படுத்திய பசுக்களை விஷம் வைத்துக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஐவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


No comments:
Post a Comment