
கர்நாடாக சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த அமைச்சர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை அம்மாநில முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர்.
நாட்டில் கர்நாடக மாநில சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ணபாலேமர் மற்றும் சி.சி.பாட்டீல் ஆபாச படம் பார்த்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றதில், அவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் மூவரும் ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர்.
சட்டசபைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆபாசபடம் பார்த்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment