கிரேக்கம் தனது புதிய பொருளாதார மீதம்படுத்தல் திட்டங்களுக்கான இறுதி ஒப்புதலை தரவேண்டிய நேரம் கடந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே இறுதி நேரத்தை முடித்துக் கொண்ட கிரேக்க அரசியல் தலைவர்கள் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் தொடர்ந்து தலைமறைவாகி வருகிறார்கள்.வாங்கிய கடனை சரியாக பயன்படுத்தி, புதிய கடன்களை வாங்குவதானால் கிரேக்கம் புதிய மீதப்படுத்தலை ஏகோபித்த முறையில் ஆதரிக்க வேண்டும். ஆனால் இதற்கான ஆதரவை வழங்கும் அரசியல் தலைவர்கள் அடுத்த தேர்தலில் வீட்டுக்கு போக வேண்டி வரும் என்பதால் இந்த அச்சம் நீடிக்கிறது. ஒவ்வொரு மணித்துளியும் கிரேக்கத்தின் மீதான சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அழுத்தங்கள் அதிகரித்தபடி உள்ளன.
அதேவேளை சென்ற வாரம் கிரேக்கம் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களை டேனிஸ் பாராளுமன்றக் குழு சந்தித்தது. அத்தருணம் அவர்கள் காட்டிய மனோநிலை புதிய திருத்தங்களை ஆதரிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதையே தமக்கு உணர்த்தியதாக டேனிஸ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். கிரேக்கத்தின் இந்தப் போக்கு தமக்கு ஆச்சரியம் தரவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள பைனான்சியல் ரான்செக்சன் வரிக்கு ஒன்பது நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முதலீட்டுக்கான நிதி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மாற்றம் செய்யப்படும்போது அரசு சாதாரண விரிவிதிப்பை மேற்கொண்டு பாரிய வருமானத்தை உழைக்கலாம் என்பது பிரான்சின் யோசனையாகும். இதை சகல இடங்களுக்கும் வங்கிகள் மூலமாக கடன் நிதி வழங்கும் பிரிட்டன் பலமாக எதிர்த்துள்ளது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ், கிரேக்கம், ஆஸ்திரியா, பின்லாந்து, இத்தாலி, போத்துக்கல், பெல்ஜியம் போலந்து ஆகிய ஒன்பது நாடுகள் வரவேற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து நேற்று வழங்கிய தொலைக்காட்சி செவ்வியில் பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸிக்கு தமது பூரண ஆதரவு உண்டென்று ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் தெரிவித்திருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக் கணிப்பில் பின்தங்கியுள்ள ஸார்கோஸி அடுத்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் ஜேர்மனியின் கொள்கை அறுந்த பட்டம்போல ஆகிவிடுமென்று சோசல்டெமக்கிரட்டி கூறியுள்ளது. உறவுகள் தொடர்கதையாக உள்ளது, ஆனால் இன்றைய உணர்வுகள் முடிவுரைக்குள் நிற்கிறது.


No comments:
Post a Comment