முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.வெள்ளைக்கொடி தொடர்பான மேன்முறையீட்டு விசாரணைக்காக சரத் பொன்சேகா இன்று உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
விசாரணையின் பின்னர் தன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாது வேறு வழியாக மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி அளுத்கடை நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தினர், பேரணியாக வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கி நகர்கின்றனர்.
சிறையில் இருந்து உயர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகா மருத்துவ பரிசோதனைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
காணொளி
உண்ணா விரதத்தைக் கைவிட்டார் பொன்சேகா! வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதியாம்!
சரத் பொன்சேகாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இத்தகவலை உறுதிசெய்துள்ளார்.


No comments:
Post a Comment