
இலங்கையை ஆட்சி செய்த கடைசி அரசனும் தமிழனும் ஆகிய கண்டி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு கொழும்பில் ஒரு நினைவுத் தூபி காணப்படுகின்றது.
இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் அரச வம்சத்தில் தோன்றியவன். இயற்பெயர் கண்ணுசாமி. இவனுக்கு முன் ஆட்சி புரிந்த ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன். பிள்ளைகள் இன்றி ராஜாதிராஜ சிங்கன் இறந்தபோது 1798 ஆம் ஆண்டு சிம்மாசனம் ஏறினான் விக்கிரம ராஜசிங்கன் . கண்டிப் போரில் 1815 ஆம் ஆண்டு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டான்.
இவன் கொழும்பு கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இந்தியாவின் வேலூர் கோட்டைக்கு கடத்தப்பட்டான்.
1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி 52 ஆவது வயதில் வேலூரில் இறந்தான். ஆயினும் உடல் இலங்கையில்தான் புதைக்கப்பட்டது.
இவன் கொழும்பு கோட்டையில் ஆங்கிலேயரால் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவுத் தூபி ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
காலி முகத் திடலுக்கு அருகில் உலக வர்த்தக மைய கட்டிடத்தை அண்டிய இடத்தில் தூபியை காண முடிகின்றது.
தொழில் அதிபர் லலித் கொத்தலாவவின் சிலிங்கோ ஆயுள் காப்புறுதி வாகன தரிப்பிடம் இத்தூபியை விழுங்கி விடும் போல தெரிகின்றது.
தூபிக்குள் விக்கிரம ராஜசிங்கன், ராஜசிங்கனின் மனைவி, ராஜசிங்கனை பிடித்த பிரித்தானியர் ஆகியோர் ஓவியங்களாக தீட்டப்பட்டு உள்ளார்கள்.
இலங்கை மண்ணில் இறுதியாக புகைப் பிடிக்கின்றமைக்கு பிரித்தானியரால் மன்னனுக்கு கொடுக்கப்பட்ட கோல்ட் லீப் பைக்கெற்றையும் ஓவியத்தில் காண முடிகின்றது.


No comments:
Post a Comment