
தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்தியவெளியுறவுத் துறைச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயிடம் எடுத்துக் கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் இலங்கை வரும் வழியில் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் எடுத்துக்கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசிடம் எடுத்துக்கூறுமாறு வெளியுறவுத்துறை செயலாளரை முதல்வர் கேட்டுக்கொண்டார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாய்க்கும் தமிழக முதல்வருக்கும் இடையிலான சந்திப்புக் குறித்து உடனடியாக அதிகாரபூர்வ தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் மத்தாய் தவிர்த்து விட்டார்.


No comments:
Post a Comment