தனது நண்பரான பூடான் மன்னருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தார் ராகுல் காந்தி.
திருமணத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவு செயலாளர், மேற்கு வங்காள கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர். நேரு குடும்பத்துக்கும், பூடான் மன்னர் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது.
மேலும் பூடான் மன்னர் வாங்சுக்கும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்தியும் நெருங்கிய நண்பர்கள். எனவே திருமண விழாவில் ராகுல்காந்தி நேரில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பார்த்தபடி அவரால் பங்கேற்க முடியவில்லை. இதற்கிடையே திருமணம் முடிந்து பூடான் மன்னர் தனது மனைவியுடன் தலைநகர் திம்புவுக்கு நேற்று கார் மூலம் புறப்பட்டார். அவர்களை ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர்.
வரும் வழியில் சாங்ளிங்மிதாங் என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் புதுமண தம்பதிகளான மன்னர் வாங்சுக்- ராணி ஜெட்சன் பெமாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ராகுல்காந்தி பூடான் மன்னர் வாங்சுக்- பெமா தம்பதிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment