
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவத்தினர் இருப்பது கவலைக்குரிய விவகாரம் என இந்தியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவுக்கு இந்தியா ஏற்கனவே கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
கடற்படை கமாண்டர்களின் 4 நாள் மாநாட்டை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, பாகிஸ்தான் காஷ்மீருக்கு சீன ராணுவத்தினரின் வருகையால் இந்தியா விழிப்புடன் உள்ளது. இதுதொடர்பாக சீனாவுக்கு ஏற்கனவே நமது கவலையைத் தெரிவித்து விட்டோம் எனத் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக நமது ராணுவத்தின் திறன்களை நாம் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளோம். எனவே நமது நாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க எந்த சவாலையும் சந்திப்போம் என அவர் கூறினார்.


No comments:
Post a Comment