
உலகில் சிறந்த முதலாவது சுற்றுலா வழிகாட்டியாக இலங்கையின் தமிழர் ஒருவர் தெரிவாகி தங்கப் பதங்கம் பெற்றுள்ளார்.பிரித்தானிய சுற்றுலா சஞ்சிகையான வோன்டர்லஸ்ட் Wanderlust இந்த தெரிவை அறிவித்துள்ளது.
Bruno Dawsan Noel என்ற தமிழர், இலங்கையின் வசிக்கும் தேயிலை கொழுந்து பறிக்கும் இந்திய வம்சாவளி தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவராவார்.
இந்தநிலையில் தமது தெரிவு குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இத்தாலிய மற்றும் பிரித்தானியாவின் இருவர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.
பேஸ்புக்கின் மூலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலமே நோயல் இந்த முதலிடம் கிடைத்தது.
7 பேரைக் கொண்ட குடும்பத்தின் 6 வது பிள்ளையான நோயல் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் இந்த துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
தமது தொழிலில் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நோயல், தமது தொழிலில் இதுவரை மதுபானமோ புகைப்பிடித்தலுக்கோ உட்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது வாடிக்கையாளர்களின் நலன்களை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு தாம் செயற்பட்டதாக நோயல் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment