
நியூயோர்க் நீதிமன்றத்தில் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961 ஆம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழ் சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியூயோர்க் நீதிமன்றதில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளின் ஒருவரான ரமேஷின் துணைவியார் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. அதில் அவர் ஒக்டோபர் 14 ஆம் திகதிக்குள் தனது பதிலை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டள்ளது.
அவரது சட்டவாளர்கள் இராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டும்படி ஆலோசனை கூறியதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கும் என்று அறியப்படுவதாகவும்
இதேவேளை முன்னதாக இராஜதந்திர விதிவிலக்கை புறக்கணித்து தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் போவதாக சவீந்திர சில்வா கூறியிருந்தார்.


No comments:
Post a Comment