படிப்பறிவில்லாத பண்பும் இல்லாத மனிதர் தான் மகிந்த ராஜபக்ஷ என முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா தம்மிடம் கூறியதாக அமெரிக்க தூதுவர் வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பியுள்ளார் என விக்கி லீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னைச் சந்தித்த முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா இலங்கை தற்போது கெட்டுப்போயுள்ளதாகவும் தனது ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையை ஒரு நல்ல நாடாவைத்திருந்ததாவும் தெரிவித்தாராம். ஏனடா மகிந்தவை கட்சியின் தலைமைப் பதவிக்கு தான் பரிந்துரை செய்தேன் என்று நினைக்கும் அளவுக்கு அவர் நடந்துகொண்டுள்ளார் என சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஒரு தீவிர பெளத்தவாதி என்றும் அதனால் அவர் ஒரு நேர்மையான மனிதர் என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அத்தோடு நின்றுவிடாது மகிந்தர் படிப்பறி மற்றும் பண்பில்லாதவர் என்றும் சாடியுள்ளார். சந்திரிக்கா சொன்ன அனைத்தையும் உடனடியாக அமெரிக்க தூதுவர் புட்டின் வாஷிங்டனுக்கு பாதுகாப்பான கேபிள் செய்தியூடாக அனுப்பியுள்ளார்.
அதனைக் கைப்பற்றிய விக்கி லீக்ஸ் தற்போது இத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மகிந்தர் மற்றும் சந்திரிக்காவுக்கு இடையே மேலும் முறுகல் நிலை தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் சந்திரிக்கா அம்மையாரே மகிந்தரை நம்பி முதலில் அவரை கட்சியின் பொறுப்பை ஏற்குமாறு பரிந்துரைத்தார். அதுவரை மிகவும் நல்ல பிள்ளையாக சந்திரிக்காவின் செருப்பைக் கூட துடைக்கும் அளவுக்கு பவ்வியமாக நடந்துவந்த மகிந்தர் ஆட்சிக்கு வந்ததும் சந்திரிக்காவை படாத பாடு படுத்தி எடுத்தார்.
தற்போது கூட சந்திரிக்காவுக்கு எதிரான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதனை அப்படியே வைத்திருப்பதும் மகிந்தரே. ஏதாவது தனக்கு எதிராகப் பேசினால் அந்த வழக்கைக் காட்டி சந்திரிக்காவை மிரட்டியும் வருகிறார் மகிந்தர். தான் வாழ் நாளில் விட்ட ஒரு பிழையை எண்ணி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருப்பது சந்திரிக்கா அம்மையார் தான்.


No comments:
Post a Comment