பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் ரீதியாக பெண்கள் பலர் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்
யாழ்.மாவட்ட அரச அலு வலகங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் மட்ட அதிகாரிகள் முதல் ஏனைய தரங்களில் உள்ளவர்கள் பலர் இவ்வாறான பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களின் பெயர், விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் யாழ். அரச அதிபர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக பலாலி ஆசிரியர் கலாசாலையின் மீது அரச அதிபர் தமது அதிரடி நடவடிக்கையை ஆரம்பிக்கவிருக்கிறார். மேற்படி கலாசாலையில் இருந்து பெண்கள் பலர் எழுத்து மூலமாக தமக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளனர் என்றும் அரச அதிபர் கூறுகிறார். இதன் அடுத்த கட்டமாக தாம் பலாலி ஆசிரிய கலாசாலைக்குச் சென்று சம்பந்தப்பட்டவர் களை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறேன் என்றார் திருமதி இமெல்டா சுகுமார்.


No comments:
Post a Comment