வடமாகாண விவசாய திணைக்களத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து யாழ்ப் பாணத்துக்கு மாற்றும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. "எக்காரணம் கொண்டும் அலுவலகம் மாற்றப்படாது. வடமாகாண ஆளுநர் இதற்கான இரத்து உத் தரவை உடன் அறிவித்துள்ளார்'' என வடமாகாண பொது நிர்வாக பிரதி பிரதம செயலாளர் தி.இராசநாயகம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தை 12 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்துக்கு கொண்டு செல்லுமாறு வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருந்தது. கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அலுவல கத்தை யாழ். மாவட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு வலு வான காரணமில்லை என்பதை விவசாயிகளும், சம்பந்தபட்ட திணைக்கள அதிகாரிகளும், பொது மக்களும் ஆளுநரின் விசேட கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
விவசாய உற்பத்தியின் மைய மாவட்டமாக கிளிநொச்சி விளங்குவதால் அங்கிருந்து விவசாயத் திணைக்களத்தை இடமாற்றம் செய்வது என்ற தீர்மானத்தை இரத்துச் செய்வ தாக ஆளுநர் அறிவித்துள்ளார் என வடக்கு மாகாண பொது நிர்வாக பிரதி பிரதம செய லாளர் தி.இராசநாயகம் தெரிவித்தார்.


No comments:
Post a Comment